11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
- குப்தர்களின் வீழ்ச்சிக்கு பிறகு தோன்றிய பிரதேச அரசுகள் = சௌராஷ்டிராவில் மைத்ரேயர்கள், அயோத்தியில் மௌகரியர்கள், தக்காணத்தில் வாகடர்கள்.
- தானேஸ்வரத்தில் புதிய அரசை உருவாக்கியவர்கள் = புஷ்யபூதிகள்.
- புஷ்யபூதி வம்சத்தின் சிறந்த ஆட்சியாளர் = ஹர்ஷர்.
- ஹர்ஷர் ஆட்சி செய்த ஆண்டு = பொ.ஆ.606 முதல் பொ.ஆ. 647 வரை.
ஹர்ஷர் ஆட்சிக்கான சான்றுகள்
- பாணர் எழுதிய நூல் = ஹர்ஷ சரிதம்.
- சீனப் பயணி யுவான் சுவாங் எழுதிய நூல் = “சியூகி”.
- மதுபன் செப்புப் பட்டயக் குறிப்புகள்
- சோன்பட்டு செப்பு முத்திரைக் குறிப்புகள்
- பன்ஸ்கெரா செப்புப் பட்டயக் குறிப்புகள்
- நாளந்தா களிமண் முத்திரை குறிப்புகள்
- ஐஹோல் கல்வெட்டு
முதல் வாழ்க்கை வரலாற்று நூல்
- ஹர்ஷசரிதம் நூலின் ஆசரியர் = பாணர்.
- “ஒரு அரசரின் முதல் வாழ்க்கை வரலாற்று நூல்” (the first formal biography of a king) என்று கூறப்படும் நூல் = பாணரின் ஹர்ஷசரிதம்.
புஷ்யபூதிகள்
- வர்த்தன வம்சத்தை நிறுவியவர் = புஷ்யபூதி.
- வர்த்தன வம்ச ஆட்சியாளர்களின் தலைநகரம் = தானேஸ்வரம்.
- புஷ்யபூதி யாரிடம் படைத்தளபதியாக பணிபுரிந்தார் = குப்தர்களிடம்.
- புஷ்யபூதிக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் = பிரபாகர வர்த்தனர்.
- பிராபகர வர்த்தரனரின் பிள்ளைகள் = ராஜ்ய வர்த்தனர், ஹர்ஷ வர்த்தனர், மகள் ராஜ்யஸ்ரீ.
- பிராபகர வர்த்தரனரின் மகன் ராஜ்யஸ்ரீ யாருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார் = கன்னோசியை ஆண்ட மௌகாரி வம்ச அரசன் கிரகவர்மன்.
- பிராபகர வர்த்தனரின் மறைவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் = ராஜ்ய வர்த்தனர்.
- ராஜ்ய வர்த்தனரை கொன்றவன் = வங்காளத்தை ஆண்ட கௌட அரசன் சசாங்கன்.

ஹர்ஷர்
- ராஜ்ய வர்த்தனரின் மறைவிற்கு பிறகு ஹர்ஷர் ஆட்சிக்கு வந்தார்.
- ஹர்ஷர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஆண்டு = பொ.ஆ 606.
- ஹர்ஷர் தனது தலைநகரை தானேஸ்வரத்தில் இருந்து எங்கு மாற்றினார் = கன்னோசி.
- ஹர்ஷர் யாருடைய அறிவுரையின் படி கன்னோசியின் அரசராக பதவி ஏற்றுக் கொண்டார் = அவலோகிதேஷ்வர போதிசத்வர்.
- “சிலாதித்யா” என்ற பட்டப்பெயரை ஏற்றுக் கொண்ட அரசர் = ஹர்ஷர்.
- “ராஜபுத்திரர்” என்று அழைக்கப்பட்ட அரசர் = ஹர்ஷர்.
- ஹர்ஷரின் சகோதரி = ராஜ்யஸ்ரீ.
- ஹர்ஷர் தனது சகோதரிக்காக யாரை கொன்றார் = மாளவ அரசர் தேவகுப்தர்.
- ஹர்ஷர் பௌத்த மதத்திற்கு மாற்றியவர் = அவரின் சகோதரி ராஜ்யஸ்ரீ.
ஹர்ஷரின் படையெடுப்புகள்
- வங்காளத்தை ஆண்ட கௌட அரசன் சாசாங்கனுக்கு எதிராக ஹர்ஷர் போரினை தொடுத்தார்.
- காமரூபம் என்பது = இன்றைய அசாம் பகுதி.
- ஹர்ஷரின் மகள் யாருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்= வல்லபியை ஆண்ட மைத்ரேய அரசன் துருவபட்டர்.
- ஹர்ஷர் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகள் = நாற்பத்தி ஒன்று.
சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி
- ஹர்ஷரின் தக்காணப் படையெடுப்பை வெற்றிகரமாக தடுத்தவர் = சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி.
- ஹர்ஷரை தோற்கடித்தவர் = சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி.
- ஹர்ஷரை வெற்றிகொண்டதற்க்காக புலிகேசி சூட்டிக்கொண்ட பட்டப்பெயர் = பரமேஸ்வரர்.

ஹர்ஷரின் சீன உறவு
- ஹர்ஷரின் அவைக்கு தூதுக் குழுவை அனுப்பிய சீனப் பேரரசர் = டாங் பேரரசர் “டாய் சுங்”.
- ஹர்ஷரின் அவைக்கு சீன தூதுக்குழு வருகை தந்த ஆண்டு = பொ.ஆ. 643 மற்றும் பொ.ஆ. 647.
ஹர்ஷரின் முக்கிய நிர்வாக திகாரிகள்
- அவந்தி = அயலுறவு மற்றும் போர் விவகாரங்களுக்கான அமைச்சர்.
- சிம்மானந்தா = படைத் தளபதி
- குந்தலா = குதிரைப்படைத் தலைவர்
- ஸ்கந்தகுப்தர் = யானைப் படைத் தலைவர்.
- திர்கத்வஜர் = அரச தூதவர்கள்
- பானு = ஆவணப் பதிவாளர்கள்
- மஹாபிரதிஹரர் = அரண்மனைக் காவலர்களின் தலைவர்.
- சர்வகதர் = உளவுத்துறை அதிகாரி.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஹர்ஷர் ஆட்சியில் வருவாய் நிர்வாகம்
- ஹர்ஷர் ஆட்சியில் வசூலிக்கப்பட்ட வரிகள் = பாகா, ஹிரண்யா, பலி.
- பாகா என்றால் என்ன = விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு பொருளாக செலுத்தப்பட்ட நிலவரி.
- ஹிரண்யா என்றால் என்ன = விவசாயிகளாலும் வணிகர்களாலும் பணமாக செலுத்தப்பட்ட வரி.
- ஹர்ஷர் ஆட்சியில் அரசுக்கு சொந்தமான நிலம் எத்தனை பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன = நான்கு.
ஹர்ஷர் ஆட்சியில் நீதி நிர்வாகம்
- மீமாம்சகர்கள் என்போர் = ஹர்ஷர் ஆட்சிக்காலத்தில் குற்றவியல் சட்டங்களை விசாரித்து நீதி வழங்கியவர்கள்.
- குப்தர்கள் ஆட்சியைக் காட்டிலும் சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக இருந்தன.

யுவான் சுவாங்
- “பயணிகளின் இளவரசர்” என்று அழைக்கப்பட்டவர் = சீனப்பயணி யுவான் சுவாங்.
- சீனப்பயணி யுவான் சுவாங் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார் = பதிமூன்று ஆண்டுகள்.
- யுவான் சுவாங் எழுதிய நூல் = சி-யூ-கி.
- யாருடைய ஆட்சிக் காலத்தின் பொழுது யுவான் சுவாங் இந்தியாவிற்கு வருகை தந்தார் = ஹர்ஷர்.
- யுவான் சுவாங் தனது எந்த வயதில் துறவு பூண்டார் = இருபதாவது வயதில்.
- இந்தியாவில் இருந்து புத்தரின் நினைவாக யுவான் சுவாங் சீனாவிற்கு எடுத்துச் சென்றது = புத்தரின் நினைவுச் சின்னங்களாக 150 பொருட்கள், தங்கம் வெள்ளி மற்றும் சந்தனத்தால் செய்யப்பட புத்தரின் உருவச் சிலைகள் மற்றும் 657 தொகுதிகள் கொண்ட அறிய கையெழுத்து பிரதிகள்.
- ஹர்ஷரின் படை எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன என யுவான் சுவாங் பதிவு செய்துள்ளார் = நான்கு.
- யுவான் சுவாங் வருகையின் பொழுது நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தவர் = சிலாபத்ரர்.
படை நிர்வாகம்
- ஹர்ஷரின் படையில் இருந்த சாதாரண படை வீரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = சாடர், பாடர்.
- “பிரகதிஸ்வரர்” என்போர் யார் = ஹர்ஷர் படையின் குதிரைப்படை அதிகாரிகள்.
- ஹர்ஷரின் படையில் இருந்த காலாட்படை வீரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = பாலதிக்ரிதர், மகாபாலதிக்ரிதர்.
ஹர்ஷரின் மதக் கொள்கை
- ஹர்ஷர் எந்த ஆண்டு வரை சிவபக்தராக இருந்தார் = பொ.ஆ 631.
- ஹர்ஷர் புத்த மதத்தை தழுவ காரணமாக இருந்தவர் = ஹர்ஷரின் சகோதரி ராஜ்யஸ்ரீ, யுவான் சுவாங்.
- ஹர்ஷர் பின்பற்றிய புத்த மதம் = மகாயானா புத்த மதம்.
- ஹர்ஷர் எத்தனை பௌத்த மதக் கூட்டங்களை நடத்தினார் = இரண்டு.
- ஹர்ஷர் எங்கு பௌத்த மதக் கூட்டங்களை நடத்தினார் = கன்னோசி, பிரயாகை.
- கன்னோசி பௌத்த மதக் கூட்டத்தில் எத்தனை அரசர்கள் கலந்துக் கொண்டனர் = காமரூப அரசர் பாஸ்கர வர்மன் உட்பட 20 அரசர்கள்.
- கன்னோசி பௌத்த மதக் கூட்டத்தில் எத்தனை அடி உயர புத்தரின் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது = மூன்றடி.
- பிரயாகையில் “மகாமோட்ச பரிஷத்” எனப்படும் பௌத்த மதக் கூட்டத்தை நடத்தியவர் = ஹர்ஷர்.
பெண்களின் நிலை
- பெண்கள் முகத்திரை அணியும் வழக்கம் வழக்கில் இருந்தன.
- உடன்கட்டை ஏறும் (சதி) பழக்கம் நடைமுறையில் இருந்தன.
- ஹர்ஷரின் தந்தை பிரபாகர வர்த்தனர் இறப்பை தொடர்ந்து ஹர்ஷரின் தாய் யசோமதிதேவி உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டார்.
ஹர்ஷர் காலத்தில் கலை இலக்கியம்
- பாணர் எழுதிய நூல்கள் = ஹர்ஷ சரிதம், காதம்பரி.
- ஹர்ஷரின் அரசவைக் கவிஞர் = பாணர்.
- ஹர்ஷர் எழுதிய நூல்கள் = பிரியதர்சிகா, ரத்னாவளி, நாகானந்தா.

வங்காளத்தில் பாலர்கள்
- பழங்கால வங்காளத்தை ஆண்ட முக்கியமான கௌட அரசன் = சசாங்கன்.
- பால வம்சத்தை தோற்றுவித்தவர் = கோபாலர்.
- பாலர்களின் தலைநகரம் = பாடலிப்புத்திரம்.
- பாலர்கள் பின்பற்றிய சமயம் = மகாயான புத்த சமயம்.
- கோபாலருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் = அவரின் மகன் தர்மபாலர்.
பால வம்ச ஆட்சியாளர்கள்
- தர்மபாலர் பெற்ற பட்டங்கள் = பரமேஸ்வரர், பரமபட்டாரகா, மகாராஜாதிராஜா.
- விக்கிரமசீல பௌத்த மடாலயத்தை நிறுவியவர் = தர்மபாலர்.
- விக்கிரமசீல பௌத்த மடாலயம் நிறுவப்பட்ட இடம் = பீகாரின் பாகல்பூர் மாவட்டம்.
- சோமபுரி பௌத்த விகாரத்தை கட்டியவர் = தர்மபாலர்.
- சோமபுரி பௌத்த விகாரம் அமைந்துள்ள இடம் = தற்போதைய வங்கதேசம்.
- தர்மபாலர் ஆதரித்த பௌத்த அறிஞர் = ஹரிஷ்பத்ரர்.
- தர்மபாலரின் மகன் = தேவபாலர்.
- ராஸ்டிரக்கூட அரசர் அமோகவர்ஷனை வென்ற பால அரசன் = தேவபாலர்.
- சுவர்ணதீபம் என அழைக்கப்பட்ட நாடு = சுமத்ரா.
- அரியணையை துறந்து துறவறம் மேற்கொண்ட பால அரசன் = விக்ரமபாலர்.
- சோழ அரசன் ராஜேந்திர சோழனின் வடஇந்தியப் படையெடுப்பை கங்கையை கடக்க முடியாதபடி தடுத்த பால அரசன் = முதலாம் மகிபாலர்.
- பால வம்சத்தின் கடைசி சிறந்த அரசன் = ராமபாலர்.
- 53 ஆண்டுகள் ஆட்சி செய்த பால அரசன் = ராமபாலர்.
- பால வம்சத்தின் கடைசி அரசன் = மதனபாலர்.
- பால வம்சத்தின் கடைசி அரசனான மதபாலரை வீழ்த்தி ஆட்சியை பிடித்தவர் = சேனர் வம்சத்தை நிறுவிய விஜயசேனர்.
பாலர்கள் ஆட்சியில் மதம்
- பாலர்கள் பின்பற்றிய சமயம் = மகாயான பௌத்த சமயம்.
- பால வம்சத்தின் சிறந்த அரசர்களில் ஒருவரான தர்மபாலரின் ஆன்மீக குறு = பௌத்த அறிஞர் ஹரிபத்ரர்.
பாலர்கள் ஆட்சியில் கலை
- பாலர்கள் ஆட்சியில் சிறந்து விளங்கிய ஓவியர்கள் = திமான், அவரின் மகன் விடபாலர்.
- சாரநாத், நாளந்தா, புத்த கயா ஆகிய இடங்களில் புனித வழிபாட்டு இடங்களை சீரமைத்தவர் = முதலாம் மகிபாலர்.
- பீகாரின் ஓடாண்டபுரியில் புகழ்பெற்ற பௌத்த மடாலயத்தை நிறுவியவர் = கோபாலர்.
- விக்கிரமசீலா மகாவிகாரத்தை நிறுவியவர் = தர்மபாலர்.
- சோமபுர மகாவிகாரத்தை நிறுவியவர் = தர்மபாலர்.
- விக்கிரமசீல பல்கலைக்கழகத்தை நிறுவியவர் = தர்மபாலர்.
- சோமபுர பல்கலைக்கழகத்தை நிறுவியவர் = தர்மபாலர்.
பாலர்கள் ஆட்சியில் இலக்கியம்
- “ஆகம சாஸ்திரம்” என்னும் நூலின் ஆசிரியர் = கவுத பாதர்.
- “நியாய குண்டலி” என்னும் நூலின் ஆசிரியர் = ஸ்ரீதரபட்டர்.
- “ராமசரிதம்” என்னும் நூலின் ஆசிரியர் = சந்தியாகர் நந்தி.
- பால வம்ச அரசனான “ராமபாலரின்” வாழ்க்கை வரலாற்று நூல் எது = ராமசரிதம்.

ராஸ்டிரக்கூடர்கள்
- ராஸ்டிரக்கூடர்கள் யாருடன் தொடர்ந்து பகைமையை கொண்டிருந்தனர் = பிரதிகாரர்கள்.
- எந்த இடத்தை கைப்பற்ற ராஸ்டிரக்கூடர்கள் பிரதிகாரர்களுடன் தொடர்ந்து போரிட்டனர் = கன்னோசி.
- பிரதிகாரர்களுகும் ராஸ்டிரக்கூடர்களுக்கும் இடையே இருந்த பகையை பதிவு செய்துள்ள அரபுப் பயணி யார் = அல் மாசூத்.
- ராஸ்டிரக்கூடர்களின் தாய் மொழி = கன்னடம்.
- ராஸ்டிரக்கூடர்கள் யாரின் வழித்தோன்றல்கள் = ரஸ்திகர் அல்லது ரதிகர்களின் வழித்தோன்றல்.
- அசோகரின் கல்வெட்டில் ராஸ்டிரக்கூடர்கள் பற்றிய குறிப்பு உள்ளது.
தந்திதுர்கர்
- ராஸ்டிரக்கூட வம்சத்தின் தலைச்சிறந்த அரசர் = தந்திதுர்கர்.
- சாளுக்கிய அரசன் இரண்டாம் கீர்திவர்மனை தோற்கடித்தார்.
- ராஸ்டிரக்கூட அரசர் தந்திதுர்கர் பெற்ற சிறப்புப் பெயர்கள் = மகாராஜாதிராஜர், பரமேஸ்வரர், பரமபட்டாரகர்.
- பல்லவர்களுடன் திருமண உறவை ஏற்படுத்திக் கொண்ட ராஸ்டிரக்கூட அரசன் = தந்திதுர்கர்.
- தந்திதுர்கர் தனது மகளை எந்த பல்லவ மன்னனுக்கு திருமணம் செய்து கொடுத்தார் = பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மன்.
- தந்திதுர்கருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் = முதலாம் கிருஷ்ணா.
முதலாம் கிருஷ்ணரும் அவருக்கு பின் வந்தவர்களும்
- மைசூரை ஆண்ட கங்கர்களை வென்ற ராஸ்டிரக்கூட அரசன் = முதலாம் கிருஷ்ணா.
- எந்த மன்னன் ஆட்சிக்காலத்தில் ராஸ்டிரக்கூட அரசின் புகழ் உச்சியில் இருந்தது = துருவர்.
- பல்லவ அரசன் நந்திவர்மனை தோற்கடித்த ராஸ்டிரக்கூட அரசன் யார் = துருவர்.
- கன்னோசி பகுதிக்காக பிரதிகார அரசரையும், பாலர் அரசரையும் தோற்கடித்த ராஸ்டிரக்கூட அரசன் = துருவர்.
- துருவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் = மூன்றாம் கோவிந்தர்.
- பல்லவ அரசர் தண்டிகரை வீழ்த்திய ராஸ்டிரக்கூட அரசன் யார் = மூன்றாம் கோவிந்தர்.
- மூன்றாம் கோவிந்தற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் = அமோகவர்ஷர்.
- அமோகவர்ஷர் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார் = 64 ஆண்டுகள்.
- கன்னட மொழியில் இயற்றப்பட்ட முதல் கவிதை நூல் = கவிராஜமார்க்கம்.
- “கவிராஜமார்க்கம்” என்னும் நூலின் ஆசிரியர் = அமோகவர்ஷர்.
- சோழர்கள் மீது படையெடுத்து வெற்றிபெற்ற ராஸ்டிரக்கூட அரசன் = மூன்றாம் கிருஷ்ணர்.
- தஞ்சையை கைப்பற்றிய ராஸ்டிரக்கூட அரசன் = மூன்றாம் கிருஷ்ணர்.
- “தக்கோலம் போர்” நடைபெற்ற ஆண்டு = பொ.ஆ 949.
- தக்கோலம் போரில் தோற்கடிக்கப்ப்ட்ட சோழ அரசன் = ராஜாதித்யன்.
- தக்கோலம் போரில் சோழர்களை வென்ற ராஸ்டிரக்கூட அரசன் = மூன்றாம் கிருஷ்ணர்.
- ராமேஸ்வரத்தில் வெற்றித் தூணை நிறுவிய ராஸ்டிரக்கூட அரசன் = மூன்றாம் கிருஷ்ணர்.
ராஸ்டிரக்கூடர்களின் மதம், இலக்கியம், கலை
- எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டியவர் = முதலாம் கிருஷ்ணா (ராஸ்டிரக்கூடர்).
- உஜ்ஜயினியில் “ஹிரண்யகர்ப்ப சடங்கை” நடத்திய ராஸ்டிரக்கூட அரசன் = தந்திதுர்கர்.
- பிற்கால ராஸ்டிரக்கூட அரசர்கள் சமண சமயத்திற்கு ஆதரவு அளித்தனர்.
- அமோகவர்ஷர் எழுதிய நூல்கள் = கவிராஜமர்க்கம் (கன்னட மொழியின் முதல் நூல்), பிரஸ்னோத்ரமாலிகா (சமஸ்கிருத நூல்).
- சமணர்களின் “ஆதிபுராணத்தை” எழுதியவர் = ஜீனசேனர்.
- சமணர்களின் “மகாபுராணத்தை” எழுதியவர் = இரண்டாம் கிருஷ்ணரின் ஆன்மீக குருவான குணபத்ரர்.
- பட்டாடக்கல் “லோகேஸ்வரர் ஆலயத்தை” கட்டியவர் = சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்கிரமாதித்தன்.
- எலிபெண்டா குகைக் கோவிலை கட்டியவர்கள் = ராஸ்டிரக்கூடர்கள்.
புத்தக வினாக்கள்
- பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை _____________ என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்? = கிரகவர்மன்.
- ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை ___________ இன் அறிவுரையின் படி ஏற்றுக் கொண்டார்? = அவலோகிதேஷ்வர போதிசத்துவர்.
- _____________ என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்பான அமைச்சர் ஆவார்? = அவந்தி.
- ஹர்ஷரால் எழுதப்பெற்ற நூல் எது? = பிரியதர்சிகா.
- 11TH HISTORY குப்தர்
- 11TH மௌரியருக்கு பிந்தைய அரசியலமைப்பும் சமூகமும்
- 11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்
- 11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
- 11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
- 11TH பண்டைய இந்தியா
- 11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
- 11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
- 11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
- 11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
- 11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
- 11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
- 11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி