11TH தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
11TH தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
- பக்தி இயக்கம் தோன்றிய இடம் = தமிழ்நாடு.
- பக்தி இயக்கம் தோன்றிய காலம் = பல்லவர் காலம்.
- இரண்டாம் புலிகேசியின் அவைகளைப் புலவர் = ரவிகீர்த்தி.
- சமஸ்கிருத மொழியில் “ஐஹோல் கல்வெட்டை” வடித்தவர் = ரவிகீர்த்தி.
- தெலுங்கு மொழியில் “மகாபாரதம்” நூலை எழுதியவர் = நன்னையா.
- பல்லவர் வரலாற்றை கூறும் மிகமுக்கிய நூல் = மத்தவிலாச பிரகாசனம்.
- “மத்தவிலாச பிரகாசனம்” நூலின் ஆசிரியர் = பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன்.

செப்புப் பட்டயங்கள்
- அலகாபாத் தூண் கல்வெட்டு யாருடன் தொடர்புடையது = சமுத்திரகுப்தர்.
- ஐஹோல் கல்வெட்டு யாருடன் தொடர்புடையது = சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி.
- கூரம் செப்பேடுகள் யாருடன் தொடர்புடையது = பல்லவ அரசன் பரமேஸ்வரன்.
- வேலூர்பாளையம் செப்பேடுகள் யாருடன் தொடர்புடையது = பல்லவ அரசன் மூன்றாம் நந்திவர்மன்.
- “காசக்குடி செப்பேடுகளுடன்” தொடர்புடைய மன்னன் = நந்திவர்ம பல்லவன்.
- “மண்டகப்பட்டு கல்வெட்டுடன்” தொடர்புடைய அரசன் = பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன்.
சாளுக்கியர்கள்
- சாளுக்கியர்கள் இரண்டு அரசு குடும்பங்களை கொண்டிருந்தனர்.
- வாதாபி சாளுக்கியர்கள்.
- கல்யாணி சாளுக்கியர்கள்.
- வாதாபி சாளுக்கிய அரசு வம்சத்தை தோற்றுவித்தவர் = முதலாம் புலிகேசி.
வாதாபி சாளுக்கியர்கள்
- வாதாபி சாளுக்கிய அரசு வம்சத்தை துவக்கி வைத்தவர் = முதலாம் புலிகேசி.
- அஸ்வமேத யாகம் நடத்திய சாளுக்கிய அரசன் = முதலாம் புலிகேசி.
- வாதாபி நகரை உருவாக்கியவர் = கீர்த்திவர்மன்.
- முதலாம் புலிகேசியின் பேரன் = இரண்டாம் புலிகேசி.
- ஐஹோல் கல்வெட்டுடன் தொடர்புடைய அரசன் = இரண்டாம் புலிகேசி.
- இரண்டாம் புலிகேசியின் குறிப்பிடத்தக்க போர் நிகழ்வு = நர்மதை நதிக்கரையில் ஹர்ஷரை வென்றது.
- இரண்டாம் புலிகேசியின் காஞ்சிபுரப் படையெடுப்பை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திய பல்லவ மன்னன் யார் = பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன்.
- யாருடைய ஆட்சிக் காலத்தில் சாளுக்கியர்களுகும் பல்லவர்களுக்கும் இடையே பகைமை ஏற்பட்டது = இரண்டாம் புலிகேசி, முதலாம் மகேந்திரவர்மன்.
- இரண்டாம் புலிகேசியை தோற்கடித்து கொன்ற பல்லவ மன்னன் = முதலாம் நரசிம்மவர்மன்.
- வாதாபி நகரை தீயிட்டு அழித்த பல்லவ மன்னன் = முதலாம் நரசிம்மவர்மன்.

சாளுக்கியர்கள் நிர்வாகம்
- மனுசாஸ்திரம், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய சாளுக்கிய அரசன் = முதலாம் புலிகேசி.
- ஹர்ஷரை வென்ற பிறகு இரண்டாம் புலிகேசி சூட்டிக் கொண்ட பட்டப் பெயர் யாது = பரமேஸ்வரன்.
- எந்த செப்புப் பட்டயத்தில் அக்னிஸ்தோம, வாஜ்பேய, அஸ்வமேத வேள்விகளை நடத்தியவர் என்று அரசர் அறிமுகம் செய்யப்படுகிறார் = ஹிரகடஹள்ளி செப்புப் பட்டயம்.
- சாளுக்கியர்களின் அரசு முத்திரையில் உள்ள விலங்கின் உருவம் = பன்றி (விஷ்ணுவின் வராக அவதாரம்).
- பல்லவர்களின் அரசு முத்திரையில் உள்ள விலங்கின் உருவம் = காளை (நந்தி, சிவபெருமானின் வாகனம்).
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
மகளிர் நிலை
- யாருடைய வழி வந்த சாளுக்கிய வம்சாவளியினர் அரச குடும்ப பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர் = முதலாம் ஜெயசிம்மன்.
- கல்வெட்டு ஆணைகளை பிறப்பித்த சாளுக்கிய இளவரசி யார் = விஜயபத்திரிகா.
- காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கல்வெட்டில் காணப்படும் அரசியின் உருவம் யாருடையது = பல்லவ மன்னன் ராஜசிம்மனின் அரசி ரங்கபதாகா.
அமைச்சரவை
- “மகாசந்தி-விக்கிரக” என்போர் = சாளுக்கிய வெளிவிவகாரத்துறை அமைச்சர்.
- “அமத்யா” என்போர் = சாளுக்கிய வருவாய்த்துறை அமைச்சர்.
- “சமகர்த்தா” என்போர் = சாளுக்கிய அரசு கருவூல அமைச்சர்.
- சாளுக்கியர்கள் நாட்டினை எவ்வாறு பிரித்திருந்தனர் = விஷ்யம், ராஷ்ட்ரம், நாடு, கிராமம்.
- “விசயாபதி” என்போர் யார் = சாளுக்கிய அரசர்களின் கட்டளைப்படி அதிகாரங்களை கையாள்பவர்.
- “சமந்தா” என்போர் யார் = சாளுக்கிய ஆட்சியில் இருந்த நிலப்பிரபுக்கள்.
வருவாய் நிர்வாகம்
- சாளுக்கிய ஆட்சியில் கிராமங்களில் வருவாய் அலுவலர்களாக பணியாற்றியவர்கள் = “நல-கவுண்ட” என்று அழைக்கப்பட்டனர்.
- சாளுக்கிய ஆட்சியில் கிராம நிர்வாகத்தின் மையப் புள்ளியாக இருந்தவர் = கமுண்டர் அல்லது போகிகன்.
- சாளுக்கிய ஆட்சியில் கிராம கணக்கர் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = கரணா அல்லதி கிராமணி.
- கிராமங்களில் அமைதியை பாதுகாக்கும் அதிகாரி யார் = மகாபுருஷ்.

மதம்
- சாளுக்கியர்கள் சைவம், வைணவம் இரண்டையும் ஆதரித்தனர்.
- போர்க் கடவுளானா “கார்த்திகேயனுக்கு” முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
- இரண்டாம் புலிகேசியின் அவைகளைப் புலவரான “ரவிகீர்த்தி” சமண சமயத்தை சேர்ந்தவர் ஆவார்.
- சீனப் பயணி யுவான் சுவாங் தனது குறிப்புகளில் சாளுக்கிய ஆட்சியில் பல இடங்களில் பௌத்தர்கள் வாழ்ந்ததாக பதிவு செய்துள்ளார்.
இலக்கியமும் கல்வியும்
- சாளுக்கியர்கள் ஐஹோல் மற்றும் மகாகூடம் ஆகிய இடங்களில் எந்த மொழியில் கல்வெட்டுகளை பொறித்துள்ளனர் = சமஸ்கிருதம்.
- சாளுக்கியர்களின் உள்ளூர் மொழி = கன்னடம்.
- சாளுக்கியர்களின் பண்பாட்டின் மொழி = சமஸ்கிருதம்.
சாளுக்கியர்களின் கட்டிக்கலை
- தக்காணப் பகுதிகளில் முதன் முறையாக “மிருதுவான மணற்கல்” கொண்டு கோவிலை கட்டியவர்கள் = சாளுக்கியர்கள்.
- வாதாபியில் (பாதாமியில்) எத்தனை வகையான கோவில்கள் உள்ளன = நான்கு (இரண்டு விஷ்ணு கோவில்கள், ஒரு சிவன் கோவில், ஒரு சமண கோவில்).
- கட்டுமானக் கோவில்கள் உள்ள இடம் = ஐஹோல், பட்டாடக்கல்.
- குடைவரைக் கோவில் மற்றும் கட்டுமான கோவில் இரண்டும் உள்ள இடம் = பாதாமி (வாதாபி).

இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டு
- ஐஹோல் கல்வெட்டு எழுதியவர் = இரண்டாம் புலிகேசியின் அவைகளைப் புலவர் ரவிகீர்த்தி.
- ஐஹோல் கல்வெட்டு எத்தனை வரிகளை உடையது = 19 வரிகள்.
- ஐஹோல் கல்வெட்டு உள்ள இடம் = கர்னாடக மாநிலம், மேகுடி கோவிலின் மலை மீது.
- ஐஹோல் கல்வெட்டில் இரண்டாம் புலிகேசி எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார் = “சத்யஸ்ராய” (உண்மையின் உறைவிடம்).
- இரண்டாம் புலிகேசி, ஹர்ஷவர்த்தனரை தோற்கடித்ததை பதிவு செய்துள்ள கல்வெட்டு = ஐஹோல் கல்வெட்டு.
- 11TH தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
ஐஹோல்
- எந்த வணிகக் குழுமத்தின் தலைமையிடமாக ஐஹோல் இருந்தது = ஐயாவொளே.
- ஐஹோல் பகுதியில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை = ஏறத்தாழ எழுபது.
- ஐஹோல் பகுதியில் காலத்தால் முந்தைய கற்கோவில் எது = லட்கான் கோவில்.
- ஐஹோலில் செவ்வக வடிவில் அமைக்கப்பட்ட துர்கைக் கோவில் எது = குசிமல்லிகுடி.
- சாளுக்கியர் காலத்திய கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சிக்கு சிறந்து எடுத்துக்காட்டு = ஐஹோல் மேகுடி சமணக் கோவில் (Megudi Jain temple is illustrative of the evolution of temple architecture under the Chalukyas).
வாதாபி (பாதாமி)
- வாதாபியில் எத்தனை குகைகள் உள்ளன = நான்கு.
- வாதாபியில் உள்ள குகைக் கோவில்களில் மிகப்பெரியது = விஷ்ணு குகைக் கோவில்.
- வாதாபியில் விஷ்ணுவிற்கு மிகப்பெரிய குகைக் கோவிலை கட்டியவர் = மங்களேசன்.
பட்டாடக்கல்
- பட்டாடக்கல் எங்கு உள்ளது = கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில்.
- அரச சடங்குகள் நடத்துவதற்கான இடமாக இருந்த இடம் = பட்டாடக்கல்.
- காஞ்சிபுரத்தை கைப்பற்றிய சாளுக்கிய மன்னன் = இரண்டாம் விக்கிரமாதித்தியன்.
- காஞ்சிபுரத்தை கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்ட கோவில் = பட்டாடக்கல் விருபாக்சர் ஆலயம்.
- யாருடைய கட்டளையின் படி விருபாக்சர் ஆலயம் கட்டப்பட்டது = இரண்டாம் விக்கிரமாதித்தனின் மனைவி லோகமாதேவி.
- எந்தக் கோவில் மாமல்லபுரம் கோவிலை அடிப்படையாக் கொண்டு கட்டப்பட்டது = பட்டாடக்கல் விருபாக்சர் ஆலயம்.
- எந்த கோவிலில் அதைக் கட்டிய கட்டிடக் கலைஞர்களின் கையெழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது = பட்டாடக்கல் விருபாக்சர் ஆலயம்.
- “திரிபுவாசாரியா” என்பதன் பொருள் = மூன்று உலகையும் உருவாக்கியவன்.
- விருப்பாக்சர் கோவிலைப் போன்ற அடித்தள கட்டுமானத் திட்டத்தின்படி கட்டப்பட்ட மற்றொரு கோவில் = பாபநாத கோவில், பட்டாடக்கல்.
- 11TH தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
ஓவியக்கலை
- சாளுக்கியர்கள் ஓவியக்கலையில் யாருடைய பாணியைப் பின்பற்றினர் = வாகடர்கள்.
- சாளுக்கியர்களின் ஓவியங்களில் அதிகளவு இடம்பெற்ற தெய்வம் = விஷ்ணு.
பல்லவர்கள்
- பல்லவர்கள் எந்த நிலப்பரப்புடன் தொடர்புடையவர்கள் = வடபெண்ணை ஆற்றுக்கும், வட வெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பான தொண்டை மண்டலத்தோடு தொடர்புடையவராவர்.
- பல்லவ வம்சத்தை தோற்றுவித்தவர் = சிம்மவர்மன்.
- சிம்மவர்மனின் மகன் = சிம்மவிஷ்ணு.
- சிம்மவிஷ்ணுவின் மகன் = முதலாம் மகேந்திரவர்மன்.
- சமண சமயத்தை பின்பற்றி பின்னர் சைவ சமயத்திற்கு மாறிய பல்லவ மன்னன் = முதலாம் மகேந்திரவர்மன்.
- பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனை சைவ சமயத்திற்கு மாற்றியவர் = அப்பர்.
- இசைக் கலைகளில் சிறந்து விளங்கிய பல்லவ மன்னன் = முதலாம் மகேந்திரவர்மன்.

பல்லவ அரசர்கள்
- யாருடைய ஆட்சியின் பொழுது சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி காஞ்சிபுரத்தை தாக்கினார் = முதலாம் மகேந்திரவர்மன்.
- முதலாம் மகேந்திரவர்மனின் மகன் = முதலாம் நரசிம்மவர்மன்.
- எந்த பல்லவ மன்னன் ஆட்சியின் பொழுது சாளுக்கியர்களுக்கு எதிரான பல போர்களில் பல்லவ அரசு வெற்றிபெற்றது = முதலாம் நரசிம்மவர்மன்.
- எந்த பல்லவ மன்னனின் ஆட்சியின் பொழுது சாளுக்கிய அரசின் தலைநகரான வாதாபி கைப்பற்றப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டது = முதலாம் நரசிம்மவர்மன்.
- சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியை போரில் கொன்ற பல்லவ மன்னன் = முதலாம் நரசிம்மவர்மன்.
- சாளுக்கியர்கள், சேரர்கள், சோழர்கள் மற்றும் களப்பிரர்களையும் வெற்றி கொண்ட பல்லவ மன்னன் யார் = முதலாம் நரசிம்மவர்மன்.
- சாளுக்கியர்களுக்கு எதிரான போரில் பல்லவர்களுக்கு உதவிய இலங்கை இளவரசன் (அரசன்) யார் = மானவர்மன்.
- எந்த பல்லவ மன்னனின் ஆட்சியின் பொழுது சாளுக்கிய அரசன் விக்கிரமாதித்யன் காஞ்சிபுரம் மீது படையெடுத்தார் = பல்லவ அரசன் முதலாம் பரமேஸ்வரவர்மனின் ஆட்சியின்போது.
- எந்த பல்லவ மன்னனின் ஆட்சியின் பொழுது ராஸ்டிரக்கூட அரசர் மூன்றாம் கோவிந்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தார் = தண்டிவர்மபல்லவனின் ஆட்சியின்போது.
- “திருப்புறம்பியம்’ போரில் பாண்டியர்களை தோற்கடித்த பல்லவ மன்னன் = தண்டிவர்மனின் மகன் மூன்றாம் நந்திவர்மன்.
- கடைசி பல்லவ மன்னன் = மூன்றாம் நந்திவர்மனின் பேரன் அபராஜிதன்.
- கடைசி பல்லவ மன்னன் அபராஜிதனை தோற்கடித்து கொன்ற சோழ இளவரசன் = ஆதித்த சோழன்.
- 11TH தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
பல்லவ நிர்வாகம்
- “அமத்யா” என்போர் = அரசர்களுக்கு ஆலோசனை வழங்குவோர்.
- “ரகஸ்யதிகிரதா” என்பவர் = அரசரின் அந்தரங்கச் செயலாளர்.
- பல்லவ அரசில் கருவூலத்தை காக்கும் அதிகாரி = மாணிக்கப் பண்டாரப் காப்பான்.
- பண்டாரம் என்பதன் பொருள் = கருவூலம்.
- பல்லவ அரசில் நன்கொடைகளுக்கான அதிகாரி யார் = கொடுக்காப்பிள்ளை.
- மாணிக்கப் பண்டாரப் காப்பாளர்களை மேற்பார்வை செய்யும் அதிகாரி = கோச-அதீயட்சா.
- பல்லவ அரசில் நீதிமன்றங்கள் “அதிகர்ண மண்டபம்” என்றும், நீதிபதிகள் “தர்மாதிகாரி” என்றும் அழைக்கப்படுவர்.
- “காசக்குடி செப்பேடுகளுடன்” தொடர்புடைய பல்லவ மன்னன் = நந்திவர்ம பல்லவன்.
- பல்லவ ஆட்சியில் உள்ள அபராதங்களை பற்றி குறிப்பிட்டுள்ள செப்பேடு எது = காசக்குடி செப்பேடு.
- “கர்ணதண்டம்” என்றால் என்ன = மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள்.
- “அதிகர்ண தண்டம்” என்றால் என்ன = கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள்.

பல்லவ ஆட்சியில் நிலமானியங்கள்
- பிரம்மதேய கிராமங்கள் என்பது = பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட கிராமங்கள்.
- தேவதான கிராமங்கள் என்பது = கோவில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட கிராமங்கள்.
- பல்லவ மன்னன் நந்திவர்மனின் 22வது ஆண்டு ஆட்சியில் தானமாக வழங்கப்பட்ட கிராமம் குறித்து செய்தியை கொண்ட பட்டயம் எங்கு கண்டெடுக்கப்பட்டது = புதுச்சேரிக்கு அருகே உருக்காட்டுக்கோட்டம் என்னுமிடத்தில்.
பல்லவ ஆட்சியில் ஏரி நீர்ப்பாசனம்
- கிராம அளவில் அடிப்படையை அமைப்பு = சபை.
- தனிப்பட்ட மனிதர்கள் கொடையாகக் கொடுத்த நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = ஏரிப்பட்டி அல்லது ஏரிநிலம்.
- இந்நிலங்களிலிருந்து பெறப்படும் வரி கிராமத்து ஏரிகளைப் பராமரிப்பதற்காக செலவிடப்படும்.
- 11TH தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
வணிகம்
- பல்லவர் காலத்தில் மிக முக்கிய வணிக மையம் = காஞ்சிபுரம்.
- “மணிக்கிராமம்” என்பது = பல்லவ ஆட்சியில் வணிகர்கள் தங்களுக்காக உருவாக்கிக் கொண்ட அமைப்பு.
- பல்லவர்களின் துறைமுக நகரம் = மாமல்லபுரம்.
- வணிகர்கள் தங்களுக்காக உருவாக்கிக்கொண்ட தனிக்குழுக்கள் யாவை = சுதேசி, நானாதேசிகர், ஐநூற்றுவர்.
- வணிகர்களின் மிகமுக்கிய அமைப்பு எந்த நகரத்தில் இருந்தது = ஐஹோல்.
- நானாதேசி = வெளிநாடுகளோடு வணிகம் மேற்கொண்ட வணிகர்களின் குழு.
- “வீர சாசனம்” என்ற பிரகடனங்களை வெளியிடும் உரிமையை பெற்றிருந்த அமைப்பு = நானாதேசி.
- நானாதேசி வணிகக்குழுவின் கொடியில் இருந்த விலங்கு = காளை.
- நானாதேசி அமைப்பின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார் = பட்டன்சாமி, பட்டணக்கிழார், தண்டநாயகன்.
- நானாதேசி அமைப்பின் உறுப்பினர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = ஐஹோல் பரமேஸ்வரியார்.
பல்லவர் கால சமூகம்
- பல்லவர் காலத்தில் ஆரியமயமாதலும் வடஇந்திய கருத்துப் போக்குகளின் செல்வாக்கும் தென்னிந்தியாவில் மிகுந்தது என்று பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
- காஞ்சிபுரம் முக்கியம் வாய்ந்த கல்வி மையமாயிற்று.
- சாதியமைப்பு வலுவாக நிறுவப்பட்டது. சமஸ்கிருதம் பெரும் முக்கியத்துவம் பெற்றது.
- 11TH தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
சமஸ்கிருத மொழி பிரபலமாதல்
- முதலாம் மகேந்திரவர்மன் சமஸ்கிருத மொழியில் எழுதிய நூல் = மத்தவிலாச பிரகசனம்.
- தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வியக்கத்தக்க இரு நூல்கள் = பாரவியின் கிரதார்ஜூன்யம், தண்டியின் தசகுமாரசரிதம்.
- “காவிய தர்சா” என்னும் நூலின் ஆசிரியர் = தண்டி.
பல்லவரின் குடைவரைக் கோவில்கள்
- குடைவரைக் கோவிலை அறிமுகம் செய்த பல்லவ மன்னன் = முதலாம் மகேந்திரவர்மன்.
- “மண்டகப்பட்டு கல்வெட்டுடன்” தொடர்புடைய அரசன் = பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன்.
- மண்டகப்பட்டு குடைவரைக் கோவிலை கட்டியவர் = முதலாம் மகேந்திரவர்மன்.
- எல்லோரா = குகைக் கோவில்கள்.
- அஜந்தா = குகை ஓவியங்கள்.
- முதன் முதலில் குகைக் கோவில்களை கட்டியவர்கள் = ஆசீவகர்கள்.

எல்லோரா
- எல்லோராவில் உள்ள மொத்த குகைகளின் எண்ணிக்கை = 34.
- எல்லோரா குகைத் தொகுப்புகளை உருவாக்கியோர் = சாளுக்கியரும் ராஷ்டிரகூடரும்.
- எல்லோராவில் எத்தனை குகைகளில் சுவரோவியங்கள் உள்ளன = ஐந்து.
- எந்த ஆண்டு யுனஸ்கோ அமைப்பால் எல்லோரா குகைகள் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது = 1983.
- எல்லோராவில் உள்ள மொத்த பௌத்த மதக் கோவில்கள = 12.
- எல்லோராவில் உள்ள மொத்த சமண மதக் கோவில்கள = 5.
- எல்லோராவில் உள்ள மொத்த இந்து மதக் கோவில்கள = 17.
- எல்லோராவில் உள்ள புத்தரின் உருவங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
- தியான புத்தர் (தியான முத்ரா)
- போதனை செய்யும் புத்தர் (வியாக்கியான முத்ரா)
- வலது கை ஆள்காட்டி விரலால் பூமியைத் தொடும் புத்தர் (பூமி ஸ்பர்ஸ முத்ரா).
- பௌத்த குகைகளில் பெண் தெய்வங்களின் உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன.
- எல்லோராவில் உள்ள சமணக் கோவில்கள் முற்றுபெறாத நிலையில் உள்ளன.
- எல்லோராவில் உள்ள இந்துக் கோவில்களில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் = சதுர வடிவிலான கோவில்கள் ஆகும்.
- 16வது குகைக் கோவிலான “கைலாசநாதர் குகைக்” கோவில் மட்டும் = ஒற்றைக் கல்லில் உருவாக்கப்பட்டது ஆகும்.
- 11TH தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
அஜந்தா
- அஜந்தாவில் உள்ள குகைகளின் எண்ணிக்கை = 30.
- அஜந்தா எதற்கு பெயர் பெற்றது = சுவர் ஓவியங்களுக்கு.
- முதன் முதலில் அஜந்தாவில் குகைகளை உருவாக்கியவர்கள் = ஹீனயான பௌத்தர்கள்.
- “சுவரோவியங்களின் கருவூலம்” என்று அழைக்கப்படுவது = அஜந்தா.
- அஜந்தாவில் முதல்கட்ட ஓவியங்கள் எந்த குகைகளில் உள்ளது = ஒன்பதாவது மற்றும் பத்தாவது குகைகளில்.
- அஜந்தா ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள போதிசத்துவர் = அவலோகிதேஸ்வரர்.
மாமல்லபுரம்
- பல்லவர்களின் அடையாளமாகக் கருதப்படுவது = மாமல்லபுரம் கடற்கரைக் கோவில்.
- மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை கட்டியவர் = ராஜசிம்மன்.
- தென்னிந்தியாவில் உள்ள கட்டுமானக் கோவில்களில் முதன்மையானது = மாமல்லபுரம் கடற்கரைக் கோவில்.
- மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் = மூன்று கருவறைகளும், ஐந்து அடுக்குகளும் கொண்ட கோவிலாகும்.
- மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் ரதங்களில் மிகவும் நேர்த்தியானது = தர்மராஜா ரதம்.
- மாமல்லபுரம் சிலைகளில் மிகவும் சிறப்பானது = பாகீரதன் தவம் என்றும் அர்ஜூனன் தவம் என்று அழைக்கப்படும் “ஆகாய கங்கை காட்சியாகும்”.
தமிழ் பக்தி இயக்கம்
- ஆழ்வார்கள் இயற்றிய “நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தை” தொகுத்தவர் = நாதமுனிகள்.
- பெரியாழ்வார் எந்த பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் ஆவார் = ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன்.
- கண்ணின் குழந்தைப் பருவத்தை பற்றி பாடிய ஆழ்வார் = பெரியாழ்வார்.
- ஆழ்வார்களில் தலைச்சிறந்தவர் = நம்மாழ்வார்.
- நம்மாழ்வார் பிறந்த ஊர் = இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருகூர் (ஆழ்வார்திருநகரி).
- “திருவாய்மொழி” என்னும் நூலின் ஆசிரியர் = நம்மாழ்வார்.
- யாருடைய பாடல்கள் நான்கு வேதங்களின் சாரத்தை வடித்தெடுத்து எழுதப்பட்டவை என்று கூறப்படுகிறது = நம்மாழ்வார்.
- பன்னிரு திருமுறைகளை தொகுத்தவர் = நம்பியாண்டார் நம்பி.
- நாயன்மார்களின் எண்ணிக்கை = 63.
- 63 நாயன்மார்களின் வரலாற்றை கூறும் நூல் = பெரியபுராணம்.
ஆதிசங்கரர்
- ஆதிசங்கரர் பிறந்த ஊர் = கேரள மாநிலம் காலடி.
- “மாயை கோட்பாடு” குறித்து விவாதம் செய்தவர் = ஆதிசங்கரர்.
- ஆதிசங்கரர் முன்வைத்த கோட்பாடு = அத்வைதக் கோட்பாடு.
- இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் “ஸ்மார்த்த மடங்களை” நிறுவியவர் = ஆதிசங்கரர்.
- ஆதிசங்கரர் மடங்களை நிறுவிய இடங்கள் = சிருங்கேரி, துவாரகை, பத்ரிநாத், பூரி.
- சங்கரரின் சிந்தனைப்பள்ளி எதற்கு முக்கியத்துவம் அளித்தது = துறவற அமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் சமஸ்கிருத நூல்களை பாதுகாத்தல்.
- 11TH தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
ஸ்ரீராமானுஜர்
- ராமானுஜர் பிறந்த இடம் = ஸ்ரீபெரும்புதூர்.
- ராமானுஜர் யாரிடம் தத்துவப் பயிற்சி பெற்றார் = யாதவ பிரகாசர்.
- ராமானுஜர் யாருடைய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார் = யமுனாச்சாரியாரின் திருவரங்க தத்துவப் பள்ளி.
- யமுனாச்சாரியாரின் இறப்பிற்கு பிறகு திருவரங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் = ராமானுஜர்.
- ராமானுஜர் ஆதிசங்கரரின் அத்வைதக் கோட்பாட்டை மறுத்தார்.
- ராமானுஜரின் கோட்பாடு = விசிஷ்டாத்வைதம்.
- ராமானுஜரின் இறப்பிற்கு பிறகு அவரை பின்பற்றுவோர் யாருடைய தலைமையில் இரண்டாக பிரிந்தனர் = வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள்.
- பிற தாழ்ந்த பிரிவு மக்களையும் கோவிலுக்கு அழைத்துச் சென்றவர் = ராமானுஜர்.
பக்தியின் சக்தி
- “பக்தியெனும் ஒருங்கிணைக்கும் சக்தி அரசர்களையும் பிராமண குருமார்களையும் சாதாரண மக்களையும் முரண்பாடில்லாத விதத்தில் ஒருங்கிணைத்து சாதிய அமைப்பைக் கொண்ட புதிதாக நிறுவப்பட்ட இந்து அரசுகளின் ஆட்சியை வலிமைப்படுத்தியது” (the cementing force bringing together kings, Brahmin priests and the common people in a harmonious manner to strengthen the rule of the newly established Hindu kingdoms based on the caste system) என்று கூறியவர்கள் = எம்.ஜி.எஸ். நாராயணன், கேசவன் வேலுதாட்.
புத்தக வினாக்கள்
- காம்போஜம் என்பது நவீன ____________ ? = கம்போடியா.
- ___________ சமணர்களால் நிறுவப்பட்ட ஒரு சமய மையம்? = சரவணபெலகொலா.
- அரச குடும்பம் தொடர்பான சடங்குகளை நடத்துவதற்காகச் சாளுக்கியரால் கட்டப்பட்ட கோவில்கள் எங்கு உள்ளது? = பட்டாடக்கல்.
- அயல்நாட்டு வணிகர்கள் ___________ என்று அறியப்பட்டனர்? = நானாதேசி.
- ஆதிசங்கரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடு ___________ ? = அத்வைதம்.
- 11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
- 11TH HISTORY குப்தர்
- 11TH மௌரியருக்கு பிந்தைய அரசியலமைப்பும் சமூகமும்
- 11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்
- 11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
- 11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
- 11TH தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
- 11TH தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
- 11TH தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
- 11TH தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
- 11TH தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி