8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
- “பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும், அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது” என்றும் கூறியவர் = எட்வர்ட் பெயின்ஸ்.
- எந்த முகலாய மன்னரின் ஆட்சிக்காலத்தின் பொழுது பிரெஞ்சு நாட்டு பயணி பெர்னியர் இந்தியாவிற்கு வருகை தந்தார் = முகலாய மன்னன் சாஜகான்.
- இந்தியாவில் நம்பமுடியாத எண்ணிக்கையில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதைக் கண்டு வியப்படைந்த வெளிநாட்டு பயணி = பிரெஞ்சுப் பயணி பெர்னியர்.
- இந்தியாவில் இருந்த மயிலாசனம், பட்டு மற்றும் தங்கத்தினாலான தரைவிரிப்புகள், சிறிய அளவிலான சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு வியப்படைந்த வெளிநாட்டு பயணி = பிரெஞ்சு நாட்டுப் பயணி தவர்னியர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இந்தியாவின் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்கள்
- இந்திய கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்த நிலையில் இருந்த தொழில் = கைவினைத் தொழில்.
- இந்தியா எதற்கு பிரபலமானது = பருத்தி மற்றும் பட்டு ஆடைகளின் தரத்திற்கு.
- இந்தியாவில் மணி தயாரிக்க பயன்படும் உலோகமான வெண்கலத்திற்கு பிரபலமான பகுதி = சௌராஸ்டிரா.
- இந்தியாவில் தகரத் தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்ற மாநிலம் = வங்காளம்.
- மஸ்லின் ஆடைகளுக்கு புகழ்ப்பெற்ற பகுதி = டாக்கா (வங்கதேசம்).
- 8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
டாக்கா மஸ்லின் ஆடைகள்
- கி.மு. (பொ.ஆ.மு.) 2000ஆம் ஆண்டுகள் பழமையான எகிப்திய கல்லறைகளில் உள்ள மம்மிகள் மிகச் சிறந்த தரம் வாய்ந்த இந்திய மஸ்லின் ஆடைகள் கொண்டு சுற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- 50 மீட்டர் அளவு கொண்ட மெல்லிய இந்த மஸ்லின் துணியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்.
இந்தியத் தொழிலகங்களின் வீழ்ச்சிக்கான காரணங்கள்
- ஆட்சியாளர்களின் ஆதரவின்மை
- உற்பத்தியாளர் மூலப்பொருட்களின் ஏற்றுமதியாளராக மாறுதல்
- இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி
- ஆங்கிலேயர்களின் வர்த்தகக் கொள்கை
- தொழில்மயம் அழிதல்
ஆட்சியாளர்களின் ஆதரவின்மை
- சுயசார்பு இந்திய பொருளாதாரத்தை காலனித்துவ பொருளாதாரமாக மாற்றியவர்கள் = ஆங்கிலேயர்கள்.
- ஆங்கிலேய ஆட்சியினால், பூர்வீக ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்ட கைவினைக் கலைஞர்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தனர்.
உற்பத்தியாளர், மூலப்பொருட்களின் ஏற்றுமதியாளராக மாறுதல்
- ஆங்கிலேயர்கள், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த இயந்திரங்கள் மூலம் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்தனர்.
- ஆங்கிலேயர்கள் இந்தியாவை அவர்களின் பொருட்களை விற்பனை செய்யும் சந்தையாக மாற்றினர்.
- ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்த ரயில்வே மற்றும் சாலைகள், அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவியது.
- 8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி
- இந்தியாவின் பழமையான தொழில் = நெசவுத் தொழில்.
- பழமையான தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட இந்தியப் பொருட்கள் இங்கிலாந்தில் இயந்திரங்களால் முடிக்கபப்ட்ட பொருட்களுடன் போட்டியிட முடியவில்லை.
செல்வச் சுரண்டல் கோட்பாடு
- செல்வச் சுரண்டல் கோட்பாட்டை வெளியிட்டவர் = தாதாபாய் நௌரோஜி.
- செல்வச் சுரண்டல் கோட்பாடு = இந்தியாவின் செல்வங்கள், வளங்களை சுரண்டி இங்கிலாந்துக்கு கொண்டு சென்றதே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் எனக் கூறியது.
- இந்திய மக்களின் வறுமைக்கு காரணம், இந்திய செல்வங்களை இங்கிலாந்து சுரண்டியதே என முதன் முதலில் கூறியவர் = தாதாபாய் நௌரோஜி.
- 8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
ஆங்கிலேயர்களின் வர்த்தகக் கொள்கை
- தடையில்லா வாணிபக் கொள்கை = இந்திய வர்த்தகர்கள் தங்களின் பொருட்களை சந்தை விலைக்கும் குறைவாக விற்க வழிவகுத்தது.
- மலிவான விலையில் இந்தியப் பொருட்களை வாங்கி, இங்கிலாந்தில் நல்ல விலைக்கு விற்றனர் ஆங்கிலேயர்கள்.
- இந்தியப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது.
தொழில்மயம் அழிதல்
- தொழில்மயம் அழிதல் = “இந்திய கைவினை தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்துதல் + தேசிய வருமானத்தின் வீழ்ச்சி.
- வெளிநாட்டு தொழிலகங்களுடன் இந்திய உள்நாட்டு தொழில்கள் போட்டியிட முடியவில்லை.
இந்தியாவில் நவீன தொழிலகங்களின் தொடக்கம்
- இந்தியாவில் தொழில்மயமாக்கல் துவங்கிய காலம் = பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி.
- நவீனத் தொழில்துரையின் தொடக்கமானது எந்தத் தொழில்களுடன் தொடர்புடையது = பருத்தி, சணல், எஃகு.
- இந்தியாவில் பெரும்பாலான ஆலைகள் பணக்கார இந்திய வணிகர்களால் அமைக்கப்பட்டன.
- 8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
தோட்டத் தொழில்கள்
- இந்தியாவில் ஐரோப்பியர்களை முதன் முதலில் ஈர்த்த தொழில் = தோட்டத் தொழில்.
- அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு = 1839.
- கிழக்கிந்திய பகுதிகளில் முக்கியமான தொழில் = தேயிலை தோட்டத் தொழில்.
- தென்னிந்தியாவின் முக்கியமான தொழில் = காபி தோட்டத் தொழில்.
- முதல் முக்கியத் தோட்டத் தொழில் = தேயிலை.
- இரண்டாவது முக்கியத் தோட்டத் தொழில் = காபி.
- மூன்றாவது முக்கியத் தோட்டத் தொழில் = சணல்.
இயந்திர அடிப்படையிலான தொழில்கள்
- பம்பாயில் பருத்தி நூற்பு ஆளை நிறுவப்பட்ட ஆண்டு = 1854.
- கல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றங்கரையில் உள்ள “ரிஷ்ரா” என்னுமிடத்தில் சணல் தொழிற்சாலை துவக்கப்பட்ட ஆண்டு = 1855.
- எந்த ஆண்டு கல்கத்தா அருகே “பாலிகன்ஜ்” என்னுமிடத்தில் காகித ஆலை துவக்கப்பட்டது = 1870.
- இந்தியாவில் கம்பிளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் முக்கியத்துவம் பெற்ற இடம் = கான்பூர்.
- 8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
கனரக தொழில்கள்
- இந்தியாவில் முதன் முதலில் நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்ட இடம் = குல்டி.
- எந்த ஆண்டு இந்தியாவில் “குல்டி” என்னுமிடத்தில் நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்டது = 1874.
- இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான எஃகு உற்பத்தியை மேம்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர் = ஜாம்ஷெட்ஜி டாடா.
- எந்த ஆண்டு ஜாம்ஷெட்பூரில் “டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம்” (TISCO) அமைக்கப்பட்டது = 1907.
- எந்த ஆண்டு ஜாம்ஷெட்பூர் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) “தேனிரும்பு” உற்பத்தியை துவங்கியது = 1911.
- எந்த ஆண்டு ஜாம்ஷெட்பூர் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) “உலோக வார்ப்பு கட்டிகள்” உற்பத்தியை துவங்கியது = 1912.
இந்தியாவில் நவீன தொழிலகங்களின் வளர்ச்சி
- 1861ல் இந்திய ரயில்வேயின் நீளம் = 2573 கிலோமீட்டர்.
- 1914ல் இந்திய ரயில்வேயின் நீளம் = 55773 கிலோமீட்டர்.
- எந்த கால்வாய் ஐரோப்பாவிற்கும், இந்தியாவிற்குமான தூரத்தை 4830 கிலோமீட்டர் குறைத்தது = சூயஸ் கால்வாய்.
- இந்தியாவில் எந்த இயக்கத்தின் விளைவாக 194 ஆக இருந்த பருத்தி ஆலைகள் 273 ஆக உயர்ந்தது = சுதேசி இயக்கம்.
- இந்தியாவில் எந்த இயக்கத்தின் விளைவாக 36 ஆக இருந்த சணல் ஆலைகள் 64 ஆக உயர்ந்தது = சுதேசி இயக்கம்.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII)
- CII = CONFEDERATION OF INDIAN INDUSTRY.
- இந்திய தொழில்துறை கூட்டமைப்பு = ஒரு வணிக சங்கம் ஆகும்.
- இது அரசு சாரா, இலாப நோக்கமற்ற தொழில்துறையை வழிநடத்தும் அமைப்பாகும்.
- இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) உருவாக்கப்பட்ட ஆண்டு = 1985.
- இந்திய தொழில்துறை கூட்டமைப்பு துவக்கப்படும் பொழுது எத்தனை உறுப்பினர்களைக் கொண்டு துவக்கப்பட்டது = 9000.
- 8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
தொழில்துறை கொள்கைகள்
- தொழில்துறை கொள்கை 1948 = தொழில்துறையில் அரசின் நேரடி பங்களிப்பை எடுத்துரைக்கிறது.
- தொழில்துறை கொள்கை 1956 = தொழில்துறை மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டது. அவை,
- அட்டவணை 1 = அரசாங்கம் மட்டும் நடத்தும் தொழில்கள்.
- அட்டவணை 2 = சாலைகள், கடல் போக்குவரத்து, உரங்கள், ரசாயனம், சுரங்கம் போன்ற தொழில்கள்.
- அட்டவணை 3 = தனியார் துறையினர் செய்யும் தொழில்கள்.
இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள்
தொழில்துறை வளர்ச்சி (1950 – 1965)
- முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களின் நோக்கம் என்ன = முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களின் நோக்கம் சுதந்திர இந்தியாவில் ஒரு வலுவான தொழில்துறை தளத்தை உருவாக்குவது ஆகும்.
- முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் எதில் கவனம் செலுத்தின = முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் மூலதனப் பொருட்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தின.
- முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டவை = நுகர்வோர் துறை.
- 1950 – 1965 வரையிலான காலத்தில் தொழில்துறை துரிதமான வளர்ச்சியைக் கண்டது.
தொழில்துறை வளர்ச்சி (1965 – 1980)
- முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டவை = நுகர்வோர் துறை.
- கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு எது = நுகர்வோர் பொருட்கள் துறை.
- 1965 – 1980 வரையிலான காலம், தொழில்துறை வளர்ச்சியில் பின்னடைவு காலமாகும்.
- 8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
தொழில்துறை வளர்ச்சி (1980 – 1991)
- 1980களின் காலமே தொழில்துறை மீட்பு காலமாகும்.
- இக்காலகட்டத்தில் தொழில்துறை மிகவும் வளமான வளர்ச்சியைக் கண்டது.
1991 ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தம்
- இந்தியாவில் “பொருளாதார தாராளமயமாக்கல்” அறிமுகம் செய்யப்பட ஆண்டு = 1991.
- எந்த ஐந்தாண்டு திட்டங்கள் இந்தியாவில் தொழில்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன = 10, 11 வது ஐந்தாண்டு திட்டங்கள்.
இந்தியத் தொழில்துறை
- நான்காம் நிலைத் தொழில் என்பது = தகவல் தொடர்பு தொடர்பான தொழில்கள்.
- இந்தியா மின்சார உற்பத்தியில் ஆசிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது.
- இந்தியப் பொருளாதாரம் ஒரு = கலப்பு பொருளாதாரம் ஆகும்.
புத்தக வினாக்கள்
- பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை? = இரும்பை உருக்குதல்.
- _____________ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்? = நெசவு.
- கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ____________? = கான்பூர்.
- இந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன? = வலுவான தொழில்துறை தளத்தை உருவாக்குதல்.
- இந்தியாவில் தொழில்மயம் அழிதலுக்கு காரணம் அல்லாதது எது? = இந்தியாவின் தொழில்துறை கொள்கை.
- ________________ இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது? = கைவினைப் பொருட்கள்.
- தொழிற்புரட்சி நடைபெற்ற இடம் ______________? = இங்கிலாந்து.
- அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _________? = 1839.
- கொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் ___________ இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது? = ரிஷ்ரா.
- _______________ ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை குறைத்தது? = சூயஸ் கால்வாய்.
- இந்தியா பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு புகழ்வாய்ந்தது? = சரி.
- இந்தியாவில் ஆங்கிலேயர்களால் இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது? = சரி.
- நவீன முறையில் முதன்முதலாக இரும்பு ஜாம்ஷெட்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது? = தவறு.
- 1948 ஆம் ஆண்டு தொழிலக கொள்கையானது கலப்பு பொருளாதாரத்தை கொண்டு வந்தது? = தவறு,
- பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் தீவிர வேளாண்மை உற்பத்தி வளர்ச்சிக்குச் சான்றாக உள்ளது? = தவறு.