6th Samacheer Kalvi History Study Material in Tamil – 5

சமணமும் பௌத்தமும்

  • சமண மத்தை உருவாக்கியவர்கள் வர்த்தமான மகாவீரர்.
  • பௌத்த மதக் கருத்துகளை வழங்கியவர் கௌதமபுத்தர்.
  • முதல் தீர்த்தக்காரர் ஆதிநாதர் எனப்படும் ரியூப தேவர் ஆவார். இறுதியாக 24 ஆவதாக வந்தவர் வர்த்தமான மகாவீரர்.
  • வர்த்தமான மகாவீரரின் காலம் கி.மு.534 முதல் கி.மு. 462 வரையாகும். இவர் இன்றைய பீகார் மாநிலத்தில், வைசாலி நகருக்கு அருகிலுள்ள குந்தக் கிராமம் என்னும் ஊரில் பிறந்தார்.
  • இவரது தந்தை பெயர் சித்தார்த்தர். தாயின் பெயர் திரிசலை.
  • இவருக்கு யசோதா என்ற மனைவியும், அனோஜா பிரியதர்சனா என்ற மகளும் இருந்தனர்..
  • வர்த்தமானர் தனது 30 ஆம் வயதில் இல்வாழ்க்கையைப் புறந்தள்ளி முற்றிலும் ஒதுக்கிவிட்டுத் துறவியானார்.
  • பல்வேறு பிரச்சனைகளுக்கு விடைதேடி 12 ஆண்டுகள் கடுமையான தியானத்தில் ஆழ்ந்தார்.
  • இதன் காரணமாக வெற்றியாளர் என்பதைக் குறிக்கும் ஜினர் என்ற சொல்லால் அழைக்கப்பட்டார்.
  • தான் கண்ட உண்மைகளை ஊர்ஊராகச் சென்று 30 ஆண்டுகள் பிரச்சாரம் செய்தார்.
  • கொல்லாமைக் கொள்கை சமண சமயம் உயிரிஏக்கம் எனப்படும் அகிம்சையை மிகவும் வலியுறுத்தியது.
  • வணிகமே சமணர்களின் முக்கியத் தொழில்.
  • வர்த்தமானர் போதித்த மும்மணிகள் : நல்லறிவு, நன்னம்பிக்கை, நன்னடத்தை
  • ஐந்து ஒழுக்கங்கள் 1) ஊறு செய்யாமை, 2) பொய்யாமை, 3) கனவாமை, 4) உடைமை மறுத்தல், 5) புலனடக்கம்
  • சமண சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள்: சந்திரகுப்த மௌரியர், கலிங்கத்துக் காரவேலன், கூன் பாண்டியன், முதலாம் மகேந்திரவர்ம பல்லவர்
  • சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி வளையாபதி, சூளாமணி முதலிய காப்பியங்களையும், யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலவிருத்தி, நேமிநாதம், நன்னூல், அகப்பொருள் விளக்கம், இலக்கண விளக்கம் போன்ற இலக்கண நூல்களையும் நிகண்டுகளையும், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி திணைமாலை நூற்றைம்பது முதலிய அற நூல்களையும், இயற்றிச் சமணர்கள் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர்.

சமணக் கட்டடக் கலை:

  • இராஜஸ்தான் – மவுண்ட் அபு தில்வாரா கோயில்
  • கஜூராஹோ – சித்தூர்,
  • ரனக்பூர் – சமணர் கோயில்கள்.
  • சிற்பங்கள் : உதயகிரி, ஹதிகும்பா, கிர்னார், சிரவணபெலகொலா, கழுகு மலை
  • கோமதீஸ்வரர் சிற்பம் கர்நாடக மாநிலத்தில் சிரவணபெலகொலாவில் உள்ளது.
  • பௌத்தமதத்தைத் தோற்றுவித்தவர் சித்தார்த்தர் எனும் கௌதமபுத்தர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 563 முதல் கி.மு. 483 வரையாகும்.
  • நேபாள நாட்டில் உள்ள கபிலவஸ்து என்னும் ஊரில் பிறந்தார்.
  • இவரது தந்தை சாக்கியக் குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், தாய் மாயாதேவி 16ஆவது வயதில் யசோதரையை மணந்தார். இராகுலன் என்ற ஆண் மகவைப் பெற்றார்.
  • அறிவுணர்வு பெற்ற சித்தார்த்தர் ‚புத்தர்‛ ஆனார். அவர் ‘அறிவுணர்வு பெற்ற இடம், சுயாவில் உள்ள அரசமரத்தடியாகும்.
  • ‘புத்தர்’ என்ற சொல்லின் பொருள் ‘நல்லது எது, கெட்டது எது, என்பதை அறிந்து கொண்டவர்’ என்பது ஆகும்.
  • புத்தர் தனது முதல் போதனையை உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியின் அருகே சாரநாத்தில் உள்ள மான்புங்காவில் தொடங்கினார்.
  • துன்பங்களைப்பற்றிய புத்தர் கூறிய அறிவுரைகள், ‘நான்கு பேருண்மைகள்‛ என்றும் ஒழுக்க நெறிகள்பற்றி அவர் போதித்தவை, ‘ எண்வகை நெறிகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
  • நான்கு பேருண்மைகள் : 1) உலகம் துன்பமயமானது. 2) துன்பத்திற்குக் காரணம் ஆசையே. 3) ஆசையை ஒழித்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம். 4) ஆசையை ஒழிக்க எட்டு நெறிகள் ஆசையை ஒழிப்பதற்கான எட்டு நெறிகள் : நல்ல நம்பிக்கை, நல்ல பேச்சு, நல்ல வாழும் வழி, நல்ல சிந்தனை, நல்ல முயற்சி, நல்ல நடத்தை, நல்ல செயல், நல்ல தியானம் பௌத்தத் துறவிகளின் இந்த அமைப்பு சங்கம் எனப்பட்டது.
  • பௌத்த மதத்தையும் அரசர்கள் பலர் பின்பற்றினர்.
  • அவர்களில் முக்கியமானவர் அசோகர் ஆவார்.
  • புத்தமதம் ஹீனயானம், மஹாயானம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • ஹீனயானம் : புத்தரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் உருவ வழிபாடு செய்யாதவர்கள் மஹாயானம் : புத்தரைத் தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள். உருவ வழிபாடு செய்பவர்கள் இலங்கை, பர்மா, திபெத், சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இன்றளவும் பௌத்தமதம் பின்பற்றப்படுகிறது.
  • பௌத்த சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள், அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர்.
  • நம் நாட்டுத் தேசியச் சின்னமான நான்கு சிங்கங்கள் செதுக்கிய உருவம், அசோகரது ஷண்களின் முகப்பிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாகும்.
  • நமது தேசிய கொடியில் காணப்படும் 24 ஆரங்களைக்கொண்ட சக்கரம். அசோகரின் ஷண்டுகளில் காணப்படும் ‘தர்ம சக்கரம்’ என்பதே ஆகும்.
  • பௌதத்தத் துறவிகளின் விவகாரங்கள் (மடங்கள்) மிகுந்த மாநிலம் பீகார்.
  • பௌத்த சமய வரலாற்றை ஜாதகக் கதைகள் பெரிதும் விவரிக்கின்றன. கயா, சாஞ்சி, பர்கட் ஆகிய இடங்களில் புத்தர் காலத்தின் பல படைப்புகள் காணப்படுகின்றன.
  • அஜந்தா குகை ஒவியங்களும் எல்லோரா சிற்பங்களும் (மகாராஷ்டிரா மாநிலத்தில் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ளன) புத்தரின் சிறப்பை விவரிக்கின்றன. காந்தாரக் கலைச் சிற்பங்களும் புத்த சமயத்தைச் சார்ந்தவையே.
  • பௌத்த சமயத் துறவிகளின் பிரார்த்தனைக் கூடங்கள் சைத்தியங்கள் என்றும், மடாலயங்கள் விகாரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை மலைக் குகைகளைக் குடைந்து அமைக்கப்பட்டவையாகும்.
  • பௌத்த சமயக் கொள்கைகளைக் கூறும் மறைநூலுக்குத் திரிபிடகம் என்று பெயர். இது வியைபிடகம், சுத்தபிடகம், அபிதம்மபிடகம் என்ற மூன்று உட்பிரிவுகளைக் கொண்டது.
  • மணிமேகலையும் குண்டலகேசியும் பௌத்த நூல்கள்.
  • சமண முனிவர்கள் இயற்றியவை சிலப்பதிகாரம், நன்னூல் ( இலக்கணம்) சீவகசிந்தாமணி, வளையாபதி (இலக்கியம்)  6 சமணர்களின் புனித நூல்கள் – அங்கங்கள், புர்வங்கள் என்பனவாகும்.
  • சமண மதத்துக்கு உறுதியான அமைப்பைத் தந்தவர் – வர்த்தமான மகாவீரர்
  • சமண சமயம் மிகவும் வலியுறுத்திய கொள்கை – கொல்லாமை
  • தமிழ்நாட்டில் சமணச் சிற்பங்கள் காணப்படும் இடங்களுள் ஒன்று – கழுகு
  • மலை புத்தர் அறிவுணர்வு பெற்ற இடம் – கயா பௌத்த மதத்தைப் பின்பற்றிய அரசர்களுள் முக்கியமானவர்  –  அசோகர்

Leave a Reply