8th Samacheer Kalvi History Study Material in Tamil – 1

முகலாயர்கள் வருகை

 • டெல்லி பேரரசின் கடைசி சுல்தான் இப்ராஹிம் லோடி.
 • பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வரும்படி ஆலம்கான் லோடியிடமிருந்து ஒரு கடிதமும் பஞ்சாபின் ஆளுநர் தௌலத்கான் லோடியிடமிருந்து ஒரு கடிதமும் வந்தது.

பாபர் – கி.பி 1526 – கி.பி 1530

 •  ஜாகிருதின் முகம்மது பாபர் கி.பி 1483 ம் ஆண்டு மத்திய ஆசியாவிலுள்ள பர்கானா நிலப்பகுதியை ஆட்சி செய்த உமர் யூக் மிர்ஷா என்பவருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.
 • இவர் தனது தந்தை மறைவிற்குப் பிறகு தனது பதினோராம் வயதில் பர்கானாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
 • கி.பி 1526-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள் வரலாற்றுப் புகழ்மிக்க பானிப்பட் போர்களத்தில் டெல்லியை ஆட்சி செய்த இப்ராஹிம் லோடியை தோற்கடித்தார்.
 • கி.பி 1527-ம் ஆண்டு கான்வா போர்களத்தில் பாபர் அரும்பாடுபட்டு ராணாசங்காவை வெற்றி கொண்டார்.
 • பிறகு கி.பி 1528 ம் ஆண்டு சந்தேர் போரில் மாளவத்தை ஆட்சி செய்த மெதினிராய் என்ற மன்னரை வெற்றி கொண்டார்.
 • கி.பி 1529-ம் ஆண்டு கோக்ரா போரில், முகம்மது லோடியைத் தோற்கடித்து முகலாயப் பேரசினை இந்தியாவில் நிலை நாட்டினார்.
 • தன் சுயசரிதையை துருக்கிய மொழியில் எழுதியுள்ளார். இது ‚துசுக்-கி-பாபரி‛ அல்லது ‚பாபரின் நினைவுகள்‛ என்று அழைக்கப்படுகிறது.

உமாபூன் (கி.பி 1530-1555-1556)

 • பாபரின் மரணத்திற்கு பிறகு அவரது மூத்த மகனாகிய உமாபூன் கி.பி 1530-ம் ஆண்டு முகலாய மன்னராக பொறுப்பேற்றார்.
 • கி.பி 1539-ம் ஆண்டு சௌயூத என்ற இடத்தில் நடைபெற்ற போரில் செர்கானிடம் உமாபூன் தோல்வியுற்றார். கி.பி 1540 -ம் ஆண்டு கன்னோசிப் பேரிலும் தோல்வி அடைந்தார்.
 • கி.பி 1542-ம் ஆண்டு அமரக்கோட்டை என்ற இடத்தில் அக்பர் பிறந்தார்.
 • கி.பி 1555-ம் ஆண்டு டெல்லி மற்றும் ஆக்ராவை மீண்டும்கைப்பற்றி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசரானார்.
 • உமாபூன் என்றால் ‚அதிர்ஷ்டசாலி‛ ஆனால் இவர் ‚அதிர்ஷ்டமில்லா‛ பாபரின் மகனாக விளங்கினார்.
 • தனது மகன் அக்பரை தனது வாரிசாக நியமனம் செய்தார்.
 • பைராம்கானை அக்பரின் பாதுகாப்பாளராக நியமித்தார்.

ஷெர்ஷசூர் (கி.பி 1540-1545)

 • செர்ஷாவின் உண்மையான பெயர் ஃபரித் ஆகும்.
 • ஜோன்புரை ஆட்சி செய்த ஆப்கானிய கவர்னர் இவருக்கு செர்கான்‛ என்ற படத்தினை வழங்கினார்.
 • இவரால் நிறுவப்பட்ட பேரரசு ‚சூர்‛ வம்சம் என அழைக்கப்பட்டது.
 • இவரது அமைச்சரவையில் நான்கு முக்கிய அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர்.
 • அவர்கள் திவானி -இ-விசாரத் – வரவு மற்றும் செலவு பொறுப்பாளர்; திவானி – இ- ஆரிஷ் – இராணுவ பொறுப்பாளர்; திவானி – இ- இராசாலத் – வெளியுறவு மற்றும் ஷதரகப் பொறுப்பாளர்; திவானி -இ-இன்ஷா – அரசு ஆணைகள் மற்றும் கடித போக்குவத்து பொறுப்பாளர்.
 • செர்ஷாவின் நில சீர்திருத்தத்தை மாமனார் அக்பர் பிற்காலத்தில் பின்பற்றினார். எனவே செர்ஷா ‚அக்பரின் முன்னோடி‛ என அழைக்கப்படுகிறார்.
 • ஷெர்ஷா புழக்கத்திலிருந்த பழைய உலோக நாணயங்களை ரத்து செய்தார். வெள்ளி மற்றும் செப்பு நாணயங்களுக்கு ஒப்பீட்டு விகிதாசாரத்தை நிர்ணயம் செய்தார்.
 • செர்ஷா ‚நவீன நாணய முறையின் தந்தை‛ எனறழைக்கப்படுகிறார்.
 • பீகாரிலுள்ள ‚சசாரம்‛ நகரில் தனது கல்லறையை இந்திய – இஸ்லாமிய கட்டடக்கலைப்பணியில் உருவாக்கினார்.
 • டெல்லியில் புகழ் பெற்ற ‚புராணாகிலா‛ என்ற சிறந்த கட்டடத்தை உருவாக்கினார்.

மாமன்னர் அக்பர் (கி.பி 1556- கி.பி 1605)

 • ஜலாலுதின் முகம்மது அக்பர் கி.பி 1542 ம் ஆண்டு நவம்பர் 23-ஆம் நாள் அமரக்கோட்டையில் பிறந்தார். தனது பதினான்காவது வயதில் கி.பிழ 1556-ம் அண்டு பேரரசராக முடிசூடப்பட்டார்.
 • பைராம்கான் அக்பரின் பாதுகாப்பாளராக உமாபூனால் நியமிக்கப்பட்டார்.
 • ஹெமு முகலாயர் படையை வரலாற்றுப் புகழ்மிக்க பானிப்பட் போர்களத்தில் கி.பி 1556-ல் எதிர்கொண்டார். இப்போரில் ஹெமு அக்பரால் தோற்க்கடிப்பட்டு கொல்லப்பட்டார்.
 • இராஜாமான்சிங், இராஜபகவான் தாஸ், இராஜதோடர்மால் மற்றும் பீர்பால் போன்றவர்களை உயர்பதவியில் அமர்த்தினார். அக்பர் முஸ்லீம்கள் அல்லாதவர்களிடம் நல்லாதரவைப் பெற, ஒற்றுமையை வளர்க்க ‚ஜிசியா‛ மற்றும் ‚புனிதப் பயண‛ வரியினை ரத்து செய்தார்.
 • அபுல்பாசல் மற்றும் அவரின் சகோதரர் அபுல் பைசி பல வடமொழி நூல்களை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தனர். ‚அபுல்பாசல்‛ ‚அயினி அக்பரி‛ மற்றும் ‚அக்பர் நாமா‛ என்ற வரலாற்று புகழ்மிக்க நூல்களை எழுதினார்.
 • அபுல்பைசி இதிகாச நூல்களாகிய இராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
 • சிறந்த இசை ஞானியான ‚தான்சென்‛ அக்பரின் அவையை அலங்கரித்தார்.
 • தீன்-இலாஹி- அக்பருடைய மத சகிப்புத்தன்மையின் வெளிப்பாடு.
 • அக்பர் காலத்தில் கலை கட்டடக்கலை சிறப்புற வளர்ச்சியடைந்தது. அக்பர் பதேப்பூர் சிக்ரியை, குஜராத்  19 வெற்றியின் நினைவாக கட்டினார். புலந்-தார்வாசா என்ற நுழைவு வாயில் மிகச் சிறந்த ஒன்றாகும். அக்பர் அக்பரி – மஹால் ஜகாங்கிரி மஹால், பஞ்ச் மஹால், ஜோத்பாய் அரண்மனை போன்றவைகளை அழகுற சிவப்பு பளிங்கு கற்களால் கட்டி முடித்தார்.

ஜஹாங்கீர் (கி.பி. 1605-1627)

 • இவரின் மூத்த மகன் இளவரசர் குஸ்ரு தந்தைக்கு எதிராக கிளர்ச்சி செய்தார். ஐந்தாவத சீக்கிய குரு அர்சுன்தேவ் இவருக்கு ஆதரவு வழங்கினார்.
 • ஜஹாங்கீர் ஆட்சியின் போது இங்கிலாந்து நாட்டிலிருந்து ஆங்கில வணிக்குழு சார்பாக தளபதி ‚வில்லியம் ஹாக்கின்ஸ்‛ மற்றும் ‚சர் தாமஸ் ரோ‛ ஆகியோர்கள் முகலாய அரசவைக்கு வருகை புரிந்தனர். கி.பி 1615-ம் ஆண்டு சூரத் நகரில் வணிகம் செய்ய சர் தாமஸ் ரோ ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்றார்.
 • ஜஹாங்கீர் தன்னுடைய சுய சரிதையை துசுக் -இ- ஜகாங்கிரி என்ற பெயரில் எழுதியுள்ளார்.
 • ஜஹாங்கீர் நீதித்துறையில் சிறந்து விளங்கினார். ஜஹாங்கீர் பதவி ஏற்கும் போது ‚நீதிச்சங்கிலி மணி‛ என்ற ஒரு புதிய நீதி வழங்கும் முறையினை அறிமுகப்படுத்தினார்.
 • கி.பி. 1611 முதல் கி.பி 1626 வரையிலான காலத்தினை முகலாய வரலாற்றில் ‚நூர்ஜஹானின் காலம்‛ என்றழைக்கப்பட்டது.

 

ஷாஜகான் (கி.பி 1628 – கி.பி 1658)

 • ஷாஜஹானின் ஆட்சிக் காலம் ‚மொகலாயர்களின் பொற்காலம்‛ என்றழைக்கப்படுகிறது.
 • பேரரசர் ஷாஜஹான் கட்டடக் கலையின் ‚இளவரசர்‛ என்றும் ‚பொறியாளர் பேரரசர்‛ என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறார்.
 • ஷாஜஹான் தான் கட்டிய மாளிகைகளுக்கு சிவப்பு கற்களுக்கு பதிலாக வெள்ளை பளிங்கு கற்களை பயன்படுத்தினார். ‚ஷாஜஹானாபாத்‛ என்ற புதிய அழகிய தலைநரை உருவாக்கினார். டில்லியில் கண்ணைக் கவரக்கூடிய செங்கோட்டையை உருவாக்கினார்.
 • ஷாஜஹான் புகழ்மிக்க பெருமை வாய்ந்த ‚ஜும்மா மசூதியை‛ வெள்ளை பளிங்கு கற்களால் கட்டினார். இது உலகிலேயே மிகப் பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
 • ஏழு உலக அதிசங்களில் தாஜ்மஹால் ஒன்றாகக் கருதப்படுகிறது. இம்மாளிகை பளிங்கு கற்களின் கனவுலகமாகக் கருதப்படுகிறது. ‚உஸ்தாத் இஷா‛ என்ற தலைமை சிற்பியின் மேற்பார்வையில் இம்மாளிகை கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. சுமார் 22 ஆண்டுகளின் கடின உழைப்பில் சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவில் இந்த அழகு மாளிகை கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.
 • உலக மக்களே வியக்கக் கூடிய வகையில் ‚மயிலாசனத்தை உருவாக்கினார்‛ பகழி பெற்ற கோஹினூர் வைரத்தை அதில் பதிக்கச் செய்தார்.

ஔரங்கசீப் (கி.பி 1658- கி.பி 1707)

 • ஔரங்கசீப் பேரரசரானபோது ஒன்பதாவது சீக்கிய குருவான தேஜ்பகஷர் முகலாய மன்னரின் இந்த மத எதிர்ப்புக் கொள்கையை வெறுததார்.
 • மராத்திய தலைவர் சிவாஜியை அழிக்க தக்காணத்தின் ஆளுநரான ‚செயிஷ்டகானை‛ ஔரங்கசீப் அனுப்பினார்.
 • முதல் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டு கி.பி 1526 ஆகும்.
 • ஷெர்ஷா அக்பரின் முன்னோடி என அழைக்கப்படுகிறார்.
 • ஜஹாங்கீர் அரசரின் அரண்மைனயில் நீதிச் சங்கிலி கட்டப்பட்டிருந்தது.

 

Leave a Comment

Your email address will not be published.