9TH பண்டைய நாகரிகங்கள்
9TH பண்டைய நாகரிகங்கள்
- நாகரிகம் என்பது ஒரு முன்னேறிய, முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை என்று கருதப்படுகிறது.
- நாகரிகங்கள் தோன்றிய காலம் = வெண்கலக் காலம்.
- பண்டைய நாகரிகங்களில் முக்கியமானது = எகிப்திய, மெசபடோமிய, சீன மற்றும் சிந்துவெளி நாகரிகம்.
எகிப்திய நாகரிகம்
- எந்த நதியால் எகிப்து நாடு செழிப்படைகிறது = நைல் நதி.
- வரலாற்றின் தந்தை எனப்படுபவர் = ஹெரோடோடஸ்.
- “எகிப்தை நைல் நதியின் நன்கொடை” என்று கூறியவர் = கிரேக்க வரலாற்று ஆய்வாளர் ஹெரோடோடஸ்.
- 9TH பண்டைய நாகரிகங்கள்
எகிப்திய சமூகம் மற்றும் நிர்வாகம்
- எகிப்திய அரசர் எவ்வாறு அழைக்கப்பட்டார் = “பாரோ” (Pharoah).
- எகிப்தில் தெய்வீக சக்தி பொருந்தியவராக கருதப்பட்டவர் = பாரோ (அரசர்).
- எகிப்தில் அடிமை முறை இல்லாமல் இருந்தாலும், சிறை பிடிக்கப்பட்டவர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.
- “விசியர்” (Vizier) என்றால் என்ன = எகிப்திய அரசரின் கீழ் மாகாணங்களை ஆளும் நிர்வாகி.
மம்மியாக்கம் என்றால் என்ன
- மம்மி என்றால் என்ன = பதப்படுத்தப்பட்ட உடல் மம்மி எனப்படும்.
- “மம்மியாக்கம்” என்றால் என்ன = எகிப்தியர்கள் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி வைத்தனர். இவாறு உடலைப் பதப்படுத்தி வைக்கும் முறைக்கு மம்மியாக்கம் என்று பெயர்.
- புகழ் பெற்ற எகிப்து பாரோவான (அரசர்) “டூடன்காமனின்” சமாதி மம்மி உள்ள இடம் = எகிப்தின் லக்ஸருக்கு அருகே உள்ள அரசர்களின் பள்ளத்தாக்கில் உள்ளது.
- யாருடைய முகமூடி தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது = எகிப்திய பாரோவான டூடன்காமன்.
- 9TH பண்டைய நாகரிகங்கள்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
எகிப்திய மம்மிகள்
- மம்மி என்றால் என்ன = பதப்படுத்தப்பட்ட உடல் மம்மி எனப்படும்.
- எகிப்தில் இறந்தவர்களின் உடலை எதைக் கொண்டு பாதுகாத்தனர்,
- சோடியம் கார்பனேட் + சோடியம் பைகார்பனேட் = நாட்ரன் உப்பு.
- சார்க்கோபேக்ஸ் என்றால் என்ன = பதப்படுத்தப்பட்ட உடலை பாதுகாப்பாக வைக்க உதவும் “கல்லால் ஆன சவப்பெட்டி”.
எகிப்திய வேளாண்மை மற்றும் வணிகம்
- எகிப்தியர்கள் “பாப்பிரஸ்” எனப்படும் “காகித நாணல்” பயிர்களை வேளாண்மை செய்தனர்.
- பாப்பிரஸ் எனப்படும் காகித நாணல் செடியை கொண்டு எகிப்தியர்கள் தயாரித்தது = காகிதம், கயிற்றுப் பாய், செருப்பு.
- “லாபிஸ் லாசுலீ” எனப்படும் “நீல வகைக் கல்லை” எகிப்ப்தியர்கள் எங்கிருந்து பெற்றனர் = ஆப்கானிஸ்தான்.
- 9TH பண்டைய நாகரிகங்கள்
பாப்பிரஸ்
- பேப்பர் (காகிதம்) என்ற சொல் “பாப்பிரஸ்” என்ற தாவரத்தின் பெயரில் இருந்து வந்தது.
- எகிப்தியர்கள் “காகித நாணல்” (பாப்பிரஸ்) என்ற தாவிர தண்டில் இருந்து காகிதங்களை உருவாக்கினர்.
- 9TH பண்டைய நாகரிகங்கள்
எகிப்தியர்களின் கலை கட்டிடக்கலை
- எகிப்திய பாரோக்களின் (அரசர்களின்) சமாதிகள் = பிரமிடுகள்.
- “கெய்ரோ” நகருக்கு அருகே உள்ள பிரமிடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன = கிஸா பிரமிடுகள்.
- “ஸ்பிங்க்ஸின்” என்றால் என்ன = சிங்க உடலும், மனித முகமும் கொண்ட சுண்ணாம்புக்கல் படிம சிலை “ஸ்பிங்க்ஸின்” ஆகும்.
- எந்த எகிப்திய மன்னர் ஆட்சிக் காலத்தில் “ஸ்பிங்க்ஸின்” கட்டப்பட்டது = காஃப்ரெ.
- உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்று = ஸ்பிங்க்ஸின்.
பண்டைய எகிப்து கடவுள்கள்
- பண்டைய எகிப்து கடவுள்கள் = அமோன் (ரே), சேத், தோத், ஹோரயசின்ஸ் (ஹோரஸ்), அனுபிஸ்.
- எகிப்தில் முதன்மையான கடவுளாக இருந்தவர் = சூரியக் கடவுளான அமோன் (ரே).
- 9TH பண்டைய நாகரிகங்கள்
எகிப்தியர்களின் தத்துவம் மற்றும் அறிவியல்
- எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை = சூரிய கடிகாரம், நீர் கடிகாரம், கண்ணாடி.
- கண்ணாடியை கண்டுபிடித்தவர்கள் = எகிப்தியர்கள்.
- எகிப்தியர்கள் எதை அடிப்படையாகக் கொண்டு “நாட்காட்டியை” உருவாக்கினர் = சூரியனை அடிப்படையாகக் கொண்டு.
- எகிப்தியர்கள் உருவாக்கிய சூரிய நாட்காட்டி = 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் உள்ளன. ஆனால் ஆண்டு இறுதியில் ஐந்து நாட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- கி.மு 4200 முன்னாளிலேயே எகிப்தியர்கள் சூரிய நாட்காட்டியை உருவாக்கினர்.
எகிப்தியர்களின் எழுத்து முறை
- எகிப்தியர்களின் எழுத்து முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது = ஹைரோகிளிபிக் (சித்திர எழுத்து முறை).
- எகிப்தியர்கள் தங்களின் பொதுவான தகவல் தொடர்பிற்கு பயன்படுத்திய எழுத்து முறை = “ஹெரிடிக்” எழுத்து.
- எகிப்தியர்களின் எழுத்து வடிவம் = பிக்டோகிராம் எனப்படும் சித்திர எழுத்து வடிவம்.
மெசபடோமிய நாகரிகம்
- மெசபடோமியா = மேற்கு ஆசியாவின் ஈராக், குவைத் பகுதிகள்.
- மெசபடோமிய நாகரிகத்தில் உள்ள நான்கு நாகரிக அரசுகள் = சுமேரிய, அகேடிய, பாபிலோனிய மற்றும் ஆஸிரிய நாகரிகங்கள்.
- மெசபடோமிய நாகரிகத்தின் நான்கு நாகரிகங்களின் வரிசை முறை = சுமேரிய, அகேடிய, பாபிலோனிய மற்றும் அஸிரிய.
- மெஸோ = கிரேக்க மொழியின் மெஸோ என்றால் “நடுவில்” என்று பொருள்.
- பொடோமஸ் = கிரேக்க மொழியில் பொடோமஸ் என்றால் “ஆறு” என்று பொருள்.
- மெசபடோமியாவில் பாயும் நதிகள் = யூப்ரிடஸ், டைக்ரிஸ்.
- யூப்ரிடஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகள் இணையும் இடம் = பாரசீக வளைகுடா.
- மெசபடோமியாவின் வடபகுதி = அஸிரியா.
- மெசபடோமியாவின் தென்பகுதி = பாபிலோனியா.
- 9TH பண்டைய நாகரிகங்கள்
சுமேரியர்கள்
- மெசபடோமியாவின் நான்கு நாகரிகங்களில் பழமையானது = சுமேரிய நாகரிகம்.
- சுமேரியர்கள் சிந்துவெளி மற்றும் எகிப்திய நாகரிகத்தின் சமகாலத்தவர்கள்.
- சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர்கள் = சுமேரியர்கள்.
- சுமேரியர்கள் எங்கிருந்து வந்ததாக கூறப்படுகிறது = மத்திய ஆசியா.
- சுமேரியர்கள் உருவாக்கிய நகரங்களில் முக்கியமானது = நிப்பூர்.
- சுமேரியர்களின் எழுத்து முறை = கியூனிபார்ம் எனப்படும் முக்கோணவடிவ எழுத்து முறை.
- சுமேரியர்கள் ஆட்சி முடிவிற்கு வந்த காலம் = கி.மு 2450.
அக்காடியர்கள்
- சுமேரியாவை மிகக்குறுகிய காலம் ஆட்சி செய்தவர்கள் = அக்காடியர்கள்.
- அக்காடிய அரசர்களில் புகழ்பெற்றவர் = சார்கான்.
- அக்காடியர்களின் வரலாற்று ஆவணங்கள் = கியூனிபார்ம் ஆவணங்கள்.
- அக்காடியர்களின் “கியூனிபார்ம் ஆவணங்கள்” குறிப்பிடும் நாகரிகம் = சிந்துவெளி நாகரிகம்.
- அக்காடியர்களின் கியூனிபார்ம் ஆவணங்கள் குறிப்பிடும் “மெலுஹா” என்பது = சிந்துவெளி பகுதி.
- மெலுஹா என்பது = அக்காடியர்கள் குறிப்பிடும் சிந்துவெளி பகுதி.
- அக்காட் நகரம் பிற்காலத்தில் “பாபிலோன்” என்று அழைக்கப்பட்டது.
- மேற்கு ஆசியாவின் பண்பாட்டு, வணிக மையமாக திகழ்ந்த பகுதி = அக்காட் நகரம் (பாபிலோன்).
- 9TH பண்டைய நாகரிகங்கள்
பாபிலோனியர்கள்
- “அமோரைட்ஸ்” என்னும் யூத மக்கள் அரேபியாவில் இருந்து மெசபடோமியாவிற்கு குடிபெயர்ந்தனர்.
- “பாபிலோன்” நகரை உருவாக்கியவர்கள் = அமோரைட்ஸ் யூத மக்கள்.
- பாபிலோனிய அரசர்களில் புகழ் மிக்கவர் = ஹமுராபி.
- பாபிலோனின் உருவான சக்தி மிக்க அரசுகள் = உர் அரசு மற்றும் பாபிலோன் அரசு.
- பாபிலோனின் ஆறாவது அரசரான ஹமுராபி மாபெரும் சட்டங்களை இயற்றியதற்காகப் புகழ் பெற்றவர்.
உலகின் முதல் காவியம்
- உலகின் முதல் காவியம் = The Epic of Gilgamesh.
- உலகின் முதல் காவியத்தின் கதாநாயகன் = கில்காமெஷ்.
- உலகின் முதல் காவியத்தின் கதாநாயகனான “கில்காமெஷ்” ஒரு சுமேரிய அரசராக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அஸிரியர்கள்
- மெசபடோமிய நாகரத்தின் கடைசி அரச வம்சம் = அஸிரியர்கள்.
- அஸிரியர்களின் தலைமைக் கடவுள் = லமாஸூ.
- அஸிரியர்களின் காக்கும் கடவுள் = லமாஸூ.
- லமாசுவின் கற்சிற்பம் = அஸூர் (Ashur).
- அஸிரியர்களின் தலைநகரம் = அஸூர் (Assur).
- அஸிரியப் பேரரசின் புகழ்பெற்ற அரசர் = அஸூர்பனியால்.
- “கியூனிபார்ம் ஆவணங்களை” கொண்ட புகழ் பெற்ற நூலகத்தை உருவாக்கியவர்கள் = அஸிரியர்கள்.
- “கியூனிபார்ம் ஆவணங்களை” கொண்ட புகழ் பெற்ற நூலகத்தை உருவாக்கியவர் = அஸூர்பனியால்.
உலகின் முதல் ராணுவ அரசு
- உலகின் முதல் ராணுவ அரசு என்று அழைக்கப்படுவது = அஸிரிய்ப பேரரசு (மெசபடோமியா நாகரிக அரசு).
- அஸிரியப் பேரரசு உலகின் முதல் வலிமையான ராணுவமாக உருவாவதற்கான காரணம் = இரும்புத் தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்தியதால்.
அஸிரியர்களின் சமூகம் நிர்வாகம்
- சுமேரிய நகரங்களின் மத்தியில் ___________ எனப்படும் கோவில் இருக்கும் = சிகுராட்.
- அரசரே தலைமை மதகுருவாக இருந்தார்.
- வரியாக வசூலித்ததை கோவிலில் சேமித்து வைத்தனர்.
- 9TH பண்டைய நாகரிகங்கள்
மெசபடோமிய நாகரிகத்தில் வாழ்க்கை முறைகள்
- மெசபடோமியா மக்களின் முக்கிய தொழில் = வேளாண்மை.
- மெசபடோமியா மக்களின் முக்கிய உணவு = மீன்.
- சுமேரியர்களின் (மெசபடோமியர்கள்) கடவுள் கோட்பாடு = பல கடவுள் கோட்பாடு.
- சுமேரியர்கள் (மெசபடோமியர்கள்) வணங்கிய காற்று மற்றும் ஆகாயத்திற்கான கடவுள் = என்லில்.
- என்லில் கடவுளின் கோவில் இருந்த இடம் = நிப்பூர்.
- சுமேரியர்களின் (மெசபடோமியர்கள்) தானியத்திற்கான பெண் தெய்வம் = நின்லின்.
- பாபிலோனியர்கள் (மெசபடோமியர்கள்) வணங்கிய கடவுள் = மர்டுக்.
- அஸிரியர்களின் தலைமைக் கடவுள் = லமாஸூ.
- அஸிரியர்களின் காக்கும் கடவுள் = லமாஸூ.
- அன்பு மற்றும் வளமைக்காண பெண் தெய்வம் = இஸ்டார்.
- கடல் மற்றும் குழப்பத்திற்கான கடவுள் = டியாமட்.
- சந்திரக் கடவுள் = சின்.
- சூரியக் கடவுள் = சமாஷி.
- பெருக்கல், வகுத்தல், மும்மடிச் சமன்பாடு ஆகிய கருத்துக்களை உருவாக்கியவர்கள் = மெசபடோமியர்கள் (சுமேரியர்கள்).
- மெசபடோமியர்கள் உருவாக்கிய எண் முறை = 60ஐ அடிப்படையாகக் கொண்டது.
- மெசபடோமியர்களிடம் இருந்து தான் 60 நிமிடங்கள் கொண்ட ஒரு மணி நேரம், 24 மணி நேரம் கொண்ட ஒரு நாள் ஆகியவை நமக்கு கிடைத்தது.
- மெசபடோமிய (சுமேரிய) நாட்காட்டியில் ஒரு வாரத்தில் உள்ள நாட்கள் = ஏழு.
- நீர் கடிகாரத்தை உருவாக்கியவர்கள் = மெசபடோமியர்கள்.
- சந்திர நாட்காட்டியை (12 மாதங்கள்) உருவாக்கியவர்கள் = மெசபடோமியர்கள்.
- “பரப்பளவு, திடப்பொருள்” ஆகியவற்றை அளவிடுவதற்கான அளவீட்டு முறைகளை கண்டுபிடித்தவர்கள் = மெசபடோமியர்கள்.
உலகின் முதல் எழுத்துப்பூர்வமான ஆதாரம்
- மெசபடோமியர்களின் கோவில்கள் வங்கிகளாக செயல்பட்டு கடன் வழங்கின.
- வட்டியுடன் அல்லது வட்டி இல்ல கடன் முறை பற்றிய விவரங்கள் மெசபடோமிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கடனுக்கு வட்டி வாங்குவது குறித்த உலகின் முதல் எழுத்துப்பூர்வமான ஆதாரம் ஆகும் இது.
- 9TH பண்டைய நாகரிகங்கள்
ஹமுராபியின் சட்டத் தொகுப்பு
- பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களைக் கூறும் ஒரு சட்ட ஆவணம் = ஹமுராபியின் சட்டத் தொகுப்பு.
- ஹமுராபியின் சட்டத் தொகுப்பில் உள்ள மொத்த சட்டப் பிரிவுகள் = 282 பிரிவுகள்.
- ஹமுராபி இந்தத் சட்டத் தொகுப்பை எந்த கடவுளிடம் இருந்து பெற்றதாக சிற்பத்தில் வடிக்கப்பட்டுள்ளது = சூரியக் கடவுள் சமாஷி.
- ஹமுராபியின் சட்டத் தொகுப்பு எத்தன அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது = பழிக்குப் பழி (பல்லுக்குப் பல், கண்ணுக்கு கண்).
சுமேரிய எழுத்து முறை “கியூனிபார்ம்”
- சுமேரிய எழுத்து முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது = கியூனிபார்ம்.
- கியூனிபார்ம் எழுத்துக்கள் எந்த வடிவத்தில் உள்ளது = ஆப்பு (wedge).
- உலகில் முதன் முதலில் எழுத்து முறையை உருவாக்கியவர்கள் = சுமேரியர்கள்.
பானை செய்யும் சக்கரத்தை கண்டுபிடித்தவர்கள்
- சுமேரியர்கள் தான் முதன் முதலில் பானைகள் செய்யும் குயவர்களின் சக்கரத்தை உருவாக்கியவர்கள் ஆவர்.
- 360 நாட்கள் கொண்ட நாட்காட்டியைத் தயாரித்தவர்கள் = சுமேரியர்கள்.
- ஒரு வட்டத்தை 360 பாகங்களாக பிரித்தவர்கள் = சுமேரியர்கள்.
சீன நாகரிகம்
- சீனாவின் இரோண்டு பெரிய ஆறுகள் = மஞ்சள் ஆறு (ஹோவாங்-ஹோ) மற்றும் யாங்ட்சி ஆறு.
- “சீனாவின் துயரம்” எனப்படும் ஆறு = மஞ்சள் ஆறு (ஹோவாங்-ஹோ).
- சீனாவின் “குவின் (சின்)” வம்சத்தை துவக்கி வைத்தவர் = குவின் ஷி ஹூவாங் டி (முதல் பேரரசர்).
- “சொர்கத்தின் புதல்வர்” என்று அழைக்கப்பட்டவர் = சீனாவின் முதல் பேரரசர் குவின் ஷி ஹூவாங் டி.
- சீனாவை ஒரே அரசாக மாற்றியவர் = குவின் ஷி ஹூவாங் டி.
- சீனப்பெருஞ்சுவரை கட்டிய மன்னன் = குவின் ஷி ஹூவாங் டி.
ஹான் பேரரசு
- ஹான் பேரரசுகளில் சிறந்த அரசர் = ஹூ டி.
- புகழ்பெற்ற “பட்டுப் பாதையை” துவக்கிய அரசர் = ஹூ டி (கி.மு 130).
- 9TH பண்டைய நாகரிகங்கள்
சீன நாகரிகத்தின் தத்துவமும் இலக்கியமும்
- “போர்க் கலை” என்ற நூலை எழுதிய சீன வீரர் = சன் ட்சூ.
- சீன அரசின் அதிகாரப்பூர்வ நூலக ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல் = தி ஸ்ப்ரிங் அண்ட் ஆட்டோம் அனல்ஸ் (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டுக் குறிப்புகள்).
- சீனாவின் பழமையான மருத்துவ நூல் = மஞ்சள் பேரரசின் “கேனன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்)”
- “தாவோயிசம்” எனும் புதிய மதத்தை தோற்றுவித்தவர் = லாவோ ட் சு.
- சீனாவின் புகழ்பெற்ற தத்துவ ஞானி = கன்பூசியஸ்.
- கன்பூசியஸ் என்பதன் பொருள் = தலைவர் (குங்).
- சீன எழுத்துமுறை தொடக்கத்தில் “சித்திர எழுத்தாக” இருந்து பின்னர் “குறியீட்டு முறையாக” மாறியது.
சீன நாகரிகத்தின் பங்களிப்பு
- காகிதத்தை கண்டுபிடித்தவர்கள் = சீனர்கள்.
- வெடிமருந்தை கண்டுபிடித்தவர்கள் = சீனர்கள்.
சிந்துவெளி நாகரிகம்
- ஹரப்பா நாகரிகம் பரவி இருந்த இடங்கள்,
-
- மேற்கு = பாகிஸ்தான் – ஈரான் எல்லையில் உள்ள “சுட்காஜென்-டோர்”
- வடக்கு = ஷோர்டுகை (ஆப்கானிஸ்தான்)
- கிழக்கு = ஆலம்கீர்பூர் (உத்திரப்பிரதேசம்)
- தெற்கு = டைமாபாத் (மகாராஸ்டிரா)
-
- சிந்துவெளி நாகரிகத்தில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நகரம் = ஹரப்பா.
- 9TH பண்டைய நாகரிகங்கள்
சிந்துவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்கள்
நகரம் | தற்போது உள்ள இடம் | தற்போது உள்ள நாடு |
---|---|---|
ஹரப்பா | பஞ்சாப் | பாகிஸ்தான் |
மொஹஞ்சதாரோ | சிந்து | பாகிஸ்தான் |
தோலாவிரா | குஜராத் | இந்தியா |
கலிபங்கன் | ராஜஸ்தான் | இந்தியா |
லோத்தல் | குஜராத் | இந்தியா |
பானவாலி | ராஜஸ்தான் | இந்தியா |
ராகிகரி | ஹரியானா | இந்தியா |
சுர்கொடடா | குஜராத் | இந்தியா |
சிந்துவெளி நாகரத்தின் முக்கிய குறிப்புகள்
- ஹரப்பா மக்கள் பயன்படுத்திய கற்கள் = சுட்ட, சுடாத செங்கற்கள்.
- சில வீடுகளில் மாடிகள் இருந்துள்ளன.
- “குளியல் குளம்” இருந்த இடம் = மொகஞ்சதாரோ.
- “பூசாரி அரசன்” சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடம் = மொகஞ்சதாரோ.
- வேளாண்மையில் “இரட்டை சாகுபடி” முறையை பின்பற்றி உள்ளனர்.
- ஹரப்பா மக்கள் அறியாத விலங்கு = குதிரை.
- ஹரப்பா மக்கள் அறியாத உலோகம் = இரும்பு.
- ஹரப்பாவின் மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன = “ஜெபு”.
- ஹரப்பா மண்பாண்டங்களில் எவ்வகை வண்ணங்கள் இடம் பெற்றிருந்தன = சிவப்பு, கருப்பு.
- மண் பாண்டம் மீது சிவப்பு வண்ணம் பூசபப்ட்டு, அதில் கருப்பு நிறத்தில் ஓவியங்கள் வரையப்பட்டன.
- ஹரப்பா மக்கள் பயன்படுத்திய கருவிகள் = “செர்ட்” எனப்படும் சிலிக்கா வகை பிளேடுகள், கத்திகள்,
- வெண்கலத்தால் ஆன “நடனமாடும் பெண் சிலை” கிடைத்த இடம் = மொகஞ்சதாரோ.
- ஹரப்பா மக்கள் அறிந்திருந்த மெழுகு செயல்முறை = இழந்த மெழுகு செயல்முறை (லாஸ்ட் – வேக்ஸ் செயல்முறை, Lost – Wax Process).
- ஹரப்ப்பா மக்கள் அணிந்த ஆடைகள் = பருத்தி, பட்டு ஆடைகள்.
- ஹரப்பா மக்கள் எந்த மக்களுடன் நெருங்கிய வணிகத் தொடர்பை வைத்திருந்தனர் = மெசபடோமியா மக்களுடன்.
- மெசபடோமியாவிற்கும், சிந்துவெளி மக்களுக்கும் இருந்த வணிகத் தொடர்பை கூறும் ஆவணம் = கியூனிபார்ம் ஆவணம்.
- கியூனிபார்ம் ஆவணங்களில் சிந்துவெளி பகுதியை குறிக்கும் சொல் = மெலுஹா.
- “மெலுஹா” என்றால் என்ன = மெசபடோமிய நாகரிகத்தின் கியூனிபார்ம் ஆவணங்களில் சிந்துப் பகுதிகளை குறிக்க “மெலுஹா” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
- ஹரப்பா பகுதிகளில் கிடைக்கப்பெற்ற எடைக் கற்கள் = கனசதுர “செர்ட்” எடைக்கற்கள்.
- எடை அளவிடுதலில் ஹரப்பா மக்கள் அறிந்திருந்த என் முறை = ஈரடிமான எண் முறை (Binary).
- ஹரப்பா மக்கள் பின்பற்றிய எடைகளின் விகிதம் = 1:2:4:8:16:32 (இரண்டு இரண்டு மடங்காக அதிகரித்தல்).
- ஹரப்பா எழுத்துக்கள் இதுவரை வாசிக்கப்படவில்லை.
- மொகஞ்சதாரோவில் கிடைத்த சிலைகள் = மாக்கல்லில் செய்யப்பட்ட மதகுரு அல்லது அரசன் சிலை, செம்பில் வார்க்கப்பட்ட நடனமாடும் பெண் சிலை.
- சிந்துவெளி மக்கள் வணங்கியது = இயற்கை.
- சிந்துவெளி பகுதியில் “நெருப்புக் குண்டங்கள்” கண்டுபிடிக்கப்பட்ட இடம் = காலிபங்கன்.
- சிந்துவெளி நாகரிகம் காலங்கள் பிரிப்பு
-
- தொடக்க ஹரப்பா = கி.மு 3300 – கி.பி. 2600
- முதிர்ந்த ஹரப்பா = கி.பி. 2600 – கி.பி. 1900
- பிந்தைய ஹரப்பா = கி.பி. 1900 – 1700.
-
சிந்துவெளி எழுத்துக்கள்
- ஹரப்பா மக்கள் எழுதும் கலையை அறிந்திருந்தனர்.
- ஒவ்வொரு பொறிப்பிலும் சராசரியாக ஐந்துக்கும் குறைவான குறியீடுகளே உள்ளன.
- “ரோசட்டா கல்லில்” (பண்டைய எகிப்தியர்களுடன் தொடர்புடைய மும்மொழி கல்வெட்டு) உள்ளது போல மும்மொழிகள் இல்லை.
- எழுத்துக்கள் வலது பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக எழுதினர்.
- சிந்துவெளி எழுத்துக்களை கணினி மூலம் பகுப்பாய்வு செய்தவர் = ரஷ்ய அறிஞர் யூரி நோரோசோவ்.
- “சிந்துவெளி எழுத்துகள் திராவிட மொழிக் குடும்பம் போன்ற வார்த்தை வரிசைகளை பெற்றுள்ளன” என்று கூறியவர் = ரஷ்ய அறிஞர் யூரி நோரோசோவ்.
- சிந்துவெளி குறித்து விரிவான ஆய்வு செய்த தமிழ் அறிஞர் = ஐராவதம் மகாதேவன்.
- “ஹரப்பா மொழியின் மூல வேர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்திருப்பதை காணலாம்” என்று கூறியவர் = தமிழ் கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன்.
- மயிலாடுதுறையில் கண்டெடுக்கப்பட்ட கற்கோடாரியில் உள்ள குறியீடுகள், சிந்துவெளி குறியீடுகளுடன் ஒத்திருக்கின்றன” என்று கூறியவர் = தமிழ் கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன்.
- மே 2007ல் தமிழ்நாடு தொல்லியல் துறையால் பூம்புகாருக்கு அருகே “மேலபெரும்பள்ளம்” என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட “பானைகளில்” உள்ள அம்பு குறியீடுகள் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினைகளை போன்று உள்ளன.
- “சிந்துவெளி எழுத்துக்களின் குறியீடுகள் திராவிட ஒற்றைக் குறிப்பு வேர்களுடன் ஒத்துப்போகின்றன” என்று கூறியவர் = வரலாற்று அறிஞர் பர்போலா.
- 9TH பண்டைய நாகரிகங்கள்
புத்தக வினாக்கள்
- சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை __________ என்கிறோம்? = சித்திர எழுத்து.
- எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை __________? = மம்மியாக்கம்.
- சுமேரியர்களின் எழுத்துமுறை _____________ ஆகும்? = கியூனிபார்ம்.
- ஹரப்பா மக்கள் _____________ பற்றி அறிந்திருக்கவில்லை? = இரும்பு மற்றும் குதிரை.
- சிந்துவெளி மக்கள் “இழந்த மெழுகு செயல்முறை” முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை ______________ ஆகும்? = நடனமாடும் பெண்.
- i) மெசபடோமியாவின் மிகப் பழமையான நாகரிகம் அக்காடியர்களுடைய நாகரிகம் ஆகும். ii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள். iii) யூப்ரடிஸ், டைக்ரிஸ் ஆகிய ஆறுகள் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன. iv) பாபிலோனிய அரசனான ஹமுராபி பெரும் சட்ட வல்லுநர் ஆவார்.
விடை = (iv) சரி.
- (i) யாங்ட்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது. (ii) வு-டி சீனப்பெருஞ்சுவரை கட்டினார். (iii) சீனர்கள் வெடிமருந்தை கண்டுபிடித்தனர். (iv) தாவோயிசத்தை நிறுவியவர் மென்சியஸ் என்று சீன மரபு கூறுகிறது.
விடை = (iii) மட்டும் சரி.
- பின்வருவனவற்றுள் மெசபடோமியாவை சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை? = இ) சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள் – அஸிரியர்கள்.
- ___________ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்? = ஸ்பிங்க்ஸின்
- எகிப்தியர்கள் தொடக்க காலத்தில் பயன்படுத்திய உருவ எழுத்துகள் சார்ந்த முறை _____________ ஆகும்? = ஹைரோகிளிபிக்ஸ்
- _______________ என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களை விளக்கிக்கூறும் பண்டைய பாபிலோனியாவின் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்? = ஹமுராபி சட்டத் தொகுப்பு.
- சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர் ___________ ஆவார்? = லாவோ ட் சு.
- ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள ___________ உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன? = சுடுமண்ணால் செய்யப்பட்ட.
- 9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
- 9TH பண்டைய நாகரிகங்கள்