9TH தொழிற்புரட்சி
9TH தொழிற்புரட்சி
- தொழிற் புரட்சி காலம் = பதினெட்டாம் நூற்றாண்டு.
- தொழிற்புரட்சி முதன் முதலில் தோன்றிய இடம் = இங்கிலாந்து.
- தொழிற்புரட்சி என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் = பிரெஞ்சுக்காரர்கள்.
தொழிற்புரட்சியின் பண்புகள்
- புதிய அடிப்படை மூலப்பொருட்கள் = இருப்பு, எக்கு.
- புதிய எரிபொருள் மூலங்கள் = நிலக்கரி, மின்சாரம், பெட்ரோலியம்.
- இயந்திர நூற்புக் கருவி, விசைத்தறி கண்டுபிடிப்புகள்.
- அறிவியலை அதிக அளவு பயன்படுத்துதல்.
நீராவி ஆற்றல் கண்டுபிடிப்பு
- நீராவி, நிலக்கரி ஆகியவற்றைப் பயன்படுத்தி சுரங்கங்களில் இருந்து நீரை வெளியேற்றும் புதிய வகை “நீரேற்று இயந்திரத்தை” கண்டுபிடித்தவர் = இங்கிலாந்தின் தாமஸ் நியூகோமான்.
- “நீரேற்று இயந்திரத்தை” கண்டுபிடித்தவர் = தாமஸ் நியூகோமான்.
- “நீராவி இயந்திரத்தை” (steam engine) கண்டுபிடித்தவர் = ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜேம்ஸ் வாட்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நெசவுத்தொழில் வளர்ச்சி
- கைகளால் இயக்கப்படும் “பறக்கும் நாடா நூற்பா” (flying shuttle) கண்டுபிடித்தவர் = ஜான் கே.
- கைகளால் இயக்கப்படும் “பறக்கும் நாடா நூற்பா” கண்டுபிடிக்கபட்ட ஆண்டு = 1733.
- “இயந்திர நூற்புக் கருவியை” (spinning jenny) கண்டுபிடித்தவர் = ஜேம்ஸ் ஹார்கிரீவ்ஸ்.
- இயந்திர நூற்புக் கருவி கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு = 1764.
- ”ஸ்பின்னிங் மியுல்” எனப்படும் இயந்திர நூற்புக்கருவியையும், நீர்ச்சட்டகத்தையும் இணைத்து புதிய கருவியை உருவாக்கியவர் = சாமுவேல் கிராம்ப்டன்.
- “ஸ்பின்னிங் மியுல்” எனும் கருவி கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு = 1779.
- “நீர்சட்டகத்தை” (water frame) கண்டுபிடித்தவர் = ரிச்சர்ட் ஆர்க்ரைட்.
- “பஞ்சு கடைசல் கருவியை” கண்டுபிடித்தவர் = எலி விட்னி.
- “காட்டன் ஜின்” எனும் கருவியை உருவாக்கியவர் = எலி விட்னி.
- தொழிற்புரட்சியின் இதயமாகத் இருந்த தொழில் = நெசவுத் தொழில்.
- இங்கிலாந்தில் ஜவுளி உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகித்த நகரம் = மான்செஸ்டர்.
இரும்பு மற்றும் எக்கு
- எக்கு தயாரிக்க ஒரு விரைவான, சிக்கனமான முறையைக் கண்டுபிடித்தவர் = ஹென்றி பெஸ்ஸிமர்.
- எந்த ஆண்டு ஹென்றி பெஸ்ஸிமர், எக்கு தயாரிக்க சிக்கனமான முறையை கண்டுபிடித்தார் = 1856.
- சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக “பாதுகாப்பு விளக்கினை” (Safety Lamp) கண்டுபிடித்தவர் = சர் ஹம்ப்ரி டேவி.
உலகின் முதல் ரயில்பாதை
- புகழ்பெற்ற சாலை அமைக்கும் முறை = மெக்ஆடம்ஸ் சாலை முறை.
- சிறந்த சாலை அமைக்கும் முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர் = ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் லவுடன் மெக்ஆடம்.
- குதிரைகளால் இயக்கப்பட்ட ரயில் போக்குவரத்து எங்கிருந்தது = ஜெர்மனி.
- உலகின் முதல் ரயில்பாதை எங்கு அமைக்கப்பட்டது = இங்கிலாந்து நாட்டின் ஸ்டாக்டன் மற்றும் டார்லிங்டன் நகருக்கு இடையே அமைக்கப்பட்டது.
- உலகின் முதல் ரயில்பாதை அமைக்கப்பட்ட ஆண்டு = 1825.
- “நீராவி படகினை” கண்டுபிடித்தவர் = அமெரிக்காவின் ராபர்ட் புல்டன்.
இங்கிலாந்தில் தொழில் புரட்சியால் ஏற்பட்ட மாற்றங்கள்
- காற்று மற்றும் நீர் மாசுபாடு அதிகரித்தது.
- உலகின் தொழில் பட்டறையாக “இங்கிலாந்து” மாறியது.
- வேளாண் உற்பத்தி வீழ்ந்தது.
- உலகின் ஜவுளி உற்பத்தித் தொழிலின் தலைநகரம் (textile capital of the world) என அழைக்கப்பட்ட நகரம் = மான்செஸ்டர்.
- “அறிவியல்பூர்வ பொதுவுடைமை” எனும் கோட்பாட்டை முன்வைத்தவர் = கார்ல் மார்க்ஸ்.
- சோசியலிசம் எனும் கோட்பாட்டை முன்வைத்தவர் = கார்ல் மார்க்ஸ்.
- இங்கிலாந்தில் “சீர்த்திருத்த மசோதா” கொண்டுவரப்பட்ட ஆண்டு = 1832.
- இங்கிலாந்து நாடளுமன்றத்தில் தொழிலாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட மசோதா = சாசன இயக்கம் (Chartism).
பிரான்ஸ் நாட்டில் தொழில் புரட்சி
- பிரிட்டிஷ் தொழில்நுட்பத்தை, பிரான்ஸ் நாட்டின் “லொரைன்” நகருக்கு கொண்டு வந்தவர் = பிரான்கோஸ் டி வெண்டல்.
- பிரான்சில் நீராவி இயந்திரத்தை அறிமுகம் செய்தவர் = பிரான்கோஸ் டி வெண்டல்.
- இயந்திரம் செய்வதற்காக புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் நகரம் = அல்சாஸ் மாகாணத்தின் முல்ஹவுஸ் நகரம்.
- பிரான்ஸ் நாட்டின் எந்த நகரில் முதல் ரயில்பாதை அமைக்கப்பட்டது = செயின்ட் இடியன் மற்றும் ஆந்திரிஜியோக்ஸ் நகரங்கள் இடையே.
- புகழ்பெற்ற “ரொனால்ட்” மோட்டார் உற்பத்தி நிறுவனம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஆகும்.
ஜெர்மனியில் தொழில்புரட்சி
- ஜெர்மனியில் இருந்த மிகப்பெரிய அரசு = பிரஷ்யா.
- “கார்டெல்” என்றால் என்ன = போட்டிகளை கட்டுப்படுத்தவும், விலை உயர்வைத் தக்க வைக்கவும் உற்பத்தியாளர்கள் அல்லது விநியோகிப்பாளர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் கூட்டமைப்பு.
- ஜெர்மனியில் உருவாக்கபபட்ட முதல் ரயில்பாதை = நியூரெம்பர்க் மற்றும் பர்த் நகரங்கள் இடையே.
- பிரஷ்யாவில் ஒருங்கிணைந்த இருப்புப்பாதை நகரமாக இருந்த நகரம் = பெர்லின்.
- எந்த ஆண்டு ஜெர்மனி ஒரேநாடாக மாறியது = 1871.
- தொழில் புரட்சியின் காரணமாக தொழில் புரட்சி உருவான நாடான இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவிற்கு போட்டியாக உயர்ந்தது ஜெர்மனி.
- உலகப் புகழ்பெற்ற டெய்ம்லர் மற்றும் பென்ஸ் நிறுவனங்கள் ஜெர்மனி நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் ஆகும்.
அமெரிக்காவில் இரண்டாவது தொழில்புரட்சி
- அமெரிக்காவில் தொழில்புரட்சி ஏற்பட காரணமாக இருந்தவர் = இங்கிலாந்தின் சாமுவேல் சிலேட்டர்.
- “அமெரிக்க தொழில் புரட்சியின் தந்தை” (Father of the American Industrial Revolution) என்று அழைக்கப்பட்டவர் = சாமுவேல் சிலேட்டர்.
- அமெரிக்காவில் நீராவிப் படகு போக்குவரத்தை துவக்கியவர் = ராபர்ட் புல்டன்.
- தந்தியை கண்டுபிடித்தவர் = சாமுவேல் F.B.மோர்ஸ்.
- தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் = எலியாஸ் ஹோவே.
- மின்விளக்கை கண்டுபிடித்தவர் = தாமஸ் ஆல்வா எடிசன்.
- எந்த ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கை கண்டுபிடித்தார் = 1879.
- தொலைபேசியை கண்டுபிடித்தவர் = அலெக்சாண்டர் கிரஹாம்பெல்.
- அலெக்ஸ்சாண்டர் கிரஹாம்பெல் எந்த ஆண்டு தொலைபேசியை கண்டுபிடித்தார் = 1876.
- அமெரிக்காவில் எக்கு உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமாக உயர்ந்த நிறுவனம் = ராக்பெல்லரின் நிறுவனம்.
உழைக்கும் வர்க்க போராட்டங்கள்
- அமெரிக்காவில் 1877ல் நடைபெற்ற “இருப்புப்பாதை தொழிலாளர்களின்” வேலை நிறுத்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
- நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து 1886 ஆம் ஆண்டு சிகாகோ நகரில் உள்ள “ஹே மார்கெட் சதுக்கத்தில்” நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய படுகொலை நிகழ்வாக மாறியது.
- ஹே மார்க்கெட் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமெரிக்காவில் மே 1 ஆம் தேதி “சர்வதேச தொழிலாளர் தினம்” கடைபிடிக்கப்படுகிறது.
தொழிற்புரட்சி காலத்தின் முக்கிய கண்டுபிடிப்புகள்
கண்டுபிடிப்பு | கண்டுபிடித்தவர் | ஆண்டு |
---|---|---|
ஊது உலை (இரும்பு மற்றும் எஃகு) | ஆப்ரஹாம் டார்பி | 1709 |
நீராவி இயந்திரம் | தாமஸ் நியூகோமன் | 1712 |
பறக்கும் நாடா (ஜவுளி) | ஜான் கே | 1733 |
மேம்படுத்தப்பட்ட டார்பி முறை (இரும்பு மற்றும் எஃகு) | ஜான் ஸ்மீட்டன் | 1760 |
இயந்திர நூற்புக் கருவி (ஜவுளி) | ஜேம்ஸ் ஹர்க்ரீவ்ஸ் | 1764 |
நூற்பு நீர்ச்சட்டகம் (ஜவுளி) | ரிச்சர்ட் ஆர்க்ரைட் | 1769 |
நியூகோமனின் நீராவி இயந்திர மறுவடிவாக்கம் | ஜேம்ஸ் வாட் | 1769 |
ஸ்பின்னிங் மியூல் (ஜவுளி) | சாமுவேல் கிராம்ப்டன் | 1779 |
விசைத்தறி (ஜவுளி) | எட்மண்ட் கார்ட்ரைட் | 1785 |
பருத்தியிலிருந்து கொட்டை நீக்கம் (ஜின்) (ஜவுளி) | எலி விட்னி | 1793 |
காற்றுப் பம்பு (சுரங்கங்களில்) | ஜான் பண்டில் | 1801 |
பஃபிங் டெவில் - முதல் நீராவி ரயில் என்ஜின் | ரிச்சர்ட் ட்ரித்விக் | 1807 |
தி புட்சர் – ரயில் என்ஜின் | ஜார்ஜ் ஸ்டீஃபன்ஸன் | 1814 |
சுரங்கப் பாதுகாப்பு விளக்கு | ஹம்ப்ரி டேவி | 1815 |
தையல் இயந்திரம் | எலியாஸ் ஹோவே | 1846 |
தந்தி – மோர்ஸ் கோட் (தகவல் தொடர்பு) | சாமுவேல் மோர்ஸ் | 1844 |
குறைந்த செலவிலான எஃகு தயாரிக்கும் முறை | ஹென்றி பெஸ்ஸிமர் | 1856 |
தொலைபேசி | அலெக்ஸ்சாண்டர் கிரஹாம்பெல் | 1876 |
கம்பியில்லாத் தகவல்தொடர்பு | மார்க்கோனி | 1899 |
ஒளிரும் மின்விளக்கு | தாமஸ் ஆல்வா எடிசன் | 1879 |
புத்தக வினாக்கள்
- நீராவி படகுப் போக்குவரத்துச் சேவையை நிறுவியவர் யார்? = ராபர்ட் ஃபுல்டன்
- மான்செஸ்டர் நகரம் ஏன் ஜவுளி உற்பத்திக்கு உகந்த இடமாகப் கருதப்பட்டது? = குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை.
- தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்? = எலியாஸ் ஹோவே.
- நீராவி இயந்திரத்தை பிரான்சில் அறிமுகம் செய்த குடும்பம் எது? = டி வெண்டெல்.
- சிலேட்டரை அமெரிக்கக் தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்? = ஆண்ட்ரூ ஜேக்சன்.
- கீழ்க் காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவுநாளாகக் கடைபிடிக்கப்படுகிறது? = உழைப்பாளர் தினம்.
- எங்கு ஜோல் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது? = ஜெர்மனி.
- பிரான்சில் முதல் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தவர் யார்? = லூயி ரெனால்ட்.
- எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கொட்டைகளைப் பிரித்தது? = பஞ்சுக் கடைசல் இயந்திரம்.
- கீழ்க்காண்பனவற்றில் எது இரும்பை உருக்குவதற்காக முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது? = கரி.
- _____________ இங்கிலாந்தில் ஆடவர்க்கு வாக்குரிமை கோரியது? = தொழிற்புரட்சி.
- _____________ உலகம் முழுவதும் சாலைகள் அமைக்கப்படும் முறையை மாற்றியமைத்தது? = மெக்ஆடமைஸ்டு சாலை முறை.
- விரைவாகவும் குறைந்த செலவிலும் எஃகை உற்பத்தி செய்யும் முறையை ____________ கண்டுபிடித்தார்? = ஹென்றி பெஸ்ஸிமர்.
- விஞ்ஞான சோசலிஸத்தை முன்வைத்தவர் ____________ ஆவார்? = கார்ல் மார்க்ஸ்.
- ஜெர்மனியில் முதல் இருப்புப்பாதை ____________ ஆண்டில் இயக்கப்பட்டது? =
- 9TH புரட்சிகளின் காலம்
- 9TH நவீன யுகத்தின் தொடக்கம்
- 9TH இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
- 9TH HISTORY இடைக்காலம்
- 9TH செவ்வியல் உலகம்