6th Samacheer Kalvi History Study Material in Tamil – 3

பண்டையத் தமிழகம்

  • விந்திய மலைக்கு தெற்கிலுள்ள பகுதி, உலகிலேயே மிகமிகத் தொன்மையானது என்று வரலாற்று அறிஞர் கூறுவர்.
  • ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னாட்டின் பெரும்பகுதி சென்னை மாகாணம் என்றழைக்கப்பட்டது.
  • 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு என்று பெயர் இடப்பட்டது.
  • தமிழ்நாடு சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களால் பண்டைக்காலம் முதல் ஆளப்பட்டு வந்தது.
  • தென்னாட்டின் தென்பகுதியைப் பாண்டியர்களும், மேற்குப் பகுதியை சேரர்களும், வடகிழக்குப் பகுதியைச் சோழர்களும் ஆண்டு வந்துள்ளனர்.
  • வரலாற்றுக் காலத்திற்கு முன்னர் குமரி முனைக்குத் தெற்கே உள்ள இந்துமாக்கடல் பகுதி, குமரிக் கண்டம் என்ற ஒரு பெருநிலப்பரப்பாக இருந்தது.
  • தலைச் சங்கம் பாண்டியர் தலைநகர் தென்மதுரையில் கூடியது.
  • பின்னர் தென்மதுரை உள்ளிட்ட பெரும்நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால் கபாடபுரத்தை தலைநகராக கொண்டு இடைச்சங்கம் நடைபெற்றது.
  • மதுரை மூதுரில் கடைச்சங்கம் நடைபெற்றது.
  • கடற்கோளால் மூழ்கிப்போன குமரிக் கண்டத்தில்தான், பல்லுயிர்களும் பெருகுதற்கேற்ற தட்பவெப்பச் சுழல் நிலவியது.
  • குமரிக் கண்டத்திற்கு முன்னதாக அப்பகுதியை உள்ளடக்கிய ஒரு பெரும் கண்டம், ஆப்பிரிக்காவையும், ஆஸ்திரேலியாவையும் இணைக்குமாறு நிலவியதென்றும், அக்கண்டத்தில் வாழ்ந்த லெமூர் என்ற குரங்கினத்தின் பெயரால் அக்கண்டம் லெமூரியா எனப்பெயர் பெற்றது.
  • முதல் மனித இனம் குமரிக்குத் தெற்கே இருந்த கண்டத்தில்தான் தோன்றியது.
  • சங்ககாலம் என்பது கடைச்சங்கத்தில் புலவர்கள் கூடி ஆய்வு செய்த காலமாகும். அது கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை 400 ஆண்டுகாலமாகும். கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை என்று கொள்வோரும் உண்டு.
  • கி.மு. – கி.பி. என்பது திருவள்ளுவரின் பிறப்பாண்டான கி.மு. 31ஆம் ஆண்டை மையமாக வைத்து கணக்கிடுவதாகும்.
  • சங்க இலக்கியம் என கிடைத்துள்ள நூல்கள் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஆகும். அவற்றிலுள்ள செய்யுள்களை கபிலர், பரணர், ஔவையார், நக்கீரர் முதலான பலநூறு புலவர்கள் இயற்றியுள்ளனர்.
  • கடைச்சங்க காலத்திற்கு தமிழின் பெருமைக்கு அடையாளமாக அரும்பெரும் இலக்கியமான தொல்காப்பியம் தோன்றியுள்ளது.
  • சங்ககாலத்திலேயே திருக்குறள் தோன்றி இருக்கிறது.
  • சங்ககாலத்தில் புகார் என்னும் காவிரி பும்பட்டினம், கொற்கை, முசிறி, தொண்டி, வஞ்சி முதலான பல துறைமுகங்கள் இருந்தன.
  • எகிப்து, யவனம், ரோம், சீனம் முதலான பல நாடுகளுடன் வணிகம் செய்து வந்தது தமிழகம்.
  • மொகன்-சா-தோரோ, ஹரப்பா முதலான பகுதிகளில் நிலவிய நகரமைப்பு, நாகரிகம் தென்னகத் தமிழ் மக்களின் நாகரிகத் தொடர்புடையதாக இருந்துள்ளது.
  • மலைகளும் அது சார்ந்த நிலமும் குறிஞ்சி காடுகளும் அது சார்ந்த நிலமும் முல்லை கடலும் கடற்கரை பகுதியும் நெய்தல் நீர்வளத்துடன் வயல் சுழ்ந்த பகுதி மருதம் கடும் வறட்சிக்கு உள்ளாகி திரிந்த நிலத்தை பாலை என வழங்கினர்.
  • பாண்டிய அரசர்களுள் பாண்டியன் முடத்திருமாறனும், தலையாங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனும், சிலப்பதிகாரப் புகழ் பாண்டியன் நெடுஞ்செழியனும் குறிப்பிடத்தக்கவர்கள்.
  • சேரர் மரபில் வடக்கில் இமயம் வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்களான இயமவரம்பன் நெடுஞ்சேரலாதன், சிலம்பு புகழ் சேரன் செங்குட்டுவன் ஆகியோர் புகழ் ஓங்கியவர்கள்.
  • சோழ மரபில் கரிகால் பெருவளத்தான், கிள்ளிவளவன் ஆகியோர் புகழ் மிக்கவர்கள்.
  • கரிகாலன் தனது ஆட்சியில் ஈழத்தை வென்று, அந்நாட்டவரைக் கைதிகளாக கொண்டு வந்து, அவர்களைக் கொண்டு காவிரி நதிக்குக் கரை கட்டினான்.
  • கல்லணை கரிகாலன் கட்டியதே.
  • இடைக்காலத்தில் வாழ்ந்த இராசராசசோழன், இராசேந்திர சோழன் ஆகியோர் வடபுலத்தை மட்டுமின்றி ஜாவகம், கடாரம் முதலான கீழ்த்திசைகளையும் வென்றதாக வரலாறு கூறுகிறது.
  • குறுநில மன்னராக விளங்கிய பாரி, ஓரி, காரி, நள்ளி, எழினி, பேகன், ஆய் ஆகிய எழுவரும் கடையெழு வள்ளல்கள் என்ற புகழுக்குரியவர்கள் சங்க காலத்தில் பெண்கள் உரிமை கொண்டவராக இருந்ததால், காதல் அடிபடையில் மண வாழ்க்கை அமைந்தது.
  • சங்ககால மக்கள் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தவர்களின் நடுகல்லையும், தமது முன்னோர்களையுமே வழிபட்டு வந்தனர்.
  • அறுவடை விழா, பொங்கல் விழா, இளவேனில் பருவவிழா போன்ற விழாக்களை மக்கள் கொண்டாடினர்.
  • தலைநகர்களில் இந்திரவிழாவும் கொண்டாடப்பட்டது.
  • உலகிலேயே மிகத் தொண்மையான வரலாற்றிஞர்களால் கருதப்படுவது – விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள பகுதி.
  • வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் கன்னியாகுமரிக்கும் குமரிக் கண்டம் அமைந்திருந்த பெருநிலப்பரப்பு.
  • மனித இனம் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் இடம் –  லெமூரியா
  • திருவள்ளுவர் பறிந்த ஆண்டாகத் தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு – கி.மு. 31 இடைச் சங்கம் நடைபெற்ற நகரம் – கபாடபுரம்

Leave a Reply