6th Samacheer Kalvi History Study Material in Tamil – 1

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்:

  • பழங்கால இந்தியாவை அ) வரலாற்றுக்கு முந்தைய காலம் ஆ) வரலாற்றுக்கு பிந்தைய காலம் (அ) வரலாற்று காலம் இரு வகையாக பிரிக்கலாம்.
  • அக்கால மனிதர்கள் குறித்த எழுத்துப்புர்வமான ஆதாரங்களும், பிற ஆதாரங்களும் கொண்ட காலத்தை வரலாற்றுக்காலம் என்கிறோம்.
  • இலக்கியங்கள், வரலாற்றுக் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் போன்றவை இத்தகைய எழுத்துப்பூர்வமான ஆதாரங்களாகும்.
  • வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை பற்றி அறிய அக்காலத்தை சார்ந்த பொருள்கள், சிதைவுகள், கற்கள், மரங்கள், விலங்குகளின் கொம்புகள், எலும்புகள், கற்கருவிகள், மண்டை ஓடுகள், படிமங்கள் போன்றவை உலகின் பல்வேறு பகுதிகளில் கிடைத்துள்ளன.
  • வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பதை
  • பழைய கற்காலம் – Palaeolithic age (கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்)
  • புதிய கற்காலம் – Neolithic age (கி.மு. 10,000 – கி.மு. 4,000)
  • செம்பு கற்காலம் – Chalcolithic age (கி.மு. 3,000 – கி.மு. 1,500)
  • இரும்பு காலம் – Iron age (கி.மு. 1,500 – கி.மு. 600) என்று வகைப்படுத்தலாம்.
  • ஆதிமனிதன் பயன்படுத்திய கற்கருவிகளை கொண்டு கற்காலத்தை பழைய கற்காலம், புதிய கற்காலம் என இருவகையாக பிரிக்கலாம்.

பழைய கற்காலம்

  • பழைய கற்காலத்தில் மனிதன் உணவை தேடி நாடோடியாக அலைந்தான் பழைய கற்காலத்தில் மனிதன் சிக்கிமுக்கி கற்களை கொண்டு நெருப்பைக் கண்டுபிடித்தான். இது ஒரு எதிர்பாராத நிகழ்வாகும்.
  • ஆதிமனிதன் இடி, மின்னல் முதலியவற்றிக்கு பயந்து இயற்கையை வணங்கினான்.
  • இலை, தழைகள், மரப்பட்டைகள், விலங்குளின் தோல் ஆகியவற்றை உடையாகப் பயன்படுத்தினான்.
  • கரடுமுரடான கற்கள் (குவாட்சைட்), மரக்கிளைகள், எலும்புகள், விலங்குகளின் கொம்புகளை வேட்டையாடும் கருவியாக பயன்படுத்தினான். வேட்டையில் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.
  • மடியில் குழந்தையை கட்டிக்கொண்டு ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஓவியம் மத்தியபிரதேசத்திலுள்ள பிம்பேட்கா குகையில் உள்ளது.
  • இந்தியாவில் பழைய கற்கால கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ள இடங்கள்) : சோன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கா, மஹேஸ்வா (மத்திய பிரதேசம்) லுனி ஆற்றுச் சமவெளி (இராஜஸ்தான்) பாகல்கோட் (கர்நாடகம்) கர்னுல் குகைகள், ரேணிகுண்டா (ஆந்திரபிரதேசம்) வடமதுரை, அத்திரப்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலுர், திருவள்ளுர் (தமிழ்நாடு)

புதிய கற்காலம்

  • புதிய கற்காலத்தில் கூட்டு வாழ்க்கை முறை பின்பற்றப்பட்டது.
  • புதிய கற்காலத்தில் மக்கள் களிமண் குடிசைகள், கூரை வீடுகள் ஆகியவற்றில் தங்கி வாழ்ந்தனர்.
  • புதிய கற்காலத்தில் மக்கள் உழவுத்தொழிலை மேற்கொண்டனர்.
  • புதிய கற்கால மனிதன் விலங்குகளை பழக்கி வளர்த்தான்.
  • முதலில் பழக்கிய விலங்கு நாய். இது வேட்டையின் போது உடன் சென்று உதவியது.
  • புதிய கற்காலத்தில்தான் சக்கரமும் உருவாக்கப்பட்டது.
  • இதன் விளைவாக பொருள்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்கு விரைவாக எடுத்துச்செல்லப்பட்டது.
  • புதிய கற்கால மனிதன் சக்கரத்தை பயன்படுத்தி மட்பாண்டங்கள் செய்தான்.
  • புதிய கற்காலத்தை சேர்ந்த மண்பாண்டங்கள் தமிழகத்தின் நெல்லை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் கிடைத்துள்ளன.
  • புதிய கற்காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை பின்பற்றப்பட்டது. அவ்வாறு புதைக்கும் போது அவர்களுடன் பழகிய விலங்குகளையும் புதைக்கும் சேர்த்து வீட்டின் முற்றத்திலேயே புதைத்தனர்.
  • திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லுரில் கி.பி. 2004ல் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது ஓரே இடத்தில் 160க்கும் அதிமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மண்தாழி அடக்கம் என்பது நினைவுச் சின்னம் இல்லாமல் அடக்கம் செய்யும் முறையாகும்.
  • கோடாரி, எலும்பு கைப்பிடிகள், துண்டில் முள், ஊசிகள், வெட்டுக்கருவிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.
  • புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் திருநெல்வேலி, தான்றிக்குடி (கொடைக்கானல் மலை), புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம் நாய், ஆடு, பசு, எருது போன்றவை வீட்டு விலங்குகளாக வளர்க்கப்பட்டன.
  • மனித நாகரீக வளர்ச்சியின் அடுத்த படிநிலையை புதிய கற்காலம் எனலாம்.

உலோக காலம்

  • மனிதன் அறிந்த முதல் உலோகம் செம்பு. ஹரப்பா நாகரிகம் செம்பு கற்காலத்தைத் சேர்ந்தது.
  • செம்பு கற்காலத்தில் செம்பினால் கருவிகள் செய்தனர்.
  • அத்துடன் சிறு கற்கருவிகளையும் பயன்படுத்தினர்.
  • இதனால் அக்காலம் செம்புகற்காலம் எனப்பட்டது.
  • செம்பு கற்காலத்தில் மனிதன் பயன்படுத்திய மண்பாண்டங்களின் மேல் வண்ண ஓவியங்கள் வரைந்தனர். இவை வரிக்கோலங்களாக அமைந்திருந்தது.

இரும்புக் காலம்

  • இரும்பினால் கருவிகள் செய்த காலம் இரும்புக்காலம் எனப்படும் வீட்டுச்சாமன்களும், பயிர்த்தொழில் கருவிகளும் இரும்பினால் செய்யப்பட்டன.
  • உலோகத்தை உருக்கி கருவிகள் செய்ய அறிந்திருந்தனர்.
  • வேதகால நாகரிகம் இரும்புக் காலத்தைச் சார்ந்தது.

முக்கிய தோற்றங்கள்

  • ஆண்டுகள் புமியின் தோற்றம் – 460 கோடி ஆண்டுகளுக்கு முன்
  • மனிதனின் தோற்றம் – 40,000 ஆண்டுகளுக்;கு முன் ( ஹோமா செப்பியன்ஸ்)
  • வேளாண்மை தோன்றிய காலம் சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்
  • நகரங்களின் தோற்றம் – 4,700 ஆண்டுகளுக்கு முன்
  • கி.மு. – கிறிஸ்து பிறப்பதற்கு முன்
  • கி.பி. – கிறிஸ்து பிறந்தபின்
  • திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 3
  • கி.மு. திருவள்ளுவருக்கு முன் கி.பி. திருவள்ளுவருக்குப் பின்

உலோக் கலவைகள்

  • இரும்பு + குரோமியம் = சில்வர்
  • செம்பு + வெள்ளியம் = வெண்கலம்
  • செம்பு + துத்தநாகம் = பித்தளை
  • இரும்பு + மாங்கனீசு = எஃகு

Leave a Reply