7th Samacheer Kalvi History Study Material in Tamil – 1

வட இந்திய அரசுகள் – இராசபுத்திரர்கள்:

  • கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 18ஆம் நூற்றாண்டு வரையிலான காலமே இடைக்காலம் எனப்படுகிறது.
  • கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை முந்தைய இடைக்காலம் எனவும், கி.பி. 13ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 18ஆம் நூற்றாண்டு வரை பிந்தைய இடைக்காலம்.
  • இராசபுத்திரர்கள் காலம் (கி.பி647-கி.பி.1200) இராசபுத்திரர்கள் இராமன் (சூரியகுலம்) அல்லது கிருஷ்ணன் (சந்திரகுலம்) வழிவந்தவர்கள்.
  • பண்டைய சத்திரிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள்.
  • சாகர்கள், ஹூணர்கள், குஷானர்கள், கூர்ஜரர்கள் போன்ற வெளிநாட்டு மரபினைச் சார்ந்தவர்கள்.
  • அக்னி குலத்தவர் என்பனவாகும்.
  • 36 வகை இராசபுத்திரர்கள் வடஇந்தியாவில் ஆட்சி செய்தார்கள். அவர்களில் வலிமைப் பெற்ற இராசபுத்திரர்கள்.
  • அவந்தியை ஆட்சி செய்த பிரதிகாரர்கள்.
  • வங்காளத்தை ஆட்சி செய்த பாலர்கள்.
  • ஆஜ்மீh, டெல்லியை ஆண்ட சௌகான்கள்.
  • டெல்லியை ஆட்சி செய்த தோமர்கள்.
  • கனோஜ்பகுதியை ஆட்சி செய்த ரத்தோர்கள்.
  • மேவார் பகுதியை ஆட்சி செய்த சிசோதியர்கள் அல்லது குகிலர்கள்.
  • பந்தல்கண்டை ஆட்சி செய்த சந்தேலர்கள்.
  • மாளவத்தை ஆட்சி செய்த பரமாரர்கள்.
  • வங்காளத்தை ஆட்சி செய்த சேனர்கள்.
  • குஜராத்தை ஆட்சி செய்த சோலங்கிகள் ஆவர்.
  • பிரதிகார்கள் (கி.பி. 8-11 நூற்றாண்டுகள்)
  • பிரதிகாரர்கள் கூர்ஜர மரபினர். எனவே கூர்ஜரப் பிரதிகாரர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். இவர்களது காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 11-ஆம் நூற்றாண்டு வரை.
  • பிரதிகார மரபை தோற்றுவித்தவர் முதலாம் நாகபட்டர் (கி.பி.725-740) ஆவார்.
  • வத்சராசா, இரண்டாம் நாகபட்டர் ஆகியோர் இப்பேரரசை மேலும் வலிமையுறச் செய்தனர்.
  • பிரதிகார மன்னர்களில் மிகவும் வலிமையுடன் விளங்கியவர் மிகிரபோசர்.
  • பிரதிகாரர்களின் பேரரசு, காஷ்மீர் முதல் நர்மதா ஆறு வரையிலும், கத்தியவார் முதல் பீகார் வரையிலும் விரிந்துப்பரந்தது. இவர் சிந்துவின் ஜுனட் முஸ்லீம்களின் படையெடுப்பை முற்றிலும் தடுத்தார்.
  • மகேந்திர பாலர் (கி.பி.885-908) மிகிரபோசரின் மகன் ஆவார். இம்மரபின் ஆற்றல் மிக்க அரசர்களில் மகேந்திரபாலர் ஒருவராவார்.
  • பிரதிகார்களின் கடைசி மன்னர் இராஜ்யபாலா ஆவார்.
  • இவரது ஆட்சியில் பேரரசின் பரப்பளவு குறைந்து கனோஜ்வரை மட்டுமே இருந்தது. கி.பி.1018ஆம் ஆண்டில் முகமது கஜினி, இராஜ்யபாலா மீது போர்தொடுத்தார்.
  • ஜுனட் முஸ்லீம்கள் (கி.பி.725) முதல், முகமது கஜினி வரையிலான முஸ்லீம்களின் படையெடுப்பிலிருந்து இந்தியாவை பாதுகாக்கும் அரணாக பிரதிகாரர்கள் இருந்தனர்.

பாலர்கள் (கி.பி. 8-12 நூற்றாண்டுகள்)

  • கோபாலர் (கி.பி.765-769), பாலர் மரபைத் தொடங்கினார்.
  • இவர் தமது நாட்டின் எல்லையை மகதம் வரை விரிவுபடுத்தினார். இவரது அரசு இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியையும் ஆட்சி செய்தது.
  • கோபாலருக்கு பின் அவரின் மகன் தருமபாலர் (கி.பி.769- 815) மன்னரானார்.
  • பௌத்த மதத்தில் பற்றுமிக்க தருமபாலர் பல பௌத்த மடங்களைக் கட்டினார். புகழ்மிக்க விக்ரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவியதோடு நாளந்தா பல்கலைக்கழகத்தையும் புதுப்பித்தார்.
  • தேவபாலர் (கி.பி815-855) தருமபாலரின் மகன் ஆவார்.
  • மகிபாலர் (கி.பி.998-1038) ஆட்சியேற்றதைத் தொடர்ந்து நாடு மீண்டும் வலிமைபெறத் தொடங்கியது.
  • மரபின் கடைசி மன்னர் கோவிந்தபாலர் ஆவார்.
  • பிரதிகார்கள், பாலர்கள், இராஷ்டிரகூடர்கள் ஆகிய மூன்று அரசுகளும் வளம் நிறைந்த கங்கைச்சமவெளிப்பகுதி நிறைந்த கங்கைச்சமவெளிப்பகுதி மற்றும் கனோஜ்பகுதியை, கைப்பற்றுவதிலேயே நோக்கமாக இருந்தனர்.
  • 200 ஆண்டுகள் தொடர்ந்த இப்போராட்டம் மூன்று அரசுகளையுமே வலிமை இழக்கச் செய்தன.
  • துருக்கியர்களின் இந்திய வெற்றிக்கு இதுவே மறைமுகக் காரணமானது எனலாம்.
  • இவர்கள் தனியரசை ஏற்படுத்தி டெல்லி நகரை கி.பி.736ல் நிறுவினார்கள். கி.பி.1043ல் மகிபால தோமர், தானேஸ்வரம், ஹான்சி, நாகர்கோட் ஆகிய இடங்களை வென்றார்.

சௌகான்கள்

  • கனோஜ்பகுதியை ஆண்ட பிரதிகாரர்களுக்குத் திறை செலுத்துபவர்களாக இருந்தவர்களே சௌகான்கள்.
  • கி.பி.11-ஆம் நூற்றாண்டில் ஆஜ்மீர் பகுதியை சுதந்திர அரசாக அறிவித்த சௌகான்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாளவப் பகுதியை ஆண்ட பரமாரர்களிடமிருந்து உஜ்ஜயினியையும், தோமர்களிடமிருந்து டெல்லியையும் வென்றனர்.
  • சௌகான் மன்னர்களில் மிக முக்கியமான மன்னர் பிருத்திவிராஜ்சௌகான் ஆவார்.
  • கி.பி.1090 முதல் 1194 வரையில் ஆண்ட இவர்களில் ஜெயசந்திரன் என்பவரே புகழுடன் ஆட்சி செய்த கடைசி மன்னர் ஆவார். முகமது கோரியுடன் கி.பி.1194ல் நடந்த சந்தவார் போரில் இவர் கொல்லப்பட்டார்.

சந்தேலர்கள்

  • பிரதிகாரர்களின் ஆட்சியில் இருந்த பந்தல்கண்ட் பகுதியை கி.பி.9ஆம் நூற்றாண்டில் தனியரசாக சந்தேலர்கள் அமைத்தனர்.
  • மன்னன் யாசோதவர்மன் மகோபாவை தலைநகராக நிறுவினார்.
  • கடைசி அரசர் பாராமால். இவரை கி.பி.1203ல் குத்புத்தீன் ஐபக் தோற்கடித்தார்.
  • கலிஞ்சார் கோட்டை இவர்களது முக்கிய கோட்டையாகும்.
  • கஜூராஹோவில் பல அழகிய கோயில்களை இவர்கள் கட்டினார்கள். இவைகளுள் கந்தர்ய மகாதேவர் ஆலயம் (கி.பி.1050) புகழ் பெற்றதாகும்.

சிசோதியர்கள் அல்லது குகிலர்கள் 

  • சிசோதிய மரபினைத் தொடங்கியவர் பாபாரவால்.
  • இராணாரத்தன்சிங்கை கி.பி.1307ல் அலாவுதீன் கில்ஜி போரிட்டு தோற்கடித்தார். இராணாரத்தன்சிங்கின் மனைவி இராணி பத்மினி, ஜவ்ஹர் என்ற வழக்கத்தின்படி தீயில் குதித்து இறந்தார்.
  • ராணா சங்கா, மகாராணா பிரதாப் ஆகியோர் முகலாயர்களை எதிர்த்து வலிமையுடன் போர்புரிந்தார்கள்.
  • பாமரர்கள் பாமாரர்கள் கி.பி.10ஆம் நூற்றாண்டில் தம்மைச் சுதந்திர அரசாக அறிவித்துக் கொண்டனர். இவர்களது தலைநகரமாக தாரா விளங்கியது.
  • இராஜாபோஜ் (கி.பி.1018-1069) என்பவர் இம்மரபின் புகழ்மிக்க மன்னராவார்.
  • போபால் நகரின் அருகில் அழகிய ஏரி (250 சதுர மைல்) ஒன்றை அமைத்தார். தாராவில் சமஸ்கிருத கல்லூரி ஒன்றை நிறுவினார்.

இராசபுத்திரர்களின் சிறப்பியல்புகள்

  • இராசபுத்திரர்கள் இந்து மதத்தை போற்றி வளர்த்தனர்.
  • சமணசமயம், புத்த சமயம் ஆகியவைகளும் ஆதரிக்கப்பட்டன.
  • நாட்டினைப் பல ஜாகிர்களாகப் பிரித்தனர். அதன் தலைவர்களான ஜாகிர்தார்கள், வரிவசூலித்து உரிய பங்கை மன்னரிடம் செலுத்தினர்.
  • 9 இராசபுத்திரர்கள், மொழி, இலக்கியம், கலை மற்றும் கட்டிடக்கலை ஆகிய துறைகளின் வளர்ச்சிக்குப் பெரும் பாடுபட்டார்கள்.
  • மராத்தி, குஜராத்தி, வங்கமொழி போன்ற வட்டாரமொழிகள் சிறப்பாக வளர்ச்சியடைந்தன.
  • கல்ஹணர் எழுதிய இராஜதரங்கினி, ஜெயதேவரின் கீதகோவிந்தம், சோமதேவரின் கதா சரித சாகரம் ஆகியன சிறந்த படைப்புகளாகும்.
  • பிருத்திவிராஜ்சௌகானின் அவைப்புலவரான சந்த்பரிதை எழுதிய பிருத்திவிராஜ்ரசோ என்னும் நூலானது, பிருத்திவிராசனின் படையெடுப்புகளைப் பற்றி விளக்குவதாகும்.
  • பாஸ்கராச்சாரியா எழுதிய சித்தாந்த சிரோமணியானது ஒரு சிறந்த வானவியல் நூலாகும்.
  • கற்மூமூமூமூமூபுரமஞ்சரி, பாலஇராமயணம் ஆகியன இராசசேகரனின் சிறந்த படைப்புகளாகும்.
  • கஜூராஹோ நகரின் ஆலயங்களும், புவனேஸ்வரத்தில் உள்ள லிங்கராசா கோயிலும், கோனார்க்கில் உள்ள சூரியக்கோயிலும், அபுமலையில் கட்டப்பட்டுள்ள தில்வாரா ஆலயமும் இராசபுத்திரர்களின் கோயிற்கட்டிடக்கலையின் சிறப்பான எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.
  • ஜெய்ப்புர், உதய்புர் நகர அரண்மனைகளும், சித்ஷர், மாண்டு, ஜோத்புர், குவாலியர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கோட்டைகளும், இராசபுத்திரர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.
  • 8-18 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலமே இடைக்காலம்.
  • பிரதிகாரர்கள் மரபினைத் தோற்றுவித்தவர் முதலாம் நாகபட்டர் தர்மபாலர் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தை விக்ரமசீலம் என்ற இடத்தில் நிறுவினார்.
  • சௌகான் மன்னர்களில் மிக முக்கியமான மன்னர் பிருத்திவிராஜ் சௌகான்.
  • பரமாரர்களின் தலைநகரமாக தாரா விளங்கியது.

Leave a Reply