11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை
11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை
- சிந்துவெளி மக்கள் வாழ்ந்த காலம் = செம்புக் காலம்.
- “பைட்டோலித்” என்றால் என்ன = பல ஆண்டுகளாக மக்கி கல்லாகிப் போன தாவரங்கள் பைட்டோலித் எனப்படும்.
வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இந்தியா
- வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது = எழுத்துமுறை தோன்றுவதற்கு முந்தைய காலம்.
- வரலாற்றுக்கு முந்தைய காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது = கற்காலம்.
- மனித இனத்தின் மூதாதையர் முதலில் தோன்றிய இடம் = ஆப்ரிக்கா.
- ஆப்ரிக்காவை விட்டு முதன் முதலில் வெளியேறிய மனித இனம் = ஹோமோ எரக்டஸ்.
- ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற பாண்டங்கள் எந்த காலத்தை சேர்ந்தவை = கற்காலம்.
பழங்கற்காலம்
- பழங்கற்காலம் – இடைக் கற்காலம் – புதிய கற்காலம்.
- எந்த காலத்தில் மனிதன் விலங்குகளையும் தாவரங்களையும் வளர்க்க கற்றுக் கொண்டான் = புதிய கற்காலம்.
- பழங்கற்காலம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது = கீழ்ப்பழங்கற்காலம், இடைப் பழங்கற்காலம், மேல் பழங்கற்காலம்.
- 11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை
அச்சூலின் மரபும் சோகனியன் மரபும்
- கைக்கோடரி வகைக் கருவிகளைக் கொண்ட மரபு = அச்சூலியன் (Acheulian) மரபு.
- கூழாங்கல்லைச் செதுக்கி உருவாக்கப்படும் கருவிகளைக் கொண்ட மரபு = சோகனியன் (Sohanian) மரபு.
- அச்சூலியன் மரபு கைக்கோடரிகள் முதன்முதலில் கண்டெடுக்கப்பட்ட இடம் = பிரான்சில் உள்ள செயின்ட் அச்சூல் என்ற இடத்தில்.
- துண்டாக்கும் கருவிகளையும் அதைச் சார்ந்த வேலைகளுக்கான கருவிகளையும் மட்டுமே கொண்ட மரபு = சோகனியன் (Sohanian) மரபு.
- இது இன்றைய பாகிஸ்தானில் உள்ள சோகன் ஆற்றின் வடிநீர்ப்பகுதியில் நிலவிய மரபு ஆகும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கீழ்ப்பழங்கற்காலப் பண்பாடு
- பழங்கற்கால கருவிகள் முதன் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் = பல்லாவரம் (சென்னைக்கு அருகே).
- பல்லாவரம் அருகே இந்தியாவில் முதன் முதலில் பழங்கற்கால கருவிகளை கண்டுபிடித்தவர் = ராபர்ட் புரூஸ் பூட்.
- பழங்கால கற்கருவிகளின் அடிப்படையில் பண்பாடு மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது = தொடக்க கால அச்சூலியன், இடைக்கால அச்சூலியன் மற்றும் பிற்கால அச்சூலியன்.
- அச்சூலியன் மரபுக்கான அடையாளங்கள் காணப்படாத இடங்கள் யாவை = மேற்குத்தொடர்ச்சி மலைகள், கடற்கரைப் பகுதிகள், வடகிழக்கு இந்தியா.
- அச்சூலிய கருவிகள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் = அதிரம்பாக்கம், பல்லாவரம், குடியம், கர்நாடகாவின் ஹன்ஸ்கி சமவெளியில் உள்ள இசம்பூர், மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிம்பேட்கா.
- தற்கால மனிதனுக்கு நெருக்கமான தோற்றத்தை கொண்டிருந்த மனித மூதாதையர் இனம் = ஹோமினின்.
- தமிழகத்தில் மனித மூதாதையர் இனமான ஹோமினின் வாழ்ந்ததாக சொல்லப்படும் பகுதி எது = அதிராம்பாக்கம்.
- அதிரம்பாக்கத்தில் ஹோமினின் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை கண்டுபிடித்தவர் = சர் ராபர்ட் ப்ரூஸ்.
- இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஹோமோனின் மனிதர்களின் புதைப்படிவ சான்று எங்கு கிடைத்துள்ளது = மத்திய பிரதேசத்தின் ஹோசங்காபாத் அருகே ஹத்நோரா என்னும் இடத்தில்.
- இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஹோமினின் மனிதனின் புதைப்படிவச் சான்று எது = மண்டை ஓட்டின் மேல் பகுதி.
- ஹத்னோரா ஆர்க்கைக் ஹோமோ சேப்பியன்ஸ் புதைபடிவம் – மண்டையோட்டின் மேல்பகுதி எங்கு கண்டெடுக்கப்பட்டது = மத்தியப்பிரதேசம்.
- இந்தியாவில் இருந்த ஹோமினின் மனிதர்களை தொல்லியல் ஆய்வாளர்கள் எவ்வாறு அழைக்கின்றனர் = நர்மதை மனிதர்கள்.
- ஆர்கைக் ஹோமோ சேப்பியன்ஸ் என்னும் மனித இனம் வாழ்ந்ததற்கான சான்று கண்டுபிடிக்கப்பட்ட இடம் = மத்தியப் பிரதேச மாநிலம் ஹோசங்காபாத அருகே ஹத்னோரா என்னும் இடத்தில்.
- இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித மூதாதையரின் புதை படிவ ஒரே சான்று எது (only existing fossil find of human ancestors in India) = ஹத்நோராவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமினின் மனிதனின் மண்டை ஓட்டின் மேல் பகுதி.
- இந்தியாவில் கற்காலத்தில் வாழ்ந்த விலங்குகளின் புதை படிவங்கள் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன = நர்மதை பள்ளத்தாக்கு.
- நர்மதை சமவெளியில் எந்தெந்த விலங்குகளின் புதைப்படிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன = எலிபஸ் நமடிகஸ் (Elephas namadicus) எனப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட யானை வகை, ஸ்டெகோடோன்கனேசா (Stegodon ganesa) எனப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட யானை வகை, போஸ் நமடிகஸ் (Bos namadicus) எனப்படும் காட்டு மாடுகள் வகை மற்றும் எக்கஸ் நமடிகஸ் (Equus namadicus) எனப்படும் குதிரை வகை விலங்கு.
- தமிழகத்தில் எங்கு குதிரை வகை விலங்குகளான எக்கஸ்களின் பற்கள் கிடைத்துள்ளன = அதிரம்பாக்கம்.
- நீல்காவ் (சிறிய கொம்புடைய மான் வகை) மற்றும் நீர் எருமைக்கான சான்றுகள் தமிழகத்தில் எங்கு கிடைத்துள்ளன = அதிரம்பாக்கம்.
- தமிழகத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் திறந்த ஈரப்பதம் மிக்க இடம் எங்கு இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது = அதிரப்பக்கம்.
- எக்கஸ் என்றால் என்ன = குதிரை, கழுதை, வரிக்குதிரை ஆகிய விலங்குகளை உள்ளடக்கிய பேரினம்.
- கீழ்ப் பழங்கற்கால மனிதர்கள் குகைகளில் வாழ்ந்ததற்கான சான்றுகள் எங்கு கிடைத்துள்ளன = மத்தியப் பிரதேசத்தின் பிம்பேட்கா மற்றும் தமிழ்நாட்டின் குடியம் பகுதி.
- 11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை
இடைப் பழங்கற்காலம்
- இந்தியாவில் இடைப் பழங்கற்கால சான்றினை முதன் முதலில் கண்டுபிடித்தவர் = டி.சங்காலியா.
- இந்தியாவில் இடைப் பழங்கற்காலச் சான்று முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது = நெவாசா என்னுமிடத்தில் பிரவாரா ஆற்றங்கரையில்.
- தமிழகத்தில் இடைப் பழங்கற்கால சான்று கிடைத்துள்ள இடம் எது = அதிரம்பாக்கம்.
- இடைப் பழங்கற்கால நாகரிகம் எதனை அடிப்படையாகக் கொண்டது என கூறப்படுகிறது = செதுக்கும் செயல்பாட்டை.
- இந்தியாவில் இடைப் பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் = ஆற்றுச் சமவெளி.
- இந்தியாவில் இடைப் பழங்கற்கால மனிதர்கள் எந்த கற்கருவியை குறைவாக பயன்படுத்தினர் = கைக்கோடாரி.இந்தியாவில் இடைப் பழங்கற்கால மனிதர்கள் மூலப் பொருட்களாக எத்தகைய கற்களை பயன்படுத்தினர் = செர்ட், ஜாஸ்பர், கால்சிடெனி, குவார்ட்ஸ்.
மேல் பழங்கற்காலப் பண்பாட்டு
- நவீன மனிதர்கள் எங்கு தோன்றினர் = ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனம் அருகே.
- மேல் பழங்கற்கால பண்பாட்டு மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் = சிலிக்காவால் செய்யப்பட்டது.
- மேல் பழங்கற்கால பண்பாட்டை சேர்ந்த எலும்பினால் ஆன கருவிகளும் விலங்குகளின் எஞ்சிய பகுதிகளும் இந்தியாவில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது = ஆந்திர மாநிலம் கர்னூல் குகைகளில்.
- இந்தியாவில் மேல் பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த பகுதிகள் எவை = மெரால்பாவி (கர்நாடகா), ஆந்திராவின் கர்னூல் குகைகள், கோதாவரிக்காணி (தெலுங்கானா), மத்திய பிரதேசத்தின் சோன் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பாகோர்1, பாகோர்3 பகுதிகள், பாட்னே (மகாராஷ்டிரா).
- மெல்லிய கீறல்கள் மூலம் படங்கள் வரையப்பட்ட தீக்கோழியின் முட்டை ஓடுகள் மற்றும் சங்கு எங்கு கிடைத்துள்ளன = ஆந்திராவின் ஜீவாலபுரம், பாட்னா (மகாராஷ்டிரா), இலங்கையில் உள்ள பாடடோம்பா லெனா மற்றும் பாகியான் குகைகள்.
- அலங்கரிக்கப்பட்ட தீக்கோழி முட்டை ஓடுகள் எங்கு கிடைத்துள்ளன = ஆந்திராவின் ஜீவாலபுரம், பாட்னா (மகாராஷ்டிரா), இலங்கையில் உள்ள பாடடோம்பா லெனா மற்றும் பாகியான் குகைகள்.
- மேல் பழங்கற்காலத்தைச் சேர்ந்த ஒரு வழிபாட்டுத்தலமாக இருந்திருக்கலாம் என கருதத்தகுந்த ஒரு சிறு கிராமம் எது = உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாகோர்.
- இந்தியாவில் வழிபாட்டுத்தலங்களுக்கான தேடலில் கிடைத்த மிகப் பழமையான சான்று (the earliest known evidence of a shrine in India) எது = உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாகோர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முக்கோன வடிவிலான கற்கள்.
- 11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை
இடைக்கற்காலப் பண்பாடு
- இந்தியாவில் இடைக்கற்காலப் பண்பாட்டோடு தொடர்புடைய இடங்கள் = பயிஸ்ரா (பீகார்), லங்னஜ் (குஜராத்), உத்திரப்பிரதேசதில் (பாகர் II, சோபனி மண்டோ, சாராய் நகர் ராய், மகாதகா, தம்தமா), சனகனகல்லு (ஆந்திரா), கிப்பன ஹள்ளி (கர்நாடகா), ஆதம்கார் (மத்தியப்பிரதேசம்), பிம்பேட்கா (மத்தியப்பிரதேசம்).
- நுண்கற்காலச் சான்றுகள் எங்கு கிடைத்துள்ளன = மும்பையின் கடற்கரைப் பகுதிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரி மணல்மேடுகள், விசாகப்பட்டினம் (ஆந்திரா).
- தேரி என்றால் என்ன = மணல் குன்றுகளால் உருவாக்கப்படும் கடற்கரைப் பகுதிகள்.
- தேரி மணல் குன்றுகள் எப்பொழுது உருவாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது = புத்துயிரூழியின் இரண்டாம் கட்டத்தில் (Pleistocene epoch of the Quaternary period).
- எந்த இடத்தில உள்ள ஓவியங்களில் ஆண்களும் பெண்களும் இணைந்து விலங்குகளை வேட்டையாடுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது = பிம்பேட்கா.
- ஒட்டகத்தின் எலும்புக் கூடுகள் எங்கு கிடைத்துள்ளன = கானிவாலில்.
- ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக புதைக்கப்பட்டதற்கான அடையாளச் சான்று எங்கு கிடைத்துள்ளன = மகாதகா (உத்திரப்பிரதேசம்).
- எங்கு புதைக்குழியில் தந்தத்தினால் ஆன பதக்கம் கிடைத்துள்ளது = மகாதகா (உத்திரப்பிரதேசம்).
- இந்தியாவில் வடிவியல் வேலைப்பாடுகளுடன் கூடிய படிகக்கல் எங்கு கிடைத்துள்ளது = சந்திராவதி (ராஜஸ்தான்).
- விலங்குகளின் எலும்புகளால் செய்யப்பட்ட பொருட்கள் எங்கு கிடைத்துள்ளது = பிம்பேட்கா (மத்தியப்பிரதேசம்).
- “தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்” (Castes and Tribes of Southern India) என்னும் நூலின் ஆசிரியர் = எட்கர் தர்ஸ்டன்.
வடமேற்கு இந்தியாவில் புதிய கற்காலப் பண்பாடு
- புதிய கற்காலப் பண்பாடு நிலவிய இடங்கள் = மெஹர்கார், ரானா குண்டாய், சாராய் காலா, ஜலில்பூர்.
- மெஹர்கார், ரானா குண்டாய், சாராய் காலா, ஜலில்பூர் = இவ்விடங்கள் தற்போது பாகிஸ்தானில் உள்ளன.
- ஏறத்தாழ பொ.ஆ.மு. 7000ஐச் சார்ந்ததாகக் கணிக்கத்தகுந்த தொடக்கக் கற்காலப் பண்பாட்டுக்கான சான்றுகள் எங்கு கிடைத்துள்ளன = மெஹர்கார்.
- புதிய கற்கால பண்பாட்டு காலத்தில் பயிரிடப்பட்ட பயிர் வகைகள் = அறு வரிசை பார்லி, எம்மர் கோதுமை, எய்ன்கான் கோதுமை, இலந்தை, பேரீச்சை.
- மெஹர்காரில் நிலவிய புதிய கற்காலப் பண்பாட்டின் முதல் பண்பாட்டுக் காலம் = ஏறத்தாழ பொ.ஆ.மு. 7000-5500.
- மெஹர்கார் புதிய கற்காலப் பண்பாட்டின் இரண்டாம் காலகட்டம் = ஏறத்தாழ பொ.ஆ.மு. 5500- 4800.
- மெஹர்கார் புதிய கற்காலப் பண்பாட்டின் மூன்றாம் காலகட்டம் = ஏறத்தாழ பொ.ஆ.மு. 4800-3500.
- நெடுந்தூர வணிகத்திற்கான சான்றாக கிடைத்தவை = பதக்ஷானில் மட்டுமே கிடைக்கக்கூடிய வைடூரியம் (Lapis Lazuli) இங்கு கிடைத்துள்ளது.
- புதியகற்கால களிமண் வீடுகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன = மெஹர்கார்.
- 11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை
மெஹர்காரில் தொடக்கக் கால பல்மருத்துவம்
- உயிருள்ள ஒரு மனிதரின் பல்லில் துளையிட்டதற்கான மிகப் பழமையான சான்று எங்கு கிடைத்துள்ளது = மெஹர்கார்.
- பல்மருத்துவத்துக்கான ஒரு முகவுரையாகத் (prelude to dentistry) இருந்த புதிய கற்கால இடம் = மெஹர்கார்.
காஷ்மீரில் புதிய கற்காலப் பண்பாடு
- எந்த நாகரிகத்தின் சமகாலத்தில் காஷ்மீரில் புதிய கற்காலப் பண்பாடு நிலவியது = ஹரப்பா நாகரீகம்.
- காஷ்மீரில் புதிய கற்காலப் பண்பாட்டின் மிக முக்கிய ஆய்விடம் = பர்சாஹோம்.
- காஷ்மீரில் எந்த இடம் பெருங்கற்காலத்துக்கும் தொடக்க வரலாற்றுக் காலத்துக்கும் (evidence for the Megalithic and Early Historic Periods) சான்றாக உள்ளது = பர்சாஹோம் (காஷ்மீர்).
- மக்கள் எங்கு நான்கு அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட குழி வீட்டில் வசித்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது = பர்சாஹோம் (காஷ்மீர்).
- வாய்ச்சி என்றால் என்ன = மரம் செதுக்கும் ஒரு வகை கருவி.
- எங்கு ஒரு புதைகுழியில் காட்டு நாயின் எலும்பும் மான் கொம்பும் காணப்பட்டன = பர்சாஹோம் (காஷ்மீர்).
- சூரியன், நாய் ஆகியவை இடம்பெறும் ஒரு வேட்டைக்காட்சி செதுக்கப்பட்டுள்ள ஒரு கல் எங்கு கிடைத்துள்ளது = பர்சாஹோம் (காஷ்மீர்).
கங்கைச் சமவெளியிலும் மத்திய இந்தியாவிலும் புதிய கற்காலப்பண்பாடு
- கங்கைச் சமவெளியிலும் மத்திய இந்தியாவிலும் புதிய கற்காலப்பண்பாடு இருந்த இடங்கள் = லேகுரதேவா, சோபானி முண்டா.
- ஏறத்தாழ பொ.ஆ.மு. 6500இலேயே நெல் சாகுபடி நடந்ததற்கான சான்றுகள் எங்கு கிடைத்துள்ளன = லேகுரதேவா.
- மத்திய இந்தியாவில் புதிய கற்காலப் பண்பாடு நிலவிய இடங்கள் எத்தன அடிப்படையில் அடையாளம் காணப்படுகின்றன = கயிற்றின் தடம் பதிக்கப்பட்ட மட்பாண்டங்களால்.
- 11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை
கிழக்கு இந்தியாவில் புதிய கற்காலம்
- கிழக்கு இந்தியாவில் புதிய கற்காலம் நிலவிய இடம் = பிர்பன்புர்.
- கிழக்கு இந்தியாவில் புதிய கற்காலம் நிலவிய மற்ற இடங்கள் = குச்சாய், கோல்பய்சாசன், சங்கர்ஜங்.
தென்னிந்தியாவில் புதிய கற்காலம்
- தென்னிந்தியாவில் புதிய கற்காலம் நிலவிய இடம்கள் = கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, துங்கபத்திரை, காவிரி சமவெளிகளிலும், கர்நாடகாவிலுள்ள சங்கனகல்லு, தெக்கலகோடா, பிரம்மகிரி, மஸ்கி, பிக்லிகல், வட்கல், ஹெமிங்கே, கல்லூர் ஆகிய இடங்களிலும், ஆந்திரப்பிரதேசத்தில் நாகார்ஜூனகொண்டா, ராமாபுரம், வீராபுரம், தமிழ்நாட்டில் பையம்பள்ளி.
- தமிழ்நாட்டில் புதிய கற்காலம் நிலவிய முக்கிய இடம் = பையம்பள்ளி.
வடகிழக்கு இந்தியாவில் புதிய கற்காலம்
- அஸ்ஸாமில் புதிய கற்காலப் பண்பாடு நிலவிய இடங்கள் = தாஜலி ஹேடிங், சருதரு.
- வடகிழக்கு இந்தியாவில் புதிய கற்கால பண்பாட்டு காலத்தில் “இடம்பெயர் வேளாண்மை” செய்ததற்கான ஆதாரம் எங்கு கிடைத்துள்ளது = அஸ்ஸாம்.
சிந்து நாகரீகம்
- சிந்து நாகரிகத்தில் முதல் கண்டுபிடிக்கப்பட்ட இடம் = ஹரப்பா.
- ஹரப்பா நகர நாகரீகம் எத்தனை படிநிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது = மூன்று. அவை,
- தொடக்கக் கால ஹரப்பா = பொ.ஆ.மு. 3000-2600.
- முதிர்ச்சி அடைந்த ஹரப்பா = பொ.ஆ.மு. 2600-1900.
- பிற்கால ஹரப்பா = பொ.ஆ.மு. 1900-1700.
- ஹரப்பாவுக்கு முதன் முதலில் வருகை தந்தவர் = சார்லஸ் மேசன் (1826).
- ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய “அம்ரி” நகருக்கு முதன் முதலில் வருகை தந்தவர் = அலெக்சாண்டர் பர்னஸ் (1831).
- 11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை
இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் முதல் அளவையார்
- இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் முதல் அளவையார் யார் (the first surveyor of the Archaeological Survey of India (ASI)) = அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.
- ஹரப்பா நகர நாகரிகத்தின் ஒரு முத்திரை யாருக்கு கிடைத்தது = அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.
- அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் எந்த ஆண்டுகளில் ஹரப்பா நகரத்தை பார்வையிட்டார் = 1853, 1856, 1875.
- ஹரப்பா நகர நாகரிகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அங்கு ஆய்வுகளை முதன் முதலில் மேற்கொண்டவர் = சர் ஜான் மார்ஷல்.
- ஹரப்பா நகரத்தின் முதன் முதலில் ஆய்வுகளை மேற்கொண்டவர் = சர் ஜான் மார்ஷல்.
- எந்த ஆங்கிலேய அதிகாரி இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குனராக இருந்த பொழுது ஹரப்பாவில் ஆய்வுகளை மேற்கொண்டார் = சர் ஜான் மார்ஷல்.
சிந்து நாகரிகத்தின் அமைவிடமும் குடியிருப்புகளும்
- சிந்து நாகரிகத்தின் பரப்பளவு = சுமார் 1.5 மில்லியன் சதுர கிலோமீட்டர்.
- மேற்கு எல்லை = பாகிஸ்தான் – ஈரான் எல்லையில் அமைந்துள்ள சட்காஜென்டர் குடியிருப்புகள்.
- வடக்கு எல்லை = ஷார்ட்டுகை (ஆப்கானிஸ்தான்)
- கிழக்கு எல்லை = ஆலம்கிர்பூர் (உத்திரப்பிரதேசம்)
- தெற்கு எல்லை = தைமாபாத் (மகாராஸ்டிரா)
திட்டமிடப்பட்ட நகர நாகரீகம்
- ஹரப்பா நாகரிகத்தின் முக்கிய நகரங்கள் = ஹரப்பா (பஞ்சாப், பாகிஸ்தான்), மொகஞ்சதாரோ (சிந்து, பாகிஸ்தான்), டோலவிரா, லோத்தல், சுர்கோட்டடா (குஜராத், இந்தியா), காலிபங்கன் (ராஜஸ்தான், இந்தியா), பனவாலி, ராக்கிகார்ஹி (ஹரியானா, இந்தியா).
- உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம் எது = மொகஞ்சதாரோ.
- தானிய சேமிப்புக்கிடங்கு கண்டுபிடிக்கப்பட்ட இடம் = மொகஞ்சதாரோ.
- பெருங்குளம் காணப்பட்ட இடம் = மொகஞ்சதாரோ.
- பெருங்குளம் எதற்கு பயன்படுத்தப்பட்டது = சடங்குகளுடன் தொடர்புடைய நீராடல் நிகழ்வுகளுக்கு.
- 11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை
ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும்
- ஹரப்பா மக்கள் பின்பற்றிய பயிரிடல் முறை = இரட்டைப்பயிரிடல் முறை (double cropping system).
- ஹரப்பா மக்கள் உழவிற்கு கலப்பையை பயன்படுத்தினர்.
- ஹரப்பா நாகரிகத்தில் வேளாண்மை செய்ய நிலம் உழுததற்கான ஆதாரம் எங்கு கிடைத்துள்ளது = காலிபங்கன்.
- ஹரப்பா மக்கள் அறியாத விலங்கு = குதிரை.
- ஹரப்பா நாகரிகத்தில் மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன = செபு (Zebu).
- ஹரப்பா நாகரிகத்தில் அறியப்பட்ட விலங்குகள் = செம்மறியாடு, வெள்ளாடு, கோழி, எருமை, பன்றி, யானை, காட்டுப் பன்றி, மான், முதலை.
- ஹரப்பா நாகரிக முத்திரைகளில் அதிகம் சித்தரிக்கப்பட்ட விலங்கு = செபு எனப்படும் மாடுகள்.
ஹரப்பாவில் கைவினைத் தயாரிப்பு
- கார்னிலியன் (மணி), ஜாஸ்பர், கிரிஸ்டல் (படிகக்கல்), ஸ்டீட்டைட் (நுரைக்கல்) ஆகியவற்றிலும் செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களிலும் சங்கு, பீங்கான், சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலன்களைச் செய்தார்கள்.
- ஹரப்பா நகர கைவினை பொருட்கள் எங்கு ஏற்றுமதி செய்யப்பட்டது = மெசபடோமியா.
- ஹரப்பா நாகரிகத்தில் “சங்கினால்” ஆன பொருட்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்ட இடம் = நாகேஷ்வர், பாலகோட்.
- ஹரப்பா நாகரிகத்தில் “வைடூரியதால்” ஆன பொருட்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்ட இடம் = ஷார்டுகை.
- ஹரப்பா நாகரிகத்தில் “கார்னிலியன் (மணி)” எனப்படும் பொருட்களை கொண்டு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடம் = லோத்தல்.
- ஹரப்பா நாகரிகத்தில் “ஸ்டீட்டைட் (நுரைக்கல்)” எனப்படும் பொருட்களை கொண்டு பொருட்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்ட இடம் = தெற்கு ராஜஸ்தான்.
- ஹரப்பா நாகரிகத்தில் “செம்பினால்” ஆன பொருட்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்ட இடம் = ராஜஸ்தான், ஓமன்.
- ஹரப்பா மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களில் பூசப்பட்ட வண்ணங்கள் = அடர் சிவப்பும் கறுப்பும் கலந்த வண்ணம் பூசப்பட்டிருந்தது.
ஹரப்பாவில் உலோகங்களும் கருவிகளும்
- ஹரப்பா நாகரீகம் ஒரு = வெண்கல நாகரீகம் (Bronze Age civilisation) ஆகும்.
- ஹரப்பா மக்கள் நன்கு அறிந்த உலோகங்கள் = செம்பு, வெண்கலம்.
- ஹரப்பா மக்கள் அறிந்திராத உலோகம் = இரும்பு.
- எந்த படிகக்கல்லினால் அதிகம் செய்யபப்ட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் அதிகம் பயன்படுத்தினர் = ரோரிசெர்ட் (Rohrichert).
- “ரோரி செர்ட்” என்பது யாது = இது ஒரு படிவப்பாறை ஆகும். இது பாகிஸ்தானில் உள்ள ரோரி பகுதியில் காணப்படுகிறது.
ஹரப்பா நகர துணிகளும் அணிகலன்களும்
- ஹரப்பா மக்கள் பருத்தி, பட்டு பற்றி அறிந்திருந்தனர்.
- ஹரப்பாவில் “நடனமாடும் பெண் சிலை” எங்கு கண்டெடுக்கப்பட்டது = மொகஞ்சதாரோ.
- கார்னிலியன், செம்பு, தங்கம் ஆகியவற்றை கொண்டு அணிகலன்களை உருவாக்கினர்.
ஹரப்பா நாகரிக வணிகம்
- ஹரப்பா மக்கள் எந்த நாட்டுடன் வணிகத் தொடர்பை வைத்திருந்தனர் = மெசபடோமியா.
- ஹரப்பாவிற்கும் மெசபடோமியாவிற்கும் வணிகத் தொடர்பு இருந்ததை குறிப்பிடும் கல்வெட்டு = கியூனிபார்ம் கல்வெட்டு குறிப்புகள்.
- கியூனிபார்ம் கல்வெட்டுகளில் “மெலுகா” என்னும் சொல் குறிப்பிடுவது = சிந்து பகுதியைக் குறிக்கிறது.
- ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி, எந்த நாட்டில் கண்டெடுக்கப்பட்டது = ஓமன் (சுமேரிய நாகரீகம்).
- 11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை
எடைக்கற்களும் அளவீடுகளும்
- ஹரப்பாவில் எந்த வடிவ எடைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன = கனசதுர வடிவ எடைக்கற்கள்.
- ஹரப்பா நாகரிக எடைக்கற்கள் பின்பற்றிய முறை = இரும முறை (binary system).
- எடையின் விகிதம் எந்த மடங்களில் அமைக்கப்பட்டிருந்தன = இரு மடங்கு (1:2:4:8:16:32).
- 16 –இன் விகிதம் கொண்ட சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் = 13.63 கிராம்.
- ஹரப்பா மக்கள் அளவீட்டின் படி ஒரு இஞ்ச் = 1.75 செ.மீ.
முத்திரையும் எழுத்துமுறையும்
- ஹரப்பா எழுத்துமுறை இதுவரை விளங்கிக் கொள்ள இயலவில்லை.
- ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் = 26 குறியீடுகளை கொண்டுள்ளது.
கலையும் பொழுதுபோக்கும்
- “மத குரு” சிலை எதனால் உருவாக்கப்பட்டிருந்தது = ஸ்டீட்டைட் கல் (நுரைக்கல்).
- “நடனமாடும் சிலை” எதனால் உருவாக்கப்பட்டிருந்தது = செம்பு.
- மதகுரு சிலை மற்றும் நடனமாடும் செம்பு சிலை இரண்டும் எங்கு கிடைத்தன = மொகஞ்சதாரோ.
- கல்லால் ஆன சிற்பங்கள் எண்டு கிடைத்துள்ளன = ஹரப்பா, மொஹஞ்சதாரோ, டோலாவிரா.
- ஹரப்பா மக்களின் பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் = பொம்மை வண்டிகள், கிலுகிலுப்பைகள், சக்கரங்கள், பம்பரங்கள், சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற காய்கள், கட்டங்கள் வரையப்பட்ட பலகைகள்.
ஹரப்பா மக்களின் நம்பிக்கைகள்
- ஹரப்பா மக்கள் இயற்கையை வழிபட்டனர்.
- எந்த மரம் ஹரப்பா மக்களின் வழிபட்டு மரமாக இருந்தது = அரசமரம்.
- தாய் தெய்வ வழிபாடு ஹரப்பாவில் இருந்தது.
- வேள்வி பீடங்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன = காலிபங்கன்.
- 11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை
சிந்து நாகரிகமும் தமிழ் நாகரிகமும்
- இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முதல் நகரமயமாக்கல் (the first urbanisation of Indian history) = சிந்து நாகரிகம் (ஹரப்பா நாகரிகம்).
- இந்தியாவில் நடைபெற்ற இரண்டாவது நகரமயமாக்கல் பகுதிகள் (second urbanisation of India) = அரிக்கமேடு, கீழடி, உறையூர்.
புத்தக வினாக்கள்
- எழுத்துகள் அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் ____________ எனப்படுகிறது? = வரலாற்றுக்கு முந்தைய காலம்.
- வரலாற்றின் பழமையான காலம் ___________ ஆகும்? = பழங் கற்காலம்.
- பழங் கற்காலக் கருவிகள் முதன்முதலில் ___________ இல் அடையாளம் காணப்பட்டன? =
- மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர்-1, பாகோர்-3 ஆகியவை ____________ நாகரிகம் நிலவிய இடங்கள்? = மேல்பழங்கற்காலம்.
- மெஹர்கார் _________ பண்பாட்டுடன் தொடர்புடையது? = புதிய கற்காலப்.
- ____________ கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன? = க்யூனிபார்ம்.
- பர்சஹோம் __________ நிலவிய இடமாகும்? = காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு.
- தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது __________ ஆகும்? = பொ.ஆ.மு. 3000-2600.
- ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக __________ இருந்தது? = வேளாண்மை.
- சிந்து நாகரிகம் ஏறத்தாழ _______ இலிருந்து வீழ்ச்சி அடைந்தது? = பொ.ஆ.மு. 1900.
- நவம்பர் மாதத்தின் முக்கிய தினங்கள்
- Important Days in November 2024
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
- இந்தியாவில் முதன்மையானவர்கள்
- List of First in India
- 2024 அக்டோபர் மாத முக்கிய நாட்கள்
- IMPORTANT DAYS IN OCTOBER 2024
- செப்டம்பர் மாத முக்கிய நாட்கள்
- IMPORTANT DAYS IN SEPTEMBER 2024
- 11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை
- 11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை
- 11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை