11TH HISTORY குப்தர்
11TH HISTORY குப்தர்
- “இந்திய வரலாற்றின் பொற்காலம்” எனப்படுவது = குப்தர்கள் காலம்.
- “இந்தியாவில் பண்பாட்டு மலர்ச்சியின் காலம்” (period of cultural florescence) என அழைக்கப்படுவது = குப்தர்கள் காலம்.
- இந்தியாவில் “செவ்வியல் கலைகளின் காலம்” (period of classical age for the arts) என அழைக்கப்படுவது = குப்தர்கள் காலம்.
குப்தர்கள் ஆட்சிக்கான சான்றுகள்
- “நீதிசாரம்” என்னும் நூலின் ஆசிரியர் = காமந்தகார்.
- விசாகதத்தர் எழுதிய நூல்கள் = தேவிசந்திரகுப்தம், முத்ராராட்சசம்.
- சீனப் பயணி பாஹியான் குறிப்புகள்.
- முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிப்பிடும் “மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு”.
- சமுத்திரகுப்தரின் ஆட்சி, சாதனைகள் விளக்கும் “அலகாபாத் (பிரயாகை) தூண் கல்வெட்டு”.
- அலகாபாத் தூண் கல்வெட்டை பொறித்தவர் = ஹரிசேனர்.
- அலகாபாத் தூண் கல்வெட்டு எத்தனை வரிகளில் எழுதப்பட்டுள்ளது = 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.
குப்தர் வம்சத்தின் தோற்றம்
- குப்த வம்சத்தை தோற்றுவித்தவர் = ஸ்ரீகுப்தர்.
- குப்த வம்சத்தின் முதல் அரசர் = ஸ்ரீகுப்தர்.
- குப்த வம்சத்தின் இரண்டாவது அரசர் = கடோத்கஜர்.
- கடோத்கஜரின் மகன் = முதலாம் சந்திரகுப்தர்.
- கல்வெட்டுகளில் “மகாராஜா” என்று குறிப்பிடப்பட்டுள்ள குப்த அரசர்கள் = ஸ்ரீகுப்தர், கடோத்கஜர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
முதலாம் சந்திரகுப்தர்
- குப்தப் பேரரசின் முதல் பேரரசர் என்று அழைக்கப்படுபவர் = முதலாம் சந்திரகுப்தர்.
- “மகாராஜா”, “ஆதிராஜா” என்று அழைக்கப்பட்ட குப்த அரசன் = முதலாம் சந்திரகுப்தர்.
- முதலாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலம் = பொ.ஆ. 319 முதல் 335.
- முதலாம் சந்திரகுப்தரின் மகன் = சமுத்திரகுப்தர்.
- முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிப்பிடும் கல்வெட்டு = “மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு”.
சமுத்திரகுப்தர்
- மௌரியப் பரம்பரையில் வந்தவராக கூறப்படும் குப்த அரசன் = சமுத்திரகுப்தர்.
- தென்னிந்தியாவின் காஞ்சிபுரம் வரை படையெடுத்த குப்த அரசர் = சமுத்திரகுப்தர்.
- “இந்திய நெப்போலியன்” என்று அழைக்கப்பட்ட அரசர் யார் = சமுத்திரகுப்தர்.
- “கவிராஜா” என்று அழைக்கப்பட்ட குப்த அரசர் யார் = சமுத்திரகுப்தர்.
- யாருடைய ஆட்சியின் பொழுது இலங்கை அரசர் மேகவர்மன் பரிசுகளை அனுப்பி, கயாவில் ஒரு பௌத்த மடம் கட்ட அனுமதி கோரினார் = சமுத்திரகுப்தர்.
- தனது ராணுவ வெற்றிகளைப் பிரகடனம் செய்ய “அஸ்வமேத யாகம்” நடத்திய குப்த அரசன் = சமுத்திரகுப்தர்.
- சமுத்திரகுப்தரால் ஆதரிக்கப்பட்ட அறிஞர் = ஹரிசேனர்.
- சமுத்திரகுப்தர் பின்பற்றிய சமயம் = வைணவ சமயம்.
- கவிதை மற்றும் இசையை மிகவும் விரும்பிய குப்த அரசன் = சமுத்திரகுப்தர்.
- நாணயங்களில் வீணை வாசிப்பது போன்று உருவம் பொறிக்கப்பட்ட குப்த அரசன் = சமுத்திரகுப்தர்.
- சமுத்திரகுப்தரின் மகன் = இரண்டாம் சந்திரகுப்தர்.
- சமுத்திரகுப்தர் ஆட்சி செய்த ஆண்டுகள் = 40 ஆண்டுகள்.
இரண்டாம் சந்திரகுப்தர்
- இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சி செய்த ஆண்டுகள் = 40 ஆண்டுகள்.
- “விக்ரமாதித்தன்” என்று அழைக்கப்பட்ட குப்த அரசன் = இரண்டாம் சந்திரகுப்தர்.
- இரண்டாம் சந்திரகுப்தரின் தலைநகரம் = பாடலிபுத்திரம்.
- ஹூணர்களை வென்ற குப்த அரசன் = இரண்டாம் சந்திரகுப்தர்.
- இரண்டாம் சந்திரகுப்தரின் சிறப்புப் பெயர்கள் = விக்ரமன், தேவகுப்தன், தேவராஜன், சிம்ஹவிக்ரமன், விக்ரமாதித்யன், சகாரி.
- யாருடைய அவை “நவரத்தினங்கள்” எனப்படும் ஒன்பது அறிஞர்கள் அலங்கரித்த அவையாகும் = இரண்டாம் சந்திரகுப்தரின் அவை.
- இரண்டாம் சந்திரகுப்தரின் அவையை அலங்கரித்த அறிஞர்கள் = சமஸ்கிருத கவிஞர் காளிதாஸர், சமஸ்கிருதப் புலவர் ஹரிசேனர், அகராதியை உருவாக்கிய அமரசிம்மர், மருத்துவர் தன்வந்திரி.
- யாருடைய ஆட்சியின் பொழுது சீனப்பயணி பாகியான் இந்தியா வந்தார் = இரண்டாம் சந்திரகுப்தர்.
- வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் = இரண்டாம் சந்திரகுப்தர்.
பிற குப்த அரசர்கள்
- இரண்டாம் சந்திரகுப்தரின் மகன் = குமாரகுப்தர்.
- நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் = குமாரகுப்தர்.
- “சக்ராதித்யர்” என்று அழைக்கப்பட்ட குப்த அரசன் = குமாரகுப்தர்.
- குமாரகுப்தரின் மகன் = ஸ்கந்தகுப்தர்.
- குப்த வம்சத்தின் கடைசி பேரரசர் = ஸ்கந்தகுப்தர்.
- குப்தப் பேரரசின் முதல் பேரரசர் = முதலாம் சந்திரகுப்தர்.
- ஸ்கந்தகுப்தர் மறைந்த ஆண்டு = பொ.ஆ. 467.
- குப்த வம்சத்தின் முதல் அரசர் = ஸ்ரீகுப்தர்.
- குப்த வம்சத்தின் கடைசி அரசர் = விஷ்ணுகுப்தர்.
குப்தரின் நிர்வாக முறை
- அலகாபாத் கல்வெட்டுகளில் சமுத்திரகுப்தர் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார் = “புருஷா” (அனைவருக்கும் மேலானவர்) என்ற கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார்.
- “குமாரமாத்யா” என்ற சொல் எத்தனை முறை முத்திரைகளில் இடம்பெற்றுள்ளது = ஆறு.
- அலகாபாத் பிரசஸ்தியை (மெய்க்கீர்த்தி அல்லது புகழுரைக் கல்வெட்டு) பொறித்தவர் = ஹரிசேனர்.
- ஹரிசேனர் பெற்ற பட்டங்கள் = குமாரமாத்யா, சந்திவிக்ரஹிகா, மஹாதண்டநாயகா.
- ஹரிசேனரின் தந்தை = மஹாதண்டநாயகா துருவபூதி.
- அரசருக்கு உதவிய அமைச்சரவை குழு எவ்வாறு அழைக்கப்பட்டது = சபா.
- அமைச்சர்களில் உயர் நிலையில் இருந்தவர் = மஹாசந்திவிக்ரஹா.
- அமைதி மற்றும் போருக்கான அமைச்சர் = மஹாசந்திவிக்ரஹா.
- நீதித்துறை, ராணுவம் ஆகியவறறின் பொறுப்பு வகித்தவர் = தண்டநாயகா அல்லது மஹாதண்டநாயகா.
- குப்தர்கள் ஆட்சியில் குதிரைப்படைத் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டர் = மஹாஅஸ்வபதி.
பேரரசின் பிரிவுகள்
- குப்தர்களின் பேரரசு எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன = தேசம் அலல்து புத்தி எனப்படும் மாநிலங்கள்.
- “உபாரிகா என்போர் யார் = குப்த பேரரசில் மாநிலங்களை நிர்வகித்த ஆளுநர்கள்.
- எந்த செப்பேடுகளில் மூன்று உபாரிகாக்களுக்கு “மகாராஜா” என்ற பட்டம் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது = தாமோதர்பூர் செப்பேடு.
- புத்தகுப்தர் உடன் தொடர்புடைய கல்வெட்டு = ஏரான் தூண் கல்வெட்டு.
- எந்த கல்வெட்டில் குப்த ஆண்டு 165 என தேதி குறிப்பிடப்பட்டுள்ளது = ஏரான் தூண் கல்வெட்டு.
- குப்தர்கள் ஆட்சியில் எந்த அதிகாரியின் கீழ் மாநிலங்கள் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன = விஷ்யபதி.
- குப்தர்கள் ஆட்சியில் மாவட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = விஷ்யா.
- “மஹாதாரா” என்பவற்றின் கீழ் “அஷ்டகுல-அதிகாரனா” (எட்டு உறுப்பினர் கொண்ட குழு) இருந்ததை குறிப்பிடும் செப்பேடு = தாமோதர்பூர் செப்பேடு.
- மஹாதாரா என்பதன் பொருள் = கிராமப் பெரியவர், கிராமத் தலைவர், குடும்பத் தலைவர்.
- 11TH HISTORY குப்தர்
குப்தர்கள் ஆட்சியில் இராணுவம்
- குப்தர்கள் ஆட்சியில் குதிரைப்படைத் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டர் = மஹாஅஸ்வபதி.
- “பாலாதிகிருத்யா” என்போர் = காலாட்படைத் தளபதி.
- “மஹாபாலாதிகிருத்யா” என்போர் = குதிரைப்படைத் தளபதி.
- “ரணபந்தகர்” என்பது = ராணுவக் கிடங்கின் அலுவலகம்.
- “தண்டபாஷிகா” என்பது = மாவட்ட அளவிலான காவல்துறை அலுவலகம்.
- “மஹாபிரதிஹரா” என்போர் = அரண்மனைக் காவலர்களின் தலைவர்.
- “கத்யதபகிதா” என்போர் = அரசு சமையலறைக் கண்காணிப்பாளர்.
- “துடகா” என்பது யாது = குப்தர்கள் ஆட்சியில் இருந்த ஒற்றர்கள் கொண்ட உளவு அமைப்பு.
- 11TH HISTORY குப்தர்
குப்தர்கள் ஆட்சியில் பொருளாதாரம்
- “நீதிசாரா” என்னும் நூலின் ஆசிரியர் = காமாந்தகர்.
- “அக்ஷபதலதிக்கிருதா” என்போர் யார் = அரசு ஆவணங்களை பராமரித்த அதிகாரி.
- “இரண்யவெஷ்தி” என்பதன் பொருள் = கட்டாய உழைப்பு.
- பழ மரங்கள் வளர்ப்பது குறித்து விரிவாக அறிவுரைகளை வழங்கிய அறிஞர் = வராகமிகிரர்.
- “அரசர் தான் நிலத்தின் ஒரே உரிமையாளர்” என்று குறிப்பிட்டுள்ள செப்பேடு = பஹார்பூர் செப்பேடு.
- “உஸ்தபாலா” என்போர் யார் = குப்தர்கள் ஆட்சியில் மாவட்டத்தின் நிலப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பராமரிக்கும் அதிகாரி.
- 11TH HISTORY குப்தர்
குப்தர்கள் ஆட்சியில் இருந்த நில வகைகள்
- “க்ஷேத்ரா” எனபது = பயிரிடக்கூடிய நிலம்.
- “கிலா” என்பது = தரிசு நிலம்.
- “அப்ரஹதா” என்பது = காடு அல்லது தரிசு நிலம்.
- “வாஸ்தி” என்பது யாது = குடியிருக்க தகுந்த நிலம்.
- “கபடசஹாரா” என்பது யாது = மேய்ச்சல் நிலம்.
குப்தர்கள் ஆட்சியில் இருந்த நிலகுத்தகை முறைகள்
நிலகுத்தகை வகை |
உரிமையின் தன்மை |
நிவி தர்மா |
அறக்கட்டளை போன்ற அமைப்பின் மூலம் நில மானியம் இம்முறை வடக்கு, மத்திய இந்தியா மற்றும் வங்கத்தில் நிலவியது |
நிவிதர்ம அக்சயனா |
நிரந்தரமான அறக்கட்டளை – பெற்றவர் அதிலிருந்து வரும் வருவாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம். |
அப்ரதா தர்மா |
வருவாயைப் பயன்படுத்தலாம். ஆனால் அதை பிறருக்குத் தானம் செய்யமுடியாது. நிர்வாக உரிமையும் இல்லை. |
பூமிசித்ராயனா |
தரிசு நிலத்தை முதன்முதலாகச் சாகுபடி நிலமாக மாற்றுபவருக்குத் தரப்படும் உரிமை. இந்த நிலத்திற்குக் குத்தகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. |
அக்ரஹார மானியம் |
பிராமணர்களுக்குத் தரப்படுவது. இது நிரந்தரமானது. பரம்பரையாக வரக்கூடியது. வரி கிடையாது. |
தேவக்கிரஹார மானியம் |
கோவில் மராமத்து, வழிபாடு ஆகிய பணிகளுக்காகப் பிராமணர்கள், வணிகர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும் நில மானியம். |
சமயச் சார்பற்ற மானியம் | குப்தர்களுக்குக் கீழிருந்த நிலப்பிரபுக்களுக்குத் தரப்பட்ட மானியம். |
குப்தர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்த பல்வேறு வரிகள்
வரி |
அதன் தன்மை |
பாகா | விளைச்சலில் அரசன் பெறும் வழக்கமான ஆறில் ஒரு பங்காகும். |
போகா |
அரசருக்கு கிராமங்கள் அவ்வப்போது வழங்க வேண்டிய பழங்கள், விறகு, பூக்கள் போன்றவை. |
கரா | கிராமத்தினர் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் விதிக்கப்படும் ஒரு வரி |
பலி |
ஆரம்பத்தில் விருப்பப்பட்டு வழங்கப்பட்ட வரி. பின்னர் கட்டாய வரியாக மாறிய இது ஒரு ஒடுக்குமுறை வரி. |
உதியங்கா | காவல் வரி அல்லது நீர் வரியாக இருக்கலாம். |
உபரிகரா | கூடுதல் வரி. |
ஹிரண்யா |
தங்க நாணயங்கள் மீது விதிக்கப்படும் வரி என்பது நேரடிப் பொருள். நடைமுறையில் இது சில குறிப்பிட்ட தானியங்களின் விளைச்சலில் ஒரு பங்கினை, அரசின் பங்காகப் பொருளாகவே அளிப்பதாகும். |
வாத-பூதா |
காற்றுக்கும் ஆவிகளுக்கும் செய்ய வேண்டிய சடங்குகளுக்காக விதிக்கப்பட்ட பல்வேறு வரிகள் |
ஹலிவகரா | கலப்பை வைத்திருக்கும் ஒவ்வொரு உழவரும் கட்ட வேண்டிய கலப்பை வரி |
சுல்கா |
வர்த்தகர்கள் நகரத்திற்கோ துறைமுகத்திற்கோ கொண்டுவரும் வணிகச் சரக்குகளில் அரசருக்கான பங்கு. |
கிளிப்தா; உபகிளிப்தா | நிலப்பதிவின் போது விதிக்கப்படும் விற்பனை வரி |
- ஒடுக்குமுறை வரியாக இருந்த வரி எது = பலி.
- “ஹலிவகரா” என்பது = கலப்பை வரி.
குப்தர்கள் ஆட்சியில் வேளாண்மை
- வயல்கள் தொடர்பான இருவகை அணைக்கரைகள் பற்றி குறிப்பிட்டுள்ள நூல் = நாரதஸ்மிருதி.
- நாரதஸ்மிருதி நூலில் குறிப்பிட்டுள்ள இருவகை அணைக்கரைகள் யாவை = பந்தியா, கரா.
- தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க “ஜலநிர்கமா” என்ற வடிகால் இருந்ததை குறிப்பிடும் அறிஞர் = அமரசிம்மர்.
- “சுதர்சன ஏரி” இருக்கும் இடம் = குஜராத்தின் கிர்னார் மலை அடிவாரத்தில்.
- குப்தர்கள் ஆட்சியில் விவசாயிகளின் நிலைமை மோசமாக இருந்தது.
- 11TH HISTORY குப்தர்
சுரங்கமும் உலோகவியலும்
- குப்தர்கள் ஆட்சியில் செழித்து விளங்கிய இரு தொழில்கள் = சுரங்கமும் உலோகவியலும்.
- குப்தர்கள் உலோகவியல் திறனில் சிறந்து விளங்கினர் என்பதற்கான எடுத்துக்காட்டு = தில்லி மெஹ்ரோலி இரும்புத்தூண்.
- குப்தர்கள் காலத்தில் உலோகவியல் தொழிலில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றம் எது = புத்தர் மற்றும் பிற கடவுள்களின் சிலைகள் உருவாக்கம்.
வணிகமும் வர்த்தகமும்
- குப்தர்கள் காலத்தின் இரு வகை வணிகர்கள் = சிரேஷ்டி, சார்த்தவஹா.
- சிரேஷ்டி என்போர் = ஒரே இடத்தில் இருந்து வணிகம் செய்வோர்.
- சார்த்தவஹா என்போர் = வெவேறு இடங்களுக்கு சென்று வணிகம் செய்வோர்.
- குப்தர்கள் கால வணிக குழுக்களின் அமைப்பு பற்றி குறிப்பிட்டுள்ள நூல்கள் = நாரத ஸ்மிருதி, பிருகஸ்பதி ஸ்மிருதி.
- குப்தர்கள் ஆட்சியில் “கந்துவட்டி” முறை பிரபலமாக இருந்தது.
- சீனப்பயணி பாகியான் குறிப்பிட்டுள்ள குப்தர்கள் காலத்தின் மிகமுக்கிய துறைமுகம் = வங்கத்தின் தாமரலிப்தி.
- குப்தர்கள் அதிகளவு வெளியிட்ட நாணயங்கள் = தங்கம்.
- 11TH HISTORY குப்தர்
குப்தர்கள் ஆட்சியில் பண்பாட்டு கலை
- குப்தர்கள் கால கல் சிற்பக் கலைக்கு சிறந்து எடுத்துக்காட்டு = சாரநாத்தில் உள்ள நிற்கும் புத்தர் சிலை.
- குப்தர்கள் கால புராணச் சிற்பங்களில் சிறப்பு வாய்ந்தது = உதயகிரி குகை நுழைவாயிலில் உள்ள “வராஹ அவதார சிலை”.
- குப்தர்கள் கால உலோகச் சிற்பங்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு = பீகாரின் நாளந்தாவில் உள்ள “பதினெட்டடி செம்புச் சிலை” மற்றும் சுல்தான்கஞ்சில் உள்ள “ஏழரை அடி புத்தர் சிலை”.
- குப்தர்கள் காலத்தில் சிற்பக் கலையை விட சிறந்து விளங்கிய கலை எது = ஓவியக் கலை.
- குப்தர்கள் கால ஓவியங்கள் காணப்படும் இடங்கள் = அஜந்தா, பாக், பாதாமி குகைகள்.
- அஜந்தா சுவர் ஓவியங்கள் ஃபிரெஸ்கோ எனப்படும் சுவரோவியங்கள் வகையை சார்ந்து அல்ல.
- அஜந்தா மற்றும் பாக்கில் காணப்படும் குப்தர்கள் கால ஓவியங்கள் = மத்தியதேச ஓவியப்பள்ளி முறையின் சிறந்த ஓவியங்கள் ஆகும்.
- குப்தர்கள் காலத்தில் சிறந்து விளங்கிய மற்றொரு கலை = சுடுமண் சிற்பக் கலை.
- குப்தர்கள் கால மட்பாண்டங்களின் தனிப்பட்ட சிறப்பம்சம் எது = “சிவப்பு மட்பாண்டங்கள்”.
- 11TH HISTORY குப்தர்
குப்தர்கள் கால இலக்கியங்கள்
- குப்தர்கள் ஆதரித்த மொழி = சமஸ்கிருதம்.
- குப்தர்களின் அலுவல் மொழி = சமஸ்கிருதம்.
- சமஸ்கிருத இலக்கியத்தின் உச்சக்கட்ட காலம் = குப்தர்கள் காலம்.
- பாணினி எழுதிய நூல் = அஷ்டத்யாயி.
- பதஞ்சலி எழுதிய நூல் = மஹாபாஷ்யா.
- அமரசிம்மர் என்பவர் எழுதிய சமஸ்கிருத சொற்களஞ்சியம் = அமரகோசம்.
- பௌத்த அறிஞர் சந்திரகோமியர் எழுதிய நூல் = சந்திரவியாகரணம் (இலக்கண நூல்).
- புராணங்கள் எழுத்து வடிவில் எழுதப்பட்ட காலம் = குப்தர்கள் காலம்.
- மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்கள் எழுத்து வடிவில் எழுதப்பட்ட காலம் = குப்தர்கள் காலம்.
- தர்க்க அறிவியல் சார்ந்த முதலாவது முழுமையான பௌத்த சமய நூலை எழுதியவர் = வசுபந்து.
- வசுபந்தரின் சீடர் = திக்நாதர்.
- இராமாயணத்தை சமண மத அடிப்படையில் எழுதியவர் = விமலா.
- சமணர்கள் இடையே “தர்க்க சாஸ்திர” முறையை அறிமுகம் செய்தவர் = சித்தசேன திவாகரர்.
- காளிதாசர் புகழ்பெற்ற நாடகங்கள் = சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்ரமோர்வசியம்.
- சூத்ரகர் எழுதிய நூல்கள் = மிருச்சகடிகம்.
- விசாகதத்தர் எழுதிய நூல்கள் = முத்ராராட்சசம், தேவிசந்திரகுப்தம்.
- குப்தர்கள் கால நாடகங்களின் சிறப்பு அம்சம் = நாடகத்தில் மேட்டுக்குடி கதாப்பாத்திரங்கள் சமஸ்கிருத மொழியிலும், எளிய மக்கள் பிராகிருத மொழியிலும் பேசும்.
- 11TH HISTORY குப்தர்
நாளந்தா பல்கலைக்கழகம்
- “மஹாவிஹாரா” என்று அழைக்கப்படுவது = நாளந்தா பல்கலைக்கழகம்.
- நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் = குமாரகுப்தர்.
- யுனஸ்கோவால் பாதுகாக்கப்படும் உலகின் தொன்மைச் சின்னம் = நாளந்தா பல்கலைக்கழகம்.
- நாளந்தா பல்கலைக்கழகத்தை ஆதரித்த அரசர்கள் = குப்த அரசர்கள், ஹர்ஷர், வங்காளத்தின் பால அரசர்கள்.
- நாளந்தா பல்கலைக்கழகத்தை சூறையாடி அழித்தவன் = அடிமை வம்சத்தின் பக்தியார் கில்ஜி.
- எந்த ஆண்டு நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தில் முறையாக நடைபெற்றது = 1915.
- 1915ல் நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை = 11 புத்த மடாலயங்கள், 6 செங்கல் கோவில்கள்.
- 11TH HISTORY குப்தர்
குப்தர் கால அறிவியல்
- சுழியம் என்னும் கருத்தாக்கத்தை கண்டுபிடித்தவர் = ஆரியபட்டர்.
- ஆரியபட்டர் எழுதிய நூல் = சூரியசித்தாந்தம், ஆரியபட்டீயம்.
- சூரிய கிரகணங்களின் உண்மையான காரணத்தை ஆராய்ந்தவர் = ஆரியபட்டர்.
- பூமி ஒரே அச்சில் தன்னைத் தானே சுற்றுகிறது என முதன் முதலில் கண்டுபிடித்த அறிஞர் = ஆரியபட்டர்.
- வராஹமிகிரர் எழுதிய நூல்கள் = பிருஹத்சம்ஹிதை, பஞ்ச சித்தாந்தா, பிருஹத் ஜாதகா.
- எந்த நூல் வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான “கலைக்களஞ்சியம்” ஆகும் = வராஹமிகிரர் எழுதிய “பிருஹத்சம்ஹிதை”.
- பிரம்மகுப்தர் எழுதிய நூல்கள் = பிரும்மஸ்புத-சித்தாந்தா, கண்டகாத்யகா.
- குப்தர்கள் காலத்தில் நோய்களுக்கான மருந்துகள், மருத்துகள் தயாரிக்கும் முறை குறித்து கூறும் மருத்துவ நூல் எது = நவனிதகம்.
- குப்தர்கள் காலத்தில் எழுதப்பட்ட விலங்குகளுக்கான மருத்துவ நூல் எது = ஹஸ்த்யாயுர்வேதா.
- “ஹஸ்த்யாயுர்வேதா” நூலின் ஆசிரியர் = பாலகாப்யா.
- 11TH HISTORY குப்தர்
குப்த பேரரசின் வீழ்ச்சி
- குப்த வம்சத்தின் கடைசி அரசர் = விஷ்ணுகுப்தர்.
- ஹூணர்களின் படையெடுப்பு கருவூலத்தை காலி செய்தது.
- ஹூணர்களின் படையெடுப்பை வெற்றிகரமாக தடுத்த குப்த அரசர் = ஸ்கந்தகுப்தர்.
- “சமந்தர்கள்” என்போர் யார் = நிலப்பிரபுத்துவ துணைநிலை ஆட்சியாளர்கள்.
- 11TH HISTORY குப்தர்
புத்தக வினாக்கள்
- குப்தர் காலம் குறித்து கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்? = கதைகள், புராணங்கள்.
- ________________க்கு கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது? = சமுத்திரகுப்தர்.
- _______________ என்ற சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டின் இந்திய சமூகம் குறித்து விரிவாக எழுதியுள்ளார்? = பாகியான்.
- குப்தர் கால குடைவரைக் கோவில் இல்லாதது? = எலிபண்டா (மகாராஷ்டிரா).
- தர்க்கம் குறித்து முதல் முழுமையான பௌத்த நூலை எழுதியவர் _______________ ? = வசுபந்து.
- 11TH மௌரியருக்கு பிந்தைய அரசியலமைப்பும் சமூகமும்
- 11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்
- 11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
- 11TH பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்