11TH பண்டைய இந்தியா
11TH பண்டைய இந்தியா
- சிந்து நாகரீகம் வீழ்ச்சி அடைந்த காலம் = பொ.ஆ.மு. 1900.
- இந்தியாவில் தொடக்ககால வேதப் பண்பாடு எந்த பண்பாட்டு கூறுகளோடு பொருந்துகிறது = செம்புக்கால பண்பாடு (Early Vedic culture is correlated with some of the Chalcolithic cultures of India)
- இந்தியாவில் பிற்கால வேதப் பண்பாடு எந்த பண்பாட்டோடு பொருந்துகிறது = இரும்புக்காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் தீட்டப்பட்ட சாம்பல் நிறப் பாண்டப் பண்பாட்டோடு (Later Vedic culture is correlated with the Painted Grey Ware Culture of the Iron Age).
வேதகால இலக்கியங்கள்
- இந்தியாவின் பழம்பெரும் சமயநூல் = வேதகால இலக்கியங்கள்.
- “வித்” என்பதன் பொருள் = தெரிந்து கொள்ளுதல்.
- நான்கு வகை வேதங்கள் யாவை = ரிக், யஜூர், சாம, அதர்வ வேதங்கள்.
- வேதங்களில் மிகவும் பழமையானது எது = ரிக் வேதம்.
- வேதப்பாடல்கள் முதன்முதலாக எந்த நூற்றாண்டுகளில் எழுதப்பெற்றதாக கருதப்படுகிறது = பொ.ஆ. 10-11ஆம் நூற்றாண்டு.
- வேதப்பாடல்களின் முக்கியத் தொகுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது = சம்ஹிதைகள்.
- சம்ஹிதைகளில் மிகவும் பழமையானது = ரிக் வேத சம்ஹிதை.
- ரிக் வேத சம்ஹிதையின் காலம் = பொ.ஆ.மு. 1500க்கும் பொ.ஆ.மு.1000க்கும் இடைப்பட்ட காலம்.
- ரிக் வேதத்தில் உள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை = 10.
- ரிக் வேதத்தில் உள்ள காண்டங்களில் முதலில் எழுதப்பட்டவை = 2 முதல் 7 வரையிலான காண்டங்கள்.
- ரிக் வேத காண்டங்களில் பிற்காலத்தை சேர்ந்தவை எவை = 1, 8, 9, 10.
- ஒவ்வொரு சம்ஹிதையும் எதனை இணைப்புக் குறிப்புகளாகக் கொண்டுள்ளது = பிராமணங்கள்.
- பாடல்கள் மற்றும் சடங்குகள் குறித்த விளக்கவுரைகளை கொண்டுள்ளவை எது = பிராமணங்கள்.
- சடங்குகள் பற்றிய பாடங்களை கொண்டுள்ளவை = பிராமணங்கள்.
- ஒவ்வொரு பிராமணமும் எதனை கொண்டுள்ளது = ஓர் ஆரண்யகம் மற்றும் ஓர் உபநிடதம்.
- எது காடுகளில் வாழும் முனிவர்கள் ரகசியமாக மேற்கொள்ள வேண்டிய மந்திரச் சடங்குகள் குறித்த குறிப்புகளைக் கொண்டுள்ளன = ஆரண்யகம்.
- எது தத்துவக் கருத்துகளையும் வினாக்களையும் கொண்டுள்ளன = உபநிடதம்.
- எந்த வேதம் இசைப்பாடல்களாக அமைந்துள்ளது = சாமவேதம்.
- எந்த வேதம் சடங்குகளையும் பாடல்களையும் கொண்டுள்ளது = யஜூர் வேதம்.
- எந்த வேதங்கள் மாய மந்திர ஜாலங்கள் அடங்கியது = அதர்வண வேதம்.
- 11TH பண்டைய இந்தியா
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஜென்ட் அவெஸ்தா
- ஜென்ட் அவெஸ்தா என்பது = பாரசீக / ஈரானிய நூல் ஆகும்.
- ஜென்ட் அவெஸ்தா எந்த மதத்தை சேர்ந்த நூல் ஆகும் = ஜொராஸ்டிரிய மதம்.
- எந்த நூலில் இடம் பெற்றுள்ள சொற்கள் வேதநூல்களின் சமஸ்கிருதச் சொற்களோடு மொழி ஒப்புமை கொண்டுள்ளன = ஜென்ட் அவெஸ்தா.
- இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே அமைந்திருந்த ஆரியர்களின் தொடக்ககால வாழிடங்கள் பற்றி அறிந்துகொள்ள உதவும் நூல் = ஜென்ட் அவஸ்தா.
இந்தியாவில் செம்பு காலகட்ட பண்பாடு
- செம்புக்காலப் பண்பாடு = பொதுவாக கிராமப்புற தன்மை கொண்டது.
- செம்புக்காலப் பண்பாட்டினைச் சேர்ந்த மக்களின் வீடுகளின் சுவர்கள் எதனால் கட்டப்பட்டிருந்தது = மூங்கில் தட்டிகளால்.
- மக்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்களையும், செந்நிறத்தின் மீது கருமை நிற ஓவியம் தீட்டிய மட்பாண்டங்களையும் பயன்படுத்தினர்.
பழுப்பு மஞ்சள்நிற பாண்டப் பண்பாடு (Ochre Coloured Pottery Ware culture)
- செம்புக்காலப் பண்பாட்டுடன் தொடர்புடையது = பழுப்புமஞ்சள்நிற மட்பாண்டங்கள் பண்பாடு (Ochre Coloured Pottery Ware culture).
- பழுப்புமஞ்சள்நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் = பொ.ஆ.மு. 2600 முதல் பொ.ஆ.மு. 1200 வரை.
- எந்த பண்பாடு நலிந்த ஹரப்பா பண்பாடாக (impoverished Harappan culture) பார்க்கப்படுகிறது = பழுப்பு மஞ்சள்நிற பாண்டப் பண்பாடு (Ochre Coloured Pottery Ware culture).
- “செம்புப் பொருட்குவியல் பண்பாடு” (copper hoard culture) என்று அழைக்கப்படும் பண்பாடு = பழுப்பு மஞ்சள்நிற பாண்டப் பண்பாடு (Ochre Coloured Pottery Ware culture).
- பழுப்பு மஞ்சள்நிற பாண்டப் பண்பாடு = ஒரு கிராமியப் பண்பாடு.
- 11TH பண்டைய இந்தியா
தென் இந்தியச் செம்புக்காலப் பண்பாடுகள்
- இந்தியாவில் எந்தப் பகுதியில் ஒரு முழுமை பெற்ற செம்புக்கற்காலப் பண்பாடு நிலுவியதர்கான எந்த சான்றும் இல்லை = தென் இந்தியா.
- சில இடங்களில் துளையிட்ட பாண்டங்களும், கெண்டி வடிவிலான பாண்டங்களும் கிடைத்துள்ளன.
வட இந்தியாவில் இரும்புக்காலம்
- வட இந்தியாவின் இரும்புக் காலமானது எதனோடு ஒத்துப்போகிறது = ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாட்டோடு (painted Grey Ware culture).
- ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் = பொ.ஆ.மு. 1100 முதல் பொ.ஆ.மு. 800.
- ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாட்டைத் தொடர்ந்து தோன்றிய பண்பாடு = மெருகேற்றப்பட்ட கருப்புநிற மட்பாண்டப் பண்பாடு தோன்றியது.
- மௌரியர் காலத்து மகாஜனபதங்களோடு தொடர்புடைய பண்பாடு = மெருகேற்றப்பட்ட கருப்புநிற மட்பாண்டப் பண்பாடு.
- தென் இந்தியாவில் இரும்புக்காலம் என்பது = ஈமச் சின்னங்களுடன் கூடிய பெருங்கற்காலப் பண்பாடாக உள்ளது.
தமிழகத்தில் பெருங்கற்காலம்/இரும்புக்காலம்
- தமிழகத்தில் இறந்தோரை தாழியில் புதைக்கும் வழக்கம் இருந்ததற்கான சான்று எங்கு கிடைத்துள்ளது = ஆதிச்சநல்லூரில் (தற்போதைய தூத்துக்குடி மாவட்டம்).
- முதுமக்கள் தாழியைப் பொறுத்தமட்டில் பெரும்பாலும் எவை பயன்படுத்தப்படவில்லை = கற்கள்.
- தமிழ் பிராமி எழுத்துமுறை இருந்ததற்கான சான்று எங்கு கிடைத்துள்ளது = கொடுமணல் (ஈரோடு மாவட்டம்).
- தமிழகத்தில் எந்த ஆற்றுப் படுகையில் பழைய காலத்தைச் சேர்ந்த நான்கு நடுகற்கள் தமிழ் பிராமி எழுத்துகளுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன = வைகை ஆற்றுப் படுகையில்.
- தமிழகத்தில் காணப்படும் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் யாவை = ஈமக் குத்துக்கல், நினைவுக்கல், கல்திட்டை.
- தமிழகத்தில் எந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கருப்பு, சிவப்பு வண்ண மட்கலன்கள், மனித எலும்புச் சான்றுகள் மற்றும் இரும்புப் பொருட்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது = கிருஷ்ணகிரி அருகில் உள்ள வடமலைக்குண்டா.
- தமிழகத்தில் எங்கு பல நூற்றாண்டுகள் பழமையான குத்துக்கல் கண்டுபிடிக்கப்பட்டது = திருப்பூர் மாவட்டம் சிங்காரிபாளையம் குந்தலம்.
- தமிழகத்தில் எந்த நதிக்கரையில் பண்டைய கால மனிதர்களின் வாழிடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது = உப்பாறு நதிக்கரை.
- 11TH பண்டைய இந்தியா
தமிழகத்தில் பெருங்கற்கால இடங்கள்
- தமிழகத்தில் பெருங்கற்காலத்தோடு தொடர்புடைய இடங்கள் = ஆதிச்சநல்லூர், பையம்பள்ளி, கொடுமணல்.
ஆதிச்சநல்லூர்
- ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தில் உள்ளது = தூத்துக்குடி.
- 1876ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வை மேற்கொண்டவர் = ஜெர்மனியைச் சேர்ந்த ஆண்டிரு ஜாகர்.
- ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட கணிசமான எண்ணிக்கையில் இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், பெருமளவிலான எலும்புகள், மண்டையோடுகள் ஆகியவற்றை ஜெர்மனிக்கு எடுத்துச் சென்றவர் = ஆண்டிரு ஜாகர்.
- ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட கணிசமான எண்ணிக்கையில் இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், பெருமளவிலான எலும்புகள், மண்டையோடுகள் ஆகியவை தற்போது எந்த நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன = ஜெர்மனியின் பெர்லின் நகரில்.
- ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்ட ஆங்கிலேயர் = அலெக்ஸாண்டர் ரீ.
- தமிழகத்தில் எங்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட வீட்டு விலங்குகளான எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, சேவல், காட்டு விலங்குகளான புலி, மிளா (மான் வகை), யானை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன = ஆதிச்சநல்லூர்.
- ஆதிச்சநல்லூரில் “செம்பினால் ஆன வளையல்” ஒன்றை கண்டெடுத்தவர் = ராபர்ட் கால்டுவெல்.
- 11TH பண்டைய இந்தியா
பையம்பள்ளி
- பையம்பள்ளி எந்த மாவட்டத்தை சேர்ந்த கிராமம் = திருப்பத்தூர்.
- பையம்பள்ளி = பெருங்கற்காலத்தோடு தொடர்புடைய கிராமம் ஆகும்.
- பெரும் எண்ணிக்கையிலான ஈமத் தாழிகள் எங்கு கண்டறியப்பட்டன = பையம்பள்ளி.
- பையம்பள்ளி பெருங்கற்காலப் பண்பாட்டின் காலம் = பொ.ஆ.மு 1000.
கொடுமணல்
- கொடுமணல் எந்த மாவட்டத்தில் உள்ளது = ஈரோடு.
- கொடுமணல் எந்த ஆற்றில் கரையில் அமைந்துள்ளது = நொய்யல் ஆறு.
- மொகஞ்சதாரோ அகழ்வாய்வில் கண்டறியப்பட்டதைப் போன்ற செம்மணிக்கற்கள் தமிழகத்தில் எங்கு கண்டறியப்பட்டன = கொடுமணல்.
- கொடுமணல் பற்றிய குறிப்புகள் உள்ள சங்க நூல் = பதிற்றுப்பத்து.
- தமிழகத்தில் ரோமானிய நாணயக் குவியல்கள் அதிகளவு கண்டறியப்பட்ட இடம் = கொடுமணல்.
- தமிழகத்தில் எங்கு பலவகைப்பட்ட புதைக்கும் முறைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன = கொடுமணல்.
- ஈமக் குழிகள், ஈமத் தாழிகள், கற்படுக்கைப் புதைப்பு எனப் பலவகைப்பட்ட புதைக்கும் முறைகள் கொடுமணலில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- சங்கத் தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்த பொருட்கள் எங்கு கிடைத்துள்ளன = கொடுமணல்.
ஆரியர்களும் ரிக் வேதகால சமூகமும்
- “ஆரியக் கோட்பாட்டை” தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்ட ஐரோப்பியர்கள் யார் = ஜெர்மனியின் நாஜிக்கள்.
- ரிக் வேதம் எந்த மொழியில் எழுதப்பட்டது = சமஸ்கிருதம்.
- ரிக் வேதத்தில் “முண்டா மற்றும் திராவிட மொழிச் சொற்கள்” எத்தனை அடையாளம் காணப்பட்டுள்ளன = 300 சொற்கள்.
- ஆரியப் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்புடையதாக அறியப்படும் இடம் = ‘பாக்ட்ரியா மார்ஜினா தொல்லியல் வளாகம்’ (Bactria-Margina Archaeological Complex).
- ‘பாக்ட்ரியா மார்ஜினா தொல்லியல் வளாகம்’ (Bactria-Margina Archaeological Complex) காலம் = பொ.ஆ.மு. 1900 முதல் பொ.ஆ.மு. 1500 ஆகும்.
- இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பற்றிய குறிப்புகள் எந்த நாட்டின் கல்வெட்டுகளில் உள்ளது = ஈராக்.
- வேதகால கடவுள்களின் பெயர்களைப் போலுள்ள பெயர்களைக் குறிப்பிடும் வெளிநாட்டு கல்வெட்டுகள் யாவை = அனதோலியா கல்வெட்டு (பொ.ஆ.மு 1900-1700), ஈராக்கைச் சேர்ந்த காஸ்சைட் கல்வெட்டு (பொ.ஆ.மு. 1600), சிரியாவின் மிட்டானி கல்வெட்டுகள், போகஜ் கல்வெட்டுகள் (பொ.ஆ.மு.1400).
- ரிக் வேதத்தில் ‘அஸ்வா’ (குதிரை) என்னும் சொல் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது = 215 முறை.
- ரிக் வேதத்தில் ‘ரிஷபா (காளை) என்னும் சொல் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது = 170 முறை.
- ரிக் வேதத்தில் குறிப்பிடப்படாத விலங்குகள் = வெப்பமண்டல விலங்குகளான புலி, காண்டாமிருகம்.
- இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசுபவர்களிடம் காணப்படுவதாகக் கூறப்படும் மரபணு = எம்.17 (17).
- 11TH பண்டைய இந்தியா
ரிக் வேதகாலப் பண்பாடு
- ரிக் வேதகாலப் பண்பாட்டின் காலம் = பொ.ஆ.மு. 1500க்கும் பொ.ஆ.மு. 1000 க்கும் இடைப்பட்ட காலம்.
- தொடக்க வேதகால ஆரியர்கள் வாழ்ந்த இடங்கள் = கிழக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப், மேற்கு உத்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் வாழ்ந்தனர்.
- ரிக்வேதகால ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியாவில் இருந்த மக்கள் = தாசர்கள், தசயுக்கள்.
- ரிக் வேதத்தில் என்பவர் 90 கோட்டைகள் அல்லது குடியிருப்புகளின் தலைவர் என்று குரிப்பிடட்டவர் = குலிதாரா என்பவரின் மகனான சம்பரா.
- ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பரா என்பவரை தோற்கடித்தவர் = பரத குலத்தைச் சார்ந்த திவோதசா.
- ரிக் வேதத்தில் “இந்திரன்” எவ்வாறு அழைக்கப்பட்டார் = புரந்தரா.
- “புரந்தரா” என்பதன் பொருள் = குடியிருப்புகளை அழிப்பவன்.
- அரசாட்சி செய்த ஆரியக் குலங்கள் = பரத, திரிசு.
- ஆரியக் குலங்கலான பரத மற்றும் சிரிசு குலங்களுக்கு ஆதரவாக இருந்த முனிவர் = வசிஷ்ட முனிவர்.
பத்து அரசர்களின் போர்
- பரத குலத்தை சேர்ந்தவர்களுக்கும், பத்து தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற போர் எவ்வாறு அழைக்கப்படுகிறது = பத்து அரசர்களின் போர்.
- பத்து அரசர்களின் போர் பற்றி குறிப்பிடும் நூல் = ரிக் வேதம்.
- பத்து அரசர்களின் போர் நடைபெற்ற இடம் = புருசினி ஆறு (இன்றைய ரவி ஆறு).
- பத்து அரசர்களின் போரில் வெற்றி பெற்றவர் = பரத குலத்தை சேர்ந்த சுதா என்பவன்.
- “குரு குலத்தை” உருவாக்கியவர்கள் = பரத மற்றும் புரு குலத்தினர் ஒன்றிணைந்து தோற்றுவித்தனர்.
- 11TH பண்டைய இந்தியா
ரிக் வேதகால சமூகப் பிரிவுகள்
- பொதுவாக அடிமை முறை இருந்தது.
- கூலித் தொழிலாளர் பற்றிய குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை.
- புருஷ பலியிடப்பட்டபோது அவனுடைய வாயிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள், இரண்டு கைகளிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள், தொடைகளிலிருந்து பிறந்தவர்கள் வைசியர்கள், கால்களிலிருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் எனக் கூறுவது = ரிக் வேதத்தின் ‘புருஷசுக்தம்’ (Purusha Sukta of the Rig Veda).
- பானிகள் என்போர் யார் = பானிகள் என்போர் மாடுகள் பூட்டப்பட்ட வண்டிகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள் என ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
இனக்குழுக்களும் குடும்பங்களும்
- குலங்கள் ஒன்று சேர்ந்து “ஜனா” என்ற சமூகம் உருவானது.
- “ஜனா” என்பதன் பொருள் = பழங்குடி, சமூகம்.
- ரிக் வேதத்தில் ஜனா என்ற சொல் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது = 21 முறை.
- ரிக் வேதத்தில் ஒருமுறை கூட பயன்படுத்தாத சொல் = ஜனபதா.
- சாதாரண மக்களை குறிப்பிடும் “விஷ்” என்ற சொல் ரிக் வேதத்தில் எத்தனை முறை வந்துள்ளது = 170 முறை.
- “கிருஹா” என்னும் சொல்லின் பொருள் = குடும்பம்.
- குடும்பத்தின் தலைவன் = கிருஹபதி.
- குடும்பத் தலைவனின் மனைவி = ஸபத்தினி.
- 11TH பண்டைய இந்தியா
ரிக்வேத காலத்தில் பொருளாதாரம்
- கலப்பையின் கொழுமுனை ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ரிக் வேதத்தில் “வேளாண்மை நிலம்” எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது = க்ஷேத்ரா (kshetra).
- “கிருஷி” என்னும் சொல்லின் பொருள் = உழவு.
- ரிக் வேதத்தில் கலப்பையை குறிக்கின்ற சொற்கள் = லங்லா, சுரா.
- ரிக் வேதத்தில் கலப்பையின் கொழுமுனையைக் குறிக்கும் சொல் = சீத்தா.
- ரிக் வேத காலத்தில் மக்கள் பார்லியையும் (யவம்) கோதுமையையும் (கோதுமா) பயிரிட்டார்கள்.
- ரிக் வேதத்தில் “போரை” குறிக்க பயன்பட்ட சொல் = காவிஸ்தி.
- “காவிஸ்தி” என்பதன் பொருள் = பசுக்களை தேடுதல் (போர்).
- காவிஸ்தி என்ற சொல் மருவி தற்காலத்தில் “கோஷ்டி” என மாறியது.
- ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் “அயஸ்” என்னும் சொல் எதை குறிக்கின்றது = செம்பு, வெண்கலம்.
- ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “கர்மரா” என்போர் யார் = உலோக வேலை செய்வோர்.
- “ஸ்ரி” என்னும் சொல்லின் பொருள் = நூல்.
- “தச்சன்” என்னும் சொல்லின் பொருள் = மரவேலை செய்வோர்.
- ரிக் வேதத்தில் வணிகர்கள் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது = பானி.
- “நிஷ்கா” என்பது எதனை குறிக்கின்றது = தங்கம் அல்லது வெள்ளி அணிகலன்கள்.
- ரிக் வேத காலத்தில் போக்குவரத்திற்கு பயன்பட்டவை = மாடுகள், குதிரைகள்.
- “நாவ்” என்ற சொல் எதனை குறிக்கின்றது = படகு.
அரசுமுறையும் நிர்வாகமும்
- இனக்குழுவின் தலைவர் = ராஜன்.
- புருக்களின் அரசர் திரசதஸ்யு 50 பெண்களைப் பரிசாகக் கொடுத்துள்ளார்.
- இனக்குழுத் தலைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = கோபா, கோபதி.
- கோபா, கோபதி என்பதன் பொருள் யாது = கால்நடைகளின் தலைவர்.
- ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகள் = சபா, சமிதி, விததா, கணா.
- சபா = வயதில் மூத்தோர் அல்லது செல்வர்கள் பங்கேற்ற அமைப்பு.
- சமிதி = மக்கள் கூடும் இடம்.
- விததா = இனக்குழுக்களின் அமைப்பு. அமைப்பாகும். இராணுவம் மற்றும் மதம் சார்ந்த பணிகளை இவை மேற்கொண்டன.
- சேனானி = படைத் தலைவர்.
- ரிக் வேத காலத்தில் வரிவசூல் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
- “பலி” என்பது யாது = மக்கள் தாமாகாவே அரசருக்கு வழங்கிய வரி.
- “விராஜபதி” எனப்பட்டோர் யார் = நிலப்பரப்பைக் கட்டுப்படுத்திய அதிகாரி.
- “கிராமணி” = கிராமங்களின் தலைவர்.
- “கிராமணி” = படைகளின் தலைவர்.
- 11TH பண்டைய இந்தியா
வேதகால மதமும் சடங்குகளும்
- ரிக் வேத காலத்தின் முக்கிய கடவுள் = இந்திரன்.
- “புரந்தரா” என்று அழைக்கப்பட்ட கடவுள் = இந்திரன்.
- கடவுளுக்கும் மக்களுக்கும் இடையிலான தூதுவன் = நெருப்புக் கடவுள்.
- சூரியன் = இருளை அகற்றும் கடவுள்.
- விடியலின் கடவுள் = உஷா எனும் பெண் கடவுள்.
- வருணா = நீர்க் கடவுள். இயற்கையின் விதிகளை உயர்த்திப்பிடிப்பவர் இவரே.
- சோமா = தாவரங்களின் கடவுள்.
- மாருத் = வலிமையின் கடவுள்.
பிற்கால வேதப் பண்பாடு
- பிற்கால வேதப்பண்பாட்டின் காலம் = பொ.ஆ.மு. 1000 முதல் பொ.ஆ.மு. 700-600 வரை ஆகும்.
- பிற்கால வேதப் பண்பாட்டோடு தொடர்புடையது = இரும்புக் காலத்தைச் சேர்ந்த வண்ணம் தீட்டிய சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாடு.
- பின்வேதகாலத்தில், ஆரியர்கள் பஞ்சாபிலிருந்து மேற்கு உத்திரப்பிரதேசத்தின் கங்கை-யமுனை சமவெளியை நோக்கித் தமது வாழ்விடங்களை விரிவுபடுத்தினர்.
- பிற்கால வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள நதிகள் = சரஸ்வதி, திரிஸ்தவதி.
- அங்க, மகத (பீகார்) நாடுகளைச் சேர்ந்த மக்கள் எதிரிகளாகவே பார்க்கப்பட்டனர் என்ற குறிப்பு எதில் உள்ளது = அதர்வ வேதம்.
பிற்கால வேதப்பண்பாடு
- இரும்பு எவ்வாறு அழைக்கப்பட்டது = ‘சியாமா-அயஸ்’ அல்லது ‘கிருஷ் அயஸ்’.
- கங்கைப் பகுதியின் காடுகள் திருத்தப்பட்டதில் இரும்பின் பங்கிற்கு அதிக அழுத்தம் கொடுத்தன.
- பிந்தைய வேதகாலத்தில் அரசரின் அதிகாரங்கள் அதிகரித்தன.
- விததா என்ற அமைப்பு செல்வாக்கு இழந்தது. சபா, சமிதி ஆகிய அமைப்புகள் தொடர்ந்து இயங்கின.
- குடும்ப உரிமைகளை சட்டபூர்வமாக்க அரசர் வாஜ்பேய, ராஜசூய யாகங்களை நடத்தினார்.
- “புரோகிதர்” என்பதன் பொருள் = “அரசரை முன்னிறுத்தக் கூடியவர்”.
- “ஸ்ராதா” என்பது யாது = செல்வ ஆதாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஸ்ராதா என்ற யாகங்கள் நடத்தப்பட்டன.
- அரசப் பதவியேற்பின் போது செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்த ஒரு புரோகிதர்க்கு 1000 தங்கக்கட்டிகளும் கால்நடைகளும் பரிசளித்ததாக குறிப்பிட்டுள்ள பிராமணம் = அய்த்ரேய பிராமணம்.
- 11TH பண்டைய இந்தியா
பிந்தைய வேதகாலத்தில் சமூகம்
- பிந்தைய வேதகாலத்தில் அரசர் மக்களிடம் (விஷ்) இருந்து “பலி” எனும் வரியை பெற்றனர்.
- பின் வேத காலத்தில் ஏற்பட்ட நாடுகளின் உருவாக்கமும் மரபுவழி அரசாட்சியும் பற்றி “ரோமிலா தாப்பர்” எவ்வாறு குறிப்பிடுகிறார் = “குல உரிமையிலிருந்து அரசுக்கு”.
- “ஜனபதம்” என்ற சொல் பிந்தைய வேதகாலத்தில் உருவானது.
- பிந்தைய வேத காலத்தில் உருவான அரசியல் நிறுவனங்கள் = ராஜிய, கணசங்கா.
- அஸ்வமேத யாகம் குதிரையுடன் தொடர்புடையது.
- வாஜபேய யாகம் = தேர்களின் போட்டியை உள்ளடக்கியதாகும்.
- “ராஜன்யா” என்னும் சொல் யாரைக் குறிக்கிறது = சத்ரியர்கள்.
- “பிராமணர்களை காட்டிலும் சத்ரியர்களே உயர்ந்தவர்” எனக் கூறும் பிராமணம் = பஞ்சவம்ச பிராமணம்.
- “சத்திரியர்களைவிடப், பிராமணர்களே உயர்ந்தவர்கள்” எனக் கூறும் பிராமணம் = சதபத பிராமணம்.
- வேதகாலத்தில் பிரிக்கப்பட்ட நான்கு வாழ்க்கை கட்டங்கள் = பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வனப்பிரஸ்தம், சன்யாசம்.
- “துவிஜா” என்றால் என்ன = பிந்தைய வேதகாலத்தில் இருபிறப்பாளர் (துவிஜா) எனும் கோட்பாடு வளர்ச்சி பெற்றது.
- “பிராமணர்கள் ஆதரவை நாடுபவர்கள் எனவும், அவர்கள் அரசர்களால் பதவிநீக்கம் செய்யப்படலாம் என” கூறிய பிராமணம் = அய்த்ரேய பிராமணம்.
சமூக அமைப்பு
- “ரதகாரர்கள்” என்போர் = தேர்களை செய்வோர்.
- “கோத்திரம்” என்பதன் பொருள் = கிடை.
- அரசர்கள் கலப்பையோடு தொடர்புடைய சடங்குகளைப் பற்றி கூறும் பிராமணம் = ‘சதபத பிராமணம்’.
- “குலாலா” என்போர் யார் = மண்பாண்டங்களை செய்வோர்.
- “உர்னா சூத்ரா” என்போர் யார் = கம்பிளி நெய்வோர்.
- பிந்திய வேதகாலத்தில் முக்கியத்துவம் பெற்ற கடவுள் = பிரஜாபதி.
- சடங்குகளின் கடவுள் = ருத்ரன் (சிவனின் மறுவடிவம்).
- ருத்ரனின் வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ள பிராமணம் = சதபதபிராமணம்.
- சதபதபிராமணம் குறிப்பிட்டுள்ள ருத்ரனின் வேறு பெயர்கள் = பசுனம்பதி, சர்வா, பவா, பகிகா.
- காக்கும் கடவுள் = விஷ்ணு.
- 11TH பண்டைய இந்தியா
தத்துவமும் கல்வியும்
- காடுகளில் தங்கி தவம் இயற்றும் முனிவர்களோடு தொடர்புடைய நூல் = ஆரண்யங்கள்.
- “உபநிசத்” என்பதன் பொருள் = அருகே அமர்.
- தத்துவ விசாரணை நூல்கள் என அழைக்கப்படுவது = உபநிடதம்.
- வேத நூல்களின் இறுதிப் பகுதியாக இணைக்கப்பட்டவை = உபநிடதங்கள்.
- உபநிடதங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = வேதாந்தங்கள்.
- சத்யமேவ ஜயதே (வாய்மையே வெல்லும்) என்னும் சொற்றொடர் எங்கிருந்து எடுக்கப்பட்டது = முண்டக உபநிடதம்.
முகலாய இளவரசர் தாராசுகோ
- உபநிடதங்களை பாரசீக மொழியில் மொழிப் பெயர்த்தவர் = முகலாய அரசர் தாராசுகோ.
- எந்த ஆண்டு முகலாய இளவரசர் தாராசுகோ, உபநிடதங்களை பாரசீக மொழியில் மொழிப்பெயர்த்தார் = 1657.
புத்தக வினாக்கள்
- வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்? = சம்ஹிதைகள்.
- மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? = குரு-பாஞ்சாலம்.
- ஆதிச்சநல்லூர் _______________ மாவட்டத்தில் அமைந்துள்ளது? = தூத்துக்குடி.
- 11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை
- நவம்பர் மாதத்தின் முக்கிய தினங்கள்
- Important Days in November 2024
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
- இந்தியாவில் முதன்மையானவர்கள்
- List of First in India