11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

  • பொ.ஆ.மு முதல் நூற்றாண்டில் தக்காணப் பகுதிகளில் ஒரு சக்திவாய்ந்த அரசாக இருந்தவர்கள் = சாதவாகனர்கள்.
  • ஸ்தூபிகளும் சைத்தியங்களும் கூடிய பௌத்தத்தளங்கள் தென்னிந்தியாவில் எங்கு அமைந்துள்ளன = அமராவதி, நாகர்ஜூனகொண்டா.
  • “குவாசிர் அல் காதிம்” எங்குள்ளது = எகிப்து.
  • “காஹாசப்தசதி” என்னும் நூலின் ஆசிரியர் = சாதவாகன அரசர் ஹாலா.
  • “இயற்கை வரலாறு” என்னும் நூலின் ஆசிரியர் = மூத்த பிளினி.
  • “ஜியோகிராபி” என்னும் நூலின் ஆசிரியர் = தாலமி.
11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்
11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

ஆன்மீக உலகின் பேரரசர்

  • ஸ்தூபி என்பது = புதை மேடுகளின் மேல் களிமண்ணால் கட்டப்பட்டதாகும்.
  • இறந்தோரை எரித்து சாம்பலை ஸ்தூபிக்குள் வைப்பார்.
  • தொடக்கத்தில் புத்தரின் சாம்பல் எத்தனை ஸ்தூபிகளில் வைக்கப்பட்டது = எட்டு.
  • அரைக்கோள வடிவமுள்ள ஸ்தூபி எதனைக் குறிக்கிறது = பேரண்டம்.
  • “ஆன்மீக உலகின் பேரரசர்” என்று குறிப்பிடப்படுபவர் = புத்தர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

மௌரியர் காலத் தென்னிந்தியா

  • மௌரிய அரசின் எல்லைகளை குறிப்பிடும் அசோகரின் பாறை கல்வெட்டு எது = இரண்டாம் முக்கிய பாறை கல்வெட்டு கட்டளை.
  • அசோகரின் எந்தப் பாறைக் கல்வெட்டில் மௌரிய அரசின் எல்லைக்கப்பால் அமைந்த அண்டை அரசுகளானத் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரச மரபுகளான சோழர், பாண்டியர், கேரளபுத்திரர், சத்தியபுத்திரர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர் = இரண்டாம் முக்கிய பாறை கல்வெட்டு கட்டளை.

சாதவாகனர்கள் ஆட்சியின் கீழ் தென்னிந்தியா

  • சாதாவாகனர்கள் தோன்றிய நூற்றாண்டு = பொ.ஆ.மு முதல் நூற்றாண்டு.
  • சாதவாகனர்கள் தோன்றிய பகுதி = தக்காணம்.
  • அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளின்படி சாதவாகனர்கள் எந்தப் பகுதியில் தங்கள் ஆட்சியை துவங்கினர் = தெலுங்கானா பகுதியில்.
  • சாதவாகனர்களின் தலைநகரம் = பிரதிஸ்தான் (பைத்தன், மகாராஸ்டிரா).
  • சாதவாகனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆந்திர நாட்டிலிருந்த கோட்டைகளுடன் கூடிய 30 நகரங்கள், ஒரு பெரும்படை, குதிரைப் படை, யானைப் படை ஆகியன குறித்து குறிப்பிட்டுள்ள வெளிநாட்டு பயணி யார் = பிளினி.
  • சாதவகான அரசர்களின் தலைச்சிறந்தவர் = கௌதமபுத்ர சதகர்னி.
11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்
11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

கௌதமபுத்ர சதகர்னி

  • சாகஅரசர் ‘நாகபனா’வை தோற்கடித்து அவரின் நாணயங்களைத் தன் அரச முத்திரையோடு மீண்டும் வெளியிட்டவர் = கௌதமபுத்ர சதகர்னி.
  • கௌதமபுத்ர சதகர்னியின் தாய் = கௌதம பாலஸ்ரீ.
  • “நாசிக் கல்வெட்டை” உருவாக்கியவர் = கௌதம பாலஸ்ரீ.
  • எந்தக் கல்வெட்டில் கௌதமபுத்ர சதகர்னி சாகர், பகல்வர், யவனர்கள் ஆகியோரை வெற்றிக் கொண்டார் எனல் குறிப்பிடப்பட்டுள்ளது = கௌதம பாலஸ்ரீயின் நாசிக் கல்வெட்டு.
  • அஸ்வமேத யாகத்தை மேற்கொண்ட சாதவாகன அரசர் = கௌதமபுத்ர சதகர்னி.

பிற சாதவாகன அரசர்கள்

  • கௌதமிபுத்ர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர் = வசிஷ்டபுத்ர புலுமாயி.
  • கப்பலின் வடிவம் பதிப்பிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்ட சாதவாகன அரசர் = யக்னஸ்ரீ சதகர்னி.
  • “காஹாசப்தசதி” என்னும் நூலின் ஆசிரியர் = ஹாலா.
  • “காஹாசப்தசதி” நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை = 700 காதல் பாடல்கள்.
  • 11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

சாதவாகனர் காலத்தின் முக்கியத்துவம்

  • சாதவாகனர் கால ஆட்சியின் மிக முக்கிய அம்சம் எது = நிலமானியம் வழங்குவது.
  • சாதவாகனர் ஆட்சியில் பௌத்தத் துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதை குறிப்பிடும் கல்வெட்டு எது = நனிகாட் கல்வெட்டு.
  • முதன்முதலாகத் தக்காணத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய ஒரு பெரிய அரசை நிறுவியவர்கள் = சாதவாகனர்கள்.
  • 11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

சங்க காலம்

  • சங்க காலம் = பொ.ஆ.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. பின்னர் தொடங்கிய மூன்றாம் நூற்றாண்டு வரை.
  • சங்க காலம் என்பது = தொடக்கக் வரலாற்றுக் காலம்.
  • அசோகரின் எந்தப் பாறைக் கல்வெட்டில் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரச மரபுகளான சோழர், பாண்டியர், கேரளபுத்திரர், சத்தியபுத்திரர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர் = இரண்டாம் முக்கிய பாறை கல்வெட்டு கட்டளை.
  • அசோகரின் இரண்டாம் பாறைக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள “சத்தியபுத்திரர்” என்பது சங்கப் பாடல்களில் இடம் பெறும் குறுநில மன்னன் வள்ளல் அதியமானை குறிப்பிடுகிறது.
11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்
11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

சோழர்கள்

  • சோழர்கள் ஆட்சியின் மையப்பகுதி = காவிரி கழிமுகப் பகுதி.
  • சோழர்களின் தளியான்கரம் = உறையூர்.
  • சோழர்களின் முக்கிய துறைமுக நகரம் = புகார், காவிரிப்பூம்பட்டினம்.
  • சோழர்களின் சின்னம் = புலி.
  • “பட்டினப்பாலை” நூலின் ஆசிரியர் = கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
  • கரிகாலன் ஆட்சியின் பொழுது நடைபெற்ற ஆரவாரமான வணிக நடவடிக்கைகள் குறித்து எந்த சங்கநூல் குறிப்பிட்டுள்ளது = பட்டினப்பாலை.
  • கரிகால் சோழனின் தந்தை = இளஞ்சேட்சென்னி.
  • கரிகால சோழனின் ஆட்சி பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ள சங்கநூல் = பட்டினப்பாலை.
  • எங்கு நடைபெற்ற போரில் கரிகால் சோழன் சேரரையும் பாண்டியரையும் அவர்களுக்கு உதவிய பதினோரு வேளிர் குலத் தலைவர்களையும் வெற்றிகொண்டார் = வெண்ணி போர்க்களத்தில்.
  • வேத வேள்வியான “ராஜசூய யாகத்தை” நடத்திய சோழ மன்னன் யார் = பெருநற்கிள்ளி.
11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்
11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

சேரர்கள்

  • சேரர்களின் தலைநகரம் = வஞ்சி.
  • சேரர்களின் துறைமுகம் = முசிறி, தொண்டி.
  • வஞ்சி நகரம் இன்றைய “கரூர்” நகரம் என்றும், கேரளத்திலுள்ள திருவஞ்சைக்களம் என்றும் இருவேறு கருத்து நிலவுகிறது.
  • சேர அரச குடும்பத்தின் ஒரு பிரிவான பொறையர் என்னும் கிளையினர் தமிழ்நாட்டின் கரூர் நகரிலிருந்து ஆட்சி புரிந்தனர்.
  • சேர அரசர்களை பற்றி குறிப்பிடும் சங்க இலக்கிய நூல் = பதிற்றுப்பத்து.
  • பதிற்றுப்பத்து நூலில் எட்டு சேர அரசர்களின் விவரங்கள் அறியப்பட்டுள்ளது.
  • மூன்ற தலைமுறைகளை சேர்ந்த சேர அரசர்கள் பற்றிய குறிப்புகளை கொண்ட கல்வெட்டு தமிழகத்தின் எங்கு காணப்பட்டது = கரூர் நகருக்கு அருகேயுள்ள புகளூரிலுள்ள கல்வெட்டு.
  • தன் பெயரில் நாணயங்களை வெளியிட்ட சேர அரசன் = சேரல் இரும்பொறை.
  • கடல் கொள்ளையர்களை அடக்கிய சேர மன்னன் = சேரன் செங்குட்டுவன்.
  • சேரன் செங்குட்டுவனின் மாபெரும் வடஇந்தியப் படையெடுப்பை பற்றி குறிப்பிடும் நூல் = சிலப்பதிகாரம் (ஆனால் சங்க இலக்கிய நூல்களில் இந்த படையெடுப்பு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை).
11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்
11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

பாண்டியர்கள்

  • பாண்டியர்களின் துறைமுகம் = கொற்கை.
  • கிரேக்க நூலான “எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ்” நூலில் கொற்கை எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது = கொல்கொய்.
  • பாண்டியர்களின் சின்னம் = மீன்.
  • பாண்டியர்களின் நாணயங்களில் பொறிக்கப்பட்ட உருவங்கள் = யானையின் உருவம் ஒருபுறமும், மீனின் உருவம் ஒருபுறமும்.
  • மாங்குளம் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய மன்னன் = பாண்டியன் நெடுஞ்செழியன்.
  • மதுரைக்காஞ்சி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய மன்னர்கள் = முதுகுடுமிப் பெருவழுதி, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
  • வேள்விக்குடி செப்பேடுகளில் பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய மன்னன் = முதுகுடுமிப் பெருவழுதி.
  • வேத வேள்வியான “ராஜசூய யாகத்தை” நடத்திய பாண்டிய மன்னன் யார் = முதுகுடுமிப் பெருவழுதி.
  • பாண்டியன் நெடுஞ்செழியன் தன்னை எதிர்த்து போரிட்ட சேரர், சோழர் மற்றும் ஐந்து வேளிர் மன்னர்களை எந்தப் போரில் தோற்கடித்தார் = தலையானங்கானத்துப் போரில்.
  • 11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

கொற்கையின் தலைவன்

  • “கொற்கையின் தலைவன்” (lord of Korkai) என்று அழைக்கப்பட்ட மன்னன் = தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
  • “தென்பகுதி பரதவர்களின் தலைவன்” (overlord of the southern Paratavar) என்று புகழப்பெற்ற பாண்டிய மன்னன் = தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

தமிழ்ச் சமூகமும் பொருளாதாரமும்

  • மகதக் கைவினைஞர்கள், மாளவ உலோகப் பணியாளர்கள், மராத்திய எந்திரப் பொறியாளர்கள் போன்றோர் தமிழகக் கைவினைஞர்களோடு கூட்டுறவு முறையில் இணைந்து பணியாற்றியதாக கூறும் நூல் எது = மணிமேகலை.
  • உப்பு வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = உமணர்.
  • “சாத்து” என்றால் என்ன = இடம் விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களைக் குறிப்பதாகும்.
  • “அம்போரா” என்பது யாது = ரோம நாட்டு ஜாடிகள்.
  • 11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

கீழடி அகழாய்வு

  • கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனைக்காக எங்கு அனுப்பப்பட்டன = அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில் அமைந்துள்ள, பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு (Beta Analytic Testing Laboratory).
  • கீழடி நாகரிகத்தின் காலம் எது என அறிவிக்கப்பட்டுள்ளது = கி.மு.(பொ.ஆ.மு.) 580.
  • கீழடியில் கிடைக்கப்பெற்ற செங்கற்களின் விகிதாச்சார அளவு = 1:4:6.
  • வைகை நதிக்கரையிலுள்ள கீழடிஅகழாய்வுகள்மூலம்நகரமயமாதல் கி.மு.6ஆம்நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பது தெளிவாகிறது.

பொருநை நாகரிகம் (வைகை நாகரிகம்)

  • தமிழ்நாட்டின் ஒரே வற்றாத நத்தை = பொருநை (தாமிரபரணி).
  • பொருநை நதி என்பது = தாமிரபரணி ஆறு.
  • இந்திய அரசு தொல்லியல் துறையினர் (ASI) சார்பில் ஆதிச்சநல்லூரில் எந்த ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது =
  • பொருநை நாகரிகத்தின் காலம் = 3200 வருடப் பழமை வாய்ந்தது.
  • ஆதிச்சநல்லூரில் எத்தனை விதமான இரும்பினால் ஆன கருவிகள் கிடைத்துள்ளன = 32.
  • ஆதிச்சநல்லூரில் கிடைத்த செங்கல் கட்டுமானம் எத்தனை வரிசையில் இருந்தன = 29.
  • 11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

களப்பிரர்களின் காலம் – சங்கம் மருவிய காலம்

  • களப்பிரர் காலம் என்பது = பொ.ஆ.300-600க்கும் இடைப்பட்ட காலம்.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பட்ட காலம் = களப்பிரர்கள் காலம்.
  • சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகளில் ஒன்று சேந்தன், கூற்றன் என்ற இரு அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது.
  • களப்பிரர்கள் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவந்தவர்கள் = பாண்டியர்கள்.

புத்தக வினாக்கள்

  1. கரிகாலன் _____________ மகனாவார்? = இளஞ்சேட் சென்னி.
  2. _____________ ராஜசூய யாகத்தை நடத்தினார்? = முதுகுடுமிப் பெருவழுதி.
  3. இக்சவாகுகள் ____________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்? = ஆந்திரா-கர்நாடகா.

 

 

Leave a Reply