7th Samacheer Kalvi History Study Material in Tamil – 5

டெல்லி சுல்தான்கள்

  • கி.பி.1206 முதல் கி.பி.1526 வரையிலான காலம் சுல்தான்களின் காலம் எனப்படும்.
  • இந்தியாவில் மாம்லுக், கில்ஜி, துக்ளக், சையது லோடி ஆகிய மரபினர் ஆட்சி செய்துள்ளனர்.

குத்புத்தீன் ஐபெக்

  • முகமது கோரியின் இறப்பிற்குப் பின்பு அவரது தளபதி குத்புத்தீன் ஐபெக் மாம்லுக் மரபினை நிறுவினார்.
  • (கி.பி.1206-1210) குத்புத்தீன் ஐபக், மாம்லுக் மரபினை நிறுவி இந்தியாவில் துருக்கிய ஆதிக்கத்தைத் தொடங்கி வைத்தார். தனது தலைநகரை லாகூருக்கு மாற்றினார்.
  • இராணுவத்தின் வலிமையை பயன்படுத்திலேயே மாம்லுக் ஆட்சியை நிலை நிறுத்தினார்.
  • அஜ்மீரில் குவ்வதுல் இஸ்லாம் என்ற மசூதியையும், டெல்லியில் தாய்டின்கா – ஜோன்பரா என்ற மசூதியையும் கட்டினார்.
  • டெல்லியில் குதுப்மினார் கோபுரக்கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
  • இவர் பல இலட்சங்களை கொடையாக வழங்கியதால் ‘லாக்பக்ஷா’ எனப் புகழப்பட்டார்.
  • கி.பி.1210-ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் குதிரை மீது அமர்ந்து ‘போலோ’ விளையாடிக் கொண்டிருந்த போது நிலைதடுமாறி விழுந்து இறந்து போனார்.

இல்துத்மிஷ்

  • இல்பாரி என்ற பழங்குடி இனத்தில் இல்துத்மிஷ்.
  • குத்புத்தீன் ஐபெக் இவரை தனது மருமகனாக்கினார்.
  • குத்புத்தீனுடைய மகனும், மன்னருமான ஆராம்ஷாவைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார்.
  • மங்கோலியர்களால் தாக்கப்பட்ட கவாரிசம் பகுதியின் மன்னர் ஜலாலுத்தீன் மங்கபர்னி என்பவருக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்தார். எனவே மங்கோலிய படைத்தலைவர் செங்கிஸ்கான் டெல்லியை முற்றுகை இடவில்லை.
  • இல்துத்மிஷ் வெளியிட்ட டங்கா என்ற வெள்ளி நாணயத்தில் அராபிய மொழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
  • ஜிடால் என்ற செம்பு நாணயமும் அவா வெளியிட்டார்.
  • குதுப்-உத்-தீன்-பக்தியார் என்ற சூஃபித் துறவியின் நினைவாக குதுப்மினாரை குத்புத்தீன் ஐபெக் கட்டத் தொடங்கினார். அதனை இல்துஷ்மிஷ் கட்டி முடித்தார்.
  • இல்துத்மிஷ் இறப்பதற்கு முன் தனது மகள் இரசியாவை நாட்டின் அரசியாக அறிவித்தார்.
  • நாடு, நிர்வாக வசதிக்காக பல இக்தாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவை ‘இக்தாதார்’ என்பவர்களால் நிறுவகிக்கப்பட்டனர்.
  • படைப்பிரிவில் ‘நாற்பதின்மர் குழு’ என்ற தொகுதி முறை உறுவாக்கப்பட்டது.
  • அராபிய மொழியில் நாணயங்கள் வெளியிட்ட முதல் துருக்கியர் என்ற சிறப்பை இல்துத்மிஷ் பெற்றார்.
  • சுல்தான்கள் வரிசையில் முதல் பெண்ணரசி இரசியா.

கியாசுதின் பால்பன்

  • பால்பன் துருக்கிய இனத்தில், இல்பாரி என்னும் பிரிவைச் சேர்நதவர்.
  • 14 ‘தெய்வீக உரிமைக் கோட்பாட்டில் நம்பிக்கைக் கொண்டவராக இருந்தார்.
  • பைபோஸ் என்னும் புதிய வணக்க முறையை நடைமுறைப்படுத்தினார். பைபோஸ் முறைபடி, மன்னரை சந்திக்க வருபவர், அவரது காலை முத்தமிட்டு வணங்க வேண்டும்.
  • ‘நாற்பதின்மர்குழு’ என்ற அடிமை முறையை ஒழித்தார்.
  • திவானி அர்ஸ் என்ற தனிப்படைப் பிரிவு ஒன்று தொடங்கப்பட்டது.
  • வங்காளத்தில் சுதந்திர மன்னராக செயல்பட்ட துக்ரின்கானை தோற்கடித்து வங்காளத்தை கைப்பற்றினார்.
  • ‘இந்தியக்கிளி’ எனப்பாராட்டப்பட்ட அமீhகுஸ்ருவையும், அமீர் ஹாசன் என்ற அறிஞரையும் ஆதரித்தார்.
  • அடிமை வம்ச மன்னர்களில் சிறந்த மன்னராக பால்பன் திகழ்ந்தார்.
  • பால்பனை அடுத்து அவரது பேரன் கைகுபாத் பட்டமேற்றார்.
  • ஜலாலுதீன் கில்ஜி கைகுபாத், கையுமார் ஆகிய இருவரையும் கொன்று டெல்லியின் மன்னரானார்.
  • மாம்லுக் மரபு முடிவுற்று கில்ஜி மரபினர் ஆளத் தொடங்கினார்கள்.

ஜலாலுதீன் பெரோஸ் கில்ஜி

  • ஜலாலுதீன் கில்ஜி பிற்காலத்தில் அமைதியான முறையில் ஆட்சியை நடத்தினார். இரத்தம் சிந்தாத ஆட்சியை வழங்க விரும்பினார். எனவே ‘கருணை உள்ளம் கொண்ட ஜலாலுத்தீன்’ என புகழப்பட்டார்.
  • ஜலாலுத்தின், சஜ்ஜீவின் கலகத்தை அடக்கி, அலாவுத்தீன் கில்ஜியை காராவின் ஆளுநராக்கினார். இவரது ஆட்சியில் வழிபறியும், திருட்டும் அதிகம் நடைபெற்றது.

அலாவுத்தீன் கில்ஜி

  • கி.பி. 1296ல் ஜலாலுத்தீன் கில்ஜியை கொன்று அரசப் பதவியைக் கைப்பற்றிய அலாவுத்தீன் வடஇந்தியா முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.
  • உலுக்கான், நசரத்கான் என்ற வலிமையான படைத் தளபதிகளை அனுப்பி ராந்தாம்பூர், சித்தூர், மாளவம், மாண்டு, உஜ்ஜெயின், தார், சாந்தேரி, மார்வார், ஜலோர் ஆகிய இடங்களை வென்றார்.
  • டெல்லி சுல்தான்களில், முதன் முதலில் தென்னிந்திய படையெடுப்புகளை மேற்கொண்டவர் அலாவுத்தீன் கில்ஜி ஆவார்.
  • தமது தளபதி மாலிக் கபுரை தென்னிந்திய அரசர்களுக்கு எதிராக அனுப்பினார். தேவகிரி, வாரங்கல், ஹொய்சாளம் ஆகிய பகுதிகளை வென்று அதன் அரசர்கள் டெல்லி சுல்தானுக்கு திறை செலுத்தும் அரசரானார்கள்.
  • மாலிக் கபுர் இராமேஸ்வரம் வரை சென்று அங்கு ஒரு பள்ளிவாசலை நிறுவினார்.
  • அலாவுத்தீன் கில்ஜி தம்மை ‚கடவுளின் பிரதிநிதி‛யாகக் கருதினார்.
  • சமுதாயகுழுக்கள் கூடுவதைத் தடுத்தார். மக்கள் மது அருந்திட தடை செய்தார்.
  • படைப்பிரிவில் குதிரைகளுக்கு சூடுபோடும் முறையை கொண்டு வந்தார் வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருட்களின் விலைகளை நிர்ணயித்தார். கள்ளச் சந்தையை முற்றிலும் ஒழித்தார்.
  • அஞ்சல் முறையை மேம்படுத்தினார்.
  • பெரிய அளவிலான ஒரு ‘நிரந்தரப்படையை’ உருவாக்கிய முதல் சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆவார்.
  • விந்தியமலையைக் கடந்து சென்று தென்னிந்தியாவையும் வென்றார்.
  • பாமத்கான மசூதி, அலைதர்வாசா, சீரிக்கோட்டை, ஆயிரம் ஷண்கள் அரண்மனை போன்றவற்றைக் கட்டினார்.
  • அலாவுதீன் கில்ஜிக்குப் பின்னர் கி.பி.1320ல் கில்ஜி வம்சம் முடிவுக்கு வந்தது.
  • பஞ்சாபின் ஆளுநர் காஸிமாலிக், உயர்குடியினர் உதவியுடன் டெல்லியை கைப்பற்றி, கியாசுதீன் பட்டப்பெயருடன், துக்ளக் மரபின் ஆட்சியை ஏற்படுத்தினார்.

கியாசுதீன் துக்ளக்

  • கி.பி.1320ல் துக்ளக் வம்ச ஆட்சியை ஏற்படுத்தினார்.
  • இவரது பேரரசுடன், வாரங்கல், ஒரிஸாவின் உத்கல், வங்காளம் ஆகியன இணைக்கப்பட்டன.
  • அவரை அடுத்து இளவரசர் ஜூனாகான் ஆட்சிக்கு வந்தார்.

முகமது பின் துக்ளக்

  • இளவரசர் ஜூனாகான் ‘முகமது பின் துக்ளக்’ என்ற பட்டப் பெயருடன் அரசரானார்.
  • இந்தியாவில் அரசியல் மற்றும் நிர்வாகத்தை சீர்த்திருத்தம் செய்ய வேண்டும் என்று பாடுபட்டார்.
  • நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த எண்ணி செப்பு நாணயங்களை அறிமுகம் செய்தார்.
  • ஆனால் மக்களே செப்பு நாணயங்களை அச்சிட தொடங்கியதால், செப்பு நாணய முறையை நிறுத்தினார்.
  • முகமது பின் துக்ளக் ஏற்படுத்திய அவசர கொள்கை முடிவுகளும், சில நடைமுறைப்படுத்த இயலாதத் திட்டங்களும், துக்ளக் மரபின் வீழ்ச்சிக்குக் காரணமாயின.

பிரோஸ் துக்ளக்

  • கியாசுதீன் துக்ளக்கின் இளைய சகோதரரின் மகன் பிரோஸ் துக்ளக் ஆவார்.
  • சட்டத்திற்கு புறம்பான தேவையற்ற வரிகள் நீக்கப்பட்டன.
  • நான்கு விதமான வரிகளான கரோஜ், கம்ஸ், பெஸியா, ஜகாத் வசூலிக்கப்பட்டது.
  • வேலைவாய்ப்பு அமைப்பு, திருமண அமைப்பு மருத்துவமனைகள் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
  • பிரோஸ் துக்ளக், பதூஹத்-இ-பெரோஷாஹி சுயவரலாற்று நூலை எழுதினார்.
  • சமஸ்கிருத நூல்கள் பாரசீக மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
  • குதுப்பெரோஸ்-ஷாஹி என்ற இயற்பியல் தொடர்பான நூலும் எழுதப்பட்டது.
  • பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் நாட்டின் பல பகுதிகள் பிரிந்து சுதந்திரமாயின. டெல்லி, பஞ்சாப் ஆகியன மட்டுமே துக்ளக் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
  • சமர்கண்ட் பகுதியை தைமூர் என்பவர் ஆட்சி செய்தார்.
  • அவர் இந்தியாவின் மீது படையெடுத்து, நசீர் முகமது துக்ளக், அவரது தளபதி மல்லு இக்பால் ஆகியோரை எதிர்த்துப் போரிட்டார். முடிவில் தைமூரே வென்றார்.
  • கி.பி.1398ல் டெல்லி தைமூரால் கைப்பற்றப்ட்டது.
  • தைமூரின் படையெடுப்புடன் துக்ளக் ஆட்சி முடிவுக்கு வந்தது.

சையது மரபு

  • துக்ளக் மரபின் வீழ்ச்சிக்கு பின்னர் சையது மரபினர் டெல்லியை ஆளத் தொடங்கினார்கள்.
  • முல்தானின் ஆளுனர் கிஸிர்கான், டெல்லியின் ஆட்சியைக் கைப்பற்றி, கி.பி. 1414ல் சையது மரபினை தொடங்கினார்.
  • கிஸிர்கானின் இறப்பிற்கு பின்னர் அவரது மகன் முபாரக்ஷா ஆட்சியேறினார்.
  • இவர் டெல்லி நீதிமன்றத்தில் இந்துமத உயர் குடியினரை நியமித்தது குறிப்பிடத்தக்கது.
  • யமுனை நதிக்கரையில் ‘முபாரக் பாத்’ என்னும் நகரை நிர்மானித்தார்.
  • முபாரக் மரணத்தையடுத்து அவரது சகோதரனின் மகனான முகமுதுஷா மன்னரானார்.
  • மாளவத்தின் வெற்றிக்கு காரணமான லாகூர் ஆளுநர் பஹ்லுல் லோடிக்கு ‘கானி கானா’ என்ற பட்டத்தை சூட்டினார்.
  • முகமது ஷாவை அடுத்து அலாவுதீன் ஷா மன்னரானார்.
  • கி.பி.1457ல் சையது வம்சம் முடிவுக்கு வந்தது.

லோடி மரபு

  • பஹ்லுல் லோடி டெல்லியை ஆண்ட சுல்தான்களில் லோடி மரபே இறுதியாக ஆட்சி செய்தது.
  • லோடி மரபை தொடங்கி வைத்தவர் பஹ்லுல் லோடி ஆவார்.
  • பஹ்லுல் லோடி அரியணையில் அமரவில்லை.
  • உயர்குடியினருடன் கம்பளத்தில் அமர்ந்து ஆட்சி செய்தார்.
  • விவேகம் நிறைந்த மன்னரான பஹ்லுல்லோடி தனக்கென்று சில வரையறைகளை வைத்துக் கொண்டார்.
  • பஹ்லுல் லோடியை அடுத்து அவரது மகன் சிக்கந்தர் ஷாஹி ‚சிக்கந்தர் ஷா‛ என்ற பட்ட பெயருடன் ஆளத் தொடங்கினார்.
  • சிக்கந்தர் ஷாஹி ஆக்ரா நகரைக் கட்டினார். ஆக்ரா நகர் நிர்வாகம் மற்றும் பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.
  • சிக்கந்தர் ஷாஹி காலத்தில் கணிதம், வானவியல், யோகா, மருத்துவம் உள்ளிட்ட பல சமஸ்கிருத நூல்கள் பாரசீக மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டன.
  • செனாய் இசையை விரும்பினார். லஹ்ஜட்-இ-சிக்கந்தர் ஷாஹி இசைத்தொகுப்பு சிக்கந்தர் ஷாஹி காலத்தில் உருவாக்கப்பட்டது.
  • சிக்கந்தர் ஷா லோடிமரபின் சிறந்த அரசர் ஆவார்.
  • சிக்கந்தர் லோடியை அடுத்து இப்ராஹிம் லோடி பட்டமேற்றார்.
  • தௌலத்கான் லோடியின் மகன் தில்வர்கான் லோடியை இவர் கொடுமைப்படுத்தியதால் தௌலத்கான் லோடி, காபுல் மன்னர் பாபரை உதவிக்கு அழைத்தார்.
  • பாபர் தனது பெரும்படையுடன் இந்தியாவுக்கு வந்தார்.
  • கி.பி.1526ல் நடைபெற்ற முதலாம் பானிபட் போரில் இப்ராஹிம் லோடியை வென்றார்.
  • இந்த வெற்றியானது டெல்லியில் சுல்தான்களின் ஆட்சியை முடித்து வைத்து, முகலாயர் ஆட்சியைத் தொடங்கி வைத்தது.

 சுல்தான்களின் நிர்வாகத்துறை

  • கி.பி1206 முதல் கி.பி.1526 வரையிலான 320 ஆண்டுகள் ஆண்ட டெல்லி சுல்தானிய ஆட்சியானது, மதவாத ஆட்சியாகவும், இராணுவ ஆட்சியாகவுமே இருந்தது.
  • நாட்டின் முதன்மையான வருமானம் நிலவரி மூலமாகவே கிடைத்தது.
  • நீதித்துறையின் உயர்நிலைப் பொறுப்பு சுல்தானிடம் இருந்தது.
  • தலைமை நீதிபதி காஸி-உத்-கவாத் எனப்பட்டார்.
  • வெளிநாட்டு முஸ்லீம்கள், இந்திய முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஆகியோர் சமூகத்தில் வாழ்ந்தனர்.
  • வேளாண்மையே முக்கிய தொழிலாக இருந்தது.
  • நெசவுத்தொழிலும் இருந்தது.
  • குஜராத், வங்காளம் ஆகிய இடங்களில் தரமான துணிகள் தயாரிக்கப்பட்டன.
  • குதுப்மினார், குவாத் உத் இஸ்லாம் மசூதி, நாசிர்-உத்-தீன் முகமதுவின் கல்லறை, பால்பனின் சமாதி ஆகியன மாம்லுக் கால அழகிய கட்டிடங்கள் ஆகும்.
  • சீரி நகரம், ஹரதத்நிஜாம்முதின் அலுயாவின் தர்கா, அலாய்தார்வாசா ஆகியவை கில்ஜி காலக் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டு.
  • கியாசுதீன் துக்ளக்கின் கல்லறை, முகமது-பின்-துக்ளக் கட்டிய அதலாபாத் கோட்டை, துக்ளக்காபாத், ஜஹான்பனா ஆகிய நகரங்கள் துக்ளக் கால கட்டிடங்கள் ஆகும்.
  • டெல்லியில் உள்ள லோடி புங்கா, மோதி மசூதி மற்றும் சிக்கந்தர் லோடியின் கல்லறை லோடி மரபினர் காலத்தைச் சேர்ந்தவை.
  • சுல்தான்களின் அவையில், அல்பருணி, அமிர்குஸ்ரு ஜியா உல்பரணி போன்ற பல அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.
  • சமஸ்கிருத நூல்கள் அராபிய மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டன. உருது மொழியானது உருவான காலமும் இதுவே.
  • அல்பரூனி என்ற அறிஞர், அரபு, பாரசீக மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இவர் கஜினி முகமது அவையிலும் இடம் பெற்றிருந்தார்.
  • அல்பரூனி எழுதிய தாருக்கி-உல்-இந்த் என்ற நூலில் இந்திய சமூக பொருளாதார நிலையை விளக்கினார்.
  • அமிர்குஸ்ரு என்ற பாரசீக மொழிக் கவிஞர் ‚இந்தியக் கிளி‛ என புகழப்பட்டார். இவரது கவிதைகளில் நிறைய இந்தி சொற்களை பயன்படுத்தியுள்ளார்.

சுல்தான்களின் வீழ்ச்சி

  • துக்ளக் மரபினரின் ஆட்சிக்காலத்திலேயே சுல்தானிய வீழ்ச்சியானது தொடங்கிவிட்டது.
  • தைமூர் படையெடுப்பு, திறமையற்ற, சகிப்புத்தன்மையற்ற சில சையது மற்றும் லோடி மரபினரின் நடவடிக்கைகளும் சுல்தானிய அரசின் வீழ்ச்சிக்கு காரணங்களாகும்.
  • சரிவின் தொடக்கமாக, விஜயநகரம், பாமினி அரசு, ஆகியன சுல்தான்களின் நிர்வாகத்திலிருந்து வெளியேறின.
  • கி.பி.1526ல் நடைபெற்ற முதல் பானிபட்போரில் இப்ராகீம்லோடியை பாபர் வென்றதால் லோடி வம்சம் முடிவுக்கு வந்தது.
  • டெல்லியைத் தலைநகராகக் கொண்டு, முகலாயப் பேரரசு உருவானது.
  • மாம்லுக் மரபினை நிறுவியவர் குத்புத்தீன் ஐபெக் துருக்கிய நாணய முறையை முதலில் அறிமுகப்படுத்திய துருக்கிய அரசர் இல்துஷ்மிஷ் ஆவார்.
  • ‘இந்தியக்கிளி’ என அழைக்கப்பட்ட கவிஞர் அமிர்குஸ்ரு ஆவார்.
  • சையது மரபினைத் தொடங்கியவர் கிஸிர்கான் ஆவார்.
  • காபுல் மன்னர் பாபரை இந்தியா மீது படையெடுக்கும்படி அழைத்தவர் தௌலத்கான்லோடி.

Leave a Reply