Skip to content
20 ஆம் நூற்றாண்டு காப்பியங்கள்
20 ஆம் நூற்றாண்டு காப்பியங்கள்
- பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன.
- பாரதியார் = பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு
- பாரதிதாசன் = பாண்டியன் பரிசு, புரட்சிக்கவி, வீரத்தாய்.
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை = மருமக்கள்வழி மான்மியம்
- கண்ணதாசன் = ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், மாங்கனி
- முடியரசன் = பூங்கொடி, வீரகாவியம்
- கவியோகி சுத்தானந்த பாரதி = பாரதசக்தி மகாகாவியம்
- சாலை இளந்திரையன் = சிலம்பின் சிறுநகை
- புலவர் குழந்தை = இராவண காவியம்
- யாப்பு வடிவத்தை உடைத்து வளர்த்தெடுக்கப்பட்ட புதுக்கவிதைகளிலும் காப்பியங்கள் தற்காலத்தில் படைக்கப்படுகின்றன.
- பாரதியின் வாழ்க்கை வரலாற்பறைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார் வைரமுத்து.
- கவிஞர் வாலி இராமாயணத்தை அவதார புருஷன் பஎன்ற பெயரிலும், மகாபாரதத்தைப் பாண்டவர் பூமி என்ற பெயரிலும் புதுக்கவிதை வடிவில் காப்பியமாக்கியுள்ளார்.
Related