6th Samacheer Kalvi History Study Material in Tamil – 2

சிந்துசமவெளி நாகரிகம்

 • இந்தியாவின் மிகத்தொன்மை வாய்ந்த நகர நாகரிகமான
 • சிந்துசமவெளி (ஹரப்பா) நாகரிகம் செம்பு காலத்தைச் சேர்ந்தது.
 • 1921இல் பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதியின் கிளைநதியான ராவி நதிக்கரையில் அகழ்வாராய்ச்சி செய்து சிந்துவெளி நாகரிகத்தை கண்டறிந்தனர்.
 • ஹரப்பா என்ற சிந்தி மொழிச்சொல்லுக்கு ‘புதையுண்ட நகரம்’ என்று பொருள் ஹரப்பா நாகரிகம் சுமார் 4,700 வருடங்களுக்கு முற்பட்டது.
 • ஹரப்பா நகரங்களின் இடிபாடுகள் மொகஞ்சதாரோ, சான்குதாரோ, கலிபங்கன், லோத்தல் போன்ற பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டன.
 • சிந்துசமவெளி நகரங்களின் கோட்டை பகுதியில் கட்டமைப்பு நுணுக்கங்கள் மிக்க குளம் அமைக்கப்பட்டிருந்தன.
 • பெருங்குளத்தின் அளவு நீளம் 11.38 மீ, அகலம் 7 மீ, ஆழம் 4 மீ குளம் மெழுகு பூசிய சுட்ட செங்கற்களால் நீர் கசியாமல் இருக்குமாறு கட்டப்பட்டுள்ளது.
 • வீடுகள் வரிசையாகவும் ஒழுங்காகவும் நேர்த்தியுடனும் கட்டப்பட்டிருந்தன.
 • மண்டபம், தானியகளஞ்சியம் போன்ற பொது கட்டடங்களும் இருந்தன.
 • நகரின் வடபகுதி குறுகலாகவும் உயரமாகவும் இருந்தது.
 • கிழக்குப்பகுதி விரிந்தும், சற்றுத் தாழ்வாகவும் அமைந்துள்ளது.
 • மொகஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு ‘இடுகாட்டு மேடு’ என்று பொருள்.
 • பொது கழிவுநீர்த் திட்டம், பொதுக்குளம், பொது மண்டபம், தெருவிளக்குகள், தெருக்களில் காணப்படும் குப்பைத் தொட்டிகள் போன்றவை அங்கு நகர நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டுள்ளதை காட்டுகிறது.
 • பயன்பாட்டு அறிவியல் தொழில் நுட்பங்கள் நடைமுறையில் இருந்துள்ளன.
 • மக்கள் கடல் வழி வாணிகம் செய்து அலோகங்கள், விலையுயர்ந்த கற்கள், அணிகலன்கள் போன்ற பல்வேறு பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்துள்ளனர்.
 • ஆயுதங்கள், வீட்டுச்சாமன்கள், கருவிகள் செய்ய செம்பையும், வெண்கலத்தையும் பயன்படுத்தினர்.
 • இரும்பினை அறிந்திருக்கவில்லை.
 • சித்திர வடிவிலான எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன.
 • எழுத்துக்கள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் எழுதப்பட்டுள்ளன.
 • விவசாயம் முக்கிய தொழிலாக அமைந்துள்ளது. கோதுமை, பார்லி போன்றவற்றை விளைவித்துள்ளனர்.
 • மக்கள் பருத்தி, கம்பளி ஆடைகளை அணிந்தனர்.
 • வேட்டியை கீழாடையாகவும், சால்வையை மேலாடையாகவும் அணிந்தனர்.
 • தங்கமும், வெள்ளி, தந்தம், விலையுயர்ந்த கற்களால் அணிகலன்கள் செய்யப்பட்டுள்ளன. ஏழைகள் கிளிஞ்சல், தாமிரம் போன்றவற்றால் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிந்தனர். ஆண், பெண் இருபாலரும் அணிகலன்கள் அணிந்துள்ளனர்.
 • சிந்துசமவெளி மக்கள் டெர்ராகோட்டா எனப்படும் சுடுமண் பாண்டம், சுடுமண் பொம்மைகள் செய்வதில் திறமை மிக்கவர்கள்.
 • மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டுள்ள வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச்சிலை, தாடியுடன் காட்சி தரும் ஒருவரின் சுண்ணாம்புகல் சிலை போன்றவை மக்களின் சிற்ப வேலைத்திறனுக்கு சான்றாகும்.
 • பசுபதி என்ற சிவனையும், பெண் கடவுளையும், லிங்கம், சுலம், மரம் முதலியவற்றையும் வணங்கினர்.
 • அதிகமான முத்திரைகள் ஹரப்பாவில் காணப்படுகிறது.
 • நகரங்களின் அழிவிற்கான காரணங்கள் மரத்தால் ஆன பொருள்கள் காணப்பெறாமையால் அவை பெருந்தீயில் அழிந்திருக்கலாம்.
 • உள்நாட்டுப் போரில் தோன்றி கலகத்தின் விளைவாகவும் அவை அழிந்திருக்கலாம்.
 • இயற்கைக் காரணங்களாலும், அடிக்கடி மாறும் தன்மையுள்ள சிந்து ஆற்றின் வெள்ள பெருக்கினாலும் அவை புதையுண்டிருக்கலாம்.
 • ஆரியர்கள், இந்நகரங்களை அழித்து முன்னேறியிருக்கலாம்.
 • மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எலும்புக்குவியல், அந்நகரம் அந்நகரம் அயலவரின் படையெடுப்புக்குள்ளாகியிருக்கலாம்.
 • சிந்துசமவெளி நாகரிகம் பற்றி அறிய உதவுவது – அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் மொகஞ்சதாரோ என்பதன் பொருள் – இடுகாட்டு மேடு
 • ஹரப்பா நாகரிகம் – நகர நாகரிகம்
 • சிந்துவெளி மக்களுக்குத் தெரிந்திராத உலோகம் – இரும்பு
 • ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லின் பொருள் – புதையுண்ட நகரம்.[/su_list][/su_box]

Leave a Comment

Your email address will not be published.