9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
- புத்தரும் மகாவீரரும் தோன்றிய காலம் = கி.மு. ஆறாம் நூற்றாண்டு.
- கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் ஜொராஸ்ட்டிரியனிசமும், சீனாவில் கன்பூசியனிசமும், தாவோயிசமும் தோன்றின.
- புதிய மதங்கள் தோன்றிய காலம் = புதிய இரும்புக் காலம்.
கன்பூசியஸ்
- கி.மு. 551ல் சீனாவில் தோன்றியவர்.
- கன்பூசியஸ் எழுதிய ஐந்து முக்கிய நூல்கள் = ஆவண நூல், இசைப்பாடல் நூல், மாற்றம் குறித்த நூல், இளவேனிலும் இலையுதிர் காலமும் மற்றும் வரலாற்று நூல்.
- கன்பூசிய மதத்தின் ஐந்து முக்கிய கொள்கைகள் = மனிதத்தன்மை, நேர்மை, நன்னடத்தை, மெய்யறிவு, நம்பகத்தன்மை.
- மெய்யறிவு எங்கிருந்து தான் வளரும் என்கிறார் கன்பூசியஸ் = குடும்பத்தில் இருந்து.
- “உத்தரவு தவறென்றால், ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், ஒஅர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும்” என்று கூறியவர் = கன்பூசியஸ்.
- “ஒரு அரசிற்கு மூன்று விசயங்கள் அவசியமானவை; நாட்டில் போதுமான உணவு, போதுமான இராணுவத் தளவாடங்கள், மக்களுக்குத் தம் ஆட்சியாளர் மீது நம்பிக்கை ஆகியன இருக்க வேண்டும்” என்று கூறியவர் = கன்பூசியஸ்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தாவோயிசம்
- தாவோயிசம் மதத்தை உருவாக்கியவர் = லாவோட்சே.
- லாவோட்சே, கன்பூசியசை விட எத்தனை வயது பெரியவர் = 53 ஆண்டுகள்.
- லாவோட்சே எழுதிய நூல் = தாவோ டே ஞிங்.
ஜொராஸ்ட்ரியனிசம்
- ஜொராஸ்ட்ரியனிசத்தைத் தோற்றுவித்தவர் பாரசீகத்தைச் சேர்ந்த ஜொராஸ்டர்.
- ஜொராஸ்ட்ரியனிசம் கூறும் ஒரே கடவுள் = ஒளிக் கடவுள் “அஹுர மஸ்தா”.
- ஜொராஸ்ட்ரியர்களின் புனித நூல் = ஜென்ட் அவெஸ்தா.
- வேதங்களில் சொல்லப்படும் தத்துவங்கள், சடங்குகளை ஒத்து காணப்படும் நூல் = ஜென்ட் அவெஸ்தா.
- அஹுர மஸ்தாவிடம் 1. ஒளி, நல்ல மனம், 3. நன்மை, 4. அரசாட்சி, 5. பக்தி, 6. ஆரோக்கியம், 7. இறவாத் தன்மை ஆகிய தன்மைகள் உள்ளன என்றார்.
மகாவீரர் வாழ்க்கை வரலாறு
- மகாவீரர் பிறந்த இடம் = வைஷாலிக்கு அருகே உள்ள குந்தகிராமத்தில் பிறந்தார்.
- மகாவீரரின் தாய் = திரிசலை (லிச்சாவி இனத்தை சேர்ந்தவர்).
- மகாவீரரின் மனைவி = யசோதா.
- மகாவீரர் எந்த வயதில் வீட்டை விட்டு வெளியேறி துறவியானார் = 30 வது வயதில்.
- மகாவீரர் எத்தனை ஆண்டுகள் தவம் செய்தார் = 12 ஆண்டுகள்.
- மகாவீரர் எவ்வாறு அழைக்கப்பட்டார் = ஜீனர் (உலகை வென்றவர்).
- சமணர்களின் முதல் தீர்த்தங்கரர் = ரிஷபர்.
- சமணர்களின் 23வது தீர்த்தங்கரர் = பார்சவநாதர்.
- சமணர்களின் கடைசி மற்றும் 24வது தீர்த்தங்கரர் = மகாவீரர்.
- சமண சமயத்தை பின்பற்றிய மகத மன்னர்கள் = சந்திரகுப்த மௌரியர், பிம்பிசாரர், அஜாதசத்ரு.
- மகாவீரர் எத்தனை ஆண்டுகள் போதனை செய்தார் = 30 ஆண்டுகள்.
- மகாவீரர் எத்தனையாவது வயதில் காலமானார் = 72வது வயதில்.
- மகாவீரர் பிறந்த ஆண்டு = கி.மு. (பொ.ஆ.மு). 599.
- மகாவீரர் மறைந்த ஆண்டு = கி.மு. (பொ.ஆ.மு). 527.
- மகாவீரர் மறைந்த இடம் = ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரி.
- 9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
மகாவீரரின் போதனைகள்
- சமண மதத்தின் முக்கிய கொள்கைகள் = மூன்று.
- சமண மதத்தின் மூன்று கொள்கைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன = மும்மணிகள் (மூன்று இரத்தினங்கள் / திரிரத்னா).
- சமண மதத்தின் மூன்று கொள்கைகள் = நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை.
- சமண மதத்தில் “நன்னடத்தை” கொள்கையில் எத்தனை சூளுரைகள் கூறப்பட்டுள்ளன = ஐந்து.
சமண மதம் பரவல்
- சமண சமயத்தை பின்பற்றிய அரசர்கள் = தனநந்தர், சந்திரகுப்த மௌரியர், காரவேலன்.
- தென்னிந்தியாவில் சமண மதம் பரவிய இடம் = கர்நாடகா.
- உயிரற்ற பொருள்களுக்கும் ஆன்மாவும், உணர்வும் உண்டு எனக் கூறியவர் = மகாவீரர்.
- கோமதீஸ்வரர் சிலை உள்ள இடம் = கர்நாடக மாநிலம் சிரவண-பெலகொலா.
- கோமதீஸ்வரர் சிலையின் உயரம் = 57 அடி.
- இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான சமணச் சிலை = கர்நாடக மாநிலம் சிரவண-பெலகொலாவில் உள்ள “பாகுபலி” (கோமதீஸ்வரர்) சிலை.
- சமண சமயத்தை பின்பற்றிய பல்லவ மன்னன் = மகேந்திர வர்மன்.
- பல்லவ மன்னனான மகேந்திரவர்மனை சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் = அப்பர் (திருநாவுக்கரசர்).
- காஞ்சிபுரத்தில் உள்ள முக்கியமான சமணக் கோவில் = திருபருத்திக்குன்றம் சமணக் கோவில்.
- எந்த கோவிலின் கூரையில் மகாவீரரின் வாழ்க்கை, கதை ஓவியமாக வரையப்பட்டுள்ளது = காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பருத்திக்குன்றம் சமணக் கோவிலில்.
- 9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
சமணப் பிரிவுகள்
- திகம்பரர் = திசையை ஆடையாக உடுத்தியவர்கள்
- சுவேதாம்பரர் = வெண்ணிற ஆடை உடுத்தியவர்கள்
கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு
- புத்தர் பிறந்த இடம் = இன்றைய நேபாளத்தின் கபிலவஸ்து அருகே உள்ள லும்பினி வனம் என்னுமிடத்தில் பிறந்தார்.
- கௌதம புத்தரின் தந்தை = சுத்தோதனார் (சாக்கிய சத்ரிய இனக்குழுவை சேர்ந்தவர்).
- கௌதம புத்தரின் தாயார் = மாயாதேவி (மகாமாயா).
- கௌதம புத்தரின் இயற்பெயர் = சித்தார்த்தர்.
- கௌதம புத்தரின் மனைவி = யசோதரா.
- கௌதம புத்தரின் மகன் = ராகுலன்.
- “சாக்கிய முனி” என்று அழைக்கப்பட்டவர் = கௌதம புத்தர்.
- கௌதம புத்தர் பிறந்த ஆண்டு = கி.மு 567.
- எந்த ஆண்டு கௌதம புத்தர் அரண்மனையை துறந்து துறவறம் மேற்கொண்டார் = கி.மு. 537.
- எந்த வயதில் கௌதம புத்தர் துறவறம் மேற்கொண்டார் = முப்பதாவது வயதில்.
- கௌதம புத்தர் மெய்யறிவு பெற்ற இடம் = இன்றைய பீகாரில் உள்ள புத்த கயா.
- “புத்த கயா” தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது = மஹாபோதி கோவில்.
- பட்டதற் ஞானம் பெற்ற பிறகு சென்ற முதல் இடம் = சாரநாத்.
- புத்தர் தனது போதனையை நிகழ்த்திய இடம் = சாரநாத்.
- புத்தர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் போதனை செய்தார் = 45 ஆண்டுகள்.
- புத்தர் தனது எத்தனையாவது வயதில் காலமானார் = 80வது வயதில்.
- கௌதம புத்தர் மறைந்த இடம் = குஷிநகர் (உத்திரப்பிரதேசம்).
- புத்தர் மறைந்த ஆண்டு = கி.மு 487.
- புத்தரின் நெருங்கிய சீடர் = ஆனந்தன்.
- புத்த மதத்தில் பெண்களும் துறவறம் மேற்கொள்ள முடியும்.
- 9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
புத்த மத போதனைகள்
- நான்கு பெரும் உண்மைகள்
- நிர்வாண நிலையை அடைதல்
- எண்வழிப் பாதை = நன்னம்பிக்கை, நல்ல ஆர்வம், நற்பேச்சு, நற்செயல், நல்வாழ்க்கை முறை, நன்முயற்சி, நற்சிந்தனை, நல்ல தியானம்.
புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய அடையாளங்கள்
- புத்தரின் பிறப்பு = தாமரை.
- புத்தர் வீட்டை விட்டு வெளியேறுதல் = குதிரை.
- புத்தர் ஞானம் பெற்றது = போதி மரம்.
- புத்தரின் முதல் சொற்பொழிவு = சக்கரம்.
- புத்தரின் இறப்பு (முக்தி அடைதல்) = ஸ்தூபி.
பௌத்த மதத்தில் பிளவு
- யாருடைய ஆட்சிக்காலத்தில் புத்த மதத்தில் பிளவு ஏற்பட்டது = கனிஷ்கர் ஆட்சிக்காலத்தில்.
- எந்த பௌத்த துறவி, புத்த மதத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்தார் = நாகர்ஜூனா.
- பௌத்த மதம் எத்தனை பிரிவுகளாக பிரிந்தது = இரண்டு (ஹீனயானம், மஹாயானம்).
- பௌத்த மதம் இரண்டு பிரிவுகளாக பிரிய காரணமாக இருந்த பௌத்த துறவி = நாகர்ஜூனர்.
ஹீனயானம்
- ஹீனயானம் என்றால் = சிறிய பாதை.
- புத்தர் போதித்த அசல் வடிவம் = ஹீனயானம்.
- புத்தரை குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் = ஹீனயானப் பிரிவினர்.
- புத்தரை கடவுளாக ஏற்காதவர்கள் = ஹீனயானப் பிரிவினர்.
- உருவ வழிபாட்டை ஏற்காதவர்கள் = ஹீனயானப் பிரிவினர்.
- பாலி மொழியை பயன்படுத்தியவர்கள் = ஹீனயானப் பிரிவினர்.
மஹாயானம்
- மஹாயானம் என்றால் = பெரிய பாதை.
- புத்தரை கடவுளாக வழிபட்டவர்கள் = மஹாயானப் பிரிவினர்.
- புத்தரின் முந்தைய அவதாரமாக கருதப்பட்டவர் = போதிசத்துவர்.
- மஹா யானப் பிரிவினர் யாரை வழிப்பட்டனர் = புத்தர், போதிசத்துவர்.
- உருவ (சிலை) வழிபாட்டை ஏற்றவர்கள் = மஹாயானப் பிரிவினர்.
- சமஸ்கிருத மொழியை பின்பற்றியவர்கள் = மஹாயானப் பிரிவினர்.
- மஹாயான பிரிவை ஆதரித்த மன்னர் = கனிஷ்கர்.
- 9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
ஆசீவகம்
- ஆசீவகம் மதத்தை தோற்றுவித்தவர் = மக்கலி கோசலர் (மஸ்கரிபுத்திர கோசலர்).
- மகாவீரரின் நண்பர் = மக்கலி கோசலர் (மஸ்கரிபுத்திர கோசலர்).
- கர்மா (வினைப்பயன்) கோட்பாட்டை நிராகரித்தது = ஆசீவகம்.
- யாருடைய ஆட்சிக் காலத்தின் பொழுது தமிழகத்தில் ஆசீவகர்கள் மீது “சிறப்பு வரி” விதிக்கப்பட்டது = சோழர்கள் காலத்தில்.
தாஸ கர்மகாரர்கள் என்றால் என்ன
- கி.மு ஆறாம் நூற்றாண்டில் கண-சங்கங்களின் ஆட்சிக் காலத்தில் இருந்த அடிமைகளையும், தொழிலாளர்களையும் “தாஸ கர்மகாரர்கள்” என்று அழைத்தனர்.
16 மகாஜனபதங்கள் யாவை
- 16 மகாஜனபதங்கள் யாவை = காசி, கோசலம், அங்கம், மகதம், வஜ்ஜி, மல்லா, சேதி, வட்சா, குரு, பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம், ஆசாகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம்.
முடியாட்சி அதிகாரத்தின் வளர்ச்சி
- ரிக் வேத காலத்தில் இருந்த சபைகள் = சமிதி, சபா.
- அரசருக்கு போர், நிதி, அமைதி போன்றவற்றிற்கு உதவி செய்தவை = சமிதி.
- “அரசர் தவறு இழைக்காதவர்; அணைத்து விதமான தண்டனைகளில் இருந்தும் விலக்குப் பெற்றவர்” எனக் கூறிய பிராமணம் = சதபதப் பிராமணம்.
வேதகாலத்தில் அரசருக்கு ஆட்சியில் உதவி புரிந்தவர்கள்
- பகதுகர் = வரிவசூல் அதிகாரி
- சூதா = தேரோட்டி
- அக்ஷரபா = சூதாட்டக் கண்காணிப்பாளர்
- ஷத்திரி = அரண்மனை காரியஸ்தர்
- கோரிகர்த்தனா = வேட்டைத் துணைவர்
- பலகோலா = அரசவையினர்
- தக்ஷன் = தச்சர்
- ரதகார = தேர் செய்பவர்
- சேப்லைன் = புரோகிதர்
- சேனானி = தளபதி
- கிராமணி = கிராம அதிகாரி
- பிந்தைய வேதகாலத்தில் கிராமத்தில் அதிக அதிகாரம் படைத்தவராக இருந்தவர் = கிராமணி.
- சில சமயங்களில் அரசருக்கு பதிலாக நீதி வழங்கும் அதிகாரம் பெற்றவர் = அத்யக்காக்கள் (அரசவை அதிகாரிகள்).
- “கிராம்யவாதின்” என்பவர் = கிராமத்தின் நீதிபதி.
- சபா = கிராமத்தில் உள்ள கிராம நீதிமன்றம்.
- சபா = அரசருக்கு ஆள்சொனை வழங்கும் குழு.
- “பரீக்ஷத்” என்பது = அமைச்சரவை குழு.
மகதத்தின் உருவாக்கம்
- அக்காலத்தில் சக்தி வாய்ந்த முடியாட்சிகளுடன் தொடர்ந்து போர் புரிந்த ஒரே குடியாட்சி = வைசாலியை தலைநகராக கொண்டு ஆண்ட “விருஜ்ஜி”.
- அணைத்து அரசுகளையும் வென்று கங்கைச் சமவ்லி பகுதியை கைப்பற்றி பெரிய அரசாக உருவெடுத்தது = மகதம்.
- மகதத்தின் முக்கியமான அரசர் = பிம்பிசாரர்.
- ஈரானில் அசீரியப் பேரரசும், இந்தியாவில் மகதப் பேரரசும் உருவாக காரணமாக இருந்தது = இரும்புக் கலப்பை சார்ந்த விவசாயம்.
- “கேந்ரம்” என்றால் என்ன = மகத ஆட்சியின் கேந்ரம் என்றால் காடுகள் (ஆரண்யம், வனம்) ஆகும்.
- “பலி” என்றால் என்ன = மகத ஆட்சியில் பலி என்பது நிலவரி ஆகும்.
- “ஷட்பாகின்” என்றால் என்ன = மகத ஆட்சியில் “ஷட்பாகின்” என்பது அரசரைக் குறிக்கும். ஷட்பாகின் என்பதன் பொருள் = ஆறில் ஒரு பங்கு உரிமையாளர்.
- பிம்பிசாரரின் மகன் = அஜாதசத்ரு.
- அஜாதசத்ரு அரியணை ஏறிய ஆண்டு = கி.மு 493.
- மகத்தின் தலைநகரம் = இராஜகிருஹம்.
- ஐந்து மலைகளால் சூழப்பட்ட நகரம் = இராஜகிருஹம் நகரம்.
- பாடலிகிராமத்தில் கோட்டையை கட்டியவர் = அஜாதசத்ரு.
- அஜாதசத்ருவிற்கு பிறகு எத்தனை மன்னர்கள் மகதத்தை ஆண்டனர் = ஐந்து மன்னர்கள்.
- மகத மக்கள் கடைசி மகத அரசனின் பிரதிநிதியான “சிசுநாகரை” அரசராக நியமித்தனர்.
- சிசுநாக வம்ச ஆட்சியை தோற்கடித்தவர் = மகாபத்ம நந்தர்.
- நந்த வம்சத்தை தோற்றுவித்தவர் = மகாபத்ம நந்தர்.
- வட இந்தியாவின் முதல் சத்திரியரல்லாத வம்சம் = நந்த வம்சம்.
- 9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
மௌரியப் பேரரசு
- சாணக்கியர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் = கௌடில்யர், விஷ்ணுகுப்தர்.
- மௌரிய வம்சம் உருவான ஆண்டு = கி.மு 321.
- மௌரிய வம்சத்தை தோற்றுவித்தவர் = சந்திரகுப்த மௌரியர்.
- அலெக்சாண்டரின் தளபது = செலுக்கஸ் நிகேடர்.
- செலுக்கஸ் நிகேடரின் தூதவர் = மெகஸ்தனீஸ்.
- மெகஸ்தனீஸ் எழுதிய நூல் = இண்டிகா.
- இந்தியாவின் வடமேற்கில் உள்ள ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், மாக்ரான் ஆகிய பகுதிகளை வென்றவர் = சந்திரகுப்த மௌரியர்.
- சந்திர குப்த மௌரியர் தனது மகன் பிந்துசாரருக்காக பதவி விலகினார்.
- பிந்துசாரரின் மகன் = அசோகர்.
- அசோகர் பதவி ஏற்ற ஆண்டு = கி.மு 268.
- அசோகர் பதவி ஏற்ற எத்தனையாவது ஆண்டில், கலிங்கம் மீது போர் தொடுத்தார் = எட்டாவது.
- அசோகரை புத்த சமயத்திற்கு மாற்றியவர் = உபகுப்தர்.
- “மனிதர்களின் மனதை தம்மத்தால் (தர்மத்தால்) வெற்றி கொள்வதே உண்மையான வெற்றி” என்று கூறியவர் = அசோகர்.
- “தம்மம்” என்ற சொல் எம்மொழியை சார்ந்தது = பாலி மொழிச் சொல்.
- விலங்குகள் பலியிடுவதை தடை செய்தவர் = அசோகர்.
- விலங்குகளுக்காக மருத்துவமனைகளை திறந்தவர் = அசோகர்.
- அசோகரின் மகன் = மகேந்திரன்.
- அசோகரின் மகள் = சங்கமித்திரை.
- அசோகர் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகள் = 38.
அசோகரின் கல்வெட்டுகள்
- அசோகரின் கல்வெட்டுகள் மொத்தம் = 33.
- அசோகரின் முக்கியமான பாறைக் கல்வெட்டுகள் மொத்தம் = 14.
- அசோகரின் தூண் பிரகடனங்கள் மொத்தம் = 7.
- அசோகிரின் கலிங்க கல்வெட்டுகள் மொத்தம் = 2.
மௌரிய ஆட்சி நிர்வாகம்
- மௌரியர் ஆட்சியில் அமைச்சர்களுக்கு செயலாளர்களாக பணிபுரிந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = மகாமாத்ரேயர்கள்.
- “சமஹர்த்தா” என்றால் என்ன = மௌரியர் ஆட்சியில், அரசின் வருவாய்க்கும், செலவினங்களுக்கும் பொறுப்பான அதிகாரி “சமஹர்த்தா” என்று அழைக்கப்பட்டனர்.
- மௌரியப் பேரரசு எத்தனை மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது = நான்கு.
- “ஸ்தானிகா” என்பவர் யார் = மௌரியர் ஆட்சியில், மாவட்ட நிர்வாகத்தை கவனித்துக் கொண்ட அதிகாரி “ஸ்தானிகா” என்று அழைக்கப்பட்டனர்.
- “கோபர்” என்றால் என்ன = மௌரியர் நிர்வாகத்தில் ஐந்து முதல் பத்து கிராமங்களின் நிர்வாகியாக இருந்தவர் “கோபர்” என்று அழைக்கப்பட்டார்.
- “நகரகா” என்றால் என்ன = மௌரியர் ஆட்சியில் நகர நிர்வாகத்தை கவனித்துக் கொண்டவர் “நகரிகா” என்று அழைக்கப்பட்டார்.
- “கிராமணி” என்பவர் = மௌரியர் ஆட்சியில் கிராம மட்டத்தில், எல்லைகளை பாதுகாப்பது, நிலம் சார்ந்த ஆவணங்களை பராமரிப்பது, மக்கள் மற்றும் கால்நடைகளை கணக்கெடுப்பது கிராமணி என்பவரின் வேலையாகும்.
- “காமரூபம்” என்பது = இன்றைய அசாம் பகுதியை குறிக்கிறது.
- யாருடைய ஆட்சிக் காலத்தின் பொழுது நாளந்தா மடாலயம் உருவானது = மகத மன்னர்கள் ஆட்சிக்காலத்தில்.
- 9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
புத்தக வினாக்கள்
- ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய _______________ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்? = புத்தர்.
- மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் ____________? = பிம்பிசாரர்.
- வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ____________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது? = மஹாஜனபதங்கள்.
- மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________? = மகாவீரர்.
- மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர் _____________? = மெகஸ்தனீஸ்
- வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு ______________ ஆகும்? = ஜென்ட் அவஸ்தா.
- கங்கைச் சமவெளியில் ____________ வேளாண்மைக்கு மாடுகளின் தேவை அவசியமானது? = இரும்பு கலப்பை.
- _______________ தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்? = மகாவீரர்.
- புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மஹாபோதி கோயில் இன்றும் _____________ இல் உள்ளது? = பீகார்.
- மௌரியப் பேரரசைப் பற்றியும் குறிப்பாக அசோகரின் தர்மம் சார்ந்த ஆட்சியைப் பற்றியும் அறிந்து கொள்ள ____________ பாறைக் குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன? = 14ஆம்.
- முக்கிய தினங்கள் ஜூலை 2024
- LIST OF IMPORTANT DAYS IN JULY 2024
- 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
- IMPORTANT DAYS IN JUNE
- ஜூன் மாத முக்கிய தினங்கள்
- 9TH பண்டைய நாகரிகங்கள்
- 8 ஆம் வகுப்பு வரலாறு
- 9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
- 9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
- 9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்