6th Samacheer Kalvi History Study Material in Tamil – 6

பேரரசுகளின் தோற்றம்

  • பல ஜனபதங்களை உள்ளடக்கிய பெரிய அமைப்பாக ‘மகாஜனபதங்கள் உருவாக்கப்பட்டன.
  • கோசலம், அவந்தி, வத்சம், மகதம், போன்றவை, பரம்பரை மன்னராட்சி மகாஜனபதங்களில் வலிமையானவை.
  • மகதம் பிற மகாஜன பதங்களை வென்று இறுதியில் பேரரசாக எழுச்சி பெற்றது.

மகாஜனபதங்கள் :

  1. அங்கம்,
  2. மகதம்,
  3. கோசலம்,
  4. காசி,
  5. வஜ்ஜி,
  6. மல்லம்,
  7. கேதி,
  8. வத்சம்,
  9. குரு,
  10. பாஞ்சாலம்,
  11. மத்ஸ்யம்,
  12. சூரசேனம்,
  13. அஸ்மகம்,
  14. அவந்தி,
  15. காந்தாரம்,
  16. காம்போஜம்
  • தலைநகராக முதலில், ‘சிராஸ்வதி நகரமும் பின்னர், ‘ இராஜகிருகம், என்னும் நகரமும் இறுதியாகப் ‘பாடலிபுத்திரம்‛ என்னும் நகரமும் இருந்தன.
  • அரியாங்க வம்சத்தைச் சேர்ந்தவர் பிம்பிசாரர்.
  • பிம்பிசாரரின் மகன் அஜாதசத்ரு தனது தந்தையையே சிறையில் அடைத்து ஆட்சியைக் கைப்பற்றினார்.
  • அஜாதசத்ரு கோசலம், அவந்தி, வைசாலி ஆகிய மகாஜனபதங்களுடன் நீண்டகாலம் போர் செய்து வெற்றிபெற்று மகதத்துடன் இணைத்தார்.
  • பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தவரும் அஜாதசத்ருவே.
  • அரியாங்க வம்சத்தை வீழ்த்தி சிசுநாகர் ஆட்சியைப் பிடித்தார். சிசுநாகர்களுக்குப் பின் நந்தவம்சத்தினர் ஆட்சிக்கு வந்தனர்.
  • மகாபத்மநந்தன் என்ற முதல் நந்தமன்னர் விந்திய மலைகளைக் கடந்து தக்காணப் பகுதிகளையும் கைப்பற்றினார். இவர் சிந்துநதி முதல் தக்காணம் வரையில் பரந்துவிரிந்த முதல் இந்தியப் பேரரசாக மகதத்தை உருவாக்கினார்.
  • நந்தவம்சத்துப் பேரரசர்கள் சமண மதத்தைப் போற்றுபவர்களாக இருந்தனர்.
  • நந்தமன்னரான தனநந்தனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, போரில் வென்று மகதப்பேரரசை மௌரியவம்சத்தைச் சேர்ந்த சந்திரகுப்தர் கைப்பற்றி ஆண்டார்.
  • செலூகஸ் நிகேடார் என்ற கிரேக்க மன்னனையும் தோற்கடித்து ஆப்கானிஸ்தானம், காந்தாரம் போன்ற பகுதிகளையும் தமது பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.
  • செலூகஸின் தூதுவரான மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞர் பாடலிபுத்திரத்தில் பல ஆண்டுகள் தங்கி, இந்தியாவைப்பற்றி, ‘இண்டிகா’ என்னும் நூலை எழுதினார்.
  • சந்திரகுப்த மௌரியர் சமண மதத்தைத் தழுவித் துறவியாகி அரியாணையைத் துறந்து சமண முனிவர் பத்திரபாகு என்பவருடன் தென் இந்தியாவிற்குச் சென்று விட்டார்.
  • சந்திரகுப்த மௌரியருக்குப்பின் அவர் மகன் பிந்துசாரர் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
  • பிந்துசாரருகுப்பின், அவரது மகன்களில் ஒருவரான அசோகர் மௌரியப் பேரரசரானார்.
  • மௌரியப் பேரரசிலிருந்து பிரிந்து சென்ற கலிங்கத்தின் மீது படையெடுத்தார்.
  • இனி போர் செய்வதில்லை என்று முடிவெடுத்து, படையெடுத்துப் போர் செய்து, வெற்றிபெறும் ‘திக் விஜயத்தை’ வெறுத்தார்.
  • மக்களிடம் தர்மத்தை வளர்க்க இவர் மேற்கொண்ட இடைவிடாத பயணங்கள், ‘தர்மவிஜயம்’ என்று குறிப்பிடப்படுகின்றன.
  • மக்களுக்கு உதவுதற்காகவே தர்மமகாமாத்திரர்கள் எனப்பட்ட சிறப்புப் பணியாளர்களை நியமித்தார்.
  • இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை (றுநடகயசந ளுவயவந) உருவாக்கிய சிறப்பு அசோகரையே சேரும்.
  • பௌத்த மதத்தை அசோகர் தழுவினார். கபிலவஸ்து, சாரநாத் புத்தகயா போன்ற பௌத்த நினைவிடங்களைச் செப்பனிட்டு விரிவுப்படுத்தினார்.
  • அசோகர், பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த மாநாட்டைக் கூட்டினார்.
  • அசோகர், இலங்கையில் பௌத்த மதத்தைப் பரப்பத் தன் மகன் மகேந்திரனை அனுப்பினார்.
  • சாஞ்சி, சாரநாத், லும்பினி போன்ற இடங்களில் காணப்படும் கலையழகு மிக்க பிரம்மாண்டமான பௌத்த ஷபிகள் காண்போரை வியக்க வைப்பவையாகும்.
  • அசோகரது கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை. வடமேற்கு எல்லைப் பகுதியில் கரோஸ்தி என்னும் எழுத்திலும், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் கிரேக்க எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.
  • வடக்குப் பகுதிக்குத் தட்சசீலமும், மேற்குப் பகுதிக்கு உஜ்ஜயினியும், தெற்குப் பகுதிக்குச் சுவர்ணகிரியும், கிழக்குப் பகுதிக்குத் தோசாலியும் தலை நகரங்களாக இருந்தன.
  • மையமான மகதம் போன்றவற்றைப் பேரரசரே பாடலிபுத்திரத்திலிருந்து ஆட்சி செய்தார்.
  • மகாமத்திரர் என்ற உயர் அதிகாரிகள் மாநிலங்களின் அதிகாரிகளாகவும், ஆளுநர்களாகவும் இருந்தனர்.
  • எல்லைப்பகுதிப் பாதுகாப்பைக் கண்காணித்தோர் ‚அந்த மகாமாத்திரர்‛ எனப்பட்டனர்.
  • மக்களது அறவாழ்க்கைக்கு உதவ தரும மகாமாத்திரர்கள் இருந்தனர்.
  • மௌரிய வம்சத்தின் கடைசி அரசரான பிருகத்திரதன் தன் படைத் தலைவர் புஷ்யமித்ரசுங்கனால் படுகொலை செய்யப்பட்டார்.

குஷானப் பேரரசு

  • மௌரியர்களின் வீழ்ச்சிக்குப்பின் இந்தியாவில் நிறுவப்பட்ட வலிமையான பேரரசு குஷானப் பேரரசு ஆகும்.
  • குஷான அரசை முதலாம் காட்பிளஸ் கி.பி.முதல் நூற்றாண்டில் நிறுவினார்.
  • இரண்டாம் காட்பிஸஸ் (கி.பி. 65-75) பஞ்சாபையும், கங்கைச் சமவெளியையும் கைப்பற்றினார்.
  • இரண்டாம் காட்பிஸஸ் இறந்தபின் கனிஷ்கர் (கி.பி.78 -101 ) குஷான அரியணையைக் கைப்பற்றினார்.
  • கனிஷ்கர் குஷான வம்சத்தின் தலைசிறந்த மன்னராக விளங்கினார்.
  • புருயூபுரம் என்ற பெஷாவரைப் புதுநகராக உருவாக்கித் தன் தலைநகராக ஆக்கினார்.
  • நான்காவது பௌத்த மாநாட்டைக் காஷ்மீரில் கூட்டினார்.
  • புகழ்பெற்ற பௌத்த அறிஞர்களான வசுபந்து, அசுவகோயூர், நாகார்ஜூனர் போன்றோர் பங்கேற்றனர்.
  • இம்மாநாட்டில்தான் மகாயான பௌத்த மதப்பிரிவு தோன்றியது.
  • இந்திய கிரேக்க நுட்பங்கள் இணைந்த காந்தாரக் கலையினால் புத்தர், பௌத்தத்துடன் தொடர்புடையோரின் புதிய சிற்பங்கள் உருவாக்கப்பட்டன.
  • பௌத்த மதத்தைப் பரப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகளாலும் இவர் இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டார்.
  • கனிஷ்கர் பதவிக்கு வந்த ஆண்டினை முதன்மையாக வைத்துச் சகசகாப்தம் என்னும் புதிய காலக்கணக்கீட்டு முறை உருவாயிற்று.
  • கனிஷ்கர் இறுதியில் அவரது கூடாரத்திலேயே சதிகாரர்களால் கொலை செய்யப்பட்டார்.
  • குஷானப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மகதத்தில் பாடாலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு உருவான பேரரசு குப்தப் பேரரசு ஆகும்.
  • குப்தவம்சத்தின் முதல் சுதந்தர மன்னராக முதலாம் சந்திரகுப்தர் (கி.பி. 319-335 ) குறிப்பிடப்படுகிறார்.
  • சமுத்திர குப்தரது (கி.பி. 335-375) வங்காளத்திலிருந்து சிந்துநதி வரையிலும் இமயமலையிலிருந்து விந்தியமலை வரையிலும் இப்பேரரசு விரிவாக்கப்பட்டது.
  • அலகாபாத் கல்வெட்டைப் பொறித்தவர் இவரது அமைச்சர் அரிசேனர் ஆவார்.
  • இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி.380-414) புகழ் பெற்ற அரசராகப் போற்றப்படுகிறார்.
  • இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் 18 புராணங்களும் தொகுக்கப்பட்டன.
  • காளிதாசர் – பாசர் – விசாகதத்தர் போன்ற புகழ் பெற்ற வடமொழிப் புலவர்கள் குப்தர்களால் போற்றப்பட்டனர்.
  • சமஸ்கிருத மொழி, ஆட்சி மொழி ஆயிற்று. விஷ்ணு, சிவன், துர்கை போன்ற இந்து கடவுளருக்குச் சிறு சிறு கோயில்கள் கட்டப்பட்டன.
  • அஜந்தாவிலுள்ள சில பௌத்த குகைச் சிற்பங்களும், ஓவியங்களும் குப்தர் காலத்தவை.
  • ஆரியபட்டர் – வராகமிகிரர் போன்ற புகழ் பெற்ற கணித – வானியல் அறிஞர்களும், சரகர், சுசுருதர், தன்வந்திரி முதலிய மருத்துவ அறிஞர்களும் குப்தர் காலத்தவர்களே.
  • 1500 ஆண்டுகளாய்த் துருப்பிடிக்காமல் இன்றும் பொலிவுடன் இருக்கும் மெகரௌலி இரும்புத்தூண் குப்தர் காலத்ததாகும்.
  • குமாரகுப்தர் காலத்தில், பௌத்தர்களது புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
  • குப்தர்களின் காலம் பொற்காலம் எனக் கருதப்படுகிறது.
  • புகழ்பெற்ற சீனப் பயணி பாகியான், இரண்டாம் சந்திரகுப்தர் (விக்கிரமாதித்யன்) காலத்தில் இந்தியாவின் பௌத்தத் தலங்களைக் காணவந்தார்.
  • தானேஸ்வரத்தின் அரசர் ஹர்யூவர்த்தனர் (கி.பி. 606- கி.பி.647) ஆவார்.
  • கன்னோசியே ஹர்யூரது தலைநகராக வியங்கியது.
  • மாளவம், சிந்து, ஒரிசா பகுதிகளையும் ஹர்யூர் வென்றார்.
  • சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி இவரைத் தோற்கடித்தார்.
  • பௌத்தத் துறவியாக மாறிய ராஜஸ்ரீ, சீன அறிஞர் யுவான்சுவாங் ஆகியவர்களால் ஹர்யூர் பௌத்தத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.
  • பௌத்தப் பல்கலைக்கழகமான நாளந்தா ஹர்யூரது ஆதரவால் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக வளர்ச்சி பெற்றது.
  • இவரது அமைச்சரான பாணர் சமஸ்கிருதமொழி அறிஞராவார். இவர், யூஹர்யூசரிதம்’ என்னும் நூலை இயற்றியுள்ளார்.
  • இவர் ‘நாகானந்தம்’ ‘ரத்னாவளி’ பிரியதர்சிகா’ என்னும் நூல்களையும் படைத்துள்ளார்.
  • சீன நாட்டைச் சேர்ந்த பௌத்தத் துறவி யுவான் சுவாங் எழுதிய, ‘சி-யு-கி’ என்னும் பயண நூல் அன்றைய இந்தியாவைப் பற்றியும், பௌத்த மதத்தைப் பற்றியும் பல செய்திகளைத் தருகின்றது.
  • இசுலாமியர் படையெடுப்பிற்குமுன், வடஇந்தியாவில் இருந்த கடைசிப் பேரரசு ஹர்ஷரது பேரரசாகும்.

Leave a Reply