8th Samacheer Kalvi History Study Material in Tamil – 12

தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி

  • ‘நாயக்‛ என்ற வார்த்தைக்கு ‘தலைவர்‛ அல்லது ‚தளபதி‛ என்று பொருள்.
  • தமிழ்நாட்டில் நாயக்கர்கள் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகியவற்றை தலைநகராக கொண்டு ஆட்சிப்புரிந்தனர்.
  • மதுரையில் பிரதிநிதியாக விஸ்வநாத நாயக்கர் என்பவர் கிருஷ்ணரேவராயரால் நியமனம் செய்யப்பட்டார். இதுவே மதுரை நாயக்கர் ஆட்சியின் தொடக்கமாக கருதப்படுகிறது.
  • விஸ்வநாத நாயக்கர் தனது அமைச்சர் ஆரியநாதர் உதவியோடு புதிய நிர்வாக முறையை அறிமுகப்படுத்தினார்.
  • இது ‚பாளையக்காரர் முறை‛ என்று அழைக்கப்படுகிறது.
  • மதுரை நாயக்கர் வரலாற்றின் திருமலை நாயக்கரின் ஆட்சி காலம் ஒரு புது சகாப்தமாக கருதப்படுகிறது. அவருக்கு முன்பு ஆறு அரசர்களும் இவருக்கு பிறகு ஆறு அரசர்களும் இவருக்கு பிறகு ஆறு அரசர்களும் மதுரையை ஆட்சி புரிந்தனர்.
  • விஜயநகர பேரரசர் மூன்றாம் ஸ்ரீரங்கன் மதுரைக்கு எதிராக படையெடுத்த போது இதனை சமாளிக்க திருமலை நாயக்கர் செஞ்சி மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஆனால் தஞ்சை நாயக்கர்கள் முறையாக உதவிசெய்யாததால், திருமலை நாயக்கர் கோல் கொண்டா சுல்தானின் உதவியை நாடி வேலூர் மீது படையெடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து முஸ்லீம்கள் வேலூரை கைப்பற்றினர். பின்னர் மதுரையை கைப்பற்ற மிரட்டல் விடுத்தனர்.
  • தனது தவறை உணர்ந்த திருமலை நாயக்கர், மைசூரின் உதவியை நாடினார். மைசூரின் படைகள் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்று திண்டுக்கல்லை அடைந்தன. இந்த போரில் மைசூர் படையினர் தனது எதிரிகளின் மூக்கை, உதடுகளோடு சேர்த்து துண்டித்தனர். இந்த காட்டுமிராண்டி செயல்களைக் கண்டு மதுரை மக்கள் துயறுற்றனர். பிறகு திருமலை நாயக்கர் மைசூர் படையினை தோற்கடித்து எதிரிகளின் மூக்கினை துண்டித்தார். இந்த விநோதமான போர் ‚மூக்கறுப்பு போர்‛ என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறது.
  • திருமலை நாயக்கர் ஒரு திறமையான நிர்வாகி. பேரரசில் அமைதியை ஒழுங்கை நிலை நாட்டினார். போர்ச்சுகீசியர் மற்றும் டச்சுக்காரர்களை சுதந்திரமாக தமிழகத்தில் அனுமதித்தார்.
  • தலைநகரை திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றினார்.
  • பல்வேறு கோயில்களை புதுப்பித்தார். கோவில் நிர்வாகத்தை தனது நேரடி நிர்வாகத்தில் கொண்டு வந்தார்.
  • கோவில்களை பராமரிக்க பல கிராமங்களை தானமாக வழங்கினார்.
  • புது மண்டபம், மாரியம்மன் தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மஹால் போன்றவை இவர் காலத்தில் கட்டப்பட்டவைகளாகும். சமஸ்கிருத மேரமயான புகழ்பெற்ற நீலகண்ட தீதூதரை இவர் போற்றி ஆதரித்தார்.
  • திருமலை நாயக்கருக்கு பிறகு ஆட்சி செய்த சிறந்த அரசி மங்கம்மாள் ஆவார்.
  • நீர்பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ‚உய்யக்கொண்டான் – கால்வாய்‛ இன்றும் இவரது பெருமைகளை எடுத்து உரைக்கிறது.
  • மதுரை நாயக்கர் ஆட்சி 1736 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
  • சேவப்ப நாயக்கர் தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சியை தோற்றுவித்தார்.
  • அச்சுதப்ப நாயக்கர் ஸ்ரீரங்கத்திலுள்ள இரங்கநாத சுவாமிக்கு வைர சிம்மாசனம் வழங்கினார்.
  • திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலைக் கட்டி முடித்தார்.
  • அச்சுதப்ப நாயக்கருக்குப் பிறகு அவரது இளைய மகன் இரகுநாத நாயக்கர் பொறுப்பேற்றார். இவரது ஆட்சிக்காலம் தஞ்சை நாயக்கர் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
  • ருக்மணி, பரிநயம், பாரி ஜாதம், புஷ்பகர்ணம், இராமயணம் போன்ற நூல்களை தெலுங்கு மொழியில் எழுதியுள்ளார்.
  • விஜயராகவ நாயக்கர் தஞ்சையில் நாயக்கர் ஆட்சி 1673- ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
  • இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் செஞ்சியில் நாயக்கர் ஆட்சியை ஏற்படுத்தியவர் ஆவார்.
  • இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரின் தொண்டுகள் வெல்லாற்றின் கரையில் கிருஷ்ணப்பட்டினம் என்ற நகரை நிறுவினார்.
  • கி.பி.1678-ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி செஞ்சியை கைப்பற்றினார்.
  • சொரூப்சிங் பிறகு இவரது மகன் இராஜா தேசிங்கு செஞ்சியின் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
  • இராஜா தேசிங்கின் மனைவி நினைவாக ‚இராணிப்பேட்டை‛ நகரம் உருவாக்கப்பட்டது.
  • நாயக்கர்கள் தமிழகத்தில் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி, ஆகிய நகரங்களை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இதுவே நாயக்கர் காலம் என்று அழைக்கப்படுகிறது.
  • அரசருக்கு உதவியாக அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பேரரசு பல மாநிலங்களாகவும், மண்டலங்களாகவும், சீமைகளாகவும், கிராமங்களாகவும், பிரிக்கப்பட்டன. ‚பாளைப்பட்டு முறை‛ நடைமுறையில் இருந்தது. அரசின் முக்கிய வருவாய் நிலவரி ஆகும்.
  • நாயக்கர்கள், கலை, கட்டடக்கலை, பிரியர்களாக விளங்கினர். கலை, கட்டடக்கலையை போற்றி வளர்த்தனர்.
  • மதுரை நாயக்கர்கள் திருநெல்வேலியில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் கோவில் மற்றும் நெல்லையப்பர் கோவில், தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், இராமேஸ்வரத்திலுள்ள இராமநாத சாமி கோவில் மற்றும் ஸ்ரீ  24 வில்லிபுத்ஷர் கோபுரம் ஆகியவை மதுரை நாயக்கர்ளின் கலை ஆர்வத்திற்கு சிறந்த எடுத்துக்கட்டாகும்.
  • திருமலை நாயக்கர் மதுரையில் புது மண்டபம், மாரியம்மன் தெப்பக்குளம், நாயக்கர் மஹால் ஆகியவற்றை கட்டினார்.
  • திருமலை நாயக்கர் மகால் இத்தாலிய சிற்பியின் மேற்பார்வையில் கட்டப்பட்டது.
  • இராணி மங்கம்மாள், மங்கம்மாள் சத்திரத்தை கட்டியுள்ளார்.
  • சேவப்ப நாயக்கர் தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு கோயில்களை புதுப்பித்தார். தஞ்சாவூரில் உள்ள சிவகங்கை கோட்டை இவரால் கட்டப்பட்டது. திருவண்ணாமலை மண்டபம், விருதாச்சல கோவில் மண்டபம் போன்றவை இவரால் கட்டப்பட்டது ஆகும். அச்சுதப்ப நாயக்கர் ஸ்ரீரங்கத்திலுள்ள இரங்கநாதர் கோவிலுக்கும், இராமேஸ்வரம் கோயிலுக்கும் ஏராளமான நன்கொடைகளை வழங்கினார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கோபுரத்தைக் கட்டி முடித்தார்.
  • பாளையக்காரர் முறையை புகுத்தியவர் விஸ்வநாத நாயக்கர் அருணாச்சலேஸ்வர ஆலய கோபுரத்தை கட்டி முடித்தவர் அச்சுதப்பர் மூக்கறுப்பு போர் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்தது.
  • உமறுபுலவர் எழுதிய நூல் சீறாப்புராணம்

Leave a Reply