9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
- .மு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழ் பண்பாடு உருவாகி விட்டது.
- தமிழகத்து வணிகர்களும் கடலோடிகளும் கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்புகளையும் பண்பாட்டுத் தொடர்புகளையும் கொண்டிருந்தனர்.
செவ்வியல் தமிழ் இலக்கியங்கள்
- தமிழின் பழமையான இலக்கண நூல் = தொல்காப்பியம்.
- தொல்காப்பியத்தின் எந்த பகுதி மக்களின் சமூக வாழ்க்கைக்கான இலக்கணத்தை கூறுகிறது = மூன்றாவது பகுதி.
- பதினெண்மேல்கணக்கு நூல்கள் = பத்துப்பாட்டு + எட்டுத்தொகை நூல்கள்.
- தமிழில் தோன்றிய இலக்கியங்களில் காலத்தால் முற்பட்ட இலக்கியங்கள் = பதினெண் மேல்கணக்கு நூல்கள்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
எட்டுத்தொகை நூல்கள் யாவை
- நற்றிணை
- குறுந்தொகை
- பரிபாடல்
- பதிற்றுப்பத்து
- ஐங்குறுநூறு
- கலித்தொகை
- அகநானூறு
- புறநானூறு
பத்துப்பாட்டு நூல்கள் யாவை
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- முல்லைப்பாட்டு
- நெடுநல்வாடை
- மதுரைக் காஞ்சி
- குறிஞ்சிப் பாட்டு
- பட்டினப்பாலை
- மலைப்படுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முதன்மையானது = திருவள்ளுவரின் திருக்குறள்.
- திருக்குறளில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை = மூன்று.
ஐம்பெருங்காப்பியங்கள் யாவை
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
தமிழ் பிராமி கல்வெட்டுகள்
- தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படும் இடங்கள் = கற்பாறைகள், குகை வாழிடங்கள் (சமணத் துறவிகள் வாழ்ந்த வாழிடங்கள்).
- தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படும் குகை வாழிடங்கள் = மாங்குளம், முத்துப்பட்டி, புகலூர், அரச்சலூர், கொங்கர்புளியங்குளம், ஜம்பை, மதுரை.
- பாறைப்படுக்கை உள்ள இடம் = கொங்கர்புளியங்குளம்.
- பெரும்பாலான குகை வாழிடங்கள் _________ வழிகளில் அமைந்துள்ளன? = வணிக.
நடுகற்கள்
- வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன.
- முல்லை நில மக்களின் சிறப்பான செல்வ வளம் = கால்நடைகள் (ஆநிரை).
- நடுகற்கள் நடப்படுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக கூறும் சங்க இலக்கிய நூல் = தொல்காப்பியம்.
- தமிழ்நாட்டில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நடுகற்கள் காணப்படும் இடம் = தேனி மாவட்டத்தின் புலிமான் கோம்பை (புள்ளிமான் கோம்பை) மற்றும் தாதப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தின் பொற்பனைக்கோட்டை.
- சங்ககால நடுகற்களில் உருவம் பொறிக்கப்படவில்லை.
- பல்லவர் காலத்தில் நடப்பட்ட நடுகற்கள் அதிகம் காணப்படும் இடம் = திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம். இந்த நடுகற்களில் வீரர்களின் பெயரும், உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன.
புலிமான் கோம்பை நடுகற்கள்
- தென் மாவட்டத்தின் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்த ஊர் = புலிமான்கோம்பை.
- புலிமான்கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லில் “கூடல்ஊர் ஆகோள் பெடு தீயன் அந்தவன் கல்” என்று பொறிக்கப்பட்டுள்ளது.
- “கூடல்ஊர் ஆகோள் பெடு தீயன் அந்தவன் கல்” என்பதன் பொருள் = கூடலூரில் ஆநிரை கவர்ந்த போது நடந்த பூசலில் கொல்லப்பட்ட தீயன் அந்தவனின் கல்”.
சுடுமண் கால எழுத்துப் பொறிப்புகள்
- சுடுமண் கால எழுத்துப் பொறிப்புகளின் காலம் = வரலாற்றின் தொடக்க காலம்.
- தமிழ்நாட்டில் சுடுமண் பொறிப்புகள் காணப்படும் இடங்கள் = அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், கீழடி.
- எந்த வெளிநாடுகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சுடுமண் கலங்கள் கிடைத்துள்ளன = பெரோனிகே (எகிப்து), குசேர் அல் காதிம் (எகிப்து), கோர் ரோரி (ஓமன்).
- தமிழ்நாட்டில் கப்பல் உருவம் பொறிக்கப்பட்ட சுடுமண் கலம் கிடைத்த இடம் = அழகன்குளம்.
- தமிழ்நாட்டில் சங்ககால மக்கள் பயன்படுத்திய உறைக்கிணறு கண்டுபிடிக்கப்பட்ட இடம் = அரிக்கமேடு.
- சங்ககால மக்களின் வாழ்க்கை முறைக்கான பலவகையான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ள இடங்கள் = அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், கீழடி, உறையூர், கரூர், காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, வசவசமுத்திரம்.
- கேரளாவின் எந்த இடத்தில் சங்ககால மக்களின் வாழ்க்கை முறைக்கான பலவகையான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன = பட்டணம்.
- 10 மி.மீ அளவு கொண்ட செதுக்கு வேலைப்பாடுகள் கொண்ட அணிகலன் கிடைத்த இடம் = பட்டணம் (கேரளா).
அரிக்கமேடு
- புதுச்சேரிக்கு அருகே உள்ள அரிக்கமேடு = ஒரு சங்ககால துறைமுக பட்டிணம் ஆகும்.
- சரக்குக் கிடங்கு, தொட்டிகள், உறை கிணறுகள், தெரு ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் அரிக்கமேட்டில் இருந்ததை தொல்லியல் அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.
- 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
தொல்லியல் சட்டங்கள்
- இந்திய புதையல் சட்டம் 1878.
- பழங்காலப் பொருட்கள் மற்றும் கலைக் கருவூலங்கள் சட்டம் 1972.
- பழமை வாய்ந்த நினைவுச்சின்னங்கள், தொல்லியல் ஆய்வுக் களங்கள் மற்றும் எஞ்சியப் பொருட்கள் சட்டம் 1958.
பழங்கால நாணயங்கள்
- முதன் முதலாக செலவானிக்கு உரிய பொருளாக நாணயங்கள் புழக்கத்திற்கு வந்த காலம் = சங்க காலம்.
- தமிழ்நாட்டில் முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ள இடங்கள் = கொடுமணல், போடிநாயக்கனூர்.
- தமிழ்நாட்டின் எந்த மண்டலத்தில் ரோமானிய நாணயங்கள் அதிகளவு கிடைத்துள்ளன = கோயம்புத்தூர் மண்டலம்.
அர்த்த சாஸ்திரம்
- அர்த்த சாஸ்திரம் நூலின் ஆசிரியர் = கௌடில்யர் (சாணக்கியர்).
- “பாண்டிய காவாடகா” என்ற குறிப்பு உள்ள நூல் = சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்.
- பாண்டிய காவாடகா என்பதன் பொருள் = பாண்டிய நாட்டின் முத்துக்கள், கடல் பொருட்கள்.
மகாவம்சம்
- இலங்கை புத்த நூல்.
- எந்த மொழியில் மகாவம்சம் நூல் எழுதப்பட்டது = பாலி.
- தென்னிந்தியா, தமிழ்நாட்டு வணிகர்கள் பற்றி குறிப்பிட்டுள்ள நூல் = மகாவம்சம்.
- தமிழ்நாட்டில் இருந்து இலங்கை சென்று வாணிபம் செய்த தகவலை குறிப்பிடும் நூல் = மகாவம்சம்.
- தமிழ்நாட்டில் இருந்த “குதிரை வணிகர்கள்” குறித்து குறிப்பிட்டுள்ள நூல் = மகாவம்சம்.
- 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
எரித்திரியன் கடலின் பெரிப்ளிஸ்
- கிரேக்க நூல்.
- “பெரிப்ளஸ்” என்பதன் பொருள் = கடல் வழிகாட்டி.
- தமிழகத்தின் முசிறி, தொண்டி, குமரி, கொற்கை ஆகிய துறைமுகங்கள் பற்றி குறிப்பிட்டுள்ள நூல் = எரித்திரியன் கடலின் பெரிப்ளிஸ்.
- சேர, சோழ, பாண்டிய அரசர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படும் வெளிநாட்டு நூல் = எரித்திரியன் கடலின் பெரிப்ளிஸ்.
பிளினியின் “இயற்கை வரலாறு”
- ரோமானியரான “மூத்த பிளினி” எழுதிய நூல் = இயற்கை வரலாறு.
- லத்தின் மொழியில் எழுதப்பட்டுள்ள நூல் இது.
- இந்தியாவுடன் நடைபெற்ற மிளகு வணிகம் குறித்து பதிவு செய்துள்ள நூல் = பிளினியின் “இயற்கை வரலாறு”.
- சரியான பருவக் காற்று வீசினால் ஆப்ரிக்காவின் ஓசலிஸ் துறைமுகத்தில் இருந்து நாற்பது நாட்களில் இந்தியாவை அடைந்து விடலாம் என குறிப்பிட்டவர் = பிளினி.
- கேரளக் கடற்கரையில் இருந்த “பக்காரே” துறைமுகத்தை மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் மூத்த பிளினி.
- இந்தியாவுடன் நடைபெற்ற மிளகு வணிகத்தால் ரோமானிய செல்வங்கள் கரைந்து போகின என்று “இயற்கை வரலாறு” நூலில் குறிப்பிட்டுள்ளார் மூத்த பிளினி.
- 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
தாலமியின் புவியியல்
- இரண்டாம் நூற்றாண்டின் ரோமானியப் பேரரசின் புவியியல் அமைப்பை நிலப்படமாக எழுதியவர் = தாலமி.
- “புவியியல்” என்னும் நூலின் ஆசிரியர் = தாலமி.
- தாலமியின் “புவியியல்” நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய தமிழக துறைமுக நகரங்கள் = காவிரிப்பூம்பட்டினம் (Khaberis Emporium), கொற்கை (Korkoi), கன்னியாகுமரி (Komaria), முசிறி (Muziris).
பியூட்டிங்கேரியன் அட்டவணை
- ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த விளக்கமான நிலப்படம் = பியூட்டிங்கேரியன் அட்டவணை.
- பியூட்டிங்கேரியன் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய தமிழக துறைமுக நகரம் = முசிறி.
- பியூட்டிங்கேரியன் அட்டவணையில் இலங்கை எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது = Taprobane.
வியன்னா பாப்பிரஸ்
- வியன்னா பாப்பிரஸ் எந்த நாட்டின் ஆவணம் = கிரேக்கம்.
- முசிறியில் நடைபெற்ற வணிகம் தொடர்பான குறிப்புகள் எதில் உள்ளது = வியன்னா பாப்பிரஸ்.
- வணிகர்களுக்கு இடையேயான எழுத்துப்பூர்வமான உடன்படிக்கை = வியன்னா பாப்பிரஸ்.
- வியன்னா பாப்பிரஸ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரோமானியக் கப்பல் = ஹெர்மாபோலோன் (Hermapollon).
- 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
சங்க காலம்
- சங்க காலம் என்பது = வரலாற்றுத் தொடக்கக் காலம்.
- சங்க காலம் என்பது = கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை.
- சங்க கால செய்யுள்கள் எதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன = திணை.
ஐவகை நிலங்கள்
- மலையும் மலை சார்ந்த இடம் = குறிஞ்சி.
- காடும் காடு சார்ந்த இடமும் = முல்லை.
- வயலும் வயல்வெளி சார்ந்த இடமும் = மருதம்.
- கடலும் கடல் சார்ந்த இடமும் = நெய்தல்.
- வறண்ட நிலப்பகுதி = பாலை.
சேரர்கள்
- அசோகரின் கல்வெட்டுகளில் கேரளபுத்திரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ளவர்கள் = சேரர்கள்.
- சேரர்களின் தலைநகரம் = வஞ்சி.
- சேரர்களின் துறைமுகம் = முசிறி, தொண்டி.
- சேரர்களின் மாலை = பனம்பூ.
- சேரர்களின் இலச்சினை = வில்லும் அம்பும்.
- சேர அரசர்கள் பற்றியும், அவர்களின் நாட்டின் எல்லைகளை பற்றியும் கூறும் சங்க இலக்கிய நூல் = பதிற்றுப்பத்து.
- எங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் சேர மன்னர்களின் மூன்று தலைமுறையினர் பற்றிய குறிப்புகள் உள்ளன = கரூர் அருகே புகளூர்.
- சேரர்களின் நாணயம் அதிகளவு கிடைத்துள்ள இடம் = கரூர்.
- சேரர்கள் நாணயத்தில் இடம் பெற்றிருந்த உருவங்கள் = ஒருபுறத்தில் யானையும், மற்றொரு புறத்தில் அங்குசமும், வில்லும் அம்பும்.
சோழர்கள்
- சோழர்களின் தலைநகரம் = உறையூர்.
- காவிரி ஆறு வங்கக்கடலில் கலக்கும் இடம் = காவிரிப்பூம்பட்டினம்.
- சோழர்களின் துறைமுக நகரம் = காவிரிப்பூம்பட்டினம்.
- சோழர்களின் இலச்சினை = புலி.
- காவிரிபூம்பட்டினம் குறித்து எழுதப்பட்ட சங்க கால நூல் = பட்டினப்பாலை.
- பட்டினப்பாலை நூலின் ஆசிரியர் = கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
- சதுர வடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்ட தமிழ் மன்னர்கள் = சோழர்கள்.
- சோழர்கள் வெளியிட்ட நாணயத்தில் இடம்பெற்றிருந்த உருவங்கள் = முன்புறத்தில் புலி உருவம். பின்புறத்தில் யானை மற்றும் புனிதச் சின்னங்கள்.
- 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
பாண்டியர்கள்
- மாங்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் சங்ககால பாண்டிய அரசன் = பாண்டியன் நெடுஞ்செழியன்.
- பாண்டியர்களின் தலைநகரம் = மதுரை.
- பாண்டியர்களின் இலச்சினை = மீன்.
சங்ககாலச் சமூகம்
- சங்க காலத்தில் குலம் அடிப்படையிலான சமுதாயங்கள் தோன்றின.
- சாதி அமைப்புகள் தமிழகத்தில் இல்லை.
- ஐவகை நிலம் மற்றும் செய்யும் தொழில் அடிப்படையில் மக்கள் குழுக்களாகப் காணப்பட்டனர்.
- சங்ககாலத்தில் பெண்களின் நிலை உயர்வாகவே இருந்தது.
சங்ககாலப் பொருளாதாரம்
- வேளாண்மை முதல் இடத்தில் இருந்தது.
- தமிழகத்தில் எங்கு நடைபெற்ற அகழாய்வுகளில் “தாழிகளுடன் கூடிய நெல்லும்” கிடைத்துள்ளது = ஆதிச்சநல்லூர், பொருந்தல்.
- “புனம்” என்றால் என்ன = சங்ககாலத்தில் வனப்பகுதிகளில் இடம்விட்டு இடம்விட்டு இடம் மாறி சாகுபடி செய்யும் முறை “புனம்” எனப்பட்டது.
- “கலம் செய்கோ” என்றால் என்ன = மக்களின் அன்றாட வாழ்விற்கு தேவையான மண் பாண்டங்களை செய்வோர் “கலம் செய்கோ” எனப்பட்டனர்.
- தமிழகத்தில் எங்கு நடைபெற்ற அகழாய்வில் “இரும்பு உருக்கு ஆலைகள்” கண்டுபிடிக்கப் இடங்கள் = கொடுமணல், குட்டூர்.
- சங்க காலத்தில் இரும்பினால் செய்யபப்ட்ட வாள், கத்தி, ஈட்டி போன்ற கருவிகள் தமிழகத்தில் எங்கு கிடைத்துள்ளது = புதுச்சேரி.
- சங்க காலத்தில் “பொன்னை” (தங்கம்) உருக்கும் ஆலை இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் = கேரளத்தின் பட்டணம்.
- பெருங்கற்காலத்தை சேர்ந்த அகழாய்வு களங்கள் = சுத்துக்கேணி, ஆதிச்சநல்லூர், கொடுமணல்.
- சங்க காலத்தில் கண்ணாடி மணிகள் செய்யும் தொழிலகங்கள் இருந்த இடம் = அரிக்கமேடு மற்றும் கடலூருக்கு அருகே குடிக்காடு.
- எங்கு நடைப்பெற்ற அகழாய்வின் பொழுது “முத்து” கிடைத்துள்ளது = கீழடி.
- நெல்மணிகளை பதித்து அடையாளமிட்ட சுடுமண்ணில் செய்யபப்ட்ட அச்சு எங்கு கிடைத்துள்ளது = கீழடி.
- 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
சங்ககால வணிகம்
- சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட நூல் நூற்கும் கதிர்களும் துண்டுத் துணிகளும் கிடைத்துள்ள இடங்கள் = கொடுமணல் மற்றும் கேரளத்தின் பட்டணம்.
- தமிழகத்தில் துணிகள் நெய்யப்பட்டது குறித்து தகவல்களை பதிவு செய்துள்ள வெளிநாட்டு குறிப்பு = எரித்திரியன் கடலின் பெரிப்ளிஸ்.
- செம்மணிக்கற்கள் பதித்த வெண்கலத்தால் ஆன புலி பொம்மை கிடைத்த இடம் = கொடுமணல்.
- தமிழகத்தில் பெருங்கற்காலத்தை சேர்ந்த வெண்கலக் கிண்ணம் கிடைத்த இடம் = புதுச்சேரி (ஆரோவில்).
- தமிழகத்தில் எங்கு பண்டைய கால கண்ணாடி மணிகள் கிடைக்கப்பெற்றுள்ளது = பொருந்தல்.
- தமிழ் பிராமி எழுத்துக்களில் “வணிகத்தை” குறிக்கும் சொற்கள் = வணிகன், நிகமா.
- உப்பு வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = உமணர்கள்.
- கடற்பயணத்திற்கு உதவிய கப்பல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = கலம், பஃறி, ஓடம், தோணி, தெப்பம், நாவாய்.
- நன்கு வடிவமைக்கப்பட்ட யவனர்களின் கப்பல்தங்கம், பிற உலோகக் காசுகளுடன் முசிறித் துறைமுகத்திற்கு வந்த மிளகை ஏற்றிச் சென்றதாக குறிப்பிட்டுள்ள சங்க இலக்கிய நூல் = அகநானூற்றின் 149 வது செய்யுள்.
- எந்த வேளிர் அரசரின் நாணயங்கள் மிக அதிகளவு கிடைத்துள்ளன = மலையமான் காரி.
யவனர்கள்
- கிரேக்க, ரோமானிய, மேற்கு ஆசிய மக்கள் உள்ளிட்ட மேற்கத்தியர்கள் “யவனர்” என்று அழைக்கப்பட்டனர்.
- யவனர் என்னும் சொல் எங்கிருந்து வந்தது = கிரேக்கப் பகுதியான “அயோனியா” என்பதில் இருந்து.
- 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
தமிழ்நாட்டில் இருந்து செங்கடல் கரைக்கு
- எந்த துறைமுகத்தில் ஏழரை கிலோ மிளகு இருந்த இந்தியப் பானையும், தேக்கு மரப்பலகை துண்டுகளும், தமிழ் பிராமி எழுத்துகள் பொறித்த (தமிழக) பானை ஓடு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது = செங்கடல் கடற்கரையில் உள்ள “பெர்னிகே” துறைமுகம்.
- மிளகு இருந்த தமிழகப் பானைகள் எங்கு கண்டுக்கப்பட்டன = செங்கடல் கடற்கரையில் உள்ள “பெர்னிகே” துறைமுகம்.
- எந்த துறைமுகத்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட “மூன்று சுடுமண் பாண்டத் துண்டுகள்” கண்டெடுக்கப்பட்டது = செங்கடல் கடற்கரையில் உள்ள “குசேர் அல் காதிம்” துறைமுகம்.
- எந்த துறைமுகத்தில் பனை ஓறி, கண்ணன் (கணன்), சாத்தன் (சாதன்) என்று தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட சுடுமண் பாண்டத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன = செங்கடல் கடற்கரையில் உள்ள “குசேர் அல் காதிம்” துறைமுகம்.
- கண்ணன் (கணன்) எனப் பொறிக்கப்பட்ட சுடுமண் பாண்டத் துண்டு எங்கு கண்டெடுக்கப்பட்டது = செங்கடல் கடற்கரையில் உள்ள “குசேர் அல் காதிம்” துறைமுகம்.
- சாத்தன் (சாதன்) எனப் பொறிக்கப்பட்ட சுடுமண் பாண்டத் துண்டு எங்கு கண்டெடுக்கப்பட்டது = செங்கடல் கடற்கரையில் உள்ள “குசேர் அல் காதிம்” துறைமுகம்.
பெரும் பத்தன் கல்
- “பெரும் பத்தன் கல்” என எழுதப்பட்டுள்ள அறிய கல் எங்கு கண்டெடுக்கப்பட்டது = தாய்லாந்து நாட்டின் “குவான் லுக் பாட்” என்னுமிடத்தில்.
- பெரும்பத்தன் ஒரு பொற்கொல்லராக இருக்க வேண்டும் என்றும், இக்கள் தங்கத்தின் தரத்தை அறிய உதவும் உரைகல் எனவும் கூறப்படுகிறது.
- 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
சங்ககால நகரங்களின் தோற்றம்
- சங்க காலத்தில் கிழக்கு கடற்கரையில் அமைந்த முக்கிய துறைமுக நகரங்கள் = அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், அழகன்குளம், கொற்கை, பட்டணம் (கேரளா).
- சங்ககாலத்தில் உள்நாட்டு வணிக மையங்களாக அமைந்த முக்கிய நகரங்கள் = காஞ்சிபுரம், உறையூர், கரூர், மதுரை, கொடுமணல்.
கொடுமணல்
- கொடுமணல் பகுதி தமிழ்நாட்டின் ஈரோடுக்கு அருகில் உள்ளது.
- கொடுமணல் பற்றி குறிப்பிட்டுள்ள சங்க இலக்கிய நூல் = பதிற்றுப்பத்து.
- பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள இடம் = கொடுமணல்.
- தமிழகத்தில் எங்கு குதிரைச் சேணத்தில் பயன்படும் இரும்பு வளையங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது = கொடுமணல்.
- சங்கு வேலைப்பாடுகள் அமைந்த வளையல்கள் எங்கு கிடைத்துள்ளன = கொடுமணல்.
- தமிழகத்தில் எங்கு தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்டு குடுவை கண்டெடுக்கப்பட்டது = கொடுமணல்.
- செம்மணிக்கல்லால் ஆன மணிகள் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது = கொடுமணல்.
- சங்க கால மனிதனின் எலும்புக்கூடு எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது = கொடுமணல்.
கீழடி நாகரிகம்
- கீழடி எங்குள்ளது = மதுரை அருகே சிலைமான் என்னும் ஊருக்கு அருகில்.
- எந்த நதிக்கரையில் கீழடி நகரம் அமைந்துல்லதுஹ் = வைகை நதி.
- கீழடியில் எங்கு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது = பள்ளிச் சந்தைத்திடல்.
- எங்கு நடைபெற்ற அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது = கீழடி.
- எங்கு நடைபெற்ற அகழாய்வில் கண்ணுக்கு மை தீட்டும் செப்புக் கம்பி கிடைத்துள்ளது = கீழடி.
- நடைபெற்ற அகழாய்வில் படிகத்தால் ஆன காதணிகள் கிடைத்துள்ளது = கீழடி.
- கீலடி அகழாய்வுகள் மூலம் தமிழகத்தில் நகரமயமாக்கல் எப்பொழுது துவங்கியுள்ளது எனப் கண்டறியப்பட்டுள்ளது = கி.மு. ஆறாம் நூற்றாண்டு.
பட்டணம் (கேரளா)
- பட்டணம் எங்குள்ளது = கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில்.
- மேலை நாடுகளோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்த பழங்காலத் துறைமுகம் = பட்டணம்.
- பச்சை கலந்த நீலவண்ண ஆடிப்பூச்சு உள்ள மேற்காசிய பானை ஓடுகள் எங்கு கிடைதுள்ளது = பட்டணம் (கேரளா).
- ஒரே மரத்தால் ஆன படகின் பகுதிகள் எங்கு கிடைத்துள்ளது = பட்டணம் (கேரளா).
தமிழ்ப் பண்பாட்டின் தொட்டில்
- தமிழ்ப் பண்பாட்டின் தொட்டில் எனப்படும் நாகரிகம் = பொருநை நாகரிகம்.
- பொருநை நாகரிகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது = தாமிரபரணி பண்பாடு.
- தமிழ்நாட்டின் ஒரே வற்றாத நதி = பொருநை (தாமிரபரணி) ஆறு.
- 1876ல் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்தியவர் = ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் ஜாகோர்.
- 1899 முதல் 1905 வரை ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்தவர் = இங்கிலாந்தின் அலெக்சாண்டர் ரீ.
- தமிழக அரசின் தொல்லியல் துறையினரால் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்தப்பட்ட ஆண்டு = 1968.
- உமி நீங்கிய நெல்மணிகள் எங்கு கிடைத்துள்ளன = ஆதிச்சநல்லூர் அருகே “சிவகளை” என்னும் இடத்தில்.
- பொருநை நாகரிகம் (தாமிரபரணி பண்பாடு) எத்தனை ஆண்டுகள் பழமையானது = 3200 ஆண்டுகள் பழமையானது.
ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள பொருட்கள்
- எலும்புகளுடன் கண்டெடுக்கபப்ட்ட ஈமத் தாழிகள்.
- பொன்தகட்டால் செய்யபப்ட்ட “நெற்றிப்பட்டங்கள்” எங்கு கிடைத்துள்ளன = ஆதிச்சநல்லூர்.
- சிந்துவெளி அகழ்வில் கிடைத்துள்ளதைப் போலவே சுடுமண் பெண் உருவங்கள் கொண்ட பொம்மைகள் கிடைத்துள்ள இடம் = ஆதிச்சநல்லூர்.
- ஆதிச்சநல்லூரில் எத்தனை விதமான இரும்பினால் ஆன கருவிகள் கிடைத்துள்ளன = 32.
- ஆதிச்சநல்லூரில் கிடைத்த செங்கற்கட்டுமானம் எத்தனை வரிசையில் உள்ளது = 29.
- சங்கு வளையல் தொழிற்கூடம் இருந்துள்ள இடம் = கொற்கை.
புத்தக வினாக்கள்
- சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது? = தமிழ் – பிராமி
- தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும் குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது? = மகாவம்சம்.
- காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்? = கரிகாலன்.
- சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது? = புகலூர்.
- கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ____________ ஆகும்? = கல்வெட்டு சான்றுகள்
- கடந்தகாலச் சமூகங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகளாக உள்ள சில பொருட்களை மீட்டெடுப்பதற்கு மீட்டெடுப்பதற்கு ஓரிடத்தை முறைப்படி தோண்டுதல் ________ ஆகும்? = தொல்லியல் அகழாய்வு
- மௌரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கௌடில்யர் எழுதிய நூல் _____________ ஆகும்? = அர்த்தசாஸ்திரம்.
- _______________ என்பது பிரிவு அல்லது வகை என்ற பொருளில் செய்யுள்களில் பயன்படுத்தப்பட்ட கருப்பொருள்; மேலும், இது ஒரு வாழ்விடத்தை அதன் தனித்தன்மை வாய்ந்த இயற்கைக்கூறுகளுடன் குறிப்பதாகவும் உள்ளது? = திணை.
- கிரேக்கர்கள், ரோமானியர்கள், மேற்கு ஆசியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்கத்தியர்களை ________________ என்னும் சொல் குறிக்கிறது? = யவனர்.