9TH புரட்சிகளின் காலம்
9TH புரட்சிகளின் காலம்
- பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெற்ற மூன்று மாபெரும் புரட்சிகள் = அமெரிக்கப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி, தொழிற் புரட்சி.
- முதலில் நடைபெற்ற அரசியல் புரட்சி = அமெரிக்கப் புரட்சி.
- “சுதந்திரப் பிரகடனத்தை” (Declaration of Independence) எழுதியவர் = தாமஸ் ஜெபர்சன்.
அமெரிக்க விடுதலைப் போர்
- “ஆங்கிலேய முடியாட்சியில் இருந்து தனித்துச் செல்லும் விருப்பமோ ஆர்வமோ அமெரிக்கர்களுக்கு இல்லை” (Americans had ‘neither wish nor interest to separate from English monarchy’) என்று கூறியவர் = தாமஸ் ஜெபர்சன்.
- புதிய நிலப்பரப்புகளை கண்டறிய கடலாய்வுகளை மேற்கொண்டதில் முன்னோடிகளாக இருந்த நாடுகள் = போர்த்துகீசியம் மற்றும் ஸ்பானிஷ்.
- அமெரிக்காவில் இங்கிலாந்து நிறுவிய முதல் குடியேற்றம் = ஜேம்ஸ்டவுன்.
- பியூரிட்டானியர் என்பதன் பொருள் = தூய நெறியாளர்.
- அமெரிக்காவில் பென்சில்வேனியா எனும் குடியேற்றத்தை நிறுவியவர்கள் = ஆங்கிலேயர்கள்.
- இங்கிலாந்தில் “நண்பர்கள் குழாம்” எனும் அமைப்பை நிறுவியவர் = ஜார்ஜ் பாக்ஸ்.
- அமெரிக்காவில் “நியு ஆம்ஸ்டர்டாம்” எனும் குடியேற்றத்தை நிறுவியவர்கள் = டச்சுக்காரர்கள்.
- பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் இருந்த ஆங்கிலேய குடியேற்றங்களின் எண்ணிக்கை = 13 குடியேற்றம்.
அமெரிக்காவில் இங்கிலாந்தின் ஆதிக்கம்
- “ஏழாண்டுப் போர்” எந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றது = பிரான்ஸ், இங்கிலாந்து.
- ஏழாண்டுப் போரில் வெற்றி பெற்ற நாடு = இங்கிலாந்து.
- ஏழாண்டுப் போரில் முடிவில் இங்கிலாந்து எந்த நாட்டை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது = கனடா.
- அமெரிக்க சர்க்கரைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு = 1764.
- “பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை” (No Taxation without representation) என்ற முழக்கம் உருவாக காரணம் = அமெரிக்க சர்க்கரைச் சட்டத்தின் முகவுரை.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
டவுன்ஷெண்ட் சட்டங்கள்
- அமெரிக்காவில் “டவுன்ஷெண்ட் சட்டங்களை” அறிமுகம் செய்தவர் = இங்கிலாந்து நிதியமைச்சர் சார்லஸ் டவுன்ஷெண்ட்.
- டவுன்ஷெண்ட் சட்டம் அறிமுகம் செய்யப்பட ஆண்டு = 1767.
- டவுன்ஷெண்ட் சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் பெண்கள் உருவாக்கிய அமைப்பு = “விடுதலையின் புதல்விகள்” (Daughters of Liberty).
பாஸ்டன் படுகொலை நிகழ்வு
- டவுன்ஷெண்ட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க மக்கள் “பாஸ்டன்” நகரில், ஆங்கிலேய ராணுவ வீரர்களின் மீது பனிக்கட்டி உருண்டைகளை வீசினர்.
- இதற்கு ஆங்கிலேய ராணுவம் மக்கள் மீது துப்பாக்கி சூட்டினை நிகழ்த்தியது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.
- இந்நிகழ்வே “பாஸ்டன் படுகொலை” (Boston Massacre) நிகழ்வு எனப்படுகிறது.
பாஸ்டன் தேநீர் விருந்து
- 1773 ஆம் ஆண்டு டிசம்பரில், இங்கிலாந்தில் இருந்து தேயிலையை கொண்டு வந்த ஆங்கிலேய கப்பல்களை வழிமறித்து, அதிலிருந்த தேயிலையை கடலில் கொட்டினர்.
- இந்நிகழ்வு “பாஸ்டன் தேநீர் நிகழ்வு” (Boston Tea Party) என அழைக்கப்படுகிறது.
அமெரிக்க விடுதலைப் போர்
- அமெரிக்க விடுதலைப் போர் நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1776.
- அமெரிக்க விடுதலைப் போரில், அமெரிக்க மக்களுக்காக தலைமை தாங்கியவர் = ஜார்ஜ் வாஷிங்க்டன்.
- அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றவர் = ஜார்ஜ் வாஷிங்க்டன்.
- அமெரிக்க விடுதலைப் போரின் புகழ்பெற்ற போர் முழக்கம் = “பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை” (No Taxation without representation).
முதலாவது கண்டங்களின் மாநாடு, 5 செப்டம்பர் 1774
- முதலாவது கண்டங்களின் மாநாடு நடைப்பெற்ற இடம் = பிலடெல்பியா.
- முதலாவது கண்டங்களின் மாநாடு நடைபெற்ற நாள் = 5 செப்டம்பர் 1774.
- முதலாவது கண்டங்களின் மாநாடு நடைபெற்ற பொழுது, அமெரிக்காவில் இருந்து ஆங்கிலேய ஆளுநர் = ஜெனரல் கேஜ்.
இரண்டாவது கண்டங்களின் மாநாடு, 10 மே 1775
- இரண்டாவது கண்டங்களின் மாநாடு நடைபெற்ற இடம் = பிலடெல்பியா.
- இரண்டாவது கண்டங்களின் மாநாடு நடைபெற்ற நாள் = 10 மே 1775..
- எந்த மாநாட்டில் “கண்டங்களின் இராணுவம்” (Continental Army) என்ற ராணுவ பிரிவு உருவாக்கப்பட்டது = இரண்டாவது கண்டங்களின் மாநாடு.
- “கண்டங்களின் இராணுவம்” எனும் படைப்பிரிவிற்கு யாரை தலைமைத் தளபதியாக நியமித்தனர் = ஜார்ஜ் வாஷிங்டன்.
- இரண்டாவது கண்டங்களின் மாநாட்டின் தீர்மானத்தின் படி, அஞ்சல் துறையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் = பெஞ்சமின் பிராங்க்ளின்.
பங்கர் குன்றுப் போர்
- அமெரிக்காவில் நடைப்பெற்ற முதல் பெரியப் போர் = பங்கர் குன்றுப் போர்.
- பங்கர் குன்றுப் போர் நடைபெற்ற ஆண்டு = 17 ஜூன் 1775.
- இப்போருக்கு பிறகு அமெரிக்க ராணுவத்தின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றவர் = ஜார்ஜ் வாஷிங்க்டன்.
அமெரிக்க சுதந்திரப் பிரகடனம்
- “இயல்பறிவு” (Common Sense) எனும் நூலின் ஆசிரியர் = தாமஸ் பெயின்.
- “இயல்பறிவு மக்களின் மனங்களில் வலுவான மாற்றத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது” (Common Sense is working a powerful change in the minds of men) என்று கூறியவர் = ஜார்ஜ் வாஷிங்க்டன்.
- அமெரிக்க சுதந்திரத்திற்கான தீர்மானத்தை முதன் முதலில் கொண்டு வந்தவர் = ரிச்சர்ட் ஹென்றி லீ.
- “அமெரிக்க சுதந்திரப் பிரகடனம்” (Declaration of Independence) எனும் நூலை எழுதியவர் = தாமஸ் ஜெபர்சன்.
- “அமெரிக்க சுதந்திரப் பிரகடனம்” (Declaration of Independence) ஏற்றுக்கொல்லப்பட்ட நாள் = 4 ஜூலை 1776.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்க பூர்வகுடிகள் இடையே போர்
- கிறிஸ்துமஸ் இரவன்று எங்கு ஜார்ஜ் வாஷிங்க்டன் தலைமையிலான அமெரிக்க படைகள், ஆங்கிலேயர்களை தாக்கியது = டிரன்டன்.
- எங்கு நடைபெற்ற போரில் இங்கிலாந்து படைகளை, அமெரிக்க ராணுவம் தோற்கடித்தது = பிரின்ஸ்டன்.
- பிலடெல்பியாவிற்கு அருகே உள்ள நகரை அமெரிக்கர்கள் கைப்பற்றுவதை தடுத்து நிறுத்திய ஆங்கிலேய படைத்தளபதி = காரன்வாலிஸ்.
- எங்கு நடைபெற்ற போரில் இங்கிலாந்து படைகளை, அமெரிக்க ராணுவம் மீண்டும் தோற்கடித்தது = சாரடோகா.
- அமெரிக்காவுடன் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்த படை = பிரான்ஸ் படைகள்.
- எங்கு நடைபெற்ற போரில், காரன்வாலிஸ் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தார் = யார்க்டவுன்.
- காரன்வாலிஸ் சரணடைந்த தினம் = 19 அக்டோபர் 1783.
பாரிஸ் உடன்படிக்கை
- அமெரிக்க போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை = பாரிஸ் உடன்படிக்கை.
- எந்த உடன்படிக்கையின் படி, இங்கிலாந்து அமெரிக்காவிற்கு சுதந்திரம் வழங்கியது = பாரிஸ் உடன்படிக்கை.
- காலனி ஆதிக்கசக்திகளிடம் இருந்து விடுதலை பெற்ற முதல் நாடு = அமெரிக்கா.
- “வெர்ஜீனியா மதச் சுதந்திரச் சட்டம்” (Virginia Statute for Religious Freedom) எனும் நூலின் ஆசிரியர் = தாமஸ் ஜெபர்சன்.
- “மதச் சுதந்திரம்” (freedom of religion) எனும் கருத்தை அறிமுகம் செய்தவர் = தாமஸ் ஜெபர்சன்.
- இங்கிலாந்திற்கு எதிராக தொடக்கம் முதல் இறுதி வரை அமெரிக்காவிற்கு துணையாக நின்று போரிட்ட பிரெஞ்சு ராணுவ அதிகாரி = லஃபாயட்.
- பிரெஞ்சுப் புரட்சியின் பொழுது, ‘பிரெஞ்சு தேசியப் பாதுகாவலர்கள்” படைக்கு தலைமை தாங்கியவர் = லஃபாயட்..
- “மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள பற்றிய பிரகடனம்” (Declaration of the Rights of Man and the Citizen) எனும் நூலின் ஆசிரியர் = லஃபாயட்.
காரன்வாலிஸ்
- அமெரிக்க விடுதலைப் போரின் போது, இங்கிலாந்து படைக்கு தலிமை தாங்கியவர் = காரன்வாலிஸ்.
- எங்கு நடைபெற்ற போரில், காரன்வாலிஸ் தனது படைகளுடன் சரண் அடைந்தார் = யார்க்டவுன் போர்.
- காரன்வாலிஸிற்கு “நைட்” (Knight) பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு = 1786.
- எந்த ஆண்டு இந்தியாவில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னராக ஜெனரலாக காரன்வாலிஸ் நியமனம் செய்யப்பட்டவர் = 1786.
பிரெஞ்சுப் புரட்சி
- பிரெஞ்சுப் புரட்சி வெடித்த ஆண்டு = 1789.
- பிரெஞ்சுப் புரட்சியின் பொழுது மன்னராக இருந்தவர் = பதினாறாம் லூயி.
- பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றம் = எஸ்டேட்ஸ் ஜெனரல்.
- பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றமான “எஸ்டேட்ஸ் ஜெனெரல்” எத்தனை வர்க்கங்களை கொண்டது = மூன்று.
பிரெஞ்சுப் புரட்சி வெடித்ததற்கான காரணங்கள்
- பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயி மற்றும் அவரின் மனைவி “தெய்வீக அரசுரிமை கோட்பாட்டில்” நம்பிக்கை கொண்டிருந்தனர். மக்கள் இவர்களை வெறுத்தனர்.
- பிரெஞ்சு புரட்சி வெடிக்கும் பொழுது, பிரான்சின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது.
- இங்கிலாந்துடன் ஏழாண்டு போரில் தோல்வியடைந்ததால் மேலும் பொருளதாரம் மோசமானது.
- வறட்சியின் காரணமாக விவசாயம் மோசமான நிலையில் இருந்தது.
- 1777 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, பிரான்சில் பதினொரு லட்சம் பிச்சைக்காரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
- மதகுருமார்கள் விவசாயிகளிடம் இருந்து “டித்” (விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு) எனும் பெயரில் வரி வசூல் செய்தனர்.
- விவசாயிகள் அரசுக்கு செலுத்திய வரிகள் = டெய்லே, காபெல்லே.
- டெய்லே என்பது = நிலவரி.
- காபெல்லே என்பது = உப்பு வரி.
- “கார்வி” என்றால் என்ன = சாலைகள் அமைத்தல் போன்ற அரசின் பொது பணிகளுக்கு ஊதியம் இன்றி இலவசமாக உழைத்தல்.
பிரெஞ்சு தத்துவஞானிகள்
- பிரான்சில் இருந்த மோசமான நிலைமைகளை விமர்சித்தவர்களில் முக்கியமானோர் = வால்டேர், ரூசோ, மாண்டெஸ்கியூ.
- பிரான்சின் புகழ்பெற்ற பகுத்தறிவு மற்றும் அறிவியல் எழுத்தாளர் = வால்டேர்.
- வால்டேர் எங்கு நாடுகடத்தப்பட்டார் = ஜெனிவா.
- “கான்டீட்” (Candide) எனும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர் = வால்டேர்.
- “முட்டாள்தனமானவற்றை உன்னை நம்பச் செய்ய முடிந்தவர்களால் உன்னை அக்கிரமங்களை செய்ய வைக்கவும் முடியும்” (those who can make you believe absurdities can make you commit atrocities) என்று கூறியவர் = வால்டேர்.
- “நான் நீ சொன்னதை ஏற்க மறுக்கிறேன். ஆனால் அதைச் சொல்வதற்கான உன் உரிமையை என் உயிரைக் கொடுத்தும் காப்பேன்” (I disapprove of what you say, but I will defend to the death your right to say it) என்று கூறியவர் = வால்டேர்.
- யாருடைய சிந்தனைகள் பிரெஞ்சுப் புரட்சிக்கு மக்களை தயார் செய்வதில் முக்கிய பங்கு வகித்தது = ரூசோ.
- “சமூக ஒப்பந்தம்” (Social Contract) எனும் நூலின் ஆசிரியர் = ரூசோ.
- “மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் எங்கும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான்” (Man is born free, but is everywhere in chains) என்று கூறியவர் = ரூசோ.
- “மக்களின் பொது விருப்பத்தால் சட்டங்கள் ஆதரிக்கப்படும் போது தான் அவை மக்களை கட்டுப்படுத்தும்” (the laws are binding only when they are supported by the general will of the people) என்று கூறியவர் = ரூசோ.
- “பாரசீக மடல்கள்” (The Persian Letters) எனும் நூலின் ஆசிரியர் = மாண்டெஸ்கியூ.
- “சட்டத்தின் சாரம்” (The Spirit of the Laws) எனும் நூலின் ஆசிரியர் = மாண்டெஸ்கியூ.
- “அதிகாரப் பிரிவினை” (theory of separation of Powers) எனும் கோட்பாட்டை அறிமுகம் செய்தவர் = மாண்டெஸ்கியூ.
- மாண்டெஸ்கியூ கூறும் அரசின் மூன்று உறுப்புகள் = சட்டம் இயற்றுதல், சட்டத்தினை செயல்படுத்துதல் மற்றும் நீதித்துறை அதிகாரங்களை சரியாகப் பிரித்தல்.
பிரெஞ்சுப் புரட்சியின் போக்கு
- 1789 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் நாள் பாரிஸ் நகரில் உள்ள “பாஸ்டில்” சிறையை பொதுமக்கள் தகர்த்து, அதில் இருந்த கைதிகளை விடுதலை செய்தனர்.
- இதன் நினைவாக இன்று வரை ஜூலை 14 ஆம் நாள் பிரெஞ்சு நாட்டில் “தேசிய தினமாக” கொண்டாடப்படு வருகிறது.
- பிரான்சின் தேசிய சட்டமன்றத்தின் தலைவர் = மிரபு.
- “மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் பிரகடனத்தை” (Declaration of the Rights of the Man and the Citizen) உருவாக்கியவர்கள் = லஃபாயட், தாமஸ் ஜெபர்சன் மற்றும் மிரபு.
- பதினாறாம் லூயி, போராட்டத்திற்கு பயந்து குடும்பத்துடன் எங்கு தப்பிச் சென்றார் = வெர்னே.
- எப்பொழுது பிரான்சின் தேசிய சட்டமன்றம் முதல் அரசியலமைப்பை உருவாக்கியது = செப்டம்பர் 1791.
- தேசிய சட்டமன்றம் உருவாக்கிய அரசியலமைப்பை பொது மக்கள் எதிர்த்தனர்.
- மக்களால் கொண்டு வரப்பட்ட அமைப்பு = பாரிஸ் கம்யூன்.
செப்டம்பர் படுகொலை
- பிரான்ஸ் அரசரின் பாதுகாவலர்களான சுவிட்சர்லாந்து நாட்டு வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
- “மாரட்” என்பவர் தலைமையில் பொதுமக்கள் அரசரின் ஆதரவாளர்களை கொன்று குவித்தனர்.
- இந்நிகழ்வே “செப்டம்பர் படுகொலை” எனப்படுகிறது.
- எந்தப் போரில் ஆஸ்திரிய மற்றும் பிரஷ்யப் படைகளை பிரெஞ்சு ராணுவம் தோற்கடித்தது = வால்மி போர்.
தேசியப் பேரவை
- தேசியப் பேரவை கூடி பிரான்ஸ் நாட்டை குடியரசு நாடாக அறிவித்தது.
- அரசர் பதினாறாம் லூயி, கில்லட்டின் எனும் கருவி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டார்.
- பிரான்சில் “பயங்கரவாத ஆட்சி” எத்தனை நாட்கள் நடைபெற்றது = நாற்பத்தி ஆறு நாட்கள்.
- பயங்கரவாத ஆட்சியை நடத்தியவர் = ரோபஸ்பியர்.
பிரெஞ்சு புரட்சியின் காலவரிசை
- மே 5, 1789 = ஸ்டேட்ஸ் ஜெனரல் கூடிய நாள்
- ஜூன் 17, 1789 = மூன்றாம் பிரிவினர் தேசியச் சட்டமன்றமாதல்
- ஜூன் 20, 1789 = டென்னிஸ் மைதான உறுதிமொழி
- ஜூலை 9, 1789 = தேசியச் சட்டமன்றம், சட்டமன்றமாக மாறுதல்
- ஜூலை 14, 1789 = பாஸ்டில் சிறைத் தகர்ப்பு
- ஆகஸ்டு 27,1789 = மனிதன், குடிமகன் உரிமைகள் பிரகடனம்
- அக்டோபர் 5 & 6, 1789 = வெர்சே அணிவகுப்பு
- ஜூன் 20 &21, 1790 = வெர்னேக்கு அரசர் தப்பியோடல்
- செப்டம்பர் 21, 1792 = தேசியப் பேரவை கூடியது
- செப்டம்பர் 2 முதல் 7 வரை, 1792 = செப்டம்பர் படுகொலை
- ஜனவரி 21, 1793 = பதினாறாம் லூயி கொல்லப்பட்ட நாள்
- ஜூலை 27,1794 = ரோபஸ்பியர் கொல்லப்பட்ட நாள்
புத்தக வினாக்கள்
- அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி ___________ ஆகும்? = ஜேம்ஸ்டவுன்.
- பிரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர் ____________ ?= லஃபாயெட்.
- லஃபாயட், தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோர் __________ எழுதினர்? = மனிதன் மற்றும் குடிமகன் உரிமைகள் பற்றிய பிரகடனம்.
- _______________ இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது? = சாரடோகா.
- பிரான்சில் அரச சர்வாதிகாரத்தின் சின்னமாக _____________ இருந்தது? = வெர்செயில்ஸ்.
- ஆஸ்திரியா மற்றும் பிரஷ்யாவின் படைகள், பிரெஞ்சுப் புரட்சியாளர் படைகளால் ____________ போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டன? = வால்மி.
- ‘கான்டீட்’ என்ற நூல் ____________ ஆல் எழுதப்பட்டது? = வால்டேர்.
- பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் _____________ ? = ஜெரோண்டியர்.
- ______________ ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கையின்படி அமெரிக்க சுதந்திரப் அமைதி போர் முடிவுக்கு வந்தது? =
- தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் ___________ ஆகும்? = இயல்பறிவு.
- இரண்டாம் கண்டங்கள் மாநாட்டால் அஞ்சல்துறை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் __________ ? = பெஞ்சமின் பிராங்க்ளின்.
- பங்கர் குன்றுப் போர் நடைபெற்ற ஆண்டு ________ ? =
- ___________ சட்டம் கடனைத் தங்கமாகவும் வெள்ளியாகவும் திரும்பச் செலுத்த வற்புறுத்தியது? = செலவாணிச் சட்டம்.
- பிரான்சின் தேசியச் சட்டமன்றத்தின் தலைவர் ___________ ஆவார்? = மிரபு.
- சுதந்திரத்திற்கும் பகுத்தறிவிற்கும் பெரும்விழா நடத்தியதால் ______________ கில்லட்டினால் கொல்லப்பட்டார்? = ஹெர்பர்ட்.
- பதினாறாம் லூயி பிரான்சை விட்டு தப்பியோட முயன்றபோது ___________ நகரில் அவர் தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்? = வெர்னே.
- 9TH நவீன யுகத்தின் தொடக்கம்
- 9TH இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
- 9TH HISTORY இடைக்காலம்
- 9TH செவ்வியல் உலகம்
- 9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
- 9TH புரட்சிகளின் காலம்
- 9TH புரட்சிகளின் காலம்
- 9TH புரட்சிகளின் காலம்
- 9TH புரட்சிகளின் காலம்