8th Samacheer Kalvi History Study Material in Tamil – 5

ஆங்கில-பிரெஞ்சு ஆதிக்கப் போட்டி (கர்நாடகப் போர்கள்)

முதல் கர்நாடகப் போர் கி.பி 1746- கி.பி 1748)

  • முதல் கர்நாடகப் போர் ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிiமைப் போரின் பிரதிபலிப்பாகும்.
  • முதல் கர்நாடகப் போர் அய்லா யூபேல் உடன்படிக்கையின்படி முடிவடைந்தது (1748)

இரண்டாவது கர்நாடகப் போர் (கி.பி 1748 – கி.பி 1754)

  • ராபர்ட் கிளைவ் கர்நாடகத்தின் தலைநராகிய ஆற்காட்டை முற்றுகையிட்டு கைப்பறிறினார்.
  • ராபர்ட் கிளைவ் ‚ஆற்காட்டின் வீரர்‛ என்பெருமையோடு அழைக்கப்பட்டார்.
  • இரண்டாவது கர்நாடகப் போர் ஆங்கிலேயர்களுக்கு பெரும் வெற்றியையும் பிரஞ்சுக்காரர்களுக்கு சரிவையும் ஏற்படுத்தியது.

மூன்றாவது கர்நாடகப் போர் (கி.பி 1756 – கி.பி 1763)

  • கி.பி 1755-ம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழாண்டுப் போரின் எதரொலியாக இந்தியாவில் மூன்றாம் கர்நாடக் போர் நடைபெற்றது.
  • மூன்றாம் கர்நாடகப் போர் கி.பி 1763-ஆம் அண்டு பாரிஸ் சமாதான உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது.

 

பிளாசிப் போர் (கி.பி 1757)

  • சிராஜ் -உத்-தௌலா பெரும்படையுடன் சென்று கல்கத்தாவை கைப்பற்றி ஆங்கிலேய போர் வீரர்கள் 146 பேர்களை போhக் கைதிகளாகப் பிடித்து சிறையில் அடைத்து விட்டார். அடுத்த நாள் அவர்களில் 23 பேரே உயிருடன் இருந்தனர். மீதமுள்ளவர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இந்நிகழ்வு வரலாற்றில் கல்கத்தா இருட்டறை துயரச் சம்பவ நிகழ்ச்சி என அழைக்கப்படுகிறது.
  • கி.பி 1757-ம் ஆண்டு ஜீன் 23ஆம் நாள் சிராஜ்உத் தௌலா, ராபர்ட் கிளைவ் ஆகியோரின் படைகள் கல்கத்தாவிற்கு அருகே உள்ள பிளாசி என்ற இடத்தில் போரிட்டது. ஒரு சில மணி நேரங்கள் நடைபெற்ற இப்போரில் சிராஜ் -உத்தௌலா தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

பக்ஸார் போர் (கி.பி 1764)

  • மீர்காசிம், ஷுஜா உத்தௌலா, இரண்டாம் ஷாஆலம் ஆகியோர்களின் கூட்டுப்படை கி.பி 1764 ஆம் ஆண்டு அக்டோபர் 22-ம் நாள் பக்ஸார் என்ற இடத்தில் ஆங்கிலேயப் படையை எதிர் கொண்டன. இந்திய மன்னர்களின் கூட்டுப்படை ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டது.
  • பக்சர் போருக்கு பிறகு ராபர்ட் கிளைவ் வங்காள கவர்னராக 1765ல் நியமிக்கப்பட்டார்.

முதலாவது ஆங்கில-மைசூர் போர் (கி.பி. 1767-1769)

  • கி.பி 1767-ஆம் ஆண்டு ஹைதர் அலி மற்றும் நிஜாமை ஆங்கிலேயர்கள் சங்கமா என்ற இடத்தில் தோற்கடித்தனர்.
  • 21 கி.பி 1769-ஆம் ஆண்டு ஹைதர் அலியோடு மதராஸ் (சென்னை) அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.
  • கர்நாடகப் போர்கள் 1746-1763 ஆண்டுகளுக்கு இடையெ நடைபெற்றது.
  • பிளாசிப் போர் 1757-ம் ஆண்டு நடைபெற்றது.
  • ஆங்கிலப் பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர் இராபர்ட் கிளைவ் ஆவார்.

Leave a Reply