19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமயம் சார்ந்த சீர்திருத்த இயக்கங்கள் இரண்டு வகைப்படும்.
    • ஒன்று சீர்திருத்த இயக்கங்கள் = பிரம்ம சமாஜம், பிரார்த்தனை சமாஜம், அலிகார் இயக்கம்.
    • சமய புத்தெழுச்சி மீட்டெடுப்பு இயக்கங்கள் = ஆரியசமாஜம், இராமக்கிருஷ்ண மிஷன், தியோபந்த் இயக்கம்.

இராஜா ராம்மோகன் ராய்

19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
  • இராஜா ராம்மோகன் ராயின் காலம் = 1772 – 1833.
  • மேலை நாட்டு கருத்துக்களால் கவரப்பட்டு சீர்திருத்தவாதியாக மாறியவர் = இராஜா ராம்மோகன் ராய்.
  • இராஜா ராம்மோகன் ராய் அறிந்திருந்த மொழிகள் = வங்காளம் (தாய்மொழி), பாரசீகம், உருது, அரபி, ஆங்கிலம், சமஸ்கிருதம்.
  • ஒரு கடவுள் கோட்பாடு, உருவ வழிபாடு ஆகியவற்றை எதிர்த்தவர் = இராஜா ராம்மோகன் ராய்.
  • உபநிடதங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார் இவர்.
  • உபநிடதங்கள் ஒரு கடவுள் கோட்பாட்டை வலியுறுத்துகின்றன என்கிறார் இவர்.
  • உடன்கட்டை ஏறுதல் (சதி), குழந்தை திருமணம், பலதார மணம் ஆகியவற்றிற்கு எதிராக சட்டம் இயற்ற ஆங்கில அரசை வலியுறுத்தினார்.
  • “மக்கள் பகுத்தறிவோடும், பரிவோடும், மனிதப் பண்போடும் இருக்க வேண்டும்” என்று கூறியவர் = இராஜா ராம்மோகன் ராய்.
  • இந்தியாவில் “சதி” ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு = 1829.
  • இந்தியாவில் “சதி” ஒழிப்புச் சட்டத்தை கொண்டு வந்த ஆங்கிலேயே ஆளுநர் = வில்லியம் பெண்டிங்.
  • இந்தியாவில் சதி ஒழிப்புச் சட்டம் கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர் = இராஜா ராம்மோகன் ராய்.
  • இந்தியாவில் ஆங்கிலக் கல்வியையும், மேலைநாட்டு அறிவியலையும் அறிமுகம் செய்ய வேண்டுகோள் விடுத்தவர் = இராஜா ராம்மோகன் ராய்.
  • “பிரம்ம சமாஜம்” அமைப்பை நிறுவியவர் = இராஜா ராம்மோகன் ராய்.
  • இராஜா ராம்மோகன் ராய் “பிரம்ம சமாஜம்” அமைப்பை நிறுவிய தினம் = 20 ஆகஸ்ட் 1828.
  • உருவச் சிலைகளே இல்லாத கோவிலை நிறுவியவர் = இராஜா ராம்மோகன் ராய்.
  • இராஜா ராம்மோகன் ராய், சிலைகளே இல்லாத கோவிலை எங்கு நிறுவினார் = கல்கத்தா.
  • “இங்கு எந்த ஒரு மதத்தையும் ஏளனமாகவோ, அவமானமாகவோ பேசக்கூடாது அல்லது மறைமுகமாகக் குறிப்பிடப்படலாகாது” (no religion should be reviled or slightly or contemptuously spoken off or alluded to) என கோவிலில் எழுதி வைத்தவர் = இராஜா ராம்மோகன் ராய்.
  • பிரம்ம சமாஜம் தனது கருத்துக்களை கீழ்த்தட்டு மக்களை கவர்வதில் தோல்வி அடைந்தது.
  • 19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்

  • இராஜா ராம்மோகன் ராயின் இறப்பிற்கு பிறகு பிரம்ம சமாஜ அமைப்பில் அவரது பணிகளை மேற்கொண்டவர் = மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்.
  • மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் = கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் தந்தை ஆவார்.
  • நம்பிக்கை பற்றி நான்கு கொள்கைக் கூறுகளை முன்வைத்தவர் = மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்.

கேசவ் சந்திர சென்

19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
  • கேசவ் சந்திர சென், பிரம்ம சமாஜ அமைப்பில் இணைந்த ஆண்டு = 1857.
  • எந்த ஆண்டு பிரம்ம சமாஜ அமைப்பின் உறுப்பினர்கள் இடையே பிளவு ஏற்பட்டது = 1866.
  • பிரம்ம சமாஜத்தில் இருந்து பிரிந்து, கேசவ் சந்திர சென் உருவாக்கிய புதிய அமைப்பு = இந்திய பிரம்ம சமாஜம் (Brahmo Samaj of India).
  • கேசவ் சந்திர சென் பிரிந்த பிறகு, மகரிஷி தேவேந்திரநாத் தாகூரின் “பிரம்ம சமாஜம்” அமைப்பு என்னவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது = ஆதி பிரம்ம சமாஜம் (Adi Brahmo Samaj).
  • குழந்தை திருமணத்திற்கு எதிரான அமைப்பான பிரம்ம சமாஜத்தில் இருந்து வந்த கேசவ் சந்திர சென், தனது கொள்கைக்கு மாறாக தனது பதினான்கு வயது மகளை, இந்திய இளவரசன் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
  • இதனால் கேசவ் சந்திர சென்னின் “இந்திய பிரம்ம சமாஜத்தில்” இருந்து பிரிந்து சென்ற நபர்கள் ஒன்று சேர்ந்து “சாதாரண சமாஜ்” என்னும் புதிய அமைப்பை உருவாக்கினர்.
  • 19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
  • இந்து மறை நூல்களை அடிப்படையாகக் கொண்டு சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியவர் = ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
  • விதவைகளை எரிப்பதும், விதவை மறுமணம் தடை செய்வதையும் எதிர்த்த வித்யாசாகர், அதற்கு சான்றாக இந்திய வேத நூல்களில் உள்ள கருத்துக்களை முன்வைத்தார்.
  • “நவீன வங்காள உரைநடையின் முன்னோடி” (the pioneer of modern Bengali prose) என்று அழைக்கப்படுபவர் = ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
  • வங்காளத்தில் “பெண்கள் பள்ளியை” உருவாக்க முக்கிய காரணமாக இருந்தவர் = ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
  • குழந்தைப் பருவத்திலேயே விதவைகளான சிறுமிகளின் வாழ்வை மேம்படுத்த தனது வாழ்வையே அர்பணித்தவர் = ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
  • “பண்டிதர்” என்று அழைக்கப்பட்டவர் = ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
  • இந்தியாவில் “விதவைகள் மறுமணச் சட்டம்” (மறுமண சீர்திருத்தச் சட்டம்) (Widows’ Remarriage Reform Act) நடைமுறைக்கு வந்த ஆண்டு = 1856.
  • இந்தியாவில் “விதவைகள் மறுமணச் சட்டம்” (மறுமண சீர்திருத்தச் சட்டம்) (Widows’ Remarriage Reform Act) நடைமுறையில் கொண்டு வர காரணமாக இருந்தவர் = பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
  • இந்தியாவில் முதன் முதலாக திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு (the first age of consent was included in the Indian Penal code) = 1860.
  • யாருடைய முயற்சியின் காரணமாக இந்தியாவில் முதன் முதலில் திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டது = ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
  • 19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

பிரார்த்தனை சமாஜம்

19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
  • பிரார்த்தனை சமாஜம் அமைப்பு உருவான இடம் = மகாராஸ்டிரா (பம்பாய்).
  • பிரார்த்தனை சமாஜம் அமைப்பு உருவான ஆண்டு = 1867.
  • பிரார்த்தனை சமாஜம் அமைப்பை நிறுவியவர் = ஆத்மாராம் பாண்டுரங்.
  • பிரார்த்தனை சமாஜம் அமைப்பின் இரண்டு முக்கிய உறுப்பினர்கள் = ஆர்.சி. பண்டர்கர், மகாதேவ் கோவிந்த ரானடே.
  • “விதவை மறுமணச் சங்கம்” நிறுவியவர் = மகாதேவ் கோவிந்த ரானடே.
  • மகாதேவ் கோவிந்த ரானடே “விதவை மறுமணச் சங்கத்தை” நிறுவிய ஆண்டு = 1861.
  • “புனே சர்வஜனிக் சபா” அமைப்பை நிறுவியவர் = மகாதேவ் கோவிந்த ரானடே.
  • மகாதேவ் கோவிந்த ரானடே “புனே சர்வஜனிக் சபா” அமைப்பை நிறுவிய ஆண்டு = 1870.
  • “தக்காணக் கல்விக்கழகம்” அமைப்பை நிறுவியவர் = மகாதேவ் கோவிந்த ரானடே.
  • மகாதேவ் கோவிந்த ரானடே “தக்காணக் கல்விக் கழகத்தை” நிறுவிய ஆண்டு = 1884.
  • 19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

1860 திருமண வயதுச் சட்டம்

  • 1860 திருமண வயதுச் சட்டத்தில் நிர்ணயம் செய்யபப்ட்ட திருமண வயது = பத்து.
  • எந்த ஆண்டு திருமண வயதுச் சட்டத்தில் திருமண வயது 12 ஆக உயர்த்தப்பட்டது = 1891.
  • 1891 ஆம் ஆண்டு திருமண வயதுச் சட்டத்தில் உயர்த்தப்பட்ட திருமண வயது = 12.
  • எந்த ஆண்டு திருமண வயதுச் சட்டத்தில் திருமண வயது 13 ஆக உயர்த்தப்பட்டது = 1925
  • 1925 ஆம் ஆண்டு திருமண வயதுச் சட்டத்தில் உயர்த்தப்பட்ட திருமண வயது = 13.
  • பிரிட்டிஷ் ஆட்சியில் அமைக்கப்பட்ட “திருமண வயது ஒப்புதல் கமிட்டி” (Age of Consent Committee) அமைக்கப்பட்ட ஆண்டு = 1929.

சுவாமி தயானந்த சரஸ்வதி

19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
  • பஞ்சாபில் சீர்திருத்த இயக்கங்களில் முன்னோடி அமைப்பு = ஆரிய சமாஜம்.
  • ஆரிய சமாஜம் அமைப்பை நிறுவியவர் = சுவாமி தயானந்த சரஸ்வதி.
  • ஆரிய சமாஜம் அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு = 1875.
  • கங்கைச் சமவெளியில் அலைந்து திரிந்த சமூக சீர்திருத்தவாதி = சுவாமி தயானந்த சரஸ்வதி.
  • தனது கருத்துக்களை பரப்ப சுவாமி தயானந்த சரஸ்வதி தங்கிய இடம் = பஞ்சாப்.
  • சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய நூல் = சத்யார்த்தபிரகாஷ்.
  • குழந்தை திருமணம், விதவை திருமணம் மறுப்பு, வெளிநாடுகளுக்கு சென்றால் தீட்டு போன்ற கருத்துக்கள் மறை (வேத) நூல்களில் இல்லை என போதித்தார்.
  • சுவாமி தயானந்த சரஸ்வதி முன்வைத்த முக்கிய கருத்துக்கள்,
    • கட்டுப்பாடான ஒரு கடவுள் வழிபாடு
    • உருவ வழிபாட்டை நிராகரித்தல்
    • பிராமணர் மேலாதிக்கம் செலுத்தும் சடங்குகள் மற்றும் சமூக நடைமுறைகள்.
  • “வேதங்களுக்கு திரும்புவோம்” என்ற புகழ்பெற்ற முழக்கம் யாருடையது = சுவாமி தயானந்த சரஸ்வதி.
  • பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்ற மதமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்ட சீர்திருத்த இயக்கம் = சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜம்.
  • ஆரிய சமாஜம் அமைப்பின் முக்கிய குறிக்கோள் = எதிர்மத மாற்றம்.
  • இந்துக்களாக இருந்து பிற மதத்திற்கு மாறியவர்களை மீண்டு இந்துக்களாக மாற்றுவதே ஆரிய சமாஜம் அமைப்பின் முக்கிய இலக்காகும்.
  • பிற மதத்தில் இருந்து மீண்டும் இந்துக்களாக மாறுபவர்களுக்கு “சுத்தி” என்னும் சுத்திகரிப்பு சடங்கை உருவாக்கியது இவ்வமைப்பு.
  • 19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

இராமகிருஷ்ண பரமஹம்சர்

19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
  • இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஊர் = கல்கத்தா அருகே தட்சினேஸ்வர்.
  • கோவில் அர்ச்சகராக இருந்தவர் = இராமகிருஷ்ண பரமஹம்சர்.
  • பஜனைப் பாடல்கள் மூலம் கடவுளை அடைய முக்கியத்துவம் கொடுத்தவர்.
  • காளி தெய்வத்தின் தீவிர பக்தர் இராமகிருஷ்ண பரமஹம்சர்.
  • “புனிதத்தாயான காளியின் திருவிளையாடல்கள் முடிவற்றவை” என கூறியவர் = இராமகிருஷ்ண பரமஹம்சர்.
  • அணைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளை கொண்டுள்ளன. அவற்றை பின்பற்றினால் வீடுபேறு அடையலாம் (all religions contain the universal elements which, if practised, would lead to salvation) என்று கூறியவர் = இராமகிருஷ்ண பரமஹம்சர்.
  • “ஜீவன் என்பதே சிவன்” (Jiva is Siva) என்று கூறியவர் = இராமகிருஷ்ண பரமஹம்சர்.
  • “வாழ்கின்ற அனைத்து உயிர்களுமே இறைவனே” (all living beings are God) என்று கூறியவர் = இராமகிருஷ்ண பரமஹம்சர்.
  • “மனிதர்களுக்கு செய்யப்படும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவையாகும்” (Service for man, must be regarded as God என்று கூறியவர் = இராமகிருஷ்ண பரமஹம்சர்.
  • இராமகிருஷ்ண பரமஹம்சர் மரணம் அடைந்த ஆண்டு = 1886.
  • இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் = சுவாமி விவேகானந்தர்.
  • “இராமகிருஷ்ண மிஷன்” அமைப்பை நிறுவியவர் = சுவாமி விவேகானந்தர்.
  • 19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

சுவாமி விவேகானந்தர்

  • சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் = நரேந்திரநாத் தத்தா.
  • இராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மைச் சீடர் = சுவாமி விவேகானந்தர்.
  • “மனிதகுலத்திற்கு தொண்டு செய்தல்” என்னும் கோட்பாட்டை பரிந்துரை செய்தவர் = சுவாமி விவேகானந்தர்.
  • “பண்பாட்டு தேசியத்திற்கு” (cultural nationalism) முக்கியத்துவம் கொடுத்தவர் = சுவாமி விவேகானந்தர்.
  • இந்து சமயத்திற்கு புத்துயிர் அளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தவர் (made a call to Indian youth to regenerate Hindu society )= சுவாமி விவேகானந்தர்.
  • சிகாகோ உலக சமய மாநாடு நடைபெற்ற ஆண்டு = 1893.
  • வங்கப் பிரிவினையை தொடர்ந்து நடைபெற்ற “சுதேசி இயக்கத்தின்” பொழுது வங்காள இளைஞர்கள் விவேகானந்தரின் கருத்துக்களால் ஊக்கம் பெற்றனர்.

பிரம்மஞான சபை

19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
  • பிரம்மஞான சபை துவங்கப்பட்ட இடம் = அமேரிக்கா.
  • பிரம்மஞான சபையை உருவாக்கியவர்கள் = பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் ஆல்காட்.
  • பிரம்மஞான சபை இந்தியாவில் எங்கு நிறுவப்பட்டது = அடையார்.
  • பிரம்மஞான சபை, அடையாரில் நிறுவப்பட்ட ஆண்டு = 1886.
  • உபநிடந்தங்கள், பகவத்கீதை ஆகியவற்றை படிக்க உற்சாகமூட்டியது.
  • பிரிட்டிஷ் இந்தியாவில் “பௌத்த மதம்” புத்துயிர் பெற முக்கிய பங்காற்றிய அமைப்பு = பிரம்மஞான சபை.
  • ஆல்காட்டின் மறைவிற்கு பிறகு பிரம்மஞான சபையின் தலைவராக பொறுப்பேற்றவர் = அன்னிபெசன்ட்.
  • இந்தியாவில் “தன்னாட்சி இயக்கத்தை” துவக்கியவர் = அன்னிபெசன்ட்.
  • பிரிட்டிஷ் இந்தியாவில் அயர்லாந்து நாட்டிற்கு வழங்கியதை போல இந்தியாவிற்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தவர் = அன்னிபெசன்ட்.
  • அன்னிபெசன்ட் தனது கருத்துக்களை பரப்ப பயன்படுத்திய செய்தித்தாள்கள் = நியூ இந்தியா (New India), காமன்வில் (Commonweal).
  • 19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

ஜோதிபா புலே

19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
  • ஜோதிபா கோவிந்தராவ் புலே பிறந்த இடம் = மாகராஸ்டிரா.
  • ஒடுக்கப்பட்டோருக்கு என முதல் பள்ளியை திறந்தவர் (He opened the first school for “untouchables” in 1852 in Poona) = ஜோதிபா கோவிந்தராவ் புலே.
  • ஜோதிபா கோவிந்தராவ் புலே, ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை எங்கு திறந்தார் = புனே.
  • ஜோதிபா கோவிந்தராவ் புலே, ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை திறந்த ஆண்டு = 1852.
  • “சத்தியசோதக் சமாஜ்” (உண்மையை நாடுவோர் சங்கம் / Truth Seekers Society) என்னும் அமைப்பை உருவாக்கியவர் = ஜோதிபா கோவிந்தராவ் புலே.
  • “உண்மையை நாடுவோர் சங்கம்” என்னும் அமைப்பை உருவாக்கியவர் = ஜோதிபா கோவிந்தராவ் புலே.
  • “சத்தியசோதக் சமாஜ்” (உண்மையை நாடுவோர் சங்கம் / Truth Seekers Society) என்னும் அமைப்பை ஜோதிபா புலே உருவாக்கிய ஆண்டு = 1870.
  • பிராமணர் அல்லாத மக்களும் சுயமரியாதையோடும், குறிக்கோளோடும் வாழ ஜோதிபா புலே உருவாக்கிய அமைப்பு = “சத்தியசோதக் சமாஜ்” (உண்மையை நாடுவோர் சங்கம் / Truth Seekers Society).
  • ஜோதிபா கோவிந்தராவ் புலே அவர்களின் மனைவி = சாவித்திரிபாய் புலே.
  • பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு விடுதியையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் உருவாக்கியவர் = ஜோதிபா கோவிந்தராவ் புலே.
  • ஜோதிபா கோவிந்தராவ் புலே எழுதிய நூல் = குலாம்கிரி (அடிமைத்தனம்).
  • குலாம்கிரி என்பதன் பொருள் = அடிமைத்தனம்.
  • 19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

நாராயண குரு

  • நாராயண குருவின் ஊர் = கேரளா.
  • நாராயண குரு அவர்கள் உருவாக்கிய அமைப்பு = ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம்.
  • நாராயண குரு, எந்த ஊரில் கோவிலை கட்டினார் = கேரளாவின் அருவிபுரம் என்னும் ஊரில்.
  • நாராயண குருவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இரண்டு முக்கிய சிந்தனையாளர்கள் = குமாரன் ஆசான் மற்றும் டாக்டர் பால்பு.

அய்யன்காளி

  • அய்யன்காளி பிறந்த ஊர் = கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெங்கனூர்.
  • யாருடைய கருத்துக்களால் அய்யன்காளி ஈர்க்கப்பட்டார் = நாராயண குரு.
  • அய்யன்காளி உருவாக்கிய அமைப்பு = சாது ஜன பரிபாலன சங்கம் (ஏழை மக்கள் பாதுகாப்பு சங்கம் / Association for the protection of the Poor)
  • எந்த ஆண்டு அய்யன்காளி அவர்கள் “சாது ஜன பரிபாலன சங்கத்தை” உருவாக்கினார் = 1907.
  • மக்களின் அடிப்படை உரிமைகளான பள்ளிகளில் கல்வி கற்க இடம் பெறுதலுக்காக போராடியவர் = அய்யன்காளி.

சர் சையது அகமத்கான்

  • சையது அகமத்கான் பிறந்த இடம் = டெல்லி.
  • “அறிவியல் கழகம்” (Scientific Society) நிறுவியவர் = சர் சையது அகமத்கான்.
  • இஸ்லாமியர்களை இந்திய தேசிய இயக்கத்தில் சேராமல், ஆங்கில அரசுடன் இணக்கமாக செல்ல வேண்டும் எனக் கூறியவர் சர் சையது அகமத்கான்.
  • சர் சையது அகமது கான் நிறுவிய கல்லூரி = அலிகார் முகமதிய ஆங்கிலோ – ஓரியண்டல் கல்லூரி (Aligarh Mohammedan Anglo-Oriental College).
  • சர் சையது அகமது கான் அலிகார் முகமதிய கல்லூரியை நிறுவிய ஆண்டு = 1875ல் அலிகார் நகரில்.
  • எந்த ஆண்டு அலிகார் முகமதிய ஆங்கிலோ – ஓரியண்டல் கல்லூரி பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது = 1920.
  • 19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

தியோபந்த் இயக்கம்

  • தியோபந்த் இயக்கம் எனபது = ஒரு முஸ்லிம் மீட்பு இயக்கம் ஆகும்.
  • தியோபந்த் இயக்கத்தை துவங்கியவர்கள் = முஸ்லிம் உலோமாக்கள்.
  • தியோபந்த் இயக்கம் சார்பில் எங்கு பள்ளி துவக்கப்பட்டது = 1866ல் உத்திரப்பிரதேச மாநிலம் சகரன்பூரில்.
  • இது மேலைநாட்டு கல்வியை புறக்கணித்து, இஸ்லாமிய மதக் கருத்துக்கள் மட்டுமே கற்றுத் தரப்பட்டது.

பார்சி சீர்திருத்த இயக்கம்

  • பார்சி சீர்திருத்த இயக்கம் துவங்கப்பட்ட இடம் = பம்பாய்.
  • ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா (பார்சிகளின் சீர்திருத்தச் சங்கம்) எனும் அமைப்பை துவக்கியவர் = பர்துன்ஜி நௌரோஜி என்பவரால் 1851ல் துவக்கப்பட்டது.
  • பார்சி சீர்திருத்தச் சங்கத்தின் தாரக மந்திரச்சொல் = “ராஸ்ட் கோப்தார்” (உண்மை விளிம்பி).
  • பார்சி சீர்திருத்த சங்கத்தின் சார்பில் குழந்தை திருமணத்திற்கு எதிராக போராடியவர் = பெர்ரம்ஜி மல்பாரி.
  • 19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

சீக்கியர் சீர்திருத்த இயக்கம் (நிரங்கரிகள், நாம்தாரிகள்)

  • நிரங்கரி இயக்கத்தை துவக்கியவர் = பாபா தயாள்தாஸ்.
  • நிரங்கரி என்பதன் பொருள் = உருவமற்ற இறைவன்.
  • உருவமற்ற இறைவனை வழிபடல், சிலை வழிபாட்டை மறுத்தல், குருநானக்கின் போதனைகளை மதித்தல் ஆகியவை நிரங்கரி அமைப்பின் குறிக்கோள் ஆகும்.
  • மது,. மாமிசம் தவிர்க்க வேண்டும் என நிரங்கரி அமைப்பில் கூறப்பட்டது.
  • நாம்தாரி அமைப்பை உருவாக்கியவர் = பாபா ராம்சிங்.
  • நாம்தாரி இயக்கத்தின் சார்பில் சீக்கியர்களின் அடையாளங்களான ஒன்றான “கத்திக்கு” (கிர்பான்) பதிலாக லத்தியை பயன்படுத்த வேண்டும்.
  • “சிங் சபா” எனும் அமைப்பு நிறுவப்பட்ட இடம் = அமிர்தசரஸ்.
  • சீக்கிய மதத்தின் புனிதத்தை நீட்க மேற்கொள்ளப்பட்ட அமைப்பு = சிங் சபா.
  • சீக்கியர்களுக்கான கால்சா கல்லூரி நிறுவப்பட்ட இடம் = அமிர்தசரஸ்.
  • அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பு = சிங் சபா.
  • 19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

இராமலிங்க சுவாமிகள்

  • வள்ளலார் என அழைக்கப்பட்டவர் = இரமாலிங்க சுவாமிகள்.
  • ராமலிங்க அடிகள் பிறந்த ஊர் = சிதம்பரத்திற்கு அருகே மருதூர்.
  • உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் என்னும் பிணைப்புகள் இருக்க வேண்டும் எனக் கூறினார்.
  • “துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்” (those who lack compassion for suffering beings are hard-hearted, their wisdom clouded) என்று கூறியவர் = ராமலிங்க அடிகள்.
  • செடி கொடிகள் உட்பட அணைத்து உயிரினங்களிடமும் அன்பை காட்டியவர் = ராமலிங்க சுவாமிகள்.
  • ராமலிங்க அடிகள் “சமரச வேத சன்மார்க்க சங்கம” என்னும் அமைப்பை நிறுவிய ஆண்டு = 1865.
  • சமரச வேத சன்மார்க்க சங்கம் பின்னாளில் என்னவாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது = சமரச சுத்த சன்மார்க்க சத்யா சங்கம்.
  • தென்னிந்தியாவில் பஞ்சம் ஏற்பட்ட ஆண்டு = 1866.
  • அனைவர்க்கும் உணவளிக்க 1867ல் எங்கு இலவச உணவகத்தை வள்ளலார் திறந்தார் = வடலூர்.
  • வள்ளலார் இயற்றிய பாடல்கள் என்னவாறு தொகுக்கப்பட்டுள்ளது = திருவருட்பா.
  • “ஏழைகளாகவும் இணையில்லா நன்மதிப்பையும் களைப்படைந்த இதயத்தையும் கொண்டுள்ள அம்மக்களை நான் பார்க்கிறேன், நான் பலவீனம் அடைகிறேன்” (I saw those people, poor and of unmatched honor, their hearts weary, and I grew weak. என்று கூறியவர் = ராமலிங்க அடிகள்.

அயோத்தி தாசர்

19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
  • தமிழ் அறிஞரும், சித்த மருத்துவரும் = பண்டிதர் அயோத்தி தாசர் ஆவார்.
  • அயோத்தி தாசர் பிறந்த இடம் = சென்னை.
  • கல்வியை வலிமை பெறுவதற்கான கருவியாக கருதியவர் = அயோத்தி தாசர்.
  • ஒடுக்கப்பட்டோரின் கோவில் நுழைவிற்கு ஆதரவாக அயோத்தி தாசர் உருவாக்கிய அமைப்பு = அத்வைதானந்தா சபா (Advaidananda Sabha).
  • “திராவிடர்க் கழகம்” என்னும அமைப்பை நிறுவியவர்கள் = அயோத்திதாசர், ஜான் ரத்தினம்.
  • அயோத்திதாசர் “திராவிடர் கழகம்” என்னும் அமைப்பை உருவாக்கிய ஆண்டு = 1882.
  • “திராவிட பாண்டியன்” என்னும் இதழை துவங்கியவர் = அயோத்திதாசர்.
  • அயோத்திதாசர் “திராவிட பாண்டியன்” என்னும் இதழை துவங்கிய ஆண்டு = 1885.
  • “திராவிட மகாஜனசபை” என்னும் அமைப்பை துவக்கியவர் = அயோத்திதாசர்.
  • அயோத்திதாசர், எந்த ஆண்டு திராவிட மகாஜனசபை என்னும் அமைப்பை துவக்கினார் = 1891.
  • அயோத்திதாசரின் திராவிட மகாஜனசபை அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்ற இடம் = நீலகிரி.
  • யாருடைய தாக்கத்தின் காரணமாக அயோத்திதாசர் பௌத்த சமயத்தை தழுவினார் = பிரம்மஞான சபை நிறுவனரான கர்னல் எச்.எஸ்.ஆல்காட்.
  • அயோத்திதாசர் எந்த நாட்டிற்கு சென்று பௌத்த மதத்தை தழுவினார் = இலங்கை (1898).
  • “சாக்கிய பௌத்த சங்கம்” என்னும் அமைப்பை நிறுவியவர் = அயோத்திதாசர்.
  • அயோத்திதாசர் சாக்கிய பௌத்த சங்கம் நிறுவிய இடம் = சென்னை.
  • எந்த ஆண்டு அயோத்திதாசர், சாக்கிய பௌத்த சங்கத்தை நிறுவினார் = 1898.
  • அயோத்திதாசர் துவக்கிய வாராந்திர பத்திரிக்கை = ஒரு பைசாத் தமிழன்.
  • அயோத்திதாசர் “ஒரு பைசாத் தமிழன்” என்னும் இதழை துவக்கிய ஆண்டு = 1907.
  • அயோத்திதாசர் மறைந்த ஆண்டு = 1914.

புத்தக வினாக்கள்

  1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது? = 1829.
  2. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் என்ன? = ஆரியசமாஜம்.
  3. யாருடைய பணியும் இயக்கமும், 1856 ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது? = ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்.
  4. “ராஸ்ட் கோப்தார்” யாருடைய முழக்கம்? = பார்சி இயக்கம்.
  5. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்? = பாபா ராம்சிங்.
  6. விதவை மறுமண சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்? = மகாதேவ் கோவிந்த ரானடே
  7. “சத்யார்த்தபிரகாஷ்” எனும் நூலின் ஆசிரியர் யார்? = தயானந்த சரஸ்வதி.
  8. ____________ சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்? = இராமலிங்க அடிகள்.
  9. புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் ________________? = மகாதேவ் கோவிந்த ரானடே
  10. குலாம்கிரி நூலை எழுதியவர் ______________________? = ஜோதிபா கோவிந்தராவ் புலே.
  11. இராமகிருஷ்ண மிஷன் _______________ ஆள் நிறுவப்பட்டது? = சுவாமி விவேகானந்தர்.
  12. ______________ அகாலி இயக்கத்தின் முன்னோடி இயக்கமாகும்? = சிங்சபா.
  13. “ஒரு பைசாத் தமிழன்” பத்திரிக்கையைத் துவக்கியவர் ___________ ஆவார்? = அயோத்திதாசர்.

 

Leave a Reply