7th Samacheer Kalvi History Study Material in Tamil – 3

தென்னிந்திய அரசுகள்

  • பண்டைய தமிழகமானது சேர, சோழ, பாண்டியநாடு என முப்பெரும் அரசுகளை கொண்டிருந்தது. அக்காலம் சங்ககாலம் எனப்பட்டது, பின்னர் களப்பிரர்கள் கி.பி.300 முதல் 600 ஆம் ஆண்டு வரையில் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டனர்.

பல்லவர்கள்

  • பல்லவர்கள், பாரசீகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தொண்டை மண்டலத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள் என்றும் கூறுவர்.
  • சிம்மவிஷ்ணுவின் தலைமையில் பல்லவர்கள், களப்பிரர்களை தோற்கடித்து வட தமிழ்நாடாகிய தொண்டை மண்டலத்தில் தமது ஆட்சியை நிறுவினர்.
  • பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் பிற்காலப் பல்லவ அரசர்களில் முதன்மையானவர் சிம்ம விஷ்ணு.
  • சிம்ம விஷ்ணு, அவணிசிம்மன் அதாவது உலகின் சிங்கம் எனப் புகழப்பட்டார்.
  • மகேந்திரவர்மன் தொடக்கத்தில் சமணமதத்தை பின்பற்றினார். பின்னர் சைவக்குரவர் அப்பர் என்பவரால் சைவத்திற்கு மாற்றப்பட்டார்.
  • இவர் அமைத்த குடைவரைக் கோயில்கள், மண்டகப்பட்டு, பல்லாவரம், மாமண்டூர், மகேந்திரவாடி, தளவானூர், திருச்சிராப்பள்ளி, சீயமங்கலம் ஆகிய இடங்களில் உள்ளன.
  • இவர் மகேந்திரமங்கலம், மகேந்திரவாடி என்ற இரண்டு நகரங்களை நிறுவினார்.
  • முதலாம் மகேந்திரவர்மனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆவார். இவரை ‘மாமல்லன்’ என்றும் அழைப்பர். மற்போரில் சிறந்தவன் என்பது இதன் பொருளாகும்.
  • 11 முதலாம் நரசிம்மவர்மன் ‘வாதாபிகொண்டான்’ எனவும் புகழப்பட்டார்.
  • நரசிம்மவாமன் ஆட்சியின் போதுதான் சீனப்பயணி யுவான்சுவாங், தலைநகர் காஞ்சிக்கு வருகை தந்தார்.
  • நரசிம்மவர்மன் சிறந்த கட்டிடக்கலை நிபுணராகவும் விளங்கினார். மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக்கல் ரதங்கள் இவரது கட்டட கலைக்குச் சான்றாகும்.
  • இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சிக்காலத்தில் பல்லவநாடு, அமைதியும், வளமும் கொண்டு விளங்கியது.
  • காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயில், மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில், பனைமலையில் தாளகிரிஸ்வரர் கோயில் உட்பட பல ஆலயங்களை இவர் கட்டினார்.
  • இவரது அரசவையில் தண்டி என்ற வடமொழி அறிஞர் தண்டி அலங்காரம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலை எழுதினார்.
  • இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சியில் சீனாவுடன் வணிக உறவு ஏற்பட்டது.
  • சிம்மவிஷ்ணுவின் தம்பியும் இரண்யவர்மனின் மகனுமான இரண்டாம் நந்திவர்மன் பல்லவ அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் நந்திவர்மன் விஷ்ணுபக்தர் ஆவார்.
  • காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டினார்.
  • திருமங்கை ஆழ்வார் இவரின் சமக்காலத்தவராவர்.
  • பல்லவ மன்னர்களில் குறிபிடத்தக்க மன்னர் மூன்றாம் நந்திவர்மன். இவரை தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் என்று நந்திக்கலம்பகம் புகழ்கின்றது.
  • கடைசி பல்லவ அரசர் அபராஜிதன் ஆவார்.
  • பல்லவ நாடு பல ‘ராஷ்டிரம்’ எனக்கூடிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது.
  • உரிமையியல், குற்றவியல் ஆகிய நீதிமன்றங்களும் இருந்தன.
  • நிர்வாகத்தின் அடிப்படை அலகு கிராமம் ஆகும்.
  • கிராமத்தை நிர்வகிக்க ‘ஊர் அவை’ இருந்தது. இருபது வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
  • முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகசனம், பகவதவிபூகம் நூல்களை எழுதினார் பாரவி ‘கீர்தார்சுனியம்’ என்ற நூலை எழுதினர். தண்டி என்பார் அவந்தி சுந்தரி கதாசாரம் என்னும் நூலையும், பெருந்தேவனார் பாரத வெண்பாவையும் எழுதினர்.
  • ஆழ்வார்களும். நாயன்மார்களும் எழுதிய பாடல்களில் பல, பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகும். நந்திக்கலம்பகமும் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டது.
  • திராவிட பாணியிலான கட்டிடக்கலை பல்லவர்கள் காலத்தில் தொடங்கப்பட்டது.
  • இவர்களது கட்டிடக்கலையை நான்கு விதமாக பிரிக்கலாம்.
  • முதலாவதாக பாறைக்குடைவு கோயில்கள், முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் ஏற்படுத்தப்பட்டன.
  • இரண்டாவதாக ஒற்றைக்கல் இரதங்கள், மண்டபங்கள் ஆகியன உள்ளன.
  • மூன்றாவது அமைப்பு இராஜசிம்மன் வகையிலானது.
  • கைலாசநாதர் கோயில், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் ஆகிய இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
  • நான்காவது வகையானது காஞ்சியில் முக்தீஸ்வரர் ஆலயம், வைகுந்த பெருமாள் கோயில் போன்ற கட்டுமான கோயில்கள் ஆகும்.
  • இசையில் வல்லவராய் திகழ்ந்ததால் முதலாம் மகேந்திரவர்மன் ‘சங்கீரணசாதி’ அவரது ஓவிய ஆற்றலால் ‘சித்திரக்காரப்புலி’ என்றும் புகழப்பட்டார்.
  • பல்லவர்காலத்து அழகிய ஓவியங்கள் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் காணப்படுகின்றன.

சோழப்பேரரசு

  • சோழர்களின் அன்றைய தலைநகராமாக உறைபூர் விளங்கியது.
  • சோழர்களின் இலட்சினையாக ‘புலி’ உருவம் இடம் பெற்றது.
  • முற்காலச் சோழர்களில் கரிகாலசோழன் புகழ்பெற்றவர் ஆவார்.
  • பின்னர் தஞ்சாவூர் இவர்களின் தலைநகரமானது.
  • தென்னிந்தியாவின் பெரும் பகுதியையும், இலங்கை, கடாரம் (சுமத்ரா, மலேசிய பகுதிகள்) ஆகிய பகுதிகளையும் வென்றதால் பேரரசு சோழர்கள் என அழைக்கப்பட்டனர்.
  • விஜயாலய சோழனின் மகன் முதலாம் ஆதித்த சோழன் தொண்டை மண்டலம், கொங்கு நாடு உள்ளிட்ட பகுதிகளை வென்றார்.
  • ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தகன், பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையை வென்றதால் ‘மதுரை கொண்டான்’ என்று புகழப்பட்டார்.
  • சோழமரபில் ஆட்சிசெய்த மன்னர்களில் மிகச் சிறந்த ஆட்சியாளர் முதலாம் இராஜராஜசோழன்.
  • முதலாம் இராஜராஜசோழன் பொலனருவினை வென்று அங்கு ஒரு சிவன் கோயிலையும் கட்டினார். முந்நீர் பழந்தீவுகள் எனப்பட்ட மாலத்தீவுகளையும் வென்றார்.
  • மும்முடிசோழன், ஜெயங்கொண்டான், சிவபாதசேகரன் போன்ற பல சிறப்பு பெயர்களை இராஜராஜன் பெற்றிருந்தார்.
  • இவர் சைவ சமயத்தைப் பின்பற்றினார். இவரது காலத்தில்தான் தேவாரம் தொகுக்கப்பட்டது.
  • கி.பி.1010 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினார்.
  • இராஜராஜசோழனின் மகனான இராஜேந்திரசோழன் வங்காளத்தின் மீது படையெடுத்து வென்றார்.
  • இவ்வெற்றியின் நினைவாக ‘கங்கை கொண்ட சோழபுரம்’ என்ற நகரை நிறுவினார்.
  • பல பகுதிகளை கடல்கடந்து போரிட்டு வென்றது இவரது மிகச்சிறந்த செயலாகும்.
  • இராசேந்திரன் காலத்தில் சோழப் பேரரசானது புகழின் உச்சநிலையை எய்தியது.
  • முதலாம் இராஜேந்திர சோழனின் மகளான அம்மங்கா தேவி என்பாரின் மகனே முதலாம் குலோத்துங்க சோழன்.
  • முதலாம் குலோத்துங்கன் சிறந்த நிர்வாகியாக விளங்கினார். இவர் சுங்கவரி நீக்கி வணிகத்தை எளிமைபடுத்தியதால் சுங்கம் தவிர்த்த சோழன் என் போற்றப்பட்டார்.
  • இவர் ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, கம்பர் முதலிய புலவர்களை ஆதரித்தார்.
  • சோழநாட்டின் கடைசி அரசனாக மூன்றாம் இராசேந்திரன் விளங்கினார்.
  • சோழநாட்டின் நிர்வாக அடிப்படை அலகு ‘ஊர்’ ஆகும்.
  • முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சார்ந்த உத்திரமேரூர் கல்வெட்டு, கிராம நிர்வாகத்தைப் பற்றி விரிவாக விளக்குகிறது.
  • கிராமசபை உறுப்பினர்கள் குடவோலை முறையின்படி 30 உறுப்பினார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • சோழர்கால சமூகத்தில் சாதிமுறை வழக்கில் இருந்தது. சதி, தேவதாசி போன்ற வழக்கங்கள் நடைமுறையில் காணப்பட்டன.
  • 12 பெண்கள் ‘சிறுபாடு’ என்னும் சிறுசேமிப்பு பழக்கத்தை கொண்டிருந்தனர்.
  • இராஜராஜன் காலத்தில் வரிவிதிப்புக்கான கணக்கெடுப்புப்ப பணி சேனாதிபதி குரவன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
  • இவர்கள் காலத்தில் நெசவு, உலோக உருக்குத் தொழில்கள் மேன்மையுற்றன.
  • சீனா, சுமத்ரா, ஜாவா, அரேபியா ஆகிய நாடுகளுடன் வணிக உறவு ஏற்பட்டிருந்தது.
  • சேக்கிழாரால் பெரிய புராணமும் (திருத்தொண்டர் புராணம்), திருத்தக்க தேவரால் சீவக சிந்தாமணியும், கம்பராமாயணத்தை கம்பரும், கலிங்கத்து பரணியை செயங்கொண்டாரும் எழுதினர்.
  • சைவ நூலான பன்னிரு திருமுறைகளை நம்பியாண்டார் நம்பியும், வைணவ நூலான நாலாயிர திவ்யபிரபந்தத்தை நாதமுனியும் தொகுத்தனர்.
  • மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், தக்கயாபரணி ஒட்டக்கூத்தர் எழுதினார்.
  • உரையாசிரியர்கள் இளம்புரனார், நச்சினார்கினியார், பரிமேலழகர் சோழர் காலத்தவரே.
  • பிரகதீஸ்வரர் ஆலயம் உலகத்தொன்மையான சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலின் விமானத்தின் உயரம் 216 அடியாகும். விமானம் 13 அடுக்குகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் உள்ள நடராசர், அர்த்தநாரிஸ்வரர் உலோகச் சிலைகள், சோழர் கலையம்சத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
  • சோழர்களது சுவரோவியங்கள் தஞ்சாவூர், திருமயம், காஞ்சி கைலாசநாதர் கோயில், நார்தாமலை விஷ்ணுகோயில் ஆகிய இடங்களில் எழிலுற அமைந்துள்ளன.
  • நுண்கலை எனப்படும் இசைக்கலையானது வளர்ச்சி பெற்ற காலம் சோழர்கள் காலமாகும்.
  • சோழர்கள் கி.பி. 850ல் தொடங்கி கி.பி. 1279 வரையில் சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.

பாண்டியப் பேரரசு

  • மெகஸ்தனிஸ், பிளினி, கிரேக்க எழுத்தாளர்கள், சமஸ்கிருத இலக்கண அறிஞர் கத்யாயணர் ஆகியோரது குறிப்புகளிலும், யுவான்-சுவாங், மார்க்கோபோலோ, இஸ்லாமிய வரலாற்றாளர் வாசஃப் ஆகிய வெளிநாட்டவரின் செய்தி குறிப்புகளிலும் பாண்டியரின் வரலாற்றுச் செய்திகளை அறியலாம்.
  • முற்காலப் பாண்டியர்கள் தமிழை வளர்க்க தமிழ்ச்சங்கங்கள் அமைத்து பெருமை பெற்றவர்கள்.
  • பாண்டியர்களின் தலைநகரம் மதுரை, இலச்சினை மீன் பாண்டிய மன்னன் கடுங்கோன், களப்பிரர்களை வென்று கி.பி. 6ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியர்களின் ஆட்சியை மலரச் செய்தார். இக்காலகட்டத்தையே முதலாம் பாண்டியப் பேரரசு காலம் என்பர்.
  • முதலாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியன் தான் வென்ற சோழ நாட்டை மீண்டும் குலோத்துங்கனிடமே கொடுத்து விட்டதால் ‘சோணாடு வழங்கியருளிய சுந்தரப் பாண்டியன்’ என்று புகழப்பட்டார்.
  • முதலாம் சடையவர்மன் மகன் முதலாம் மாறவர்மன் குலசேகரன் ஆட்சியின்போது பாண்டியப் பேரரசு மேலும் வலுப்பெற்றது.
  • கில்ஜி மரபினருக்குப்பின் வந்த துக்ளக் மரபினர், தங்களின் ஆதிக்கத்தை தென்னிந்தியாவில் நிலைநிறுத்தி பாண்டியப் பேரரசை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.
  • வேளாண் தொழில் செய்வோர் ‘புமி புத்திரர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.
  • பாண்டியநாடு முத்துக்குளிக்கும் தொழிலில் சிறந்து விளங்கியது.
  • கொற்கை, தொண்டி ஆகியன சிறந்த துறைமுகங்களாக விளங்கின.
  • திருவாசகம் மாணிக்கவாசகரால் எழுதப்பட்டது. ஆண்டாள், திருப்பாவையையும்; நம்மாழ்வார், திருப்பல்லாண்டையும்; வில்லிபுத்ஷரார், மகாபாரதத்தையும்; அதிவீரராம பாண்டியன் நைடதம் என்னும் நூலையும் எழுதினர்.
  • சேபூர் முருகன் உலா மற்றும் இரத்தினகிரிஉலா ஆகிய நூல்களை ஸ்ரீகவிராயர் எழுதினார்.
  • பாண்டியர்கள் உருவாக்கிய குடைவரை கோயில் திருப்பரங்குன்றம், ஆனைமலை, கழுகுமலை, திருச்சிராப்பள்ளி, குன்றக்குடி, சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் உள்ளது.
  • ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்து சுவரோவியத்தை, சித்தன்னவாசல் குடைவரையில் காணலாம்.
  • பல்லவ அரசர் சிம்மவிஷ்ணு களப்பிரர்களை வீழ்த்தி, பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் தொடங்கி வைத்தார்.
  • முதலாம் நரசிம்மவர்மனின் பட்டப் பெயர் வாதாபி கொண்டான் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் கரிகால சோழன் முதலாம் ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தகன், பாண்டிய மன்னரை தோற்கடித்ததால் மதுரைகொண்டான் என்ற பட்டப்பெயரைப் பெற்றார்.
  • பாண்டிய பேரரசானது, பாண்டிய மண்டலம் என அழைக்கப்பட்டது.
  • ஆண்டாள் இயற்றிய நூல் திருப்பாவை

Leave a Reply