9TH ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்
9TH ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்
- “காலனி” எனும் சொல் “கலோனஸ்” என்னும் லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து வந்தது.
- காலனி என்பதன் பொருள் = விவசாயி.
- இம்பீரியம் என்னும் சொல் லத்தீன் மொழிச் சொல்லில் இருந்தது வந்தது.
- இம்பீரியம் என்பதன் பொருள் = ஆதிக்கம் செய்தல்.
தென்கிழக்கு ஆசியா
- தென்கிழக்கு ஆசியா என்பது = மலேயா, சயாம் (தாய்லாந்து), பிரெஞ்சு இந்தோ-சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை குறிக்கும்.
- தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுதந்திர நாடாக இருந்த ஒரே நாடு = சயாம் (தாய்லாந்து).
மலேயா தீபகற்பம்
- போர்த்துகீசியர்கள் மலாக்காவின் மாபெரும் பன்னாட்டு வணிக வளாகத்தை கைப்பற்றினர்.
- இந்தியாவில் கோவாவை கைப்பற்றிய போர்த்துகீசியர் = அல்புகர்க்.
- மலேயா தீபகற்பத்தில் “மலாக்காவை” கைப்பற்றிய போர்த்துகீசியர் = அல்புகர்க்.
- போர்த்துகீசியர்களிடம் இருந்து மலாக்கா பகுதியை கைப்பற்றியவர்கள் = டச்சுக்காரர்கள்.
- டச்சுக்காரர்கள் மலாக்காவை கைப்பற்றிய ஆண்டு = 1641.
- பட்டாவியா என்பது = தற்போதைய ஜகார்த்தா.
- பாண்டம் என்னுமிடத்தில் இருந்து ஆங்கிலேயர்களை வெளியேற்றியவர்கள் = டச்சுக்காரர்கள்.
- டச்சுக்காரர்கள், பாண்டம் என்னுமிடத்தில் இருந்து ஆங்கிலேயர்களை வெளியேற்றிய ஆண்டு = 1682.
- “அம்பாய்னா படுகொலை” நடைபெற்ற ஆண்டு = 1623.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஆங்கிலேய டச்சுக்காரர் போட்டி
- ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் கவனத்திற்கு “பினாங்கு தீவை” கொண்டு வந்தவர் = பிரான்சிஸ் லைட்.
- பினாங்கு தீவில் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய முதல் குடியேற்றம் = ஜார்ஜ் டவுன்.
- சிங்கப்பூரை ஆங்கிலேயரின் முக்கிய வணிக மையமாக உருவாக்கியவர் = ஸ்டாம்போர்ட் ராபில்ஸ்.
- “ஆங்கிலோ – டச்சு உடன்படிக்கை” ஏற்படுத்தப்பட்ட ஆண்டு = 1824.
- சிங்கப்பூரும், மலாக்காவும் எந்த ஆண்டு பினாங்கு தீவுடன் இணைக்கப்பட்டது = 1826.
- “நீரினைப்பகுதி குடியிருப்புகள்” எங்கு உருவாக்கப்பட்டது = பினாங்கு தீவு பகுதியில்.
- ஐக்கிய மலாய் நாடுகள் உருவாக்கப்பட்ட ஆண்டு = 1896.
இந்தோனேசியா
- டச்சுக்காரர்கள் இந்தோனேசியாவை ஆக்கிரமித்த ஆண்டு = 1640.
- இந்தோனேசியாவில் இருந்த ஆங்கிலேயர்களை வெளியேற்றியவர்கள் = டச்சுக்காரர்கள்.
- இந்தோனேசியாவின் எண்ணெய் வளம், டச்சுக்காரர்களை செல்வச் செழிப்பில் உயர்த்தியது.
பர்மா
- ஆங்கிலேயர்கள் எத்தனை போர்களுக்கு பிறகு பர்மாவை கைப்பற்றினர் = மூன்று.
- பர்மா, இந்தியாவின் ஒரு பகுதியாக எந்த ஆண்டுகளில் இருந்தது = 1886 முதல் 1937 வரை.
- பர்மா, எந்த ஆண்டு வரை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது = 1937.
- பர்மாவின் புகழ்பெற்ற பொருள் = தேக்கு.
- பர்மாவின் மிகமுக்கிய ஏற்றுமதி பொருள் = அரிசி.
- இரண்டாம் உலகப்போரின் பொழுது, பர்மாவை கைப்பற்றியவர்கள் = ஜப்பானியர்கள்.
- 9TH ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்
இந்தோ சீனா
- இந்தோ சீனா பகுதிகளை கைப்பற்றியவர்கள் = பிரெஞ்சுக்காரர்கள்.
- இந்தோ சீனா என்பது = ஆனம், டோங்கிங், கம்போடியா, கொச்சின் – சீனா ஆகிய பகுதிகள் ஆகும்.
- இந்தோ-சீனா பகுதிகளை பிரெஞ்சுக்காரர்கள் முழுவதுமாக கைப்பற்றிய ஆண்டு = 1858.
- இந்தோ-சீனா பகுதியில் கடைசியாக சேர்த்துக்கொள்ளப் பகுதி = லாவோஸ்.
- எந்த ஆண்டு லாவோஸ், இந்தோ-சீனா பகுதியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது = 1864.
- இந்தோ-சீனா பகுதியில், பிரெஞ்சு அரசாங்கத்தால் நேரடியாக ஆட்சி செய்யப்பட பகுதி = கொச்சின்-சீனா.
- இந்தோ-சீனா பகுதியில் பிரெஞ்சு அரசின் தலைநகராக இருந்த பகுதி = ஹனாய்.
பிலிப்பைன்ஸ்
- பிலிப்பைன்ஸ் நாட்டை 300 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தவர்கள் = ஸ்பானியர்கள்.
- பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறித்துவ மதத்தை மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணித்தது ஸ்பெயின்.
- கியூபாவிற்கு எதிரான போரில் ஸ்பெயின் நாட்டை அமேரிக்கா 1898 ஆம் ஆண்டு தோற்கடித்தது.
- இதன் மூலம் பிலிப்பைன்ஸ் அமெரிக்க வசம் சென்றது.
சயாம் (தாய்லாந்து)
- தாய்லாந்து மேலைநாடுகளின் அதிகார அரசியலில் பாதிக்கப்பட்டாலும், எந்த அந்நிய நாட்டாலும் ஆளப்படவில்லை.
- தாய்லாந்தில் நிர்வாக சீர்திருத்தம் சுதந்திரமாக நடைபெற்ற நகரம் = மியூங்.
ஆப்ரிக்கா காலனியாதல்
- ஆப்ரிக்க கண்டத்தில் எந்த ஆண்டிற்கு பிறகு, ஐரோப்பியர்களின் குடியேற்ற நிகழ்வுகள் அதிகரித்தது = 1875.
- பெர்லின் குடியேற்ற மாநாடு நடைபெற்ற ஆண்டு = 1884-85.
- பெர்லின் மாநாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது = காங்கோ மாநாடு, மேற்கு ஆப்ரிக்கா மாநாடு.
- “ஆப்ரிக்காவை பங்கிடுதல்” அல்லது “ஆப்ரிக்கப் போட்டி” என்றால் என்ன = 1881க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய சக்திகள் ஆப்ரிக்காவின் மீது படையெடுத்து, கைப்பற்றிக் காலனிகளை ஏற்படுத்திய ஏகாதிபத்திய சகாப்தமே ஆப்ரிக்காவை பங்கிடுதல் அல்லது ஆப்ரிக்கப் போட்டி எனப்படுக்கிறது.
தென் ஆப்ரிக்கா
- தென்னாப்ரிக்காவில் டச்சுக்காரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = போயர்.
- தென் ஆப்ரிக்காவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் = ட்ரான்ஸ்வாலில்.
- தென் ஆப்ரிக்காவில் ஆங்கிலேயர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = அந்நியர் (Uitlanders).
- ஆங்கிலேயர்களுக்கும், போயர்களுக்கும் இடையே நடைபெற்ற போர் எத்தனை ஆண்டுகள் நீடித்தது = மூன்று ஆண்டுகள்.
- இறுதியில் ஆங்கிலேயர்கள் வென்றது.
- தென்னாப்ரிக்கா என்ற நாடு எந்த ஆண்டு உதயமானது = 1909.
- தென்னாப்ரிக்காவின் புகழ் பெற்ற போராளி = சாக்கா ஜூலு.
- ஜூலு பகுதியை ஆங்கிலேயர்கள் அதை, எத்தனை பகுதிகளாக பிரித்தனர் = பதிமூன்று.
- 9TH ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்
ரோடிசியா
- பிரிட்டிஷ் தென்னாப்ரிக்கா கம்பெனி உருவாக்கபப்ட்ட ஆண்டு = 1889.
- பிச்சுனாலந்து என்பது = போட்ஸ்வானா.
- இப்பகுதியில் ஆங்கிலேயர்கள் மெல்லமெல்ல குடியேறி, பின்னர் முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்தனர்.
- இக்குடியேற்றம் “சிசில் ரோட்ஸ்” பெயரால் “ரோடிசியா” என அழைக்கப்பட்டது.
மேற்கு ஆப்ரிக்கா
- ஆங்கிலேயரின் அடிமை சந்தையாக பயன்படுத்தப்பட்ட பகுதி = நைஜீரியா.
- ராயல் நைஜர் கம்பெனி உருவாக்கப்ப\ட்ட ஆண்டு = 1886.
- மேற்கு ஆப்ரிக்காவில் பிரான்சின் தளமாக இருந்த பகுதி = செனகல்.
காங்கோ
- காங்கோ பகுதியை கைப்பற்றிய விரும்பிய அரசர் = பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்டு.
- பெல்ஜியம் அரசருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.
- காங்கோவின் அதிகாரம், அரசரிடம் இருந்து பெல்ஜியம் அரசுக்கு கைமாறியது.
லைபீரியா மற்றும் எத்தோப்பியா
- ஐரோப்பியரின் ஆட்சிக்கு உட்படாத இரண்டு ஆப்ரிக்க நாடுகள் = லைபீரியா மற்றும் எத்தோப்பியா.
- அமெரிக்காவில் இருந்து வெளியேறிய கறுப்பின மக்களால் லைபீரியா அரசு உருவாக்கப்பட்டது.
- எத்தோப்பியா பகுதியை பேரரசர் மெனிலிக் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டது.
இந்தியாவில் காலனி ஆதிக்கம்
போர்த்துகீசியர்கள் | 1505 – 1961 |
டச்சு கிழக்கிந்திய கம்பெனி (நெதர்லாந்து) | 1605 – 1825 |
டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி (டென்மார்க்) | 1620 – 1869 |
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி (பிரான்ஸ்) | 1668 – 1954 |
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி | 1612 – 1757 |
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி | 1757 – 1857 |
ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சி | 1858 – 1947 |
இந்தியாவில் ஆங்கிலேயர்கள்
- வாஸ்கோடகாமா கோழிக்கோட்டை வந்தடைந்த ஆண்டு = 1498.
- ஆங்கிலேயர்கள் கூர்காக்களை வென்ற ஆண்டு = 1816.
- ஆங்கிலேயர்கள் சிந்திக்களை வென்ற ஆண்டு = 1843.
- ஆங்கிலேயர்கள் சீக்கியர்களை வென்ற ஆண்டு = 1849.
இந்தியப் பொருளாதாரத்தை காலனிமயமாக்குதல்
- “இந்தியாவில் நெசவுத் தொழிலானது மக்களின் தேசியத் தொழில் என்றும், நூல் நூற்றல் இலட்சக்கணக்கான பெண்கள் செய்து வந்த வேலையாகும்” (weaving was the national industry of the people and spinning was the pursuit of millions of women) என்று கூறியவர் = ஆர்.சி.தத்.
- இந்தியாவில் இருந்து துணி இறக்குமதி செய்வதை தடை செய்தது இங்கிலாந்து.
- பிளாசிப் போர் நடிப்ற்ற ஆண்டு = 1757.
- பிளாசிப் போரின் விளைவாக ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி பெற்ற தொகை = 1.2 மில்லியன் பவுண்ட்.
- பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு = 1764.
- இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு = 1843.
- 9TH ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்
இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் பொருளாதாரத் தாக்கம்
- “நிலப்பிரபு முறையை” இந்தியாவில் அறிமுகம் செய்தவர் = காரன்வாலிஸ்.
- “நிலையான நிலவரித்திட்டம்” அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு = 1793.
- நிலையான நிலவரித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட இடங்கள் = வங்காளம், பீகார், ஒடிசா.
- நிலையான நிலவரித் திட்டத்தில், நிலத்தின் உரிமையாளர் = ஜமீன்தார்கள்.
- தென்னிந்தியாவில் அறிமுகம் செய்யப்பட நிலவரி முறை = இராயத்துவாரி முறை.
- இராயத்துவாரி முறையில் நிலத்தின் உரிமையாளர் = விவசாயிகள்.
- “நிலத்தில் தனிச்சொத்துரிமை” (concept of private property) எனும் கோட்பாட்டை அறிமுகம் செய்த திட்டம் = இராயத்துவாரி முறை.
- தமிழகப் பகுதிகளில் ஆங்கிலேயர் காலத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்கியோர் = நாட்டுக்கோட்டை செட்டியார்கள்.
நீர்ப்பாசனம்
- மக்கள் நலனில் அக்கறை கொண்ட பென்னிகுயிக், ஆர்த்தர் காட்டன் போன்ற சில ஆங்கிலே அதிகாரிகள் மக்களுக்கு நீர்ப்பாச வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
- முல்லைப்பெரியாறு அணையை கட்டியவர் = கர்னல் பென்னிகுயிக்.
- தனது சொத்துக்களை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு இந்திய மக்களுக்காக அணையை கட்டியவர் = பென்னிகுயிக்.
- முல்லைப்பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு = 1895.
பஞ்சங்கள்
- இந்திய வரலாற்றில் மிக மோசமான பஞ்சம் = ஒடிசா பஞ்சம்.
- ஒடிசா பஞ்சம் ஏற்பட்ட ஆண்டு = 1866 – 1867.
- தென்னிந்தியாவில் ஏற்பட்ட மோசமான் பஞ்சம் = தாதுவருடப் பஞ்சம்.
- தாதுவருடப் பஞ்சம் ஏற்பட்ட ஆண்டு = 1876-1878.
- தாதுவருட பஞ்சத்தில் இறந்த இந்திய மக்களின் எண்ணிக்கை = ஒரு கோடியே மூன்று லட்சம் மக்கள்.
ஒப்பந்த கூலி முறை
- இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு = 1843.
- இந்தியாவில் ஒப்பந்த கூலி (Indentured Labour System) முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு = 1843.
- எந்த ஆண்டு வரை இந்தியாவில் ஒப்பந்த கூலி (Indentured Labour System) முறை நடைமுறையில் இருந்தது = 1920.
- 9TH ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்
புத்தக வினாக்கள்
- பிரான்ஸிஸ் லைட் _____________ பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்? = பினாங்கு தீவு.
- 1896இல் _____________ நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது? = நான்கு.
- இந்தோ-சீனாவில் ___________ மட்டும் பிரான்சின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த பகுதி ஆகும்? = கொச்சின்-சீனா.
- __________ பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதானது பெருமளவிலான ஆங்கிலேய சுரங்கத் தொழில் செய்வோர் ஜோகன்னஸ்பர்க் அருகே குடியேற வழி வகுத்தது? = டிரான்ஸ்வால்.
- இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஐரோப்பிய நாட்டினர்? = போர்த்துகீசியர்கள்.
- ஒப்பந்த கூலி முறையானது ஒரு வகை __________ ? = கடனுக்கான அடிமை ஒப்பந்தம்.
- ___________ மாநாடு ஆப்ரிக்காவை ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்வது எனத் தீர்மானித்தது? = பெர்லின் மாநாடு (1884-85).
- வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் ஜமீன்தார்களோடு மேற்கொள்ளப்பட்ட தீர்வு __________ என்றழைக்கப்படுகிறது? = நிலையான நிலவரித்திட்டம் (1793).
- ஆங்கிலேயரின் முக்கிய வருவாயாக திகழ்ந்தது ___________ ஆகும்? = நிலவரி.
- தமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளில் _____________ வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் இருந்தனர்? = நாட்டுக்கோட்டை செட்டியார்கள்.
- 2024 ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள்
- IMPORTANT DAYS IN AUGUST 2024
- 9TH தொழிற்புரட்சி
- 9TH புரட்சிகளின் காலம்
- 9TH நவீன யுகத்தின் தொடக்கம்
- 9TH இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
- 9TH HISTORY இடைக்காலம்
- 9TH செவ்வியல் உலகம்
- 9TH ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்
- 9TH ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்