7th Samacheer Kalvi History Study Material in Tamil – 6

விஜயநகர, பாமினி அரசுகள்

  • டெல்லி துல்தானிய வீழ்ச்சிக்கு பிறகு முதலில் வங்காளமும், முல்தானும் வெளியேறி தமது சுதந்திரத்தை அறிவித்துக் கொண்டனர்.
  • தக்காணம் மற்றும் தென்னந்தியாவில் விஜயநகரம், பாமினி பேரரசு ஆகியன அரசியல் முக்கியத்துவமும் பெற்றன.
  • ஹரிஹரர் புக்கர் கி.பி. 1336-இல் துங்கபத்ரா ஆற்றங்கரையில் விஜயநகர அரசினை உருவாக்கினார்.
  • இதன் தலைநகரம் ஹம்பியாகும்.
  • இந்தப் பேரரசு சங்கம, சாளுவ, துளுவ, அரவீடு என்ற நான்கு முக்கிய மரபினர்களால் ஆளப்பட்டது.
  • கி.பி.1336ல் ஆட்சிப்பொறுப்பேற்ற முதலாம் ஹரிகரன் மைசூரையும், மதுரையையும் வென்றார்.
  • விஜயநகர பேரரசின் முக்கிய மன்னர்கள் இரண்டாம் ஹரிகரர், முதலாம் தேவராயர், இரண்டாம் தேவராயர், கிருஷ்ண தேவராயர் ஆகியோர் ஆவார்.
  • துளவ மரபைச் சேர்ந்தவர் கிருஷ்ண தேவராயர்.
  • ‘கிருஷ்ண தேவராயர் முழுநிறைவான அரசர்’ என்று வரலாற்று அறிஞர் டோமினிக் பயஸ் குறிப்பிட்டு;ள்ளார்.
  • கிருஷ்ண தேவராயர் நீர்பாசன வசதிக்காக பெரிய ஏரிகளையும், வாய்க்கால்களையும் ஏற்படுத்தினார். இவர் கப்பல் கட்டுமானத்தையும் மேம்படுத்தினார்.
  • கிருஷ்ணதேவராயர் சிறந்த கல்விமான் ஆவார். இவரது அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.
  • அஷ்டதிக்கஜங்கள்: அல்லசாணி பெத்தண்ணா, நந்தி திம்மண்ணா, தெனாலிஇராமன், பட்டுமூர்த்தி, புனவீரபத்திரன், துர்ஜதி, மல்லண்ணா, மற்றும் பனாஜி சூரானா ஆகியோர்.
  • இவரது காலத்தில் விஜயநகரப் பேரரசின் புகழ் உச்ச நிலையை அடைந்தது.
  • கி.பி.1565-ல் தலைக்கோட்டை போரில் விஜயநகர பேரரசு வீழ்ந்தது.
  • மகாநாயக்காச்சாரியார் என்னும் மைய அரசின் அதிகாரியால் கிராம நிர்வாகங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டன.
  • படைப்பிரிவில் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை ஆகியன பெரும்பங்கு வகித்தன.
  • வழக்குகள் இந்து நெறிமுறைகளின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டன.
  • பெண்களின் நிலை மேம்பட்டிருந்தது. அரசியல், சமுதாயம், இலக்கியம் போன்றவற்றில் பங்கு கொண்டனர்.
  • ஆயுதமேந்துதல், மல்யுத்தம் தற்காப்பு கலைகளிலும் ஆர்வம் காட்டினர்.
  • நியுனஸ் என்கிற அறிஞர் ‘பெண் சோதிடர்கள், எழுத்தர், கணக்காளர், காவலர், மல்யுத்த வீராங்கனைகள் ஆகியோர் அரசவையில் இடம் பெற்றிருந்தனர்’ எனக்குறிப்பிட்டுள்ளார்.
  • குழந்தைத் திருமணமும், பலதார மணமும், உடன்கட்டை ஏறுதலும் நடைமுறையில் இருந்தன.
  • வெளிநாட்டுக்கப்பல் போக்குவரத்துக்கு, கோவா, டையூ, கொல்லம், கொச்சி முதலியன முக்கிய துறைமுகங்களாக விளங்கின.
  • கோயிற்கட்டுமானக் கலைக்கு, ஹசரா ராமசாமி கோயிலும், விட்;டலசாமி ஆலயமும் ஊலோக உருக்குக்கலை சிறப்பிற்கு கிருஷ்ணதேவராயர் சிலையும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
  • வேதங்களுக்கான உரையை சாயனா எழுதினார்.
  • கிருஷ்ணதேவராயர் தெலுங்கில் ஆமுக்த-மால்யதா என்னும் நூலை எழுதினார். மேலும் உஷாபரிநயம், ஜாம்பவதி கல்யாணம் ஆகிய சமஸ்கிருத நூல்களையும் எழுதியுள்ளார்.

பாமினி அரசு

  • ஹசன்கங்கு பாமினி என்பவர் கி.பி.1347ல் இவ்வரசைத் தோற்றுவித்தார். இவர் தேவகிரியை சேர்ந்த துருக்கிய அலுவலர்.
  • இவரது தலைநகரம் குல்பர்கா ஆகும்.
  • முதலாம் முகமது ஷா சிறந்த போர் வீரரும் நிர்வாகியுமாவார்.
  • இரண்டாம் முகமது ஷா அமைதியை விரும்பினார். பல மசூதிகளையும், மதராஸா என்ற கல்விக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் கட்டினார்.
  • பெரோஸ்ஷா பாமினி தமது நிர்வாகத்தில் இந்துக்களுக்கும் இடமளித்தார்.
  • அகமது ஷா கொடுங்கோலனாகவும், இரக்கமற்றவனாகவும் இருந்தார். தமது தலைநகரை குல்பர்காவிலிருந்து பீடாருக்கு மாற்றினார்.
  • முகமது கவான் நிதித்துறையை சீரமைத்தார். வரிமுறையில் மாற்றங்களை உண்டாக்கினார். படைத்துறையில் ஊழலை ஒழித்து ஒழுங்கு செய்தார்.
  • மூன்றாம் முகமது ஷா பட்டமேற்ற போது அவருக்கு வயது ஒன்பது. அவருக்கு முகமது கவான் பாதுகாவலராக இருந்து ஆட்சி செய்தார்.
  • இக்காலத்தில் பாமினி அரசின் எல்லையாக இரு கடல்களும், தபதி-துங்கபத்ரா நதிகளும் இருந்தன.
  • பாமினி அரசு ஐந்து சிறு நாடுகளாக சிதறுண்டது. அவை பீஜப்புர், அகமதுநகர், பீரார், பீடார், கோல்கொண்டா ஆகியவனவாகும்.
  • பாமினி அரசின் நிர்வாகம் நிலமானிய முறையில் அமைந்தது.
  • உருதுமொழி வளர்ச்சியுற்றது.
  • முகமதுகவான் கட்டிய மதரசா மற்றும் பீஜப்புரில் உள்ள கோல்கும் பாஸ் கட்டிடம் ஆகியன அவர்களின் கட்டிடகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
  • பீஜப்புரில் உள்ள கோல்கும்பா கட்டடம் ‘முணுமுணுக்கும் அரங்கம்’ என்ற சிறப்பை பெற்றது.
  • விஜயநகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு கி.பி.1336.
  • ஹரிகரர், புக்கர் சகோதரர்கள் பணியாற்றிய ஹொய்சாள அரசர் மூன்றாம் வீர பல்லாளர் ஆவார்.
  • விஜய நகர பேரரசின் புகழ்மிக்க அரசர் கிருஷ்ண தேவராயர் ஆவார்.
  • 1347ல் தக்காணத்தில் ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம் பேரரசு பாமினி மூன்றாம் முகமது ஷா வின் பாதுகாவலராக முகமது கவான் இருந்தார்.

Leave a Reply