8th Samacheer Kalvi History Study Material in Tamil – 14

வேலூர் புரட்சி (கி.பி. 1806) 

  •  வில்லியம் பெண்டிங் பிரபு சென்னை மாகாணத்தின் ஆளுநராகவும், ஜான் கிராடக் தலைமை ராணுவ தளபதியாகவும் இருந்தனர்.
  • திப்பு சுல்தான் மரணத்திற்கு பிறகு வேலூர் கோட்டையில் சிறைப்படுத்தப்பட்ட திப்புசுல்தானின் உறவினர்களால் இப்புரட்சி மேற்கொள்ளப்பட்டது.
  • தளபதி அக்னிபூ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வகை தலைப்பாகை இந்து முஸ்லீம்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
  • திப்புவின் மகளின் திருமண நிகழ்ச்சி ஜுலை 9, 1806 ஆம் அண்டு வேலூர் கோட்டையில் நடைபெற்றது.
  • ஜுலை 10-ஆம் நாள் அதிகாலை இந்திய சிப்பாய்கள் திடீரென ஆங்கில அதிகாரிகளையும், ஆங்கில சிப்பாய்களையும் தாக்கி, வேலூர் கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதிகாலையில் திப்புவின் கொடி கோட்டையில் ஏற்றப்பட்டு, திப்புவின் மகன் அரசராக அறிவிக்கப்பட்டார்.
  • 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சிக்கு முன்னோடியாக இது அமைந்தது.
  • வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெற்ற ஆண்டு 1806 ஆகும்.
  • சிப்பாய்களை ஆதரித்தவர் திப்புவின் குடும்பம் ஆவார்.
  • புரட்சியின் போது சென்னை மாகாண ஆளுநர் வில்லியம் பெண்டிங் ஆவார்.

Leave a Reply