11TH அரபியர் துருக்கியரின் வருகை

Table of Contents

11TH அரபியர் துருக்கியரின் வருகை

11TH அரபியர் துருக்கியரின் வருகை

  • தென்னிந்தியாவின் மலபார் பகுதிகளில் இந்தியப் பெண்களை மணந்து குடியேறிய அரேபியர்களை “மாப்பிள்ளை” என்று அழைத்தனர்.
  • “குரசன் நாடு” என்பது = கிழக்கு ஈரான்.
  • முகமது கோரி, கஜினியின் ஆட்சி அழிய காரணமாக இருந்தது = மங்கோலியப் படையெடுப்பு.
  • இல்துமிஷ் ஒரு = இல்பாரி துருக்கியர்.
  • தனது அடிமைகளுக்கு துருக்கியப் பெயரையே சூட்டியவர் = இல்துமிஷ்.
11TH அரபியர் துருக்கியரின் வருகை
11TH அரபியர் துருக்கியரின் வருகை

தில்லி சுல்தானியம்

  • தில்லி சுல்தானியத்தின் ஆட்சி நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1206 – 1526.
  • தில்லி சுல்தானியத்தை ஆண்ட வம்சங்கள் = ஐந்து. அவை,
    1. அடிமை வம்சம் (1206 – 1290) = 85 ஆண்டுகள்
    2. கில்ஜி வம்சம் (1290 – 1320) = 30 ஆண்டுகள்
    3. துக்ளக் வம்சம் (1320 – 1414) = 95 ஆண்டுகள்
    4. சையது வம்சம் (1414 – 1451) = 38 ஆண்டுகள்
    5. லோடி வம்சம் (1451 – 1526) = 76 ஆண்டுகள்
  • தில்லி சுல்தானியத்தை மிக அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த வம்சம் = துக்ளக் வம்சம்.
  • தில்லி சுல்தானியத்தை மிக குறைந்த ஆண்டுகள் ஆட்சி செய்த வம்சம் = கில்ஜி வம்சம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

டெல்லி சுல்தானியர்களை பற்றி அறிய உதவும் சான்றுகள்

  • “தாரிக்-அல்-ஹிந்த்” என்னும் நூலின் ஆசிரியர் = அல்-பெருணி.
  • “தபகத்-இ-நசிரி” என்னும் நூலின் ஆசிரியர் = மின்ஹஜ் உஸ் சிராஜ்.
  • “தாரிக்-இ-பெரோஸ் ஷாஹி” என்னும் நூலின் ஆசிரியர் = ஜியாவுதீன் பாரனி.
  • “மிஃப்தா உல் ஃபுதூ” என்னும் நூலின் ஆசிரியர் = அமீர் குஸ்ரு.
  • “கஜைன் உல் ஃபுதூ” என்னும் நூலின் ஆசிரியர் = அமீர் குஸ்ரு.
  • துக்ளக் நாமா (பாரசீக மொழியில் எழுதப்பட்ட நூல்).
  • “தாரிக் இ பெரோ ஷாஹி” என்னும் நூலின் ஆசிரியர் = சம்ஸ் இ சிராஜ் அபிப்.
  • “தாரிக் இ முபாரக் ஷாஹி” என்னும் நூலின் ஆசிரியர் = குலாம் யாஹ்யா பின் அஹ்மத்.
  • ஃபெரிஷ்டா = இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு பற்றி பாரசீக மொழியில் எழுதப்பட்ட நூல்.
  • “Emergence of Delhi Sultanate” என்னும் நூலின் ஆசிரியர் = சுனில் குமார்.
  • “பாரசீக வரலாற்று ஆவணங்கள், தில்லி சுல்தானியம் குறித்து மிகைப்படுத்திக் கூறுகின்றன. குறிப்பிட்ட சுல்தானின் ஆட்சியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த அவற்றின் கருத்துகள் எந்த விமர்சனமும் இன்றி நவீன கல்விப்புலத்தினுள் சேர்க்கப்பட்டுள்ளன” என்று கூறியவர் = சுனில் குமார்.

சிந்து மீது அரபுப் படையெடுப்பு

  • சிந்து மீது அரேபியர்கள் எடுத்த முதல் படையெடுப்பு தோல்வியில் முடிந்தது.
  • ஈராக்கின் ஆளுநர் ஹஜஜ்-பின்-யூசுப், பெரும் படையை தனது மருமகனான 17வயது நிரம்பிய முகமது பின் காசிம் தலைமையில் சிந்துவின் மீது படையெடுக்க அனுப்பினார்.
  • முகமது பின் காசிம் சிந்துவின் மீது படையெடுத்த பொழுது, சிந்துவை ஆண்டவர் = இந்து மன்னர் தாகிர்.
  • காசிம் சிந்துப் பகுதியில் முதன் முதலில் கைப்பற்றிய பகுதி = பிராமணாபாத்.
  • காசிம், தாகிரை எங்கு துரத்திச் சென்று கொன்றார் = ரோஹ்ரி.
  • காசிமின் படை எந்த துறைமுகத்தை தாக்கி கொள்ளையடித்தது = தேபல்.
  • அரேபியரின் சிந்து எவ்வாறு குறிப்பிடப்படுகிறது = “விளைவுகளற்ற வெற்றி” (triumph without results).
  • ஏனெனில் அரேபியர்களின் சிந்து படையெடுப்பு, இந்திய எல்லைப் பகுதியை மட்டுமே தொட்டது. அதற்கு அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு எவ்வித படையெடுப்பும் இல்லை.
11TH அரபியர் துருக்கியரின் வருகை
11TH அரபியர் துருக்கியரின் வருகை

கஜினி மாமுது

  • இந்திய துணைக் கண்டத்தில் இஸ்லாமிய அரசை தெற்கு நோக்கி விரிவுபடுத்தும் நடவடிக்கையை துவக்கி வைத்தவர் = சபுக்தஜின்.
  • கஜினி மாமுவின் பதவி ஏற்பில் “பேரரசின் வலது கை” என்ற பட்டத்தை வழங்கியவர் = கலிபா.
  • கஜினி மாமுது எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் = 32 ஆண்டுகள்.
  • கஜினி மாமுது எத்தனை முறை இந்தியாவின் மீது படையெடுத்தார் = 17 ஆண்டுகள்.
  • கஜினி மாமுது படையெடுப்பின் முக்கிய நோக்கம் = இந்திய இந்துக் கோவில்களின் செல்வங்களை கொள்ளையடித்தல்.
  • புகழ்பெற்ற குஜராத்தின் சோமநாதபுர கோவில் கொள்ளையடிப்பு நடைபெற்ற ஆண்டு = 1025.
  • சோமநாதபுர கொள்ளை படையெடுப்பின் மூலம் கஜினி மாமுது சுமார் 2 கோடி தினார் மதிப்புடைய தங்கப் பொருட்களை கொள்ளையடித்து சென்றான்.
  • கஜினி வம்சத்தின் கடைசி அரசர் = குரவ் ஷா.

அல்-பெருணி

  • கஜினி மாமுதுடன் இந்தியாவிற்கு வந்த புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் = அல்-பெருணி.
  • அல்-பெருணி எந்த நூலை எழுதுவதற்கு முன்னர் சமஸ்கிருதத்தை கற்றுக் கொண்டு எழுதினார் = கிதாப்-உல்-ஹிந்த்.
  • புகழ்பெற்ற கிரேக்க நூலான “யூக்ளில்” நூலை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்பு செய்த முஸ்லிம் அறிஞர் = அல்-பெருணி.
  • ஆரியபட்டரின் “ஆர்யபட்டியம்” நூலினை மேலை நாட்டினருக்கு தெரியப்படுத்திய அறிஞர் = அல்-பெருணி.
  • எந்த அறிஞர் இந்தியாவுக்கும் பிற உலக நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்தார் = அல்-பெருணி.
  • எந்த அறிஞர் இந்தியாவிற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் இடையிலான நாகரிக இணைப்பாக இருந்தார் (He was the inter-civilizational connect between India and the rest of the world) = அல்-பெருணி.
11TH அரபியர் துருக்கியரின் வருகை
11TH அரபியர் துருக்கியரின் வருகை

கோரி முகமது

  • முல்தான் நகரம் மீது கோரி படையெடுத்த ஆண்டு = 1175.
  • எந்த ஆண்டு குஜராத்தின் சாளுக்கிய அரசு, முகமது கோரியை அபு மலை போரில் தோற்கடித்தனர் = 1179.
  • 1179ல் எங்கு நடைபெற்ற போரில் முகமது கோரியை, குஜராத்தின் சாளுக்கிய அரசு தோற்கடித்தது = அபு மலை.
  • தரெய்ன் போர் யாருக்கு இடையே நடைபெற்றது = அஜ்மீர் அரசர் பிருத்விராஜ் சௌகான் மற்றும் முகமது கோரி.
  • முதல் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு = 1191.
  • முதல் தரெய்ன் போரில் வெற்றி பெற்றவர் = பிருத்விராஜ் சௌகான்.
  • இரண்டாவது தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு = 1192.
  • இரண்டாவது தரெய்ன் போரில் வெற்றி பெற்றவர் = முகமது கோரி.
  • கன்னோசி அரசர் ஜெயசந்திரனை தோற்கடித்தவர் = முகமது கோரி.
  • முகமது கோரி தனது இந்தியப் பகுதிகளுக்கு யாரை பொறுப்பாளராக நியமித்தார் = குத்புதின் ஐபக்.

ராஜபுத்திர அரசுகள்

  • பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடஇந்தியாவில் இருந்த முக்கிய ராஜபுத்திர அரசர்கள் = டோமர் (தில்லி), சௌகான் (ராஜஸ்தான்), சோலங்கி (குஜராத்), பரமர் (மால்வா), கடவாலா (கன்னோசி), சந்தேலர் (பந்தல்கண்ட்).
  • ராஜபுத்திர அரசர்கள் “யானைப்படையை” மையப்படுத்தி இருந்தனர்.
  • துருக்கியர்கள் “குதிரைப்படையை” மையப்படுத்தி இருந்தனர்.
  • உலகப் புகழ்பெற்ற கஜுராஹோ கோவிலை கட்டியவர்கள் = பந்தல்கண்ட் பகுதியை ஆண்ட சந்தேலர்கள்.

அடிமை வம்சம்

  • அடிமை வம்சம் எவ்வாறு அளிக்கப்படுகிறது = மம்லக் வம்சம்.
  • மம்லக் என்பதன் பொருள் = உடைமை (அரபு மொழியில் “ஓர் அடிமை”).
  • அடிமை வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = குத்புதின் ஐபக்.
11TH அரபியர் துருக்கியரின் வருகை
11TH அரபியர் துருக்கியரின் வருகை

குத்புதின் ஐபக்

  • குத்புதின் ஐபக்கின் ஆட்சிக்காலம் = 1206-1210.
  • முகமது கோரி தனது இந்தியப் பகுதிகளை ஆள யாரை நியமித்தார் = குத்புதின் ஐபக்.
  • பீகாரையும் வங்கத்தையும் கைப்பற்ற குத்புதின் ஐபக்கிற்கு உதவிய துருக்கிய தளபதி = முகமது பின் பக்தியார் கில்ஜி.
  • பீகாரின் நாளந்தா பல்கலைக்கழகத்தை அழித்தவன் = முகமது பின் பக்தியார் கில்ஜி.
  • குத்புதின் ஐபக் ஆட்சி செய்த ஆண்டுகள் = நான்கு.
  • எந்த விளையாட்டின் பொழுது குத்புதின் ஐபக் இறந்தார் = சௌகான் (குதிரை போலோ).
  • இந்தியாவில் முதன் முறையாக முஸ்லிம் அல்லாதோர் மீது “ஜிஸியா” வரியை விதித்தவர் = குத்புதின் ஐபெக்.
  • குத்புதின் ஐபக் இறந்த இடம் = லாகூர்.

இல்துமிஷ்

  • இல்துமிஷின் ஆட்சிக்காலம் = 1211 – 1236.
  • குத்புதின் ஐபக்கின் அடிமையும் மருமகனும் = இல்துமிஷ்.
  • குதுப்மினாரை கட்டி முடித்தவர் = இல்துமிஷ் (உயரம் = 243 அடி)
  • செப்பு நாணயம் மற்றும் “தங்கா” எனப்படும் வெள்ளி நாணயங்களை அறிமுகம் செய்தவர் = இல்துமிஷ்.
  • நாற்பதின்மர் குழுவினை உருவாக்கிய டெல்லி சுல்தான் = இல்துமிஷ்.
  • இல்துமிஷ் மறைவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் = அவரின் மகள் இரசியா பேகம்.

பால்பன்

  • பால்பன் ஆட்சிக்காலம் = 1266 – 1287.
  • “மஃப்ருஸி” என்பதன் பொருள் = முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை இல்லா நிலங்கள்.
  • வங்கத்தின் ஆளுநராக பால்பன் யாரை நியமித்தார் = துக்ரில் கான்.
  • பால்பனின் அவைக்கு நல்லெண்ண குழுவை அனுப்பி வாய்த்த மங்கோலிய தளபதி யார் = ஹூலுக் கான்.
  • பால்பனின் கல்லறை உள்ள இடம் = புதுதில்லி.
  • சகல்கானி என்றால் என்ன = நாற்பதின்மர் குழு.
  • நாற்பதின்மர் குழுவினை உருவாக்கிய டெல்லி சுல்தான் = இல்துமிஷ்.
  • நாற்பதின்மர் குழுவினை ஒழித்த டெல்லி சுல்தான் = பால்பன்.

கில்ஜிகள் (1290 – 1320)

  • அடிமை வம்சத்தை தொடர்ந்து டெல்லியை ஆண்ட வம்சம் = கில்ஜி வம்சம்.
  • கில்ஜி வம்சம் ஆட்சி செய்த ஆண்டுகள் = சுமார் 30 ஆண்டுகள்.
  • கில்ஜி வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = ஜலாலுதீன் கில்ஜி.
  • 11TH அரபியர் துருக்கியரின் வருகை

ஜலாலுதீன் கில்ஜி (1290 – 1296)

  • பால்பனின் மறைவிற்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியவர் = அவரின் தளபதி மாலிக் ஜலாலுதீன் கில்ஜி.
  • கில்ஜிகள் ஆப்கானியர்கள் (துருக்கியர்கள் அல்ல).
  • மங்கோலிய படையெடுப்பை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திய டெல்லி சுல்தான் = ஜலாலுதீன் கில்ஜி.
  • ஜலாலுதீன் கில்ஜியின் மருமகன் = அலாவுதீன் கில்ஜி.
  • ஜலாலுதீன் கில்ஜியை கொன்று ஆட்சியை கைப்பற்றியவர் = அலாவுதின் கில்ஜி.
11TH அரபியர் துருக்கியரின் வருகை
11TH அரபியர் துருக்கியரின் வருகை

அலாவுதீன் கில்ஜி (1296 – 1316)

  • மங்கோலியர்களை தோற்கடித்து அவர்களை மீண்டும் படையெடுப்பு செய்யாதவாறு தோல்வியை கொடுத்த டெல்லி சுல்தான் = அலாவுதீன் கில்ஜி.
  • அலாவுதீன் கில்ஜி கொள்ளையடித்த இடங்கள் = தேவகிரி, குஜராத், ரான்தம்பூர், சித்தூர், மால்வா.
  • தீபகற்ப இந்தியாவில் அலாவுதீன் கில்ஜியின் முதல் இலக்கு = தக்காணத்தின் தேவகிரி பகுதியாகும்.
  • அலாவுதீன் கில்ஜி எந்த ஆண்டு தேவகிரியை தாக்கினார் = 1307.
  • தேவகிரியை தாக்க யாரின் தலைமையில் அலாவுதீன் கில்ஜி படையை அனுப்பினார் = மாலிக் காபூர்.
  • எந்த ஆண்டு அலாவுதீன் கில்ஜி, வாராங்களல்லின் காகதீய அரசர் பிரதாபருத்ரதேவனை தோற்கடித்தார் = 1309.
  • எந்த ஆண்டு அலாவுதீன் கில்ஜி, ஹொய்சாள அரசர் மூன்றாம் வீரவல்லாளனை தோற்கடித்தார் = 1310.
  • மாலிக் காபூர் தலைமையிலான அலாவுதீன் கில்ஜியின் படைகள் தமிழ்நாட்டில் எங்கு தாக்கின = சிதம்பரம், திருவரங்கம், மதுரை.
  • மது, போதை மருத்துகள் பயன்பாட்டினை தடை செய்த டெல்லி சுல்தான் = அலாவுதீன் கில்ஜி.
  • சூதாட்டத்தை தடை செய்த டெல்லி சுல்தான் = அலாவுதின் கில்ஜி.
  • அஞ்சல் முறையை உருவாக்கிய டெல்லி சுல்தான் = அலாவுதின் கில்ஜி.
  • படை வீரர்களுக்கு ஊதியத்தை பணமாக வழங்கிய முதல் டெல்லி சுல்தான் = அலாவுதீன் கில்ஜி.
  • கள்ளச்சந்தை, பொருள் பதுக்கலை தடுக்க அமைப்பினை உருவாக்கிய டெல்லி சுல்தான் = அலாவுதீன் கில்ஜி.

துக்ளக் வம்சம் (1320 – 1414)

  • கில்ஜி வம்சத்திற்கு பிறகு டெல்லியை ஆட்சி செய்த வம்சம் = துக்ளக் வம்சம்.
  • துக்ளக் வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = கியாசுதீன் துக்ளக்.

கியாசுதீன் துக்ளக் (1320 – 1325)

  • துக்ளக் வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = கியாசுதீன் துக்ளக்.
  • ஐந்து ஆண்டு மட்டுமே ஆட்சி செய்தார் கியாசுதீன் துக்ளக்.
  • கியாசுதீன் துக்ளக்கின் மகன் = ஜானாகான் (முகமது பின் துக்ளக்).

முகமது பின் துக்ளக் (1325 – 1351)

  • முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர் = ஜானாகான்,
  • தலைநகரை டெல்லியில் இருந்து தௌலதாபாத்திற்கு மாற்றிய டெல்லி சுல்தான் = முகமது பின் துக்ளக்.
  • தௌலதாபாத் என்பது = தேவகிரி.
  • முகமது பின் துக்ளக்கின் தலைநகர் மாற்றம் திட்டம் தோல்வியில் முடிந்தது.
  • “அடையாள நாணயங்களை” அறிமுகம் செய்த டெல்லி சுல்தான் = முகமது பின் துக்ளக்.
  • வேளாண்மையை கவனித்துக்கொள்ள முகமது பின் துக்ளக் உருவாக்கிய துறை = திவான்-இ-அமிர் கோஹி.

பெரோஸ் ஷா துக்ளக் (1351 – 1388)

  • சித்திரவதை முறைகளை ஒழித்த டெல்லி சுல்தான் = பெரோஸ் ஷா துக்ளக்.
  • அடிமைகளின் நலனை பாதுகாக்க தனித் துறையை உருவாக்கிய டெல்லி சுல்தான் = பெரோஸ் ஷா துக்ளக்.
  • போரை விரும்பாத டெல்லி சுல்தான் = பெரோஸ் ஷா துக்ளக்.
  • பெரோஸ் ஷா துக்ளக் நடத்திய ஒரே பெரிய படையெடுப்பு = சிந்து பகுதிக்கு எதிராக (1362).
  • 180000 அடிமைகளை வைத்திருந்த டெல்லி சுல்தான் = பெரோஸ் ஷா துக்ளக்.
  • 11TH அரபியர் துருக்கியரின் வருகை

ஜிஸியா

  • இந்தியாவில் முதன் முறையாக ஜிஸியா வரியை அறிமுகம் செய்தவர் = குத்புதின் ஐபக்.
  • பதினாறாம் நூற்றாண்டில் ஜிஸியா வரியை ஒழித்தவர் = அக்பர்.
  • அக்பர் ஒழித்த ஜிஸியா வரியை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்தவர் = அவுரங்கசீப்.

தைமூர்

  • கடைசி துக்ளக் வம்ச அரசர் = நசுருதீன் முகமது ஷா.
  • தைமூரின் படையெடுப்பின் பொழுது டெல்லியை ஆண்ட சுல்தான் = நசுருதீன் முகமது ஷா.
  • செங்கிஸ்கானுடன் இரத்த உறவு கொண்டவர் = தைமூர்.

சையது வம்சம் (1414 – 1526)

  • துக்ளக் வம்சத்திடம் இருந்து டெல்லியை கைப்பற்றி ஆட்சி செய்த வம்சம் = சையது வம்சம்.
  • சையது வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = கிசிர் கான்.
  • தைமூரின் படைத் தளபதியாக இருந்தவர் = கிசிர் கான்.
  • டெல்லி சுல்தானிய ஆட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றில் ஆட்சி உரிமையைத் துறந்து அமைதி வாழ்கையை வாழ்ந்த ஒரே டெல்லி சுல்தான் = சையது வம்சத்தின் “ஆலம் ஷா”.
  • “The Age of Wrath” என்னும் நூலின் ஆசிரியர் = அப்ரகாம் எராளி.
11TH அரபியர் துருக்கியரின் வருகை
11TH அரபியர் துருக்கியரின் வருகை

லோடி வம்சம் (1451 – 1526)

  • டெல்லி சுல்தானியத்தின் முதல் வம்சம் = அடிமை வம்சம்.
  • டெல்லி சுல்தானியத்தின் கடைசி வம்சம் = லோடி வம்சம்.
  • லோடி வம்ச ஆட்சியை நிறுவியவர் = பஹ்லுல் லோடி.
  • பஹ்லுல் லோடிகு பிறகு ஆட்சிக்கு வந்தவர் = சிக்கந்தர் லோடி.
  • மிக அதிக காலம் ஆட்சி செய்த லோடி வம்ச மன்னன் = சிக்கந்தர் லோடி.
  • எந்த டெல்லி சுல்தான் தலைநகரை டெல்லியில் இருந்து ஆக்ராவிற்கு மாற்றினார் = சிக்கந்தர் லோடி.
  • கடைசி டெல்லி சுல்தான் = இப்ராஹிம் லோடி.
  • கடைசி லோடி வம்ச மன்னன் = இப்ராஹிம் லோடி.
  • இப்ராஹிம் லோடியை தோற்கடித்து டெல்லி சுல்தானிய ஆட்சிக்கு முடிவு கட்டியவர் = பாபர்.
  • பாபர் எந்த போரில் இப்ராஹிம் லோடியை தோற்கடித்தார் = முதலாம் பானிபட் போர்.
  • முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு = 1526.
  • டெல்லி சுல்தானியத்தின் முதன் மன்னன் = குத்புதின் ஐபக்.
  • டெல்லி சுல்தானியத்தின் கடைசி மன்னன் = இப்ராஹிம் லோடி.

சுல்தானிய ஆட்சியில் நிர்வாகம்

  • “பூமியில் கடவுளின் பிரதிநிதியாக தாம் ஆட்சி செய்வதாக” (ruled as the representative of god on earth) கூறிய டெல்லி சுல்தான் = பால்பன்.
  • “மதத்தின் பரிந்துரைகள் குறித்துத் தாம் கவலைப்படவில்லை” (did not care for theological prescriptions) என்று கூறிய டெல்லி சுல்தான் = அலாவுதின் கில்ஜி.
  • “சௌத்ரிகள்” என்போர் = பரம்பரையாக வரி வசூல் செய்தோர்.
  • “கோட்கள்” என்போர் = கிராமத் தலைவர்.
  • 11TH அரபியர் துருக்கியரின் வருகை

சுல்தானிய ஆட்சியில் சமயம்

  • “லிங்காயத்” பிரிவை தோற்றுவித்தவர் = பசவண்ணர்.
  • லிங்காயத் பிரிவு தோன்றிய இடம் = கர்நாடகம்.
  • தென்னிந்திய பக்தி இயக்கத்தையும், ஒர் இறைக் கொள்கையையும் வடஇந்தியாவிற்கு கொண்டு சென்ற முக்கியமானவர்கள் = மகாராஷ்டிராவின் நாமதேவர், ராமானுஜரின் சீடர் ராமானந்தர்.

சுல்தானிய ஆட்சியில் பொருளாதாரம்

  • பதினான்காம் நூற்றாண்டில் உலகின் மாபெரும் நகரங்களாக விளங்கிய இந்திய நகரங்கள் = டெல்லி, தௌலதாபாத் (தேவகிரி).
  • வணிகக் குழுக்கள் சுல்தானிய ஆட்சியில் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.
  • காகிதம் தயாரிப்பு, நூற்புச் சக்கரம் ஆகியவை சுல்தானிய ஆட்சியில் இந்தியாவில் அறிமுகம் ஆகின.

சுல்தானிய ஆட்சியில் கல்வி

  • இஸ்லாமிய கல்வியின் அடிப்படையாக இருந்தது = மக்தப்.
  • இஸ்லாமிய உயர் கல்வியின் ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவம் = மதராசா (பொருள் = கற்றுக்கொள்கிற இடம்).
  • “ஃபிக்” என்பது = இஸ்லாமிய சட்டங்கள்.
  • அரபியரின் சிந்துப் படையெடுப்பு பற்றி எழுதப்பட்ட நூல் = சச்நாமா (பாரசீக மொழியில்).
  • “தபகத்-இ-நசிரி” என்னும் நூலின் ஆசிரியர் = மின்ஹஜ் சிராஜ்.
11TH அரபியர் துருக்கியரின் வருகை
11TH அரபியர் துருக்கியரின் வருகை

சுல்தானிய ஆட்சியில் கட்டிடக்கலை

  • “குவ்வாத் உல் இஸ்லாம்” மசூதியை கட்டியவர் = குத்புதின் ஐபக்.
  • குதுப்மினாரை கட்டத் துவங்கியவர் = குத்புதின் ஐபக்.
  • குதுப்மினாரை கட்டி முடித்தவர் = இல்துமிஷ்.
  • இல்துமிஷ் குதுப்மினாரை கட்டி முடித்த பொழுது அதன் உயரம் = 72.5 மீட்டர்.
  • குதுப்மினாரில் பழுதுநீக்கும் பணியை மேற்கொண்ட டெல்லி சுல்தான் = பெரோஸ் ஷா துக்ளக்.
  • பெரோஸ் ஷா துக்ளக், குதுப்மினாரில் மேற்கொண்ட பழுதுநீக்கும் பனியின் காரணமாக அதன் உயரம் எவ்வளவு அதிகரித்தது = 71 மீட்டர்.
  • குதுப்மினாரில் உள்ள படிகளின் எண்ணிக்கை = 379.
  • இந்தியாவில் முதல் மெய்யான வளைவால் அலங்கரிக்கப்பட்ட கட்டிடம் (the first true arch) = பால்பனின் கல்லறை.
  • இந்தியாவில் முதல் உண்மையான கவிகை கட்டிடம் (the first true dome) = அலாவுதீன் கில்ஜி கட்டிய அலாய் தார்வாசா.
  • 11TH அரபியர் துருக்கியரின் வருகை

சுல்தானிய ஆட்சியில் இசையும் நடனமும்

  • இந்தியாவிற்கு இஸ்லாமியர்கள் கொண்டு வந்த இசைக்கருவிகள் = ரபாய், சாரங்கி.
  • “இந்திய இசை, உலகிலுள்ள மற்ற அணைத்து இசைகளை விடவும் மேம்பட்டது” (Indian music had a pre-eminence over all the other music of the world) என்று கூறியவர் = அமிர் குஸ்ரு.
  • இசையில் ஆர்வம் காட்டிய டெல்லி சுல்தான் = பெரோஸ் ஷா துக்ளக்.
  • எந்த சமஸ்கிருத இசை நூல், பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது = ராக் தர்பன்.

சுல்தானிய ஆட்சியில் இலக்கியம்

  • “ஒன்பது வானங்கள்” (Nu Siphr)என்னும் நூலின் ஆசிரியர் = அமிர் குஸ்ரு.
  • தம்மை ஒரு இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கொண்ட பாரசீக அறிஞர் = அமிர் குஸ்ரு.
  • சமஸ்கிருத மொழியை போற்றிய பாரசீக அறிஞர் = அமிர் குஸ்ரு.
  • “பாரசீக உரைநடையின் ஆசான்” (master of Persian prose) என்று அழைக்கப்படுபவர் = ஜியாவுத்தின் பரனி.
  • “கிளி நூல்” எனப்படும் “துதிநமஹ” எனும் நூலை எழுதியவர் = ஜியா நக்சபி.
  • “சுல்தான் பாலப்னின் நல்லாட்சியின் விளைவாக விஷ்ணு பகவான், எந்த கவலைகளும் இன்றி பாற்கடலில் துயில்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ள கல்வெட்டு = 1276 ஆம் ஆண்டின் சமஸ்கிருத செவ்வியல் கல்வெட்டான “பாலம் பவேலி”.
  • “கதாகௌடுக” எனும் நூலின் ஆசிரியர் = ஸ்ரீவரா.
  • “ஜைனவிலாஸ்” எனும் நூலின் ஆசிரியர் = பட்டவதாரா.

புத்தக வினாக்கள்

  1. 8ம் நூற்றாண்டில் அரபியர் படையெடுப்பின் போது சிந்து அரசர் _____________ ஆவார்? = தாகிர்.
  2. கஜினி மாமுது, இந்தியாவுக்குள் __________ முறை இராணுவத் தாக்குதல்கள் நடத்தினார்? = 17.
  3. பாலம் பவோலி கல்வெட்டு ______________ மொழியில் இருக்கிறது? = சமஸ்கிருதம்.
  4. உலகப் புகழ்பெற்ற கஜூராஹோ கோவிலைக் கட்டியவர்கள் ____________? = சண்டேளர்.
  5. மம்லுக் என்ற பெயர் ஒரு __________ க்கான அரபுத் தகுதிச்சுட்டாகும்? = அடிமை.
  6. இபின் பதூதா ஒரு __________ நாட்டுப்பயணி? = மொராக்கோ.
  7. அரசப் பதவியை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் ________? = ஆலம் ஷா.

 

 

 

1 thought on “11TH அரபியர் துருக்கியரின் வருகை”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *