8th Samacheer Kalvi History Study Material in Tamil – 4

ஐரோப்பியர்கள் வருகை

  • இந்தியாவிற்கு புதிய கடல் வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர்கள் போர்ச்சுகீசியர்கள் ஆவர்.
  • போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனையை கடந்து, மே 27, 1498 ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள கோழிக்கோடு (கள்ளிக்கோட்டை) வந்தடைந்தார்.
  • இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வாணிபத்தை கவனிக்க பிரான்சிஸ்-டீ-அல்மெய்டா என்பவர் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
  • போர்ச்சுக்கீசியரின் இரண்டாவது ஆளுநராக அல்புகர்க் பதவியேற்றார்.
  • பீஜ்ப்புர் சுல்தானிடமிருந்து கி.பி 1510-ம் ஆண்டு கோவாவைக் கைப்பற்றி அதனை தலைநகரமாக மாற்றினார்.
  • இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தை உண்மையாக நிலைநாட்டியவர் என்று அல்புகர்க் போற்றப்படுகிறார்.
  • போர்ச்சுகீசியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர்.
  • ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை டிசம்பர் 31, 1600-ஆம் அண்டு இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத், வியாபாரம் செய்வதற்கான அனுமதியை வழங்கினார்.
  • கி.பி 1615-ஆம் ஆண்டு சர்தாமஸ் ரோ என்ற மற்றொரு ஆங்கில வியாபாரி ஜஹாங்கீர் அரசவைக்கு வருகை புரிந்தார். இவர் இந்தியாவுடன் வியாபாரம் செய்வதற்கான அனுமதியை பெற்றார். இதனை தொடர்ந்து ஆங்கிலேயர்கள் சூரத், ஆக்ரா, பரோச் அகமதாபாத் ஆகிய இடங்களில் வாணிப மையங்களை ஏற்படுத்தி, இந்தியாவுடன் வாணிபத்தை மேற்கொண்டனர்.
  • கி.பி 1639-ஆம் ஆண்டு ‚பிரான்ஸிஸ் டே‛ என்ற ஆங்கில அதிகாரி சந்திரகிரி அரசரிடமிருந்து ஒரு நிலப்பகுதியை விலைக்கு வாங்கி தற்கால சென்னை நகரை நிறுவினார்.
  • இங்கு கி.பி 1640 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.
  • கல்கத்தாவில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் வில்லியத்தின் நினைவாக வில்லியம் கோட்டை கட்டப்பட்டது.
  • டென்மாhக் நாட்டைச் சார்ந்த மக்கள் டேனியர்கள் என்றழைக்கப்பட்டனர்.
  • பிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான கால்பர்ட் என்பவரின் முயற்சியால் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கி.பி 1664-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
  • பாண்டிச்சேரியை பிரெஞ்சுக்காரர்களின் தலைமை இடமாக மாறியது.
  • ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆதிக்கப் போட்டி இந்தியாவில் கர்நாடக போர்களாக பிரதிபலித்தது.
  • மாபெரும் வாணிய மையமான கான்ஸ்டாண்டிநோபிள் ஆட்டோமானிய துரக்கியர்களால் கி.பி 1453-ல் கைப்பற்றப்பட்டது.
  • பிரான்ஸிஸ்கோ-டி- அல்மெய்டா முதல் போர்ச்சுக்கீசியர் ஆளுநராவார்.
  • ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு கி.பி.1600 இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் தலைமையிடமாக பாண்டிச்சேரி விளங்கியது.

Leave a Reply