9TH இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
9TH இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
- இந்திய வரலாற்றில் இடைக்காலம் என்பது = கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசின் தொடக்கம் வரை.
- தென்னிந்தியாவில் சமயம் சார்ந்த அரசுகள் துவங்கிய காலம் = கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் இறுதி.
- தென்னிந்தியாவில் சமயம் சார்ந்த ஆட்சியின் கோட்டையாக கருதப்பட்ட அரசு (the bastion of Religious rule in the south) = விஜயநகரப் பேரரசு.
- பாபர் இப்ராஹிம் லோடியை தோற்கடித்த ஆண்டு = கி.பி. 1526.
இந்தியாவில் இஸ்லாமின் வருகை
- முதன் முதலில் முஸ்லிம்கள் ஆட்சியை இந்தியாவில் நிறுவியவர் = முகமது கோரி.
- யாருடைய ஆட்சியின் பொழுது, இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியின் தாக்கம் உணரப்பட்டது = அலாவுதீன் கில்ஜி.
- எந்த நகரம் அலாவுதீன் கில்ஜியால் “தௌலதாபாத்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது = தேவகிரி.
- அலாவுதீன் கில்ஜியின் அடிமை மற்றும் படைத்தளபதி = மாலிக்கபூர்.
- பாமினி சுல்தானியம் உருவான ஆண்டு = கி.பி. 1347.
- பாமினி சுல்தானியத்தை உருவாக்கியவர் = அலாவுதீன் பாமன்ஷா.
- பாமினி சுல்தானியத்தின் தலைநகரம் = பிடார்.
- பாமினி சுல்தானியத்தில் மிகவும் புகழ்பெற்ற அரசியல் நிர்வாக மேதை = முகமது கவான்.
- முகமது கவானின் இறப்பிற்கு பிறகு தக்காணத்தில் எத்தனை சுல்தானியங்கள் உருவாகின = ஐந்து (பிஜப்பூர், கோல்கொண்டா, அகமதுநகர், பிரார், பிடார்).
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சோழப் பேரரசு
- சோழப் பேரரசின் விரிவாக்கம் யாருடைய காலத்தில் துவங்கியது = முதலாம் ராஜராஜன்.
- சோழப் படைகளை கங்கை நதிவரை நடத்திச் சென்றவர் = முதலாம் ராஜேந்திரன்.
- “கங்கையும், கடாரமும் கொண்ட சோழன்” என்று அழைக்கப்படுபவர் = முதலாம் ராஜேந்திரன்.
- கடாரம் என்பது = தற்போதைய இந்தோனேசியாவின் ஒரு பகுதி. அதன் பழைய பெயர் கடாரம் (கேடா).
- கீழைச் சாளுக்கியர்களோடு திருமண உறவை ஏற்படுத்திக் கொண்டவர் = ராஜேந்திரச் சோழனின் பேரன் முதலாம் குலோத்துங்கன்.
விஜயநகரம் மற்றும் தென்னிந்தியா
- சோழ அரசின் கடைசிப் பேரரசர் = மூன்றாம் இராஜேந்திரன்.
- சோழப் பேரரசு வீழ்ந்த ஆண்டு = கி.பி. 1279.
- 13 ஆம் நூற்றாண்டில் கர்நாடக பகுதியை ஆட்சி செய்தவர்கள் = ஹொய்சாள மன்னர்கள்.
- ஹொய்சாள அரசின் தலைநகரம் = பேலூர், பின்னர் ஹளபேடு.
- தற்போதைய தெலுங்கானா பகுதியை ஆட்சி செய்தவர்கள் = காகதியர்கள்.
- தென்னிந்திய இடைக்கால வரலாற்றில் மிகமுக்கியமான நிகழ்வு = விஜயநகரப் பேரரசு உருவாக்கம்.
- விஜயநகர பேரரசை உருவாக்கியவர் = ஹரிஹரர் மற்றும் புக்கர் (சகோதரர்கள்).
- ஹரிஹரர் மற்றும் புக்கர் எந்த வம்சத்தை சார்ந்தவர்கள் ஆவர் = சங்கம வம்சம்.
- சங்கம வம்சத்தின் முதல் அரசர்கள் = ஹரிஹர, புக்கர்.
- எந்த ஆற்றங்கரையில் விஜயநகர அரசு உருவாக்கப்பட்டது = துங்கபத்ரா.
- சங்கம வம்சத்திற்கு பிறகு ஆட்சி செய்தவர்கள் = சாளுவ வம்சம்.
- சாளுவ வம்சத்திற்கு பிறகு ஆட்சி செய்தவர்கள் = துளுவ வம்சம்.
- விஜயநகர அரசர்களிலேயே மாபெரும் அரசர் = கிருஷ்ணதேவராயர்.
- கிருஷ்ணதேவராயரின் வம்சம் = துளுவ வம்சம்.
- எந்த அரசுகளோடு விஜயநகர அரசர்கள் தொடர்ந்து போரிட்டு வந்தனர் = பாமினி அரசுகளோடு.
- எந்த போரின் மூலம் விஜயநகரப் பேரரசின் ஆட்சி முடிவிற்கு வந்தது = தலைக்கோட்டைப் போர்.
- தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1565.
- தலைக்கோட்டைப் போருக்கு பிறகு, விஜயநகர அரசின் தலைநகரம் எங்கு மாற்றப்பட்டது = பெனுகொண்டா (பின்னர் சந்திரகிரி).
- 9TH இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
முகலாயர்கள்
- முகலாயப் பேரரசை நிறுவியவர் = பாபர்.
- எந்தப் போரில் பாபர், இப்ராஹீம் லோடியை தோற்கடித்தார் = முதலாம் பானிபட் போர்.
- முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1526.
- “மாபெரும் முகலாயர்கள்” என்று எத்தனை முகலாய அரசர்களை குறிப்பிடுகிறோம் = முதல் ஆறு முகலாய அரசர்கள்.
- முதல் மாபெரும் முகலாயப் பேரரசர் = பாபர்.
- கடைசி மாபெரும் முகலாயப் பேரரசர் = அவுரங்கசீப்.
- முகலாயர் ஆட்சி முடிவிற்கு வந்த ஆண்டு = கி.பி. 1857.
- முகலாயரின் நேரடி ஆட்சிக்கு உட்படாத பகுதிகள் = கேரளாவின் தென்மேற்கு பகுதி மற்றும் தமிழகத்தின் தென் பகுதி.
ஐரோப்பியரின் வருகை
- வாஸ்கோடகாமா இந்தியா வந்தடைந்த இடம் = கேரளாவின் கள்ளிக்கோட்டை.
- வாஸ்கோடகாமா இந்தியா வந்தடைந்த ஆண்டு = கி.பி. 1498.
- போர்ச்சுகீசியர்கள் தங்களது முதல் கோட்டையை கட்டிய இடம் = கொச்சி.
- போர்ச்சுகீசியர்கள் தங்களது முதல் கோட்டையை கொச்சியில் கட்டிய ஆண்டு = கி.பி. 1503.
- போர்ச்சுகீசியர்கள் கோவாவை கைப்பற்றிய ஆண்டு = கி.பி. 1510.
- இந்தியாவில் போர்ச்சுகீசிய அரசின் மையமாக இருந்த பகுதி = கோவா.
- டச்சுக்காரர்களின் முக்கிய வணிகத்தலம் = புலிகாட் (பழவேற்காடு), நாகப்பட்டினம்.
- ஆங்கிலேயர்களின் வணிகத்தலம் = மெட்ராஸ்.
- பிரெஞ்சு அரசின் வணிகத்தலம் = பாண்டிச்சேரி.
- டேனியர்களின் வணிகத்தலம் = தரங்கம்பாடி.
- 9TH இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
அரசியல் தாக்கங்கள்
- தமிழக வரலாற்றில் செழிப்புமிக்க காலம் = சோழர்கள் காலம்.
- சோழர்கள் காலத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தின் அடிப்படை அலகு = கிராமம் (ஊர்).
- பிரம்மதேயம் என்றால் என்ன = சோழர்கள் காலத்தில் பிராமணர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட கிராமங்கள்.
- சோழர்களின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் முதன்மையானது = கோவில்கள் கட்டுதல்.
- இந்தியாவில் “கலப்பு பண்பாடு” உருவாகியதில் முக்கிய பங்கு வகித்தது = இஸ்லாம்.
- இந்தியாவில் ஒரு கலப்பு பண்பாடு உருவாகியதை எங்கு தெளிவாக காணலாம் = தக்காண சுல்தானியங்களான பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டாவில்.
- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் “நாயக்” எனும் இராணுவ அதிகாரிகளை நியமித்தவர்கள் = விஜயநகர அரசுகள்.
- “நாயக்” என்றால் என்ன = விஜயநகர அரசு உருவாக்கிய ராணுவ அதிகாரிகள் “நாயக்” எனப்பட்டனர்.
- நாயக் என்பவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள் = பாளையக்காரர்கள்.
- தமிழகத்தில் விஜயநகர பேரரசிற்கு விசுவாசமாக இருந்த மூன்று முக்கிய நாயக்க அரசுகள் = மதுரை, தஞ்சாவூர், செஞ்சி.
- “இந்திய துணி மீது மயக்கம்” (Indian Craze) என்பது = ஐரோப்பிய சந்தைகளில் இந்திய துணிகளுக்கு ஏற்பட்ட பெரும் வரவேற்பு.
- 9TH இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
இந்தியாவில் சமூக அமைப்பு
- இந்தியச் சமூகத்தின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த அம்சம் = சாதி.
- இந்தியாவில் சாதியின் தோற்றத்தை மெய்ப்பிக்க கற்பனை கலந்த தகவல்கள் அடங்கிய கையெழுத்து பிரதிகளை உருவாக்கினர்.
- இந்த கையெழுத்து பிரதிகளை சேகரித்தவர் = காலின் மெக்கன்சி.
- “வர்க்கரி சம்பிரதயா” அமைப்பு உருவான இடம் = மகாராஸ்டிரா.
- யாருடைய பக்தர்கள் “வர்க்கரி சம்பிரதயா” அமைப்பை உருவாக்கினர் = விதோபா.
- தமிழகத்தின் தூத்துக்குடி பகுதியில் இருந்த மீனவ மக்கள் (பரதவ மக்கள்), கிறித்துவ மதத்திற்கு மாற்றியவர் = புனித பிரான்சிஸ் சேவியர்.
- மதுரையில் கக்கலை கிறித்துவ சமயத்திற்கு மாற்றியவர் = ராபர்ட் டி நொபிலி.
- சீக்கிய மதத்தை உருவாக்கியவர் = குருநானக்.
- பார்சிகள் இந்தியாவில் குடியேறிய இடம் = குஜராத்.
- யூதர்கள் இந்தியாவில் குடியேறிய இடம் = கேரளா.
- 9TH இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
இந்தியாவில் பண்பாடு
- “செவ்வியல் புலவர்” என்று அழைக்கப்பட்டவர் = கம்பர்.
- கம்பர் தனது ராமாயணத்தை எங்கு அரங்கேற்றினார் = ஸ்ரீரங்கம் கோவில்.
- சேக்கிழாரின் பெரியபுராணம் எங்கு அரங்கேற்றப்பட்டது = சிதம்பரம் நடராஜர் கோவில்.
- சோழர்களின் சிரபு வாய்ந்த கட்டிடக்கலை கட்டிடங்கள் = தஞ்சை பெரியகோவில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில், தாராசுரம் கோவில்.
- செப்புச் சிலைகள் மெழுகு அச்சு (Lostwax) பூசும் முறை நடைமுறையில் இருந்த காலம் = சோழர்கள் காலம்.
- சோழர்கால செப்புச் சிலைகளில் மிகவும் புகழ் பெற்றது = பிரபஞ்ச நடனமாடும் நடராஜர் (சிவன்) சிலை.
- இந்திய பண்பாட்டு வரலாற்றில் ஒளிமிக்க காலம் (Brilliant Epoch in the cultural history of India) என்பது = முகலாயர்கள் காலம்.
- யாருடைய ஆட்சிக் காலத்தில் ஓவியக் கலை இந்தியாவில் செழித்தோங்கியது = முகலாயர் காலம்.
- முகலாயர் காலத்தில் இந்துஸ்தானி இசையில் புகழ் பெற்று விளங்கியவர் = தான்சேன்.
- தென்னிந்தியாவில் யாருடைய ஆட்சிக் காலத்தின் பொழுது கோவில்களில் பல தூண்களை கொண்ட பெரிய மண்டபங்கள் கட்டபப்ட்டன = விஜயநகர அரசர்கள் காலத்தில்.
- யாருடைய ஆட்சிக்காலத்தில் மிக உயரமான கோபுரங்கள் கட்டப்பட்டன = விஜயநகர அரசர்கள்.
- எந்த காலத்தில் போது கோவில் சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டும் வழக்கம் தோன்றியது = விஜயநகர அரசர்கள் காலத்தில்.
- பிரபந்தம் எனும் புதிய வகை தமிழ் இலக்கியம் தோன்றிய காலம் = விஜயநகர அரசர்கள் காலம்.
- கர்நாடக இசையின் ராகங்களை வரிசைப்படுத்தியவர் = கோவிந்த தீட்சிதரின் மகன் வேங்கடமகி.
- 9TH இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
இந்தியாவில் பொருளாதாரம்
- டெல்லி பகுதியில் வலைப்பின்னல் போன்று கால்வாய்களை வெட்டியவர் = பெரோஸ் துக்ளக்.
- இந்திய வேளாண்மையின் மிக முக்கியமான அம்சம் = அதிக எண்ணிக்கையில் பல்வகைப்பட்ட பயிர்கள் பயிர் செய்யப்பட்டமை தான்.
- சோளமும், புகையிலையையும் இந்தியாவில் அறிமுகம் செய்தவர்கள் = ஐரோப்பியர்கள்.
- “கர்கானா” என்றால் என்ன = முகலாயர் அரசில் மிகப்பெரிய தொழிற் கூடங்கள் “கர்கானா” என்ற பெயரில் பல கைவினைஞர்களை பணியில் அமர்த்தி செயல்பட்டுள்ளன.
- இந்தியாவில் பயிரிடபப்ட்ட மிக முக்கியமான சாயப் பயிர் = அவுரி (Indigo).
- சிவப்பு வர்ணத்திர்க்காக பயன்படுத்தப்பட்டது = சாய் எனும் தாவரத்தின் வேர்.
இந்தியாவில் வணிகம்
- “பஞ்சாரா” என்றால் என்ன = இந்தியாவில் ஊர் ஊராக சென்று வணிகம் செய்வோர் “பஞ்சாரா” என்றழைக்கப்பட நாடோடி சமூகத்தினர் ஆவர்.
- இந்தியாவின் ஏற்றுமதியில் 90% = துணி ஏற்றுமதி.
- 9TH இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
புத்தக வினாக்கள்
- விரிவடைந்துவரும் அலாவுதீன் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம் ___________? = தௌலதாபாத்.
- தக்காண சுல்தானியங்கள் ____________ ஆல் கைப்பற்றப்பட்டன? = அவுரங்கசீப்.
- _____________ பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது? = விஜயநகரப் பேரரசு.
- கிருஷ்ணதேவராயர் ______________ன் சமகாலத்தவர்? = பாபர்.
- இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு வந்த ஐரோப்பியர் ______________? = போர்ச்சுகீசியர்கள்.
- கி.பி. 1565 ஆம் ஆண்டு தக்காண சுல்தான்களின் கூட்டுப்படைகள் விஜயநகரை ____________ போரில் தோற்கடித்தன? = தலைக்கோட்டைப் போரில்.
- விஜயநகரம் ஓர் _____________ அரசாக உருவானது? = சமயம் சார்ந்த.
- நகரமயமாதலின் போக்கு _____________ காலத்தில் அதிகரித்தது? = சோழர்கள் காலத்தில்.
- _____________ காலம் தமிழக வரலாற்றின் உன்னத ஒளி பொருந்திய காலம்? = சோழர்கள் காலம்.
- 9TH இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
- 9TH HISTORY இடைக்காலம்
- 9TH செவ்வியல் உலகம்
- 9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
- முக்கிய தினங்கள் ஜூலை 2024
- LIST OF IMPORTANT DAYS IN JULY 2024