7th Samacheer Kalvi History Study Material in Tamil – 2

தக்காண அரசுகள்

  • இந்தியாவின் தெற்குப்பகுதியானது ‘தக்காணம்’ அல்லது ‘தட்சணபதம்’ என அழைக்கப்படுகிறது.
  • முற்கால மேலைச் சாளுக்கியர் (கி.பி.6-8 நூற்றாண்டுகள்) கி.பி.6-ஆம் நூற்றாண்டில் இன்றைய கர்னாடக மாநிலம் அமைந்துள்ள பகுதியில் சாளுக்கியர்கள் தங்களது அரசாட்சியை ஏற்படுத்தினர்.
  • தற்போது பதாமி என்று அழைக்கப்படும் பிஜப்புர் மாவட்டத்தில் உள்ள வாதாபி அவர்களுடைய தலைநகரமாய் விளங்கியது.
  • முதலாம் புலிகேசி (கி.பி.543-566) வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவராவர்.
  • சாளுக்கிய அரசர்களில் மகிச்சிறந்தவராக இரண்டாம் புலிகேசி (கி.பி.610-642) விளங்கினார்.
  • இரண்டாம் புலிகேசி, கங்கர், மாளவர்கள், கூர்ஜரர்கள் ஆகியோரை வென்றதோடு கி.பி.637ல் ஹர்யூரின் படையெடுப்பை எதிர்த்து நின்று வெற்றியடைந்தார்.
  • கி.பி.642ல் மகேந்திரனின் மகன் நரசிம்மவர்மன் இரண்டாம் புலிகேசி மீது படையெடுத்து, புலிகேசியைக் கொன்றார்.
  • முதலாம் விக்கிரமாதித்யன், விஜயாதித்தன், இரண்டாம் விக்கிரமாதித்யன் ஆகியோர் சாளுக்கிய மரபில் குறிப்பிடத்தகுந்த மன்னர்கள் ஆவர்.

பிற்கால மேலைச் சாளுக்கியர் (கி.பி.10-12 நூற்றாண்டுகள்)

  • கல்யாணியைத் தலைநகராக கொண்டு கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் மேலை சாளுக்கியர்கள் ஆட்சியை அமைத்தனர். இவர்களது ஆட்சி கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.
  • பிற்கால மேலைச் சாளுக்கிய மரபைத் தொடங்கி வைத்தவர் இரண்டாம் தைலப்பா. (கி.பி.973-997) ஆவார்.
  • பிற்கால மேலைச்சாளுக்கிய மரபின் சிறந்த மன்னர்களாக இரண்டாம் சோமமேஸ்வரன், இரண்டாம் ஜெயசிம்மன், ஆறாம் விக்கிரமாதித்யன், மூன்றாம் தைலப்பா.
  • கல்யாணியை ஆண்ட சாளுக்கியர்களில் இறுதி அரசர் மூன்றாம் தைலப்பா. (கி.பி. 1150-1163) ஆவார்.

கீழைச் சாளுக்கியர் (கி.பி.7-12 நூற்றாண்டுகள்)

  • இரண்டாம் புலிகேசியின் சகோதரான விஷ்ணுவர்த்தன், கீழைச்சாளுக்கிய மரபைத் தொடங்கி வைத்தவராவார்.
  • வெங்கி இவர்களின் தலைநகராமாகும்.
  • இவர்கள் ஆட்சியில் தெலுங்கு சமுதாயமும், தெலுங்கு இலக்கியமும் மற்ற கலைகளும் சிறப்பான வளர்ச்சியடைந்தன.
  • கீழைச்சாளுக்கியர்கள், சோழமரபுடன் திருமண உறவுகளைக் கொண்டிருந்தனர்.
  • திருமண உறவின் வழியாக தோன்றிய வாரிசே குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1122).
  • கீழைச்சாளுக்கிய நாட்டினை சோழப்பேரரசுடன் இணைத்து சோழநாட்டு மன்னரானார். இவரே கீழைச்சாளுக்கிய மரபின் கடைசி மன்னரும் ஆவார்.

சாளுக்கியர்களின் பங்களிப்பு

  • இரண்டாம் புலிகேசியின் அவைப்புலவரான இரவிகீர்த்தி ஜஹோலே கல்வெட்டுகளைப் படைத்தவராவார்.
  • 70க்கும் மேற்பட்ட கோயில்களை ஜஹோலேவில் கட்டினர்.
  • ஜஹோலே ‘இந்திய கோயில் கட்டக்கலையின் தொட்டில்’ எனச் சிறப்பிக்கப்படுகிறது.
  • பட்டாடக் கல்லில் உள்ள விருபாக்ஷர் ஆலயம், பாதாமி குகைக் கோயில்கள் ஆகியன மற்ற சிறந்ந ஆலயங்களாகும் விருபாக்ஷர் கோயில், காஞ்சிபுரத்தின் கைலாசநாதர் கோயிலைப் போலக் கட்டப்பட்டுள்ளது.

இராட்டிரக்கூடர்கள் (கி.பி.8-10 நூற்றாண்டுகள்)

  • வடஇந்தியாவில் இருந்த இரத்தோர்களின் வழிவந்தோரே இராட்டிரகூடர்கள் ஆவார்.
  • கன்னடம் இவர்களின் தாய்மொழியாகும்.
  • பதாமியை ஆண்ட இரண்டாம் கீர்த்திவர்மனின் இராட்டிர அலுவலராக இருந்த தந்திதுர்கர் கி.பி. 753ல் தக்காண பகுதியில் நிலையான அரசினை ஏற்படுத்தினார்.
  • இராட்டிரகூடப் பேரரசு மால்கெட் நகரைத் தலைநகராகக் கொண்டிருந்தது.
  • முதலாம் கிருஷ்ணா புகழ்பெற்ற எல்லோராவின் கைலாசநாதர் குடைவரைக் கோயிலை உருவாக்கினார்.
  • துருவன், இரண்டாம் விஜயாதித்தனை வென்று அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பீமா என்பவருக்கு ஆதரவாக  10 நடந்துகொண்டார். இவரது காலத்தில் இரட்டிரகூட நாடு புகழின் உச்சத்தை அடைந்தது.
  • மூன்றாம் கோவிந்தனுக்கு பிறகு, அவரின் மகன் இமோகவர்யூன் தமது பதினான்காம் வயதில் மன்னரானார்.
  • கிருஷ்ணர் தக்கோலம் போரில் சோழர்களை வென்று, தஞ்சாவூரை கைப்பற்றி, இராமேஸ்வரம் வரையில் வந்தார்.

இராட்டிரக்கூடர்களின் பங்களிப்புகள்

  • முதலாம் கிருஷ்ணன் கைலாசநாதர் கோயிலை எல்லோராவில் கட்டினார்.
  • மும்பைக்கு அருகில் உள்ள எலிபண்டா குகைக்கோயிலை கட்டி முடித்தவர்கள் இராட்டிரகூடர்களே.
  • அமோகவர்யூன் கன்னடமொழியில ‘கவிராச மார்க்கம்’ இலக்கியத்தை படைத்துள்ளார். இவரின் ஆசிரியர் ஜினசேனர் என்பவர் பார்சுவநாதரின் வாழ்க்கை வரலாற்றை பார்சுவாஉதயம் என்ற நூலாக படைத்தார்.

ஹொய்சாளர்கள் (கி.பி. 11-14 நூற்றாண்டுகள்)

  • இம்மரபில் குறிப்பிடத்தக்கவர் விஷ்ணுவர்தனர்.
  • சாளுக்கியர்களுக்கும், சோழர்களுக்கும் இடையீட்டு அரசாக கங்கவாடி திகழ்ந்தது.
  • இரண்டாம் வீரபல்லாளா யாதவ மரபைச் சேர்ந்த ஐந்தாம் பில்லாமாவை வென்று ஹொய்சாளர்களின் வலிமையை உறுதிசெய்தார்.
  • இரண்டாம் நரசிம்மன் இராமேஸ்வரத்தில் ஒரு வெற்றித்ஷணையும் நட்டார்.

ஹொய்சாளர்களின் பங்களிப்புகள்

  • மைசூர் அரசு அமைவதற்கு ஹொய்சாளர் வழியமைத்துத் தந்தனர்.
  • துவாரசமுத்திரம், பேளுர் ஆகிய இடங்களில் ஏராளமான கோயில்களைக் கட்டினார். அக்கோயில்களில் இராமாயணம், மகாபாரத காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
  • கன்னட இலக்கியங்களின் வளர்ச்சிக்கு நியச்சந்திரா, கண்டி, ராகவங்கர், நேமிச்சந்திரன் இலக்கியங்களைப் படைத்தார்கள்.

காகதீயர் (கி.பி. 12-14 நூற்றாண்டுகள்)

  • கல்யாணியை ஆண்ட மேலைச்சாளுக்கியர்களிடம் குறுநில அரசர்களாக இருந்தவர்களே காகதீயர்கள்.
  • இவர்களின் தலைநகராகமாக அனுமகொண்டா இருந்தது.
  • பிறகு வராங்கல் தலைநகராக மாற்றினர்.
  • அரசர் கணபதியிடமிருந்து ஆட்சி உரிமையை அவரது மகள் ருத்ராம்பாள் பெற்றார்.
  • காகதீயர்களின் இறுதிமன்னரான வினயகதேவன் பாமினி சுல்தான் முதலாம் முகமதுஷா என்பவரால் கொல்லப்பட்டார்.
  • அனும கொண்டாவில் இவர்கள் கட்டிய ஆயிரம் ஷண் ஆலயம் இவர்களது கட்டட கலைக்கு நிலைத்த புகழை தரும் ஒன்றாகும்.

யாதவர்கள் (கி.பி. 12-14 நூற்றாண்டுகள்)

  • தேவகிரியை ஆட்சி செய்த யாதவர்கள் புராண நாயகனான கிருஷ்ண பகவானின் வழிவந்தோர் எனக் கூறிக்கொண்டனர்.
  • இவர்கள் செவுனர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
  • இராமச்சந்திரதேவா இம்மரபின் இறுதி மன்னராவார்.
  • தேவகிரி கோட்டையானது யாதவர்களால் கட்டப்பட்டது.
  • வலிமைவாய்ந்த இந்தியக் கோட்டைகளில் இதுவும் ஒன்று.
  • டெல்லி சுல்தானியர்கள் இக்கோட்டைக்குள் ஜும்மா மசூதி, சாந்மினார் ஆகியவற்றை பிற்காலத்தில் கட்டினார்.
  • அலாவுத்தீன் காலத்திலிருந்து தொடர்ந்த டெல்லி சுல்தானியர்களின் தாக்குதல், இத்தக்காண அரசுகளின் வீழ்ச்சிக்கு முழுமையாக வழி வகுத்தது.
  • விருபாக்ஷர் ஆலயமானது கைலாசநாதர் கோயிலைப் போல கட்டப்பட்டுள்ளது.
  • இராட்டிரகூடர்களின் ஆட்சி துருவன் காலத்தில் உயர்நிலை அடைந்தது.
  • ஹாயசாள மன்னர் விஷ்ணுவர்தனர், தலைநகரை சோசவீர் என்ற இடத்திலிருந்து துவாரசமுத்திரம்க்கு மாற்றினார்.
  • காகதீயர் மன்னர் வினயகத்தேவன் இறப்பிற்கு பின்னர் காகதியமரபு முடிவடைந்தது.
  • மிகச் சிறந்த யாதவ மன்னர் சிங்கனா

Leave a Reply