11TH மௌரியருக்கு பிந்தைய அரசியலமைப்பும் சமூகமும்
11TH மௌரியருக்கு பிந்தைய அரசியலமைப்பும் சமூகமும்
- பேரரசர் அசோகரின் மரணத்தை தொடர்ந்து மௌரியப் பேரரசு வீழ்ச்சி காணத் துவங்கியது.
- மௌரியப் பேரரசு வீழ்ச்சிக்கு பிறகு இந்தியாவின் சில பகுதிகள் மேற்காசியா, மத்திய ஆசியாவைச் சேர்ந்த இந்தோ-கிரேக்கர், சாகர், குஷாணர் ஆகியோரின் படையெடுப்புகளுக்கு உள்ளாயின.
இந்தோ கிரேக்க உறவுகளின் தொடக்கம்
- கிரேக்கர்களுடனான இந்தியத் தொடர்பு எப்பொழுது இருந்து துவங்கியது = அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்புடன்.
- அலெக்சாண்டர் தான் வென்ற சிந்து, பஞ்சாப் பகுதிகளுக்கு யாரை தளபதியாக நியமித்தார் = செலியுகஸ் நிகேடர்.
- “பிரிஜியா” என்பது = துருக்கி.
- செலியுகஸ் நிகேடரை எந்த ஆண்டு சந்திரகுப்த மௌரியர் தோற்கடித்தார் = பொ.ஆ.மு. 305.
இந்தியாவிற்கு வந்த முதல் அயல்நாட்டு தூதுவர்
- செலியுகஸ் நிகேடர் யாரை மௌரிய அரசின் அவைக்கு தூதராக அனுப்பினார் = மெகஸ்தனீஸ்.
- இந்தியாவிற்கு வந்த முதல் அயல்நாட்டு தூதுவர் = மெகஸ்தனீஸ்.
- இந்தியாவிற்கு வந்த முதல் கிரேக்க தூதவர் = மெகஸ்தனீஸ்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கிரேக்கர்கள் மௌரியர்களுடன் உறவு
- எகிப்தின் இரண்டாவது தாலமி தனது தூதர்களை யாரின் அவைக்கு அனுப்பினார் = பிந்துசாரர்.
- மௌரிய அரசர் பிந்துசாரர் எந்த கிரேக்க அரசருடன் கடிதப்போக்குவரத்து மூலம் இருநாட்டு உறவை வளர்ந்தார் = சிரியாவின் ஆன்டியோகஸுடனான.
- அசோகர் தனது பாறைக் கல்வெட்டில் ஐந்து யவன (கிரேக்க) அரசர்களை பற்றி குறிப்பிட்டுள்ளார் = பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுக் கட்டளை.
- கிரேக்கர்களை குறிப்பிட பொதுவாக பயன்படுத்தப்பட்ட சொல் = யவன (யோன).
- யவன என்னும் சொல் பாரசீக மொழியின் “யயுனா” என்னும் சூலில் இருந்து பெறப்பட்டது.
டெமிட்ரியஸ்
- முதல் இந்தோ-கிரேக்க அரசர் என்று அறியப்படுபவர் = இரண்டாம் டெமிட்ரியஸ்.
- சதுரவடிவ இருமொழி நாணயங்களை வெளியிட்ட இந்தோ-கிரேக்க அரசர் = இரண்டாம் டெமிட்ரியஸ் (நாணயத்தின் ஒரு பக்கம் கிரேக்க மொழியும், மற்றொருபுறம் கரோஷ்டி மொழியும்).
மினாண்டர்
- நன்கு அறியப்பட்ட இந்தோ-கிரேக்க அரசர் = மினாண்டர்.
- மினாண்டரை கலிங்க அரசன் காரவேலனால் தடுத்து நிறுத்த முடியவில்லை என குறிப்பிட்டுள்ள கல்வெட்டு எது = ஹதிகும்பா கல்வெட்டு.
- தனது நாணயங்களில் தன்னை ஒரு அரசராக, இரட்சராக, மீட்பராக குறிப்பிட்டுள்ள இந்தோ-கிரேக்க அரசன் = மினாண்டர்.
- மினாண்டர் எந்த பௌத்த துறவியுடன் விவாதத்தில் ஈடுபட்டார் = நாகசேனர்.
- மினாண்டருகும், நாகசேனருகும் இடையே நடைபெற்ற விவாதம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது = மிலிந்த-பன்ஹா (மிலிந்தவின் வினாக்கள்).
- மினாண்டர் பௌத்த மதத்தை தழுவ காரணமாக இருந்த பௌத்தத் துறவி = நாகசேனர்.
ஹீலியோடோரஸ்
- ஆண்டியால்கிடாஸ் என்னும் இந்தோ-கிரேக்க அரசனின் தூதவர் = ஹீலியோடோரஸ்.
- யாரின் அவைக்கு ஹீலியோடோரஸ் அனுப்பி வைக்கப்பட்டார் = பாகபத்ரா அரசரின் அவைக்கு.
- ஹீலியோடோரஸ் நிறுவிய தூண் = பாகபத்ரா அரசில் “கருட-துவஜ” என்று அழைக்கப்பட்ட கருட வடிவ தூணை நிறுவினார்.
- ஹீலியோடோரஸ் வைணவ சமயத்தை தழுவினார்.
- ஹீலியோடோரஸ் நிறுவிய “கருட-துவஜ” தூண் தற்போது எங்குள்ளது = மத்தியப்பிரதேச மாநிலம் விதிசாவில்.
சாகர்கள்
- இந்தியாவின் முதல் சாக ஆட்சியாளர் = மௌஸ் (மொ / மொகா).
- மொகாவிற்கு ஆட்சிக்கு வந்தவர் = அஸி.
- இந்தியப் பகுதியில் இந்தோ-கிரேக்க ஆட்சியாளர்களை ஒழித்தவர் = அஸி.
- சாக அரசர்கள் இந்திய இந்துச் சமூகத்துடன் இரண்டற கலந்துவிட்டனர்.
- சாக அரசர்களில் புகழ்பெற்றவர் = ருத்ரதாமன்.
- ருத்ரதாமனின் வெற்றிகளை குறிப்பிடும் கல்வெட்டு = குஜராத்தில் உள்ள ஜூனாகத் பாறை கல்வெட்டு.
குஷானர்கள்
- சாகர்களை இந்தியப் பகுதியில் இருந்து விரட்டிய பார்த்திய அரசன் = பார்த்திய கோண்டோபெர்நெஸ்.
- ஆப்கானிஸ்தான் பகுதிகளை வென்ற முதல் குஷான அரசன் = குஜிலா காட்பிசெஸ்.
- குஜிலா காட்பிசெஸ் அடுத்து ஆட்சிக்கு வந்தவர் = விமா காட்பிசெஸ்.
- முதல் இரண்டு குஷாண காட்பிசஸ் அரசர்களை பற்றிய குறிப்புகள் காணப்படும் கல்வெட்டு =
- குஷான அரசர்களில் மிகவும் புகழ்பெற்றவர் = கனிஷ்கர்.
கனிஷ்கர்
- கனிஷ்கர் தனது ஆட்சியை துவக்கிய ஆண்டு = பொ.ஆ 78.
- சக சகாப்தத்தின் தொடக்கம் = பொ.ஆ 78.
- காஷ்மீரில் நான்காம் புத்த சமய மாநாட்டை கூட்டியவர் = கனிஷ்கர்.
- கனிஷ்கர் ஆதரித்த புத்த சமயப்பிரிவு = மகாயானம்.
- கணிஷ்கரை “குஷாண தேவபுத்திரன்” (கடவுளின் மகன்) என்று குறிப்பிட்டுள்ள கல்வெட்டு = ஹூஸ்னா பாறைக் கல்வெட்டு.
- கணிஷ்கரை “மகாராஜா” என்று குறிப்பிட்டுள்ள கல்வெட்டு = ஹூஸ்னா பாறைக் கல்வெட்டு.
குஷாணர்கள் ஆட்சியில் கலையும் இலக்கியமும்
- குஷாணர்கள் ஆட்சியில் உருவாகிய புதிய கலை = காந்தாரக் கலை.
- காந்தாரக் கலை = இந்தோ + கிரேக்க கட்டிடக்கலை.
- காந்தாரக் கலையின் தாக்கம் காரணமாக புத்தரின் உருவங்கள் சிலைகளாக வடிக்கப்பட்டன.
- கணிஷ்கரால் ஆதரிக்கப்பட்ட புத்த தத்துவஞானிகள் = பௌத்த ஆசான் நாகர்ஜூனர், அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்திரர்.
- “புத்தசரிதம்” நூலின் ஆசிரியர் = அஸ்வகோஷர்.
- முதல் சமஸ்கிருத நாடக நூல் எது = சரிபுத்ரப்ரகரண.
- சமஸ்கிருத மொழியின் முதல் நாடக நூலான “சரிபுத்ரப்ரகரண” நூலின் ஆசிரியர் = அஸ்வகோஷர்.
- “காமசூத்திரம்” நூலின் ஆசிரியர் = வாத்சயாயனர்.
தமிழக அரசாட்சிகள்
- இந்தியக் கடற்கரையிலிருந்த துறைமுகங்கள், அங்கு நிகழ்ந்த வணிகம் ஆகிய தகவல்களை வழங்கும் மிகவும் நம்பகத்தன்மை கொண்ட சான்று = கிராக்க வரலாற்று நூலான ”எரித்ரியக் கடலின் பெரிப்ளஸ்” (Periplus of the Erythrean Sea).
- அரபிக் கடலில் வீசும் பருவக்காற்றுகளின் காலமுறை இயல்புகளைக் கண்டறிந்தவர் = எகிப்தியக் கடலோடி ஹிப்பாலஸ்.
- “இந்தோ-ரோமானிய வணிக நிலையம்” என்று அழைக்கப்பட்ட இடம் = அரிக்கமேடு.
- ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட “கோமேதகம்” என்னும் நவரத்தினக் கற்கள் தமிழகத்தில் எங்கு எடுக்கப்பட்டன = கொடுமணல் (ஈரோடு), படியூர் (திருப்பூர்), வாணியம்பாடி (வேலூர்).
- தமிழகத்தின் எங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்ட இரும்பும் எஃகும் ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன = சென்னிமலை.
- தமிழகத்தில் எங்கு உருக்காலை மற்றும் உருக்கு எச்சங்கள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன = சென்னிமலை.
- “பெரிப்பிளஸ்” நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தமிழக துறைமுகங்கள் = நவுரா (கண்ணனூர்), தொண்டி (பொன்னானி), முசிறி (முசிரிஸ்).
- “கொடுங்களூர்” என்று அடையாளப்படுத்தப்பட்ட துறைமுகம் = முசிறி.
- மேற்கு கடற்கரையில் இருந்த துறைமுகங்களிலே மிகவும் பரபரப்பாக இருந்த வணிக மையம் = முசிறி.
- பாப்பிரஸ் ஆவணத்தில் ஒப்பந்தம் செய்துக் கொண்டவர்கள் = முசிறியைச் சேர்ந்த ஒரு வணிகருக்கும் அலெக்சாண்ட்ரியாவைச் சேர்ந்த ஒரு வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம் ஆகும்.
- யாருடைய ஆட்சியின் பொழுது தமிழகத்தில் இருந்து ரோம் நாட்டிற்கு வணிகத்தின் அளவு உச்சியை எட்டியது = பேரரசர் டைபீரியஸ்.
- ரோமிற்கு ஏற்றுமதி செய்யப்பட மிக முக்கியமான பொருள் = ஆமை ஓடுகள்.
- சோழமண்டல கடற்கரையில் இருந்ஹ்ட் அமிக முக்கிய துறைமுகம் = பூம்புகார்.
புத்தக வினாக்கள்
- அலெக்சாண்டரின் திறன்மிக்க தளபதிகளுள் ஒருவர் __________ ? = செலியுகஸ் நிகேடர்.
- செலியுகஸ் நிகேடரால் தலைநகரம் பாடலிபுத்திரத்துக்கு _________ தூதராக மெகஸ்தனிஸ் அனுப்பப்பட்டார்? = கிரேக்க.
- வழக்கமான தூதர்கள் மற்றும் கடிதப் பரிமாற்றம் ________ ? = இந்தியாவிலிருந்து மேற்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது.
- இந்தோ-கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவர் ______________ ? = மினாண்டர்.
- குஷாண நாணயங்கள் ___________ நாணயங்களைவிட உயர்ந்த தரத்தில் இருந்தன? = ரோமானிய.
- இந்தோ-கிரேக்கக் கலை மற்றும் சிற்பப் பாணி __________ என்று குறிப்பிடப்பட்டது? = காந்தாரக் கலை.
- சக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர் _________ ? = ருத்ரதாமன்.
- _____________ பகுதியில் ரோமானிய நாணயங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன? = அரிக்கமேடு.
- 11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்
- 11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
- 11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
- 11TH பண்டைய இந்தியா
- 11TH பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து வரை
- 11TH மௌரியருக்கு பிந்தைய அரசியலமைப்பும் சமூகமும்
- 11TH மௌரியருக்கு பிந்தைய அரசியலமைப்பும் சமூகமும்
- 11TH மௌரியருக்கு பிந்தைய அரசியலமைப்பும் சமூகமும்