7th Samacheer Kalvi History Study Material in Tamil – 4

அரேபியர், துருக்கியர் படையெடுப்பு

  • இஸ்லாம் மதத்தை தோற்றுவித்தவர் முகமது நபி (கி.பி. 570- 632) ஆவார்.
  • இஸ்லாம் சமயம் முதன்முதலாக பாலைவன நாடுகளில் வளரத் தொடங்கியது.
  • அரேபியர்கள்தான் முதன் முதலில் இஸ்லாமிய மதத்தை பின்பற்ற ஆரம்பித்தார்கள்.
  • அரேபியர்களைத் தொடர்ந்து பாரசீகர்கள் இஸ்லாம் மதத்தை வலிமையுடன் வளரச் செய்தனர்.
  • பண்டைய காலம் தொட்டே அரேபிய நாடுகள் இந்தியாவுடன் வாணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர்.
  • ஈராக் ஆளுநர் அல்ஹாஜாஜ், கலீபா வாலித் அனுமதியுடன் தனது மருமகன் முகமது பின் காசிமை சிந்து மீது படையெடுக்க அனுப்பினார்.
  • சிந்துவின் மன்னர் தாகீர் தோற்றதால், ரேவார் கோட்டைக்குள் இருந்த அவரது மனைவி இராணிபாய் தற்காப்பு போரில் இறங்கினார். அது தோல்வியடையவே ஜவ்ஹர் என்ற வழக்கப்படி எதிரியிடம் அகப்படாமல் இருக்க தீயை மூட்டி அதில் குதித்து உயிர் துறந்தார்.
  • போரில் வென்ற காசிம், முல்தானில் நிறைய செல்வ வளங்களை பெற்றமையால் முல்தானை தங்கநகரம் என அழைத்தார்.
  • 13 முஸ்லீமாக அல்லதோர் மீது ஜிசியா வரியானது கட்டாயப்படுத்தி வசூலிக்கப்பட்டது.
  • அரேபியர்கள் சிந்துவை வென்றதன் மூலமாக, பிற்காலத்தில் இஸ்லாமியர் இந்தியா வருவதற்கு வித்திட்டனர்.
  • பிரம்மகுப்தர் எழுதிய பிரம்மசித்தாந்தம் சமஸ்கிருத நூலானது அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
  • துருக்கியர் அரேபியர்களைவிட தீவிரமான ஆக்கிரமிப்புக் கொள்கை உடையவர்கள்.
  • முகமதுகஜினி கி.பி. 1000ஆம் ஆண்டு இந்தியா மீது படையெடுத்தார். சாஹி மரபைச் சேர்ந்த இந்து அரசர் ஜெயபாலரைத் தோற்கடித்தார்.
  • இந்தியாவில் முகமது கஜினி மேற்கொண்ட படையெடுப்பிலேயே முக்கியமானது கி.பி.1025ல் நடந்த சோமநாதபுர படையெடுப்பாகும்.
  • ஆசிய பகுதிக்குள் ஆட்சி செய்த வலிமைமிக்க இஸ்லாமிய மன்னர்களில் முகமது கஜினியும் ஒருவராவார்.
  • பிர்தௌசி, அல்பருனி ஆகிய அறிஞர்கள் இவரது அவையில் இடம் பெற்றிருந்தனர்.
  • கோரி நாட்டை ஆண்ட அலாவுதீன் உசேன் கி.பி.1186-இல் கஜினியை கைப்பற்றி தீக்கிரையாக்கினார். இதனால் கஜினி அரசு வீழ்ந்தது.
  • இந்தியாவின் மீது படையெடுத்த முக்கியமான மூன்று இஸ்லாமிய படையெடுப்பாளர்களில் கோரியும் ஒருவர்.
  • ஹீரட்டுக்கும், கஜினிக்கும், நடுவே மலைப்பகுதியான கோரி என்ற இடத்திற்கு முகமது மன்னரானார். கோரி என்ற இடத்தை ஆண்டதால் முகமது கோரி என அழைக்கப்பட்டார்.
  • கோரி கி.பி.1176ல் இந்தியா மீது படையெடுக்கத் தொடங்கினார்.
  • முதலாம் தரைன்போர் (கி.பி.1191) பிருதிவிராஜன் ஒரு பெரும் படையுடன் முகமது கோரியை எதிர்த்து போர் புரிந்தார்.
  • தரைன் என்னுமிடத்தில் நடைபெற்ற போரின் முடிவில் பதிண்டா கோட்டையை பிருதிவிராசன் திரும்பப்பெற்றார்.
  • இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக துருக்கிய முஸ்லீம் அரசுகள் இந்தியப் பகுதியில் நுழைய இந்த இரண்டாம் தரைன் போர் வழியமைத்துக் கொடுத்தது. முகம்மது தான் வென்ற இந்தியப் பகுதியின் ஆளுனராக குத்புத்தீன் ஐபெக் என்பவரை நியமித்தார்.
  • முகமது கோரி அரசின் தலைநகரமாக டெல்லி அமைந்தது.
  • ஷியா பிரிவைச்சேர்ந்த புரட்சியாளர்களும், கோர்களும் சேர்ந்து 1206, மார்ச் 25-இல் முகம்மது கோரியை கொலை செய்தனர்.
  • முகமது-பின்-காசிம் சிந்து மீது படையெடுக்க அனுப்பப்பட்டார்.
  • முகமது கஜினியால் தோற்கடிக்கப்பட்ட சாஹி மரபைச் சேர்ந்த இந்து அரசர் ஜெயபாலர் ஆவார்.
  • முகமது கஜினி கி.பி.1025 ஆண்டில் சோமநாதபுரத்தின் மீது படையெடுத்தார்.
  • முதலாம் தரைன் போரில், முகமது கோரியை தோற்கடித்தவர் பிருதிவிராசன் ஆவார்.
  • முகமது கோரியின் படைதளபதி குத்புத்தீன் ஐபக் ஆவார்.

Leave a Reply