8th Samacheer Kalvi History Study Material in Tamil – 9

வில்லியம் பெண்டிங் பிரபு (கி.பி. 1828 – கி.பி. 1835)

  • வில்லியம் பெண்டிங் பிரபு இந்திய கவர்னர் ஜெனரல்களில் தலைச்சிறந்தவராக கருதப்படுகிறார்.
  • வில்லியம் பெண்டிங் பிரபிவிற்கு பெரும் புகழைத் தேடித்தந்தது அவருடைய சமூக சீர்திருத்தங்கள் ஆகும்.
  • வில்லியம் பெண்டிங் பிரபு ‘சதி என்னும் உடன் கட்டை ஏறுதலை’ வன்மையாகக் கண்டித்தார். சமூக சீர்திருத்தவாதியான இராஜாராம் மோகன் ராயின் உதவியோடு கி.பி 1829-ம் அண்டு சதி ஒழிப்பு சட்டத்தை வில்லியம் பெண்டிங் பிரபு கொண்டு வந்தார்.
  • வில்லியம் பெண்டிங் பிரபு பெண்சிசுகொலை ஒழிப்பு வழக்கத்தை ஒழித்ததோடு மட்டுமின்றி அதை மாபெரும் குற்றமாகவும் அறிவித்தார்.
  • ஒரிசாவில் வாழ்ந்து வந்த மலைவாழ் இனமக்களிடையே காணப்பட்ட நரபலி இக்கொடிய வழக்கத்தை தடை செய்தார்.
  • இவருடைய காலத்தில் கல்கத்தாவில் ஒரு மருத்துவ கல்லூரியும் பம்பாயில் எல்பினஸ்டன் கல்லூரியும் நிறுவப்பட்டது.
  • வில்லியம் பெண்டிங் பிரபு ஆட்சிக் காலத்தில் 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
  • ஆர்மஹஸ்ட் பிரபுவிற்கு பிறகு வில்லியம் பெண்டிங் என்பவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார்.
  • வில்லியம் பெண்டிங் பிரபு சீர்திருத்தங்கள் மூலம் புகழ் பெற்றார்.
  • நீதிமன்ற மொழியாக பயன்படுத்தப்பட்டு வந்த பாரசீகம் மொழி ஒழிக்கப்பட்;டது.
  • நரபலி முறையை ஒரிசாவில் வாழ்ந்த மலைவாழ் இனத்தவர் பின்பற்றினார்கள்.

 

Leave a Reply