11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
- காடுகளைத் திருத்துவதில் இரும்பு முக்கியப் பங்காற்றியது.
- கங்கைச் சமவெளியின் வளம் செறிந்த மண்ணும் இரும்புக்கொழுமுனைகளின் பயன்பாடும் வேளாண் உற்பத்தியை மேம்படுத்தின.
இரும்புத்தொழில்நுட்பத்தின் தாக்கம்
- “தெற்கு பிகாரில் கிடைக்கும் இரும்புக் கனிமத்தைத் தேடி அடைந்து, அதன் மீது ஏக போகத்தினை நிலைநாட்டும் நோக்குடன் இந்தோ-ஆரியர்கள் கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்தார்கள். மகத அரசு அரசியல் மேலாதிக்கம் பெறுவதற்கு இரும்புத்தாது வளமே காரணமாக இருந்தது” என்று கூறியவர் (The movement of the Indo-Aryans towards the east was aimed at accessing the iron ore of south Bihar and gaining a near monopoly over it. The iron ore was responsible for the political dominance attained by the state of Magadha) = டி.டி.கோசாம்பி.
- “கங்கை வடிநீர்ப் பகுதியில் நிலப்பரப்பு வெகுவாக விரிவடைய இரும்புக்கோடரிகளும் இரும்புக்கலப்பைகளும் வழிவகுத்தன” என்று கூறியவர் (Iron axes and iron ploughs led to the expansion of area under cultivation in the Ganges Valley) = ஆர்.எஸ்.சர்மா.
- “காடுகள் அழிக்கப்படவும் உபரி வேளாண் உற்பத்தி ஏற்படவும் இரும்புக்கோடரிகளும் இரும்புக்கலப்பைகளும் காரணம் என்பது கட்டுக்கதை. ஏனெனில், 16, 17 ஆம் நூற்றாண்டு வரைகூட கங்கைச்சமவெளி அடர்ந்த வனப்பகுதியாகவே இருந்தது” என்று கூறியவர் (That the use of iron axe and iron plough facilitated clearing of forests and generation of agricultural surplus is a myth because even as late as 16th and 17th centuries the Gangetic plain was heavily forested) = மக்கன் லால்.
- “கங்கைப்பகுதியின் காடுகள் நெருப்பின் மூலமாகவும் அழிக்கப்பட்டிருக்கலாம்” என்று கூறியவர் (The forests of Ganges region could have been cleared by means of fire) = ஏ.கோஷ், நிஹரஞ்சன் ரே.
இரண்டாவது நகரமயமாக்கம்
- இந்தியாவில் முதல் நகரமயமாக்கம் எப்பொழுது நிகழ்ந்தது = ஹரப்பா நாகரிகத்தில்.
- இந்தியாவில் இரண்டாவது நகரமயமாக்கம் எப்பொழுது நிகழ்ந்தது = கங்கைச் சமவெளியில் இரண்டாவது நகரமயமாக்கம் நிகழ்ந்தது.
ஜனபதங்களிலிருந்து மகாஜனபதங்கள்
- “ஜனபதம்” என்னும் சொல்லின் பொருள் = இனக்குழு தன் காலைப் பதித்த இடம்.
- வரலாற்றில் 16 மகாஜனபதங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவை,
-
-
- காந்தாரம்
- காம்போஜம்
- அஸ்மகம் (அசகம்)
- வத்சம்
- அவந்தி
- சூரசேனம்
- சேதி
- மல்லம்
- குரு
- பாஞ்சாலம்
- மத்ஸ்யம்
- வஜ்ஜி (விரஜ்ஜி)
- அங்கம்
- காசி
- கோசலம்
- மகதம்
-
- மகாஜனபதங்கள் அவற்றின் அரசு அதிகாரத்தின் தன்மையைப் பொறுத்து, கண சங்கங்கள் என்றும் குடித்தலைமை ஆட்சி என்றும் பிரிக்கப்பட்டன.
கண-சங்கங்கள்
- கங்கைச் சமவெளியின் முந்தைய நாடுகள் ஜனபதங்கள் என்றழைக்கப்பட்டன.
- கணசங்கங்களின் மிகவும் பிரபலமானது = விரிஜ்ஜிகளின் (வஜ்ஜி) கணசங்கமாகும்.
- வஜ்ஜிகளின் தலைநகரம் = வைசாலி.
- ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள இனக்குழுக்கள் = இக்ஷவாகு, விருஷ்ணி.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
முடியாட்சிகள் அல்லது அரசுகள்
- அரச உரிமை வாரிசு முறையில் வந்தது.
- “பலி” என்றால் என்ன = வேளாண் நிலத்தின் மீது வசூலிக்கப்பட்ட வரியாகும்.
- “பாகா” என்றால் என்ன = வேளாண் உற்பத்தியில் ஒரு பங்காகப் பெறப்பட்ட வரி ‘பாகா‘ என்று சொல்லப்பட்டது.
- “கிரகபதி” என்போர் யார் = செல்வம் மிக்க நிலஉரிமையாளர்கள்.
- “தாசர் அல்லது கர்மகாரர்” என்போர் யார் = செல்வம் மிக்க நிலஉரிமையாளர்களான “கிரகபதி” என்போர் வேலைக்கு வைத்துக்கொண்டோரை “தாசர் அல்லது கர்மகாரர்” என்பர்.
- “கசாகா அல்லது கிரிஷாகா” என்போர் யார் = சிறு நில உரிமையாளர்கள்.
அவைதீகச்சிந்தனையாளர்களின் தோற்றம்
- தீவிரமான அறிவுசார் எழுச்சியின் காலம் = பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டு.
- “மக்களின் அறிவுசார் ஆர்வத்தை அடக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, அவர்களின் மனம் அதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறது. இத் தவிர்க்கமுடியாத எதிர்வினைகள் எல்லாவிதமான முறைசார்ந்த அதிகாரங்களையும் பொறுத்துக்கொள்ள இயலாத தன்மையாக வெளிப்படுகிறது. அது சடங்குரீதியான மதத்தின் கட்டுப்பாட்டால் காலம்காலமாக ஒடுக்கப்பட்ட வாழ்விலிருந்து ஆவேசமாக விடுபடும் உணர்வாக உள்ளது” என்று கூறியவர் (When attempts are made to smother the intellectual curiosity of people, the mind of man rebels against it, and the inevitable reaction shows itself in an impatience of all formal authority and a wild outbreak of the emotional life long repressed by the discipline of the ceremonial religion) = “இந்தியத் தத்துவ மேதை” என்று போற்றப்படும் மேனாள் குடியரசுத்தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்.
- 11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
அவைதீக மதங்கள்
- அஜாதசத்ரு, புத்தரை நேரில் சந்தித்ததை பற்றி குறிப்பிட்டுள்ள நூல் எது = சமனபலசுத்தா.
- சமனபலசுத்தா ஒரு = பௌத்த நூல்.
- அஜாதசத்ரு புத்த மதத்தை தழுவுவதற்கு முன்னர் எந்தெந்த மதத்தலைவர்களை சந்தித்து விவாதம் செய்தார் = புராண கசபர், மக்காலி கோசலர், அஜிதகேச கம்பளி, பகுத கச்சாயனர், சஞ்சய பெலதிபுத்தர், நிகந்த நடபுத்தர் (மகாவீரர்).
- “நிகந்த நடபுத்தர்” என்று கூறப்படுபவர் = மகாவீரர்.
- “சிர-பப்பாஜிதோ” என்பதன் பொருள் = நீண்டகாலமாக வீடற்று சுற்றித் திரிந்தவர்கள்.
- “தீத்தகரோ” என்பதன் பொருள் = மதங்களை உருவாக்கியவர்கள்.
- “ஞானாசாரியோ” என்பதன் பொருள் = தங்களுடைய நெறிமுறைகளின் தலைவர்கள்.
- அஜாதசத்ரு பௌத்த மதத்தை தழுவுவதற்கு முன்னர் பல்வேறு மதத் தலைவர்களை சந்தித்தார் என்ற தகவலை தெரிவிக்கும் பௌத்த நூல் = சமனபலசுத்தா.
- அஜாதசத்ரு இறுதியில் எந்த மதத்தை பின்பற்றினார் = பௌத்த மதம்.
ஆசீவகர்கள்
- ஆசீவகம் என்ற பிரிவைத் தோற்றுவித்தவர் = ‘நந்த வாச்சா‘.
- நந்த வாச்சா என்பவருக்கு பிறகு ஆசீவக பிரிவின் தலைவராக இருந்தவர் = கிஸா சம்கிக்கா.
- ஆசீவக பிரிவின் மூன்றாவது தலைவர் = மக்காலி கோசலர்.
- ஆசீவக பிரிவன் மிகச்சிறந்த தலைவர் = மக்காலி கோசலர்.
- கோசலர் மகாவீரரை முதன் முதலில் எங்கு சந்தித்தார் = நாளந்தா.
- கோசலர், மகாவீரர் இடையேயான நட்பு எத்தனை ஆண்டுகள் நீடித்தது = ஆறு ஆண்டுகள்.
- மகாவீரரை பிரிந்து கோசலர் சென்ற இடம் = சிராவஸ்தி.
- கோசலரை ஆதரித்த பெண் = ஹலாஹலா என்ற வசதிமிக்க குயவர் பெண்.
- கோசலர் எந்தக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தார் = புத்துயிர்ப்பு கோட்பாடு (doctrine of reanimation).
- ஆசீவகப் பிரிவின் தலைமையகம் = சிராவஸ்தி.
- ஆசீவகர்களின் அடிப்படைக் கொள்கை = நியதி அல்லது விதி (niyati or fate).
- ஆசீவகத்தின்படி, வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சங்கள் மொத்தம் = ஆறு (லாபம், நஷ்டம், இன்பம், துன்பம், வாழ்வு, மரணம்).
- கோசலரின் மரணத்திற்குப் பிறகு, ஆசீவகர்களோடு இணைந்த இரண்டு பரப்புரையாளர்கள் = புராண கஸ்ஸபர், பகுத கச்சாயனர்.
- 11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
பிற ஆசீவகர்கள்
- செயல்களுக்கு நற்கூறுகள், தீயகூறுகள் எதுவும் கிடையாது என்று கருதியவர் = புராண கஸ்ஸபர்.
- உலகில் எல்லாமே முன்னரே முடிவுசெய்யப்பட்டவை என்பதால் மனிதர்கள் எதையும் தமது செயல்களால் மாற்ற முடியாது என்று கருதியவர் = புராண கஸ்ஸபர்.
- இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவானது என்று கருதியவர் = பகுத கச்சாயனர்.
- அஜித கேசகம்பளி = ஒரு பொருள் முதல்வாதி ஆவார் (materialist).
- ஒவ்வொரு மனிதனும் நெருப்பு, நீர், காற்று, உணர்வு ஆகிய நான்கு அடிப்படைப் பொருட்களால் உருவாக்கப்பட்டவன் என்று கருதியவர் = அஜித கேசகம்பளி.
லோகாயதமும் சார்வாகமும்
- “லோகாயதம்” என்ற சொல்லின் பொருள் யாது = முதல்வாதம் (materialist Thought).
- இந்தியப் பொருள் முதல்வாதம் என்ற சித்தனைப் போக்கை உருவாக்கியவர்கள் = இருவர் (சார்வாகர், அஜித கேசகம்பளி).
- “இந்தியப் பொருள் முதல்வாதம்” எவ்வாறு அழைக்கப்படுகிறது = சார்வாகம்.
- சார்வாகர் உருவாக்கிய சிந்தனை = ஐயுறுவாதம் (scepticism).
- “அனுபவங்களின் மூலமே அறிவைத் தேட முடியுமென நம்பியவர்” = சார்வாகர்.
அவைதீக மதங்களிடையே மோதல்
- மக்காலி கோசலர் பற்றி தரக்குறைவாக கூறும் சமண நூல் = பகவதிசூத்திரம்.
- மக்காலி கோசலர் பற்றி தனது நூலில் ஏளனம் செய்த புத்த துறவி = புத்தகோஷர்.
- 11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
தமிழ்நாட்டில் ஆசீவகர்கள்
- ஆசீவகர்கள் பற்றி குறிப்பிட்டுள்ள சங்க இலக்கிய நூல்கள் = மணிமேகலை, நீலகேசி, சிவஞானசித்தியார்.
- நீலகேசி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசீவகர்களின் தலைவன் = புராணன்.
- தமிழகத்தில் ஆசீவகர்கள் மீது வரி விதித்தவர்கள் = சோழர்கள்.
சமணம்
- பௌத்த இலக்கியங்களில் மகாவீரர் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார் = நிகந்த நடபுத்தர்.
- சமண மதம் முதலில் எவ்வாறு அழைக்கப்பட்டது = நிர்கிரந்தம்.
- நிர்கிரந்தம் என்பதன் பொருள் = தளைகளிலிருந்து விடுபட்டது.
- “ஜீனர்” என்று அழைக்கப்பட்டவர் = மகாவீரர்.
- ஜீனர் என்பதன் பொருள் = உலகை வென்றவர்.
- சமண மதத்தை முதன் முதலில் தோற்றுவித்தவர் = ரிஷபர்.
- சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் = ரிஷபர்.
- சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரர் = மகாவீரர்.
- யஜூர் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று தீர்த்தங்கரர்கள் யாவர் = ரிஷபர், அஜிதானந்தர், அரிஷ்டநேமி.
மகாவீரரின் வாழ்க்கை
- வர்த்தமானர் பிறந்த ஆண்டு = பொ.ஆ.மு. 540.
- வர்த்தமானர் பிறந்த இடம் = வைசாலிக்கு அருகில் உள்ள குந்தகிராமம்.
- மகாவீரரின் பெற்றோர் = சித்தார்த்தர், திரிஷலை.
- மகாவீரரின் தந்தை சித்தார்த்தர் ஞானத்ரிகா என்ற இனக்குழுவின் தலைவர் ஆவார்.
- மகாவீரர் தனது எந்த வயதில் வீட்டை விட்டு வெளியேறினார் = முப்பதாவது வயதில்.
- மகாவீரர் ஞானத்தை தேடி எத்தனை ஆண்டுகள் அலைந்தார் = 12 ஆண்டுகள்.
- மக்காலி கோசலரிடம் ஆறு ஆண்டுகள் நட்புடன் நெருங்கிப் பழகினார்.
- மகாவீரர் தனது எந்த வயதில் ஞானத்தை (நிர்வாணம்) அடைந்தார் = 42வது வயதில்.
- மகாவீரர் எத்தனை ஆண்டுகள் போதனை செய்தார் = முப்பது ஆண்டுகள்.
- மகாவீரர் தனது வயதில் மரணம் அடைந்தார் = 72வது வயதில்.
- மகாவீரர் இறந்த ஆண்டு = பொ.ஆ.மு. 468.
- மகாவீரர் இறந்த இடம் = ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரியில்.
- 11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
சமணத்தில் பிளவு
- மகாவீரரின் மறைவிற்கு 500 ஆண்டுகள் கழித்து மகதத்தில் சமண மதம் பிளவை சந்தித்தது.
- பத்ரபாகு தலைமையில் ஒரு பிரிவும், ஸ்தூலபத்திரர் தலைமையில் ஒரு பிரிவும் உருவாகியது.
- பத்ரபாகுவை பின்பற்றியவர்கள் = திகம்பரர்கள் (வெளியை ஆடையாக அணிந்தவர் அல்லது நிர்வாணமானவர்).
- ஸ்தூலபத்திரரரை பின்பற்றியவர்கள் = ஸ்வேதாம்பரர்கள் (வெள்ளை ஆடை உடுத்தியவர்கள்) என்று அழைக்கப்பட்டார்கள்.
சமண மாநாடுகள்
- பாடலிபுத்திரத்தில் சமண மாநாட்டை நடத்தியவர் = ஸ்தூலபத்திரர்.
- எங்கு நடைப்பெற்ற மாநாட்டில் சமண மதத்தில் 12 அங்கங்கள் தொகுக்கப்பட்டது = பாடலிபுத்திரம்.
- எங்கு நடைபெற்ற மாநாட்டில் சமண சமயத்தின் 12 உப அங்கங்கள் தொகுக்கப்பட்டன = குஜராத்தில் உள்ள வல்லபியில்.
- தொடக்கக் கால சமண நூல்கள் = அச்சரங்க சூத்திரம், சூத்ரகிருதங்கம், கல்பசூத்திரம்.
- சமண நூல்கள் எந்த மொழியில் பெரும்பாலும் எழுதப்பட்டன = அர்த்த-மகதி.
சமணத் தத்துவங்கள்
- சமணத்தின் மைய தத்துவம் = அகிம்சை.
- தொடக்க கட்டங்களில், சமணத்தில் உருவ வழிபாடு கிடையாது.
- சமணத்தின்படி, உலகத்திற்குத் தொடக்கமும், முடிவும் கிடையாது. அது என்றும் நிலைத்திருக்கும்.
- உலகம் ஆன்மாவாலும் (ஜீவன்) பொருளாலும் (அஜீவன்) உருவானது. இவ்விரண்டும் காலவரம்பற்றவை.
- சமண மதத்தைப் பொறுத்தவரை துறவிகளால் மட்டுமே பிறப்பு, இறப்பு என்ற சூழலிலிருந்து விடுதலை பெற முடியும்.
- 11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
மும்மணிகள் (திரிரத்தினங்கள்)
- நன்னம்பிக்கை (சம்யோக்-தர்ஷனா)
- நல்லறிவு (சம்யோக்-ஞானா)
- நன்னடத்தை (சம்யோக்-மஹாவ்ரதா)
ஐம்பெரும் சூளுரைகள் (பஞ்ச-மஹாவ்ரதா)
- கொல்லாமை. (அஹிம்சா)
- கள்ளாமை (அஸ்தேயா)
- பொய்யாமை (சத்யா)
- புலனடக்கம் (பிரும்மச்சரியா)
- பொருள் பற்றின்மை (அபரிக்ரஹா)
தமிழ்நாட்டில் சமணம்
- சமணம் அஹிம்சைக்கு அதிக முக்கியத்துவம் தந்த மதம்.
- கோப்பெருஞ்சோழன் உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தான் என்று புறநானூற்றில் காணப்படும் செய்தி சல்லேகனா என்ற சமண நடைமுறையை ஒத்திருக்கிறது.
- மதுரையில் திராவிட சமணச் சங்கத்தை நிறுவியவர் = வஜ்ரநந்தி.
- மதுரையில் திராவிட சமணச் சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு = பொ.ஆ. 470இல்.
- வஜ்ரநந்தியின் குருநாதர் = பூஜ்யபாதா.
- காஞ்சிபுரம் அருகே உள்ள சமணக் கோவில் = திருப்பருத்திக்குன்றம் கோவில்.
- 11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
பௌத்தம்
- அவைதீக மதங்களிலேயே மிகவும் பிரபலமானது = பௌத்தம்.
- பௌத்த மதத்தை அரசாங்க மதமாக அறிவித்தவர் = அசோகர்.
- 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் யாரால் பௌத்தம் இந்தியாவில் மீண்டும் புத்துயிர் பெற்றது = டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.
புத்தரின் வாழ்க்கை
- கௌதம புத்தரின் பெற்றோர் = சாக்கிய இனக்குழுவின் அரசர் சுத்தோதனர், பட்டத்தரசி மாயாதேவி (மகாமாயா).
- புத்தரின் இயற்பெயர் = சித்தார்த்தர்.
- புத்தர் பிறந்த இடம் = கபிலவஸ்துவிற்கு அருகில் உள்ள லும்பினியில் உள்ள ஒரு பூங்காவில்.
- புத்தரின் மனைவி = யசோதரா.
- புத்தரின் மகன் = ராகுலன்.
- புத்தரின் தேரோட்டி = சன்னா.
- புத்தரின் பிரியமான குதிரை = காந்தகா.
மஹாபிரஸ்கிரமனா என்றால் என்ன
- அரண்மனையை விட்டு வெளியேறிய சித்தார்த்தர் தனது முடியை வெட்டி, களையப்பட்ட தன் உடை, நகைகளோடு தந்தைக்குக் கொடுத்தனுப்பினார். இது மஹாபிரஸ்கிரமனா என்று அழைக்கப்படுகிறது.
- ஞானத்தைத் தேடி அலைந்த சித்தார்த்தர் யாரிடம் சீடராக இருந்தார் = அலார கலாமா.
- ஞானத்தைத் தேடி அலைந்த சித்தார்த்தர் எந்த துறவியிடம் வழிகாட்டுதல் பெற்றார் = உத்தக ராமபுத்தர்.
- புத்தருக்கு பாலில் சமைத்த உணவை வழங்கிய பெண்மணி = சுஜாதா.
- புத்தர் எங்கு தியானம் செய்தார் = புத்தயகயா.
- புத்தகயாவில் புத்தர் எத்தனை நாள் தியானம் செய்து ஞானம் பெற்றார் – 49 நாட்கள்.
- புத்தர் தனது எந்த வயதில் ஞானம் பெற்றார் = 35வது வயதில்.
- 11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
தர்மச்சக்கரபரிவர்த்தனா என்றால் என்ன
- புத்தரின் முதல் உபதேசம் தர்மச்சக்கரபரிவர்த்தனா என்று அழைக்கப்படுகிறது.
- புத்தர் தனது முதல் போதனையை எங்கு நிகழ்த்தினார் = வாரணாசிக்கு அருகே உள்ள சாரநாத்தில் மான்கள் நிறைந்த ஒரு காட்டில்.
பரிநிர்வாணம் என்றால் என்ன
- புத்தரின் மறைவு பரிநிர்வாணம் எனப்படுகிறது.
- புத்தர் எந்த வயதில் மரணம் அடைந்தார் = 80வது வயதில்.
- புத்தர் எங்கு மரணம் அடைந்தார் = குஷி நகரம்.
- புத்தரின் முக்கியமான சீடர்கள் = சரிபுத்தர், மஹாமொக்கலனர், மஹாகச்சாயனர், ஆனந்தர்.
முதல் பௌத்த மாநாடு
- முதல் பௌத்த சங்கத்தை நடத்தியவர் = அஜாதசத்ரு.
- முதல் பௌத்த சங்கம் நடைப்பெற்ற இடம் = இராஜகிருகம்.
- முதல் பௌத்த சங்க மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் = உபாலி.
- முதல் பௌத்த சங்க மாநாட்டில் “வினைய பிடகத்தை” வாசித்தவர் = உபாலி.
- முதல் பௌத்த சங்க மாநாட்டில் “சுத்த பிடகத்தை” வாசித்தவர் = ஆனந்தர்.
- 11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
இரண்டாவது பௌத்த மாநாடு
- இரண்டாவது பௌத்த சமய மாநாடு நடைபெற்ற இடம் = வைசாலி.
- பௌத்த மதம் இரண்டாவது மாநாட்டில் இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. அவை,
- ஸ்தவிரவதின்கள் அல்லது பெரியோரின் உபதேசங்களை நம்புவோர்
- மகாசங்கிகா அல்லது பெரும் குழுவின் உறுப்பினர்கள்
மூன்றாவது பௌத்த மாநாடு
- மூன்றாவது பௌத்த சங்க மாநாடு நடைபெற்ற இடம் = பாடலிபுத்திரம்.
- மூன்றாவது பௌத்த சங்க மாநாட்டை நடத்திய அரசர் = அசோகர்.
- மூன்றாவது மாநாட்டில் அபிதம்ம பிடகத்தில் கதவத்து என்ற கடைசிப் பகுதி சேர்க்கப்பட்டது.
நான்காவது பௌத்த மாநாடு
- நான்காவது பௌத்த சங்க மாநாடு நடைபெற்ற இடம் = காஷ்மீர்.
- நான்காவது பௌத்த சங்க மாநாட்டை நடாத்திய அரசர் = கனிஷ்கர்.
- சர்வஸ்திவாதிகள் என்போர் பௌத்த பிரிவினரின் கொள்கைகள் மஹாவிபாஷாவில் தொகுக்கப்பட்டுள்ளன.
பௌத்தத்தின் பிரிவுகள்
- பௌத்த மதத்தின் முக்கியமான பிரிவுகள் = மகாசங்கிகர்கள், ஸ்தவிரவதின்கள், சர்வஸ்திவாதிகள்.
- மஹாயானம் (பெரிய பாதை), ஹீனயானம் (சிறிய பாதை) என்னும் பிரிவுகளும் உருவாகின.
- இந்தியாவில் மஹாயானம் செல்வாக்கு பெற்று திகழ்ந்தது.
- யாருடைய ஆட்சிக் காலத்தின் பொழுது பௌத்த மதத்தில் “வஜ்ராயனம்” (இடி மின்னல் பாதை) பிரிவு உருவாகியது = குப்தர்கள் ஆட்சிக்காலத்தில்.
- மஹாயானம் பரவிய இடம் = இந்தியா, சீனா, ஜப்பான்.
- ஹீனயானம் பரவிய இடம் = இலங்கை, பர்மா, தாய்லாந்து.
- வஜ்ராயனம் பரவிய இடம் = வாங்கலாம், பீகார் மற்றும் திபத்.
- மஹாயான பௌத்த மதத்தின் முக்கிய கல்வி மையமாக இருந்த இடம் = நாளந்தா பல்கலைக்கழகம் (வங்காளத்தின் பால அரசர்களால் ஆதரிக்கப்பட்டது).
- வஜ்ராயன பௌத்த மதத்தின் முக்கிய கல்வி மையமாக இருந்த இடம் = விக்ரமசீலா பல்கலைக்கழகம் (பீகார்).
- இந்தியாவில் பௌத்த மதத்தின் வீழ்சிக்கு காரணமாக இருந்தவை = பக்தி இலக்கியத்தின் எழுச்சி.
- சில பாரம்பரியங்களில் புத்தர் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
- 11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
பௌத்த இலக்கியங்கள்
- பௌத்த இலக்கியங்கள் எந்த மொழியில் தொகுக்கப்பட்டன = பாலி மொழியில்.
- பௌத்த சட்டங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டன = பாலி.
- பௌத்த சட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன = திரிபிடகங்கள் (மூன்று கூடைகள்).
- திரிபிடகங்கள் என்பவை = வினய பிடகம், சுத்த பிடகம், அபிதம்ம பிடகம்.
- வினய பிடகம் = துறவறம் குறித்த விதிகளையும் ஒழுக்க விதிகளையும் கூறுகிறது.
- சுத்த பிடகம் = புத்தரின் போதனைகளைக் கூறுகிறது.
- அபிதம்ம பிடகம் = பௌத்த தத்துவம் பற்றி கூறுகிறது.
- சுத்த பிடகம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது = ஐந்து. இவற்றில் தேராகதா, தேரிகதா, ஜாதகக் கதைகள் ஆகியவை அடங்கும்.
- “மிலிந்தபன்ஹா” நூல் என்பது = கிரேக்க-பாக்டீரிய அரசன் மினாண்டருக்கும், பௌத்தத் துறவி நாகசேனருக்கும் நடக்கும் விவாதம் ஆகும்.
- இலங்கையின் பௌத்த நூல்கள் = தீபவம்சம் (தீவு வரலாற்றுக் குறிப்புகள்), மகாவம்சம் (பெரும் வரலாற்றுக்குறிப்பு), குலவம்சம் (சிறிய வரலாற்றுக்குறிப்பு).
- 11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
புத்தரின் நான்கு பெரும் உண்மைகள்
- துன்பம் பற்றிய பெரும் உண்மை.
- துன்பத்தின் காரணம் பற்றிய பெரும் உண்மை.
- துன்பத்தின் முடிவு பற்றிய பெரும் உண்மை (நிர்வாணம்).
- கர்மா அல்லது பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட நிர்வாண நிலையை அடைய வேண்டும்.
புத்தரின் மத்திம வழி அல்லது எண்வழிப்பாதை (அட்டாங்க மார்க்கம்)
- நன்னம்பிக்கை
- நல்லார்வம்
- நல்வாய்மை
- நற்செயல்
- நல்வாழ்க்கை முறை
- நன்முயற்சி
- நற்சிந்தைன
- நல்ல தியானம்.
தமிழ்நாட்டில் பௌத்தம்
- அசோகரின் எந்த கல்வெட்டுகள் இந்தியாவின் தென் பகுதியில் பௌத்த மதம் பரவியதை குறிப்பிடுகிறது = தக்கான கல்வெட்டுகள்.
- வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமா, எந்த சங்க இலக்கிய நூலை அடிப்படையாகக் கொண்டு அக்காலகட்டத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் புலால் உணவுகளைத் தவிர்த்த, உயிர்ப்பலியை எதிர்த்த வணிகர்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறார் = பட்டினப்பாலை.
- மணிமேகலை, குண்டலகேசி = பௌத்த நூல்கள்.
- தமிழ்நாட்டில் பௌத்தம் செழித்தோங்கிய இடமாக இருந்தது = காஞ்சிபுரம்.
- நாளந்தா பல்கலைக்கழகத்திற்குத் தலைமை தாங்கிய காஞ்சிபுரத்து பௌத்த அறிஞர்கள் = தின்னகர், தர்மபாலர்.
- அசோகரால் காஞ்சிபுரத்தில் பல ஸ்தூபிகள் கட்டப்பட்டன என குறிப்பிட்டுள்ள வெளிநாட்டு பயணி = சீனப்பயணி யுவான் சுவாங்.
- சீன அரசரின் வேண்டுகோளுக்கு இணங்க நாகப்பட்டினத்தில் பௌத்த கோவிலை கட்டிய பல்லவ மன்னன் = இரண்டாம் நரசிம்ம வர்மன்.
- பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்ம வர்மன், நாகப்பட்டினத்தில் கட்டிய பௌத்தக் கோவிலுக்கு வருகை தந்த சீனத் துறவி யார் = வு-கிங்.
- சோழ மன்னன் முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்தில் பௌத்தக் கோவிலை (சூளாமணி வர்ம விஹாரம்) கட்டிய அரசன் = ஸ்ரீவிஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன்.
- எந்த ஆண்டு ஸ்ரீவிஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன், நாகப்பட்டினத்தில் பௌத்தக் கோவிலை (சூளாமணி வர்ம விஹாரம்) கட்டினார் = கி.பி. 1006.
- சூளாமணி வர்ம விஹாரம் என்னும் பௌத்தக் கோவில் கட்டப்பட்ட இடம் = நாகப்பட்டினம்.
இந்தியாவில் பௌத்தத்தின் வீழ்ச்சி
- ஹீனயானா, மகாயானா, வஜ்ராயனா, தந்திராயனா, சகஜயானா ஆகிய பிரிவுகள் பௌத்தத்தின் உண்மைத்தன்மையை இழக்கச் செய்தன.
- மக்களின் பேச்சு மொழியான பாலி, பிராகிருதம் ஆகியவற்றில் இருந்து கனிஷ்கர் ஆட்சிக் காலத்தின் பொழுது சம்ஸ்கிருத மொழிக்கு மாறியது பௌத்த மதம்.
- யாருடைய படையெடுப்பு பௌத்தத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது = ஹூணர்கள்.
- ஹூண ஆட்சியாளர்களான தோரமானர், மிகிரகுலர் ஆகியோர் பௌத்தர்களின் மீது ஆழமான வெறுப்பைக் கொண்டிருந்தனர்.
- 11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
புத்தக வினாக்கள்
- புத்தர் தனது முதல் போதனையை ___________ இல் நிகழ்த்தினார்? = சாரநாத்.
- அஜாத சத்ருவுக்கும் புத்தருக்குமிடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பௌத்த நூல் ___________ ஆகும்? = சமனபலசுத்தா.
- பகவதிசூத்திரம் ஒரு __________ நூலாகும்? = சமணம்.
- _______________ வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது? = இரும்பு.
- வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படைத்ததாக வளர்ந்த அரசு _______ ஆகும்? = மகதம்.
- 11TH பண்டைய இந்தியா
- 11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை
- நவம்பர் மாதத்தின் முக்கிய தினங்கள்
- Important Days in November 2024