6th Samacheer Kalvi History Study Material in Tamil – 4

வேதகாலம்

  • ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் குடியேறியவர்கள்.
  • சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர், பின்னர் சில நூற்றாண்டுகளில் வட இந்தியா, முழுவதிலும் பரவிக் குடியமார்ந்தனர்.
  • இந்தியாவில் அவர்கள் குடியேறிய பகுதி அரிய வர்த்தம் எனப்பட்டது. ஆரியர்கள் கால்நடைகளைக் கொண்டு வாழ்வு நடத்தினர்.
  • வரலாற்றில் இக்காலக்கட்டம் வேதகாலம் என்று அழைக்கப்படுகிறது.

முற்பட்ட வேதகாலம் (அ) ரிக் வேதகாலம் (கி.மு.1500 – கி.மு. 1000)

  • ரிக்வேதம் தொகுத்த காலத்தில் ஆரியர்கள் பெரும்பாலும், இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்துப் பகுதியிலேயே வாழ்ந்தனர். அவர்கள் முதலில் பஞ்சாபில் இருந்த சப்தசிந்து எனப்பட்ட (எழு நதிகள் பாயும் நிலம்) பகுதியில் குடியேறினர்.
  • ஆரியர்களின் சமூக சமுதாய அமைப்பு குடும்பம் – கிராமம் – விஸ் – ஜனா – ஜனபதா என்பதாக அமைந்திருந்தது.
  • சமுதாயத்தின் அடிப்படை அலகு குடும்பம், பல குடும்பங்கள் இணைந்தது கிராமம், கிராமத்தின் தலைவர் கிராமணி பல கிராமங்கள் இணைந்து விசு (விஸ்) என்ற பெரிய குழுவானது. இதன் தலைவர் ‘விசுவபதி’ பெரிய ஆட்சி அமைப்பு ‘ஜனா’ இதன் தலைவன் ராஜன் (அரசன்) .
  • ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள் பிரஜைகள் எனப்பட்டனர்.
  • அரசர் பிரஜாபதி என்றும் அழைக்கப்பட்டார். அரசப்பதவி பரம்பரை உரிமையாகக் கருதப்பட்டது.
  • சபா – முதியவர் அவை.
  • சமிதி – ஊர்மக்களின் பிரநிதிகளைக் கொண்ட அவை குடும்பத்தின் தலைவன் தந்தை. ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் கல்வி கற்றனர்.
  • விஸ்வவாரா, அபலா, கோசா, லோபமுத்ரா போன்ற பெண் கவிஞர்களும் இருந்தனர்.
  • ஒருதார மணம், பலதாரமணம் ஆகியவை நடைமுறையில் இருந்தன. விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
  • ரிக் வேதகால மக்கள் கால்நடை வளர்ப்பையும், வேளாண்மையையும் முக்கியத் தொழில்களாகக் கொண்டனர்.
  • இரும்பின் பயனை நன்கு அறிந்திருந்ததால் பல கருவிகள் செய்தனர். நூல் நூற்றல் மற்றொரு முக்கியுத் தொழிலாகும்.
  • பருத்தி, கம்பளி ஆடைகளை உற்பத்தி செய்தனர்.
  • பொற்கொல்லர்கள் அணிகலன்களையும். குயவர்கள் வீட்டுப் பயன்பாட்டிற்கான மண் பாண்டங்களையம் உற்பத்தி செய்தனர்.
  • பண்டமாற்று முறை வழக்கத்திலிருந்தது. நதிகள் போக்குவரத்துக்குப் பயன்பட்டன. நி‘கா என்ற தங்க அலகுகள் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்டன.
  • வேத கால மக்கள் கோதுமை, பார்லி, பால், தயிர், நெய், காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்றவற்றை உணவாகக் கொண்டனர். சோம சுரா பானங்களைப் பருகினர்.
  • பருத்தி, கம்பளி உடைகளை உடுத்தினர்.
  • இயற்கையையும், அதன் சக்கியையும் வணங்கினர். சூரியன், நெருப்பு, காற்று, வானம், மரங்கள் ஆகியவற்றை வழிபட்டனர்.
  • இந்திரன், வருணன், அக்னி, எமன் ஆகிய கடவுள்களை வணங்கினர். கோயில்களோ, சிலை வழிபாடோ முந்தைய வேதகாலத்தில் இல்லை.
  • அஸ்வமேதம், இராஜசூயம், வாஜபேயம் ஆகிய யாகங்கள் நடத்தப்பட்டன.
  • முற்பட்ட வேதகால மக்கள் காபுலிலிருந்து – மேல்கங்கைவரை பரவி இருந்தனர்.

 

பிற்பட்ட வேதகாலம் (கி.மு.1000 – கி.மு.600)

  • ரிக் வேத காலத்திற்குப் பின்னர் சாம, யஜூர், அதர்வண வேதங்களின் காலத்தைப் பிற்பட்ட வேதகாலம் எனலாம்.
  • இக்காலத்தில் முக்கிய அரசாட்சிப் பகுதியாகக் கங்கைச் சமவெளி அமைந்திருந்தது.
  • இப்பகுதியில் கோசலம், விதேகம், குரு, மகதம், காசி, அவந்தி, பாஞ்சாலம் போன்ற அரசுகள் தோன்றின.
  • இரும்பு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. நெல், கருநிலத்திற்குச் சாண உரமிடும் முறை தோன்றியது. கம்பு, பார்லி, கோதுமை பயிரிடப்பட்டன.
  • நிஷ்கா, சுவர்ணா, சதமானா முதலான தங்க, வௌ;ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.
  • இக்காலத்தில் சாதி அமைப்பு முறை தோன்றி வலுப்பட்டது.
  • இது வருண தர்மம் என்றும் அழைக்கப்பட்டது.
  • யாகம் மற்றும் புரோகிதம் செய்வோர் பிராமணர்கள் என்றும், உயிரைப் பணயம் வைத்துப் போர்புரிந்து நாட்டைக் காப்பவர்களும், ஆள்பவர்களும் சத்திரியர்கள் என்றும், பயிர்த்தொழிலும், வாணிகமும் செய்வோர் வைசியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இம்மூன்று பிரிவினருக்கும் குற்றேவல் செய்வோர் சூத்திரர்கள் எனப்பட்டனர்.
  • வேதகாலத்தில், மகளிர் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை.
  • கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இருந்தது.
  • கார்கி, மைத்ரேயி போன்ற பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினர்.
  • பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் (சிவன்) ஆகியோர் முக்கியத்துவம் பெற்றனர்.
  • மக்கள் ஆன்மா, வினைப்பயன், மோட்சம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
  • ரிக் வேதகால காலம் –  கி.மு.1500-கி.மு.1000
  • ரிக் வேதகாலத்தில் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நாணய அலகு – நிஷ்கா
  • பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் – கார்கி

Leave a Reply