8th Samacheer Kalvi History Study Material in Tamil – 10

டல்ஹௌசி பிரபு (கி.பி. 1848-கி.பி. 1855)

  • டல்ஹௌசி பிரபு கி.பி 1848 ஆம் ஆண்டு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார்.
  • ஆங்கில ஆதிக்கத்தை பெருக்க மூன்று வகை கொள்கைகளை கடைபிடித்தார் வாரிசு இழப்புக் கொள்ளை மூலம் சுதேசி நாடுகளை இணைத்தல் போர்கள் மூலம் சுதேசி நாடுகளை இணைத்தல் நல்லாட்சியற்ற நாடுகள் என்று கூறி சுதெசி நாடுகளை இணைத்தல் டல்ஹௌசி பிரபு ஆங்கிலப் பேரரசை விரிவுபடுத்த புதிய கொள்ளை ஒன்றை கடைபிடித்தார். இது வாரிசு இழப்புக் கொள்கை என்றழைக்கப்படுகிறத.
  • இக்கொள்கையின் அடிப்படையில் டல்ஹௌசி பிரபு சதாரா, ஜெய்புர் சாம்பல்புர், உதய்புர், ஜான்சி மற்றும் நாகபுரி அகிய மாநிலங்களை ஆங்கில அரசுடன் இணைத்துக் கொண்டார்.
  • சிம்லா கோடைக்கால தலைநகரமாகவும், கல்கத்தா குளிர்கால தலைநகரமாகவும் செயல்பட்டது.
  • இந்தியாவில் முதன் முதலில் இருப்புப்பாதையை அறிமுகப்படுத்தி பெருமை டல்ஹௌசியைச் சாரும். முதல் இருப்புப்பாதை 1853-ஆம் ஆண்டு பம்பாய் – தானாவிற்கு இடையேயும் 1854-ஆம் ஆண்டு ஹௌரா ராணிகஞ்ச் இடையேயும், 1856-ஆம் ஆண்டு சென்னை அரக்கோணம் இடையேயும் இரயில் பாதை அமைக்கப்பட்டன.
  • டல்ஹௌசிபிரபு ‚இருப்புப்பாதையின் தந்தை‛ என அழைக்கப்படுகிறார்.
  • டல்ஹௌசிபிரபு அரையணா (3 பைசா) அஞ்சல் முறையை அறிமுகப்படுத்தினார்.
  • டல்ஹௌசிபிரபு தடையில்லா வாணிபத்தை அறிமுகப்படுத்தினார். சென்னை, பம்பாய், கல்கத்தா, துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டன.
  • கி.பி 1856-ஆம் ஆண்டு விதவைகள் மறுமணச்சட்டம் கொண்டு வர மூலக்காரணமாக விளங்கினார்.
  • டல்ஹௌசிபிரபு பொதுப்பணித்துறையை தனித்துறையாக ஏற்படுத்தினார்.
  • பெஷாவர் மற்றும் கல்கத்தாவை இணைக்கும் பெருவழிச்சாலை புதுப்பிக்கப்பட்டது. கங்கை கால்வாய் இவர் காலத்தில் வெட்டப்பட்டது.
  • டல்ஹௌசிபிரபு காலத்தில் 1854 ஆம் ஆண்ட சர் சார்லஸ் உட்ஸ் தலைமையில் கல்விக்குழு அமைக்கப்பட்டது.
  • சென்னை, பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. ரூர்கி என்ற இடத்தில் பொறியியல் கல்லூரி ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது.
  • டல்ஹௌசிபிரபு ‚நவீன இந்தியாவை உருவாக்கியவர்‛ என்று புகழ் பெற்றார்.
  • வாரிசு இழப்புக் கொள்கை டல்ஹௌசிபிரபு – ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அயோத்தி டல்ஹௌசியால் நல்லாட்சியற்றதாக ஆங்கிலப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.
  • இந்து விதவைகள் மறுமண சட்டம் 1856 ஆம் அண்டு நிறைவேற்றப்பட்டது.
  • முதல் இருப்புப்பாதை பம்பாய் முதல் தானா வரை போடப்பட்டது.

 

Leave a Reply