11TH பண்டைய இந்தியா

11TH பண்டைய இந்தியா

Table of Contents

11TH பண்டைய இந்தியா

11TH பண்டைய இந்தியா

  • சிந்து நாகரீகம் வீழ்ச்சி அடைந்த காலம் = பொ.ஆ.மு. 1900.
  • இந்தியாவில் தொடக்ககால வேதப் பண்பாடு எந்த பண்பாட்டு கூறுகளோடு பொருந்துகிறது = செம்புக்கால பண்பாடு (Early Vedic culture is correlated with some of the Chalcolithic cultures of India)
  • இந்தியாவில் பிற்கால வேதப் பண்பாடு எந்த பண்பாட்டோடு பொருந்துகிறது = இரும்புக்காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் தீட்டப்பட்ட சாம்பல் நிறப் பாண்டப் பண்பாட்டோடு (Later Vedic culture is correlated with the Painted Grey Ware Culture of the Iron Age).
11TH பண்டைய இந்தியா
11TH பண்டைய இந்தியா

வேதகால இலக்கியங்கள்

  • இந்தியாவின் பழம்பெரும் சமயநூல் = வேதகால இலக்கியங்கள்.
  • “வித்” என்பதன் பொருள் = தெரிந்து கொள்ளுதல்.
  • நான்கு வகை வேதங்கள் யாவை = ரிக், யஜூர், சாம, அதர்வ வேதங்கள்.
  • வேதங்களில் மிகவும் பழமையானது எது = ரிக் வேதம்.
  • வேதப்பாடல்கள் முதன்முதலாக எந்த நூற்றாண்டுகளில் எழுதப்பெற்றதாக கருதப்படுகிறது = பொ.ஆ. 10-11ஆம் நூற்றாண்டு.
  • வேதப்பாடல்களின் முக்கியத் தொகுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது = சம்ஹிதைகள்.
  • சம்ஹிதைகளில் மிகவும் பழமையானது = ரிக் வேத சம்ஹிதை.
  • ரிக் வேத சம்ஹிதையின் காலம் = பொ.ஆ.மு. 1500க்கும் பொ.ஆ.மு.1000க்கும் இடைப்பட்ட காலம்.
  • ரிக் வேதத்தில் உள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை = 10.
  • ரிக் வேதத்தில் உள்ள காண்டங்களில் முதலில் எழுதப்பட்டவை = 2 முதல் 7 வரையிலான காண்டங்கள்.
  • ரிக் வேத காண்டங்களில் பிற்காலத்தை சேர்ந்தவை எவை = 1, 8, 9, 10.
  • ஒவ்வொரு சம்ஹிதையும் எதனை இணைப்புக் குறிப்புகளாகக் கொண்டுள்ளது = பிராமணங்கள்.
  • பாடல்கள் மற்றும் சடங்குகள் குறித்த விளக்கவுரைகளை கொண்டுள்ளவை எது = பிராமணங்கள்.
  • சடங்குகள் பற்றிய பாடங்களை கொண்டுள்ளவை = பிராமணங்கள்.
  • ஒவ்வொரு பிராமணமும் எதனை கொண்டுள்ளது = ஓர் ஆரண்யகம் மற்றும் ஓர் உபநிடதம்.
  • எது காடுகளில் வாழும் முனிவர்கள் ரகசியமாக மேற்கொள்ள வேண்டிய மந்திரச் சடங்குகள் குறித்த குறிப்புகளைக் கொண்டுள்ளன = ஆரண்யகம்.
  • எது தத்துவக் கருத்துகளையும் வினாக்களையும் கொண்டுள்ளன = உபநிடதம்.
  • எந்த வேதம் இசைப்பாடல்களாக அமைந்துள்ளது = சாமவேதம்.
  • எந்த வேதம் சடங்குகளையும் பாடல்களையும் கொண்டுள்ளது = யஜூர் வேதம்.
  • எந்த வேதங்கள் மாய மந்திர ஜாலங்கள் அடங்கியது = அதர்வண வேதம்.
  • 11TH பண்டைய இந்தியா

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

ஜென்ட் அவெஸ்தா

  • ஜென்ட் அவெஸ்தா என்பது = பாரசீக / ஈரானிய நூல் ஆகும்.
  • ஜென்ட் அவெஸ்தா எந்த மதத்தை சேர்ந்த நூல் ஆகும் = ஜொராஸ்டிரிய மதம்.
  • எந்த நூலில் இடம் பெற்றுள்ள சொற்கள் வேதநூல்களின் சமஸ்கிருதச் சொற்களோடு மொழி ஒப்புமை கொண்டுள்ளன = ஜென்ட் அவெஸ்தா.
  • இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே அமைந்திருந்த ஆரியர்களின் தொடக்ககால வாழிடங்கள் பற்றி அறிந்துகொள்ள உதவும் நூல் = ஜென்ட் அவஸ்தா.

இந்தியாவில் செம்பு காலகட்ட பண்பாடு

  • செம்புக்காலப் பண்பாடு = பொதுவாக கிராமப்புற தன்மை கொண்டது.
  • செம்புக்காலப் பண்பாட்டினைச் சேர்ந்த மக்களின் வீடுகளின் சுவர்கள் எதனால் கட்டப்பட்டிருந்தது = மூங்கில் தட்டிகளால்.
  • மக்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்களையும், செந்நிறத்தின் மீது கருமை நிற ஓவியம் தீட்டிய மட்பாண்டங்களையும் பயன்படுத்தினர்.
11TH பண்டைய இந்தியா
11TH பண்டைய இந்தியா

பழுப்பு மஞ்சள்நிற பாண்டப் பண்பாடு (Ochre Coloured Pottery Ware culture)

  • செம்புக்காலப் பண்பாட்டுடன் தொடர்புடையது = பழுப்புமஞ்சள்நிற மட்பாண்டங்கள் பண்பாடு (Ochre Coloured Pottery Ware culture).
  • பழுப்புமஞ்சள்நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் = பொ.ஆ.மு. 2600 முதல் பொ.ஆ.மு. 1200 வரை.
  • எந்த பண்பாடு நலிந்த ஹரப்பா பண்பாடாக (impoverished Harappan culture) பார்க்கப்படுகிறது = பழுப்பு மஞ்சள்நிற பாண்டப் பண்பாடு (Ochre Coloured Pottery Ware culture).
  • “செம்புப் பொருட்குவியல் பண்பாடு” (copper hoard culture) என்று அழைக்கப்படும் பண்பாடு = பழுப்பு மஞ்சள்நிற பாண்டப் பண்பாடு (Ochre Coloured Pottery Ware culture).
  • பழுப்பு மஞ்சள்நிற பாண்டப் பண்பாடு = ஒரு கிராமியப் பண்பாடு.
  • 11TH பண்டைய இந்தியா

தென் இந்தியச் செம்புக்காலப் பண்பாடுகள்

  • இந்தியாவில் எந்தப் பகுதியில் ஒரு முழுமை பெற்ற செம்புக்கற்காலப் பண்பாடு நிலுவியதர்கான எந்த சான்றும் இல்லை = தென் இந்தியா.
  • சில இடங்களில் துளையிட்ட பாண்டங்களும், கெண்டி வடிவிலான பாண்டங்களும் கிடைத்துள்ளன.

வட இந்தியாவில் இரும்புக்காலம்

  • வட இந்தியாவின் இரும்புக் காலமானது எதனோடு ஒத்துப்போகிறது = ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாட்டோடு (painted Grey Ware culture).
  • ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் = பொ.ஆ.மு. 1100 முதல் பொ.ஆ.மு. 800.
  • ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாட்டைத் தொடர்ந்து தோன்றிய பண்பாடு = மெருகேற்றப்பட்ட கருப்புநிற மட்பாண்டப் பண்பாடு தோன்றியது.
  • மௌரியர் காலத்து மகாஜனபதங்களோடு தொடர்புடைய பண்பாடு = மெருகேற்றப்பட்ட கருப்புநிற மட்பாண்டப் பண்பாடு.
  • தென் இந்தியாவில் இரும்புக்காலம் என்பது = ஈமச் சின்னங்களுடன் கூடிய பெருங்கற்காலப் பண்பாடாக உள்ளது.
11TH பண்டைய இந்தியா
11TH பண்டைய இந்தியா

தமிழகத்தில் பெருங்கற்காலம்/இரும்புக்காலம்

  • தமிழகத்தில் இறந்தோரை தாழியில் புதைக்கும் வழக்கம் இருந்ததற்கான சான்று எங்கு கிடைத்துள்ளது = ஆதிச்சநல்லூரில் (தற்போதைய தூத்துக்குடி மாவட்டம்).
  • முதுமக்கள் தாழியைப் பொறுத்தமட்டில் பெரும்பாலும் எவை பயன்படுத்தப்படவில்லை = கற்கள்.
  • தமிழ் பிராமி எழுத்துமுறை இருந்ததற்கான சான்று எங்கு கிடைத்துள்ளது = கொடுமணல் (ஈரோடு மாவட்டம்).
  • தமிழகத்தில் எந்த ஆற்றுப் படுகையில் பழைய காலத்தைச் சேர்ந்த நான்கு நடுகற்கள் தமிழ் பிராமி எழுத்துகளுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன = வைகை ஆற்றுப் படுகையில்.
  • தமிழகத்தில் காணப்படும் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் யாவை = ஈமக் குத்துக்கல், நினைவுக்கல், கல்திட்டை.
  • தமிழகத்தில் எந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கருப்பு, சிவப்பு வண்ண மட்கலன்கள், மனித எலும்புச் சான்றுகள் மற்றும் இரும்புப் பொருட்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது = கிருஷ்ணகிரி அருகில் உள்ள வடமலைக்குண்டா.
  • தமிழகத்தில் எங்கு பல நூற்றாண்டுகள் பழமையான குத்துக்கல் கண்டுபிடிக்கப்பட்டது = திருப்பூர் மாவட்டம் சிங்காரிபாளையம் குந்தலம்.
  • தமிழகத்தில் எந்த நதிக்கரையில் பண்டைய கால மனிதர்களின் வாழிடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது = உப்பாறு நதிக்கரை.
  • 11TH பண்டைய இந்தியா

தமிழகத்தில் பெருங்கற்கால இடங்கள்

  • தமிழகத்தில் பெருங்கற்காலத்தோடு தொடர்புடைய இடங்கள் = ஆதிச்சநல்லூர், பையம்பள்ளி, கொடுமணல்.
11TH பண்டைய இந்தியா
11TH பண்டைய இந்தியா

ஆதிச்சநல்லூர்

  • ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தில் உள்ளது = தூத்துக்குடி.
  • 1876ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வை மேற்கொண்டவர் = ஜெர்மனியைச் சேர்ந்த ஆண்டிரு ஜாகர்.
  • ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட கணிசமான எண்ணிக்கையில் இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், பெருமளவிலான எலும்புகள், மண்டையோடுகள் ஆகியவற்றை ஜெர்மனிக்கு எடுத்துச் சென்றவர் = ஆண்டிரு ஜாகர்.
  • ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட கணிசமான எண்ணிக்கையில் இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், பெருமளவிலான எலும்புகள், மண்டையோடுகள் ஆகியவை தற்போது எந்த நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன = ஜெர்மனியின் பெர்லின் நகரில்.
  • ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்ட ஆங்கிலேயர் = அலெக்ஸாண்டர் ரீ.
  • தமிழகத்தில் எங்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட வீட்டு விலங்குகளான எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, சேவல், காட்டு விலங்குகளான புலி, மிளா (மான் வகை), யானை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன = ஆதிச்சநல்லூர்.
  • ஆதிச்சநல்லூரில் “செம்பினால் ஆன வளையல்” ஒன்றை கண்டெடுத்தவர் = ராபர்ட் கால்டுவெல்.
  • 11TH பண்டைய இந்தியா

பையம்பள்ளி

  • பையம்பள்ளி எந்த மாவட்டத்தை சேர்ந்த கிராமம் = திருப்பத்தூர்.
  • பையம்பள்ளி = பெருங்கற்காலத்தோடு தொடர்புடைய கிராமம் ஆகும்.
  • பெரும் எண்ணிக்கையிலான ஈமத் தாழிகள் எங்கு கண்டறியப்பட்டன = பையம்பள்ளி.
  • பையம்பள்ளி பெருங்கற்காலப் பண்பாட்டின் காலம் = பொ.ஆ.மு 1000.
11TH பண்டைய இந்தியா
11TH பண்டைய இந்தியா

கொடுமணல்

  • கொடுமணல் எந்த மாவட்டத்தில் உள்ளது = ஈரோடு.
  • கொடுமணல் எந்த ஆற்றில் கரையில் அமைந்துள்ளது = நொய்யல் ஆறு.
  • மொகஞ்சதாரோ அகழ்வாய்வில் கண்டறியப்பட்டதைப் போன்ற செம்மணிக்கற்கள் தமிழகத்தில் எங்கு கண்டறியப்பட்டன = கொடுமணல்.
  • கொடுமணல் பற்றிய குறிப்புகள் உள்ள சங்க நூல் = பதிற்றுப்பத்து.
  • தமிழகத்தில் ரோமானிய நாணயக் குவியல்கள் அதிகளவு கண்டறியப்பட்ட இடம் = கொடுமணல்.
  • தமிழகத்தில் எங்கு பலவகைப்பட்ட புதைக்கும் முறைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன = கொடுமணல்.
  • ஈமக் குழிகள், ஈமத் தாழிகள், கற்படுக்கைப் புதைப்பு எனப் பலவகைப்பட்ட புதைக்கும் முறைகள் கொடுமணலில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • சங்கத் தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்த பொருட்கள் எங்கு கிடைத்துள்ளன = கொடுமணல்.

ஆரியர்களும் ரிக் வேதகால சமூகமும்

  • “ஆரியக் கோட்பாட்டை” தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்ட ஐரோப்பியர்கள் யார் = ஜெர்மனியின் நாஜிக்கள்.
  • ரிக் வேதம் எந்த மொழியில் எழுதப்பட்டது = சமஸ்கிருதம்.
  • ரிக் வேதத்தில் “முண்டா மற்றும் திராவிட மொழிச் சொற்கள்” எத்தனை அடையாளம் காணப்பட்டுள்ளன = 300 சொற்கள்.
  • ஆரியப் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்புடையதாக அறியப்படும் இடம் = ‘பாக்ட்ரியா மார்ஜினா தொல்லியல் வளாகம்’ (Bactria-Margina Archaeological Complex).
  • ‘பாக்ட்ரியா மார்ஜினா தொல்லியல் வளாகம்’ (Bactria-Margina Archaeological Complex) காலம் = பொ.ஆ.மு. 1900 முதல் பொ.ஆ.மு. 1500 ஆகும்.
  • இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பற்றிய குறிப்புகள் எந்த நாட்டின் கல்வெட்டுகளில் உள்ளது = ஈராக்.
  • வேதகால கடவுள்களின் பெயர்களைப் போலுள்ள பெயர்களைக் குறிப்பிடும் வெளிநாட்டு கல்வெட்டுகள் யாவை = அனதோலியா கல்வெட்டு (பொ.ஆ.மு 1900-1700), ஈராக்கைச் சேர்ந்த காஸ்சைட் கல்வெட்டு (பொ.ஆ.மு. 1600), சிரியாவின் மிட்டானி கல்வெட்டுகள், போகஜ் கல்வெட்டுகள் (பொ.ஆ.மு.1400).
  • ரிக் வேதத்தில் ‘அஸ்வா’ (குதிரை) என்னும் சொல் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது = 215 முறை.
  • ரிக் வேதத்தில் ‘ரிஷபா (காளை) என்னும் சொல் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது = 170 முறை.
  • ரிக் வேதத்தில் குறிப்பிடப்படாத விலங்குகள் = வெப்பமண்டல விலங்குகளான புலி, காண்டாமிருகம்.
  • இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசுபவர்களிடம் காணப்படுவதாகக் கூறப்படும் மரபணு = எம்.17 (17).
  • 11TH பண்டைய இந்தியா
11TH பண்டைய இந்தியா
11TH பண்டைய இந்தியா

ரிக் வேதகாலப் பண்பாடு

  • ரிக் வேதகாலப் பண்பாட்டின் காலம் = பொ.ஆ.மு. 1500க்கும் பொ.ஆ.மு. 1000 க்கும் இடைப்பட்ட காலம்.
  • தொடக்க வேதகால ஆரியர்கள் வாழ்ந்த இடங்கள் = கிழக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப், மேற்கு உத்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் வாழ்ந்தனர்.
  • ரிக்வேதகால ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியாவில் இருந்த மக்கள் = தாசர்கள், தசயுக்கள்.
  • ரிக் வேதத்தில் என்பவர் 90 கோட்டைகள் அல்லது குடியிருப்புகளின் தலைவர் என்று குரிப்பிடட்டவர் = குலிதாரா என்பவரின் மகனான சம்பரா.
  • ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பரா என்பவரை தோற்கடித்தவர் = பரத குலத்தைச் சார்ந்த திவோதசா.
  • ரிக் வேதத்தில் “இந்திரன்” எவ்வாறு அழைக்கப்பட்டார் = புரந்தரா.
  • “புரந்தரா” என்பதன் பொருள் = குடியிருப்புகளை அழிப்பவன்.
  • அரசாட்சி செய்த ஆரியக் குலங்கள் = பரத, திரிசு.
  • ஆரியக் குலங்கலான பரத மற்றும் சிரிசு குலங்களுக்கு ஆதரவாக இருந்த முனிவர் = வசிஷ்ட முனிவர்.

பத்து அரசர்களின் போர்

  • பரத குலத்தை சேர்ந்தவர்களுக்கும், பத்து தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற போர் எவ்வாறு அழைக்கப்படுகிறது = பத்து அரசர்களின் போர்.
  • பத்து அரசர்களின் போர் பற்றி குறிப்பிடும் நூல் = ரிக் வேதம்.
  • பத்து அரசர்களின் போர் நடைபெற்ற இடம் = புருசினி ஆறு (இன்றைய ரவி ஆறு).
  • பத்து அரசர்களின் போரில் வெற்றி பெற்றவர் = பரத குலத்தை சேர்ந்த சுதா என்பவன்.
  • “குரு குலத்தை” உருவாக்கியவர்கள் = பரத மற்றும் புரு குலத்தினர் ஒன்றிணைந்து தோற்றுவித்தனர்.
  • 11TH பண்டைய இந்தியா

ரிக் வேதகால சமூகப் பிரிவுகள்

  • பொதுவாக அடிமை முறை இருந்தது.
  • கூலித் தொழிலாளர் பற்றிய குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை.
  • புருஷ பலியிடப்பட்டபோது அவனுடைய வாயிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள், இரண்டு கைகளிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள், தொடைகளிலிருந்து பிறந்தவர்கள் வைசியர்கள், கால்களிலிருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் எனக் கூறுவது = ரிக் வேதத்தின் ‘புருஷசுக்தம்’ (Purusha Sukta of the Rig Veda).
  • பானிகள் என்போர் யார் = பானிகள் என்போர் மாடுகள் பூட்டப்பட்ட வண்டிகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள் என ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
11TH பண்டைய இந்தியா
11TH பண்டைய இந்தியா

இனக்குழுக்களும் குடும்பங்களும்

  • குலங்கள் ஒன்று சேர்ந்து “ஜனா” என்ற சமூகம் உருவானது.
  • “ஜனா” என்பதன் பொருள் = பழங்குடி, சமூகம்.
  • ரிக் வேதத்தில் ஜனா என்ற சொல் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது = 21 முறை.
  • ரிக் வேதத்தில் ஒருமுறை கூட பயன்படுத்தாத சொல் = ஜனபதா.
  • சாதாரண மக்களை குறிப்பிடும் “விஷ்” என்ற சொல் ரிக் வேதத்தில் எத்தனை முறை வந்துள்ளது = 170 முறை.
  • “கிருஹா” என்னும் சொல்லின் பொருள் = குடும்பம்.
  • குடும்பத்தின் தலைவன் = கிருஹபதி.
  • குடும்பத் தலைவனின் மனைவி = ஸபத்தினி.
  • 11TH பண்டைய இந்தியா

ரிக்வேத காலத்தில் பொருளாதாரம்

  • கலப்பையின் கொழுமுனை ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ரிக் வேதத்தில் “வேளாண்மை நிலம்” எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது = க்ஷேத்ரா (kshetra).
  • “கிருஷி” என்னும் சொல்லின் பொருள் = உழவு.
  • ரிக் வேதத்தில் கலப்பையை குறிக்கின்ற சொற்கள் = லங்லா, சுரா.
  • ரிக் வேதத்தில் கலப்பையின் கொழுமுனையைக் குறிக்கும் சொல் = சீத்தா.
  • ரிக் வேத காலத்தில் மக்கள் பார்லியையும் (யவம்) கோதுமையையும் (கோதுமா) பயிரிட்டார்கள்.
  • ரிக் வேதத்தில் “போரை” குறிக்க பயன்பட்ட சொல் = காவிஸ்தி.
  • “காவிஸ்தி” என்பதன் பொருள் = பசுக்களை தேடுதல் (போர்).
  • காவிஸ்தி என்ற சொல் மருவி தற்காலத்தில் “கோஷ்டி” என மாறியது.
  • ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் “அயஸ்” என்னும் சொல் எதை குறிக்கின்றது = செம்பு, வெண்கலம்.
  • ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “கர்மரா” என்போர் யார் = உலோக வேலை செய்வோர்.
  • “ஸ்ரி” என்னும் சொல்லின் பொருள் = நூல்.
  • “தச்சன்” என்னும் சொல்லின் பொருள் = மரவேலை செய்வோர்.
  • ரிக் வேதத்தில் வணிகர்கள் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது = பானி.
  • “நிஷ்கா” என்பது எதனை குறிக்கின்றது = தங்கம் அல்லது வெள்ளி அணிகலன்கள்.
  • ரிக் வேத காலத்தில் போக்குவரத்திற்கு பயன்பட்டவை = மாடுகள், குதிரைகள்.
  • “நாவ்” என்ற சொல் எதனை குறிக்கின்றது = படகு.
11TH பண்டைய இந்தியா
11TH பண்டைய இந்தியா

அரசுமுறையும் நிர்வாகமும்

  • இனக்குழுவின் தலைவர் = ராஜன்.
  • புருக்களின் அரசர் திரசதஸ்யு 50 பெண்களைப் பரிசாகக் கொடுத்துள்ளார்.
  • இனக்குழுத் தலைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = கோபா, கோபதி.
  • கோபா, கோபதி என்பதன் பொருள் யாது = கால்நடைகளின் தலைவர்.
  • ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகள் = சபா, சமிதி, விததா, கணா.
  • சபா = வயதில் மூத்தோர் அல்லது செல்வர்கள் பங்கேற்ற அமைப்பு.
  • சமிதி = மக்கள் கூடும் இடம்.
  • விததா = இனக்குழுக்களின் அமைப்பு. அமைப்பாகும். இராணுவம் மற்றும் மதம் சார்ந்த பணிகளை இவை மேற்கொண்டன.
  • சேனானி = படைத் தலைவர்.
  • ரிக் வேத காலத்தில் வரிவசூல் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
  • “பலி” என்பது யாது = மக்கள் தாமாகாவே அரசருக்கு வழங்கிய வரி.
  • “விராஜபதி” எனப்பட்டோர் யார் = நிலப்பரப்பைக் கட்டுப்படுத்திய அதிகாரி.
  • “கிராமணி” = கிராமங்களின் தலைவர்.
  • “கிராமணி” = படைகளின் தலைவர்.
  • 11TH பண்டைய இந்தியா

வேதகால மதமும் சடங்குகளும்

  • ரிக் வேத காலத்தின் முக்கிய கடவுள் = இந்திரன்.
  • “புரந்தரா” என்று அழைக்கப்பட்ட கடவுள் = இந்திரன்.
  • கடவுளுக்கும் மக்களுக்கும் இடையிலான தூதுவன் = நெருப்புக் கடவுள்.
  • சூரியன் = இருளை அகற்றும் கடவுள்.
  • விடியலின் கடவுள் = உஷா எனும் பெண் கடவுள்.
  • வருணா = நீர்க் கடவுள். இயற்கையின் விதிகளை உயர்த்திப்பிடிப்பவர் இவரே.
  • சோமா = தாவரங்களின் கடவுள்.
  • மாருத் = வலிமையின் கடவுள்.
11TH பண்டைய இந்தியா
11TH பண்டைய இந்தியா

பிற்கால வேதப் பண்பாடு

  • பிற்கால வேதப்பண்பாட்டின் காலம் = பொ.ஆ.மு. 1000 முதல் பொ.ஆ.மு. 700-600 வரை ஆகும்.
  • பிற்கால வேதப் பண்பாட்டோடு தொடர்புடையது = இரும்புக் காலத்தைச் சேர்ந்த வண்ணம் தீட்டிய சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாடு.
  • பின்வேதகாலத்தில், ஆரியர்கள் பஞ்சாபிலிருந்து மேற்கு உத்திரப்பிரதேசத்தின் கங்கை-யமுனை சமவெளியை நோக்கித் தமது வாழ்விடங்களை விரிவுபடுத்தினர்.
  • பிற்கால வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள நதிகள் = சரஸ்வதி, திரிஸ்தவதி.
  • அங்க, மகத (பீகார்) நாடுகளைச் சேர்ந்த மக்கள் எதிரிகளாகவே பார்க்கப்பட்டனர் என்ற குறிப்பு எதில் உள்ளது = அதர்வ வேதம்.

பிற்கால வேதப்பண்பாடு

  • இரும்பு எவ்வாறு அழைக்கப்பட்டது = ‘சியாமா-அயஸ்’ அல்லது ‘கிருஷ் அயஸ்’.
  • கங்கைப் பகுதியின் காடுகள் திருத்தப்பட்டதில் இரும்பின் பங்கிற்கு அதிக அழுத்தம் கொடுத்தன.
  • பிந்தைய வேதகாலத்தில் அரசரின் அதிகாரங்கள் அதிகரித்தன.
  • விததா என்ற அமைப்பு செல்வாக்கு இழந்தது. சபா, சமிதி ஆகிய அமைப்புகள் தொடர்ந்து இயங்கின.
  • குடும்ப உரிமைகளை சட்டபூர்வமாக்க அரசர் வாஜ்பேய, ராஜசூய யாகங்களை நடத்தினார்.
  • “புரோகிதர்” என்பதன் பொருள் = “அரசரை முன்னிறுத்தக் கூடியவர்”.
  • “ஸ்ராதா” என்பது யாது = செல்வ ஆதாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஸ்ராதா என்ற யாகங்கள் நடத்தப்பட்டன.
  • அரசப் பதவியேற்பின் போது செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்த ஒரு புரோகிதர்க்கு 1000 தங்கக்கட்டிகளும் கால்நடைகளும் பரிசளித்ததாக குறிப்பிட்டுள்ள பிராமணம் = அய்த்ரேய பிராமணம்.
  • 11TH பண்டைய இந்தியா

பிந்தைய வேதகாலத்தில் சமூகம்

  • பிந்தைய வேதகாலத்தில் அரசர் மக்களிடம் (விஷ்) இருந்து “பலி” எனும் வரியை பெற்றனர்.
  • பின் வேத காலத்தில் ஏற்பட்ட நாடுகளின் உருவாக்கமும் மரபுவழி அரசாட்சியும் பற்றி “ரோமிலா தாப்பர்” எவ்வாறு குறிப்பிடுகிறார் = “குல உரிமையிலிருந்து அரசுக்கு”.
  • “ஜனபதம்” என்ற சொல் பிந்தைய வேதகாலத்தில் உருவானது.
  • பிந்தைய வேத காலத்தில் உருவான அரசியல் நிறுவனங்கள் = ராஜிய, கணசங்கா.
  • அஸ்வமேத யாகம் குதிரையுடன் தொடர்புடையது.
  • வாஜபேய யாகம் = தேர்களின் போட்டியை உள்ளடக்கியதாகும்.
  • “ராஜன்யா” என்னும் சொல் யாரைக் குறிக்கிறது = சத்ரியர்கள்.
  • “பிராமணர்களை காட்டிலும் சத்ரியர்களே உயர்ந்தவர்” எனக் கூறும் பிராமணம் = பஞ்சவம்ச பிராமணம்.
  • “சத்திரியர்களைவிடப், பிராமணர்களே உயர்ந்தவர்கள்” எனக் கூறும் பிராமணம் = சதபத பிராமணம்.
  • வேதகாலத்தில் பிரிக்கப்பட்ட நான்கு வாழ்க்கை கட்டங்கள் = பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வனப்பிரஸ்தம், சன்யாசம்.
  • “துவிஜா” என்றால் என்ன = பிந்தைய வேதகாலத்தில் இருபிறப்பாளர் (துவிஜா) எனும் கோட்பாடு வளர்ச்சி பெற்றது.
  • “பிராமணர்கள் ஆதரவை நாடுபவர்கள் எனவும், அவர்கள் அரசர்களால் பதவிநீக்கம் செய்யப்படலாம் என” கூறிய பிராமணம் = அய்த்ரேய பிராமணம்.
11TH பண்டைய இந்தியா
11TH பண்டைய இந்தியா

சமூக அமைப்பு

  • “ரதகாரர்கள்” என்போர் = தேர்களை செய்வோர்.
  • “கோத்திரம்” என்பதன் பொருள் = கிடை.
  • அரசர்கள் கலப்பையோடு தொடர்புடைய சடங்குகளைப் பற்றி கூறும் பிராமணம் = ‘சதபத பிராமணம்’.
  • “குலாலா” என்போர் யார் = மண்பாண்டங்களை செய்வோர்.
  • “உர்னா சூத்ரா” என்போர் யார் = கம்பிளி நெய்வோர்.
  • பிந்திய வேதகாலத்தில் முக்கியத்துவம் பெற்ற கடவுள் = பிரஜாபதி.
  • சடங்குகளின் கடவுள் = ருத்ரன் (சிவனின் மறுவடிவம்).
  • ருத்ரனின் வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ள பிராமணம் = சதபதபிராமணம்.
  • சதபதபிராமணம் குறிப்பிட்டுள்ள ருத்ரனின் வேறு பெயர்கள் = பசுனம்பதி, சர்வா, பவா, பகிகா.
  • காக்கும் கடவுள் = விஷ்ணு.
  • 11TH பண்டைய இந்தியா

தத்துவமும் கல்வியும்

  • காடுகளில் தங்கி தவம் இயற்றும் முனிவர்களோடு தொடர்புடைய நூல் = ஆரண்யங்கள்.
  • “உபநிசத்” என்பதன் பொருள் = அருகே அமர்.
  • தத்துவ விசாரணை நூல்கள் என அழைக்கப்படுவது = உபநிடதம்.
  • வேத நூல்களின் இறுதிப் பகுதியாக இணைக்கப்பட்டவை = உபநிடதங்கள்.
  • உபநிடதங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = வேதாந்தங்கள்.
  • சத்யமேவ ஜயதே (வாய்மையே வெல்லும்) என்னும் சொற்றொடர் எங்கிருந்து எடுக்கப்பட்டது = முண்டக உபநிடதம்.

முகலாய இளவரசர் தாராசுகோ

  • உபநிடதங்களை பாரசீக மொழியில் மொழிப் பெயர்த்தவர் = முகலாய அரசர் தாராசுகோ.
  • எந்த ஆண்டு முகலாய இளவரசர் தாராசுகோ, உபநிடதங்களை பாரசீக மொழியில் மொழிப்பெயர்த்தார் = 1657.

புத்தக வினாக்கள்

  1. வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்? = சம்ஹிதைகள்.
  2. மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? = குரு-பாஞ்சாலம்.
  3. ஆதிச்சநல்லூர் _______________ மாவட்டத்தில் அமைந்துள்ளது? = தூத்துக்குடி.

 

Leave a Reply