9TH பண்டைய நாகரிகங்கள்

Table of Contents

9TH பண்டைய நாகரிகங்கள்

9TH பண்டைய நாகரிகங்கள்

  • நாகரிகம் என்பது ஒரு முன்னேறிய, முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை என்று கருதப்படுகிறது.
  • நாகரிகங்கள் தோன்றிய காலம் = வெண்கலக் காலம்.
  • பண்டைய நாகரிகங்களில் முக்கியமானது = எகிப்திய, மெசபடோமிய, சீன மற்றும் சிந்துவெளி நாகரிகம்.

எகிப்திய நாகரிகம்

  • எந்த நதியால் எகிப்து நாடு செழிப்படைகிறது = நைல் நதி.
  • வரலாற்றின் தந்தை எனப்படுபவர் = ஹெரோடோடஸ்.
  • “எகிப்தை நைல் நதியின் நன்கொடை” என்று கூறியவர் = கிரேக்க வரலாற்று ஆய்வாளர் ஹெரோடோடஸ்.
  • 9TH பண்டைய நாகரிகங்கள்

எகிப்திய சமூகம் மற்றும் நிர்வாகம்

  • எகிப்திய அரசர் எவ்வாறு அழைக்கப்பட்டார் = “பாரோ” (Pharoah).
  • எகிப்தில் தெய்வீக சக்தி பொருந்தியவராக கருதப்பட்டவர் = பாரோ (அரசர்).
  • எகிப்தில் அடிமை முறை இல்லாமல் இருந்தாலும், சிறை பிடிக்கப்பட்டவர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.
  • “விசியர்” (Vizier) என்றால் என்ன = எகிப்திய அரசரின் கீழ் மாகாணங்களை ஆளும் நிர்வாகி.
எகிப்திய நாகரிகம்
9TH பண்டைய நாகரிகங்கள்

மம்மியாக்கம் என்றால் என்ன

  • மம்மி என்றால் என்ன = பதப்படுத்தப்பட்ட உடல் மம்மி எனப்படும்.
  • “மம்மியாக்கம்” என்றால் என்ன = எகிப்தியர்கள் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி வைத்தனர். இவாறு உடலைப் பதப்படுத்தி வைக்கும் முறைக்கு மம்மியாக்கம் என்று பெயர்.
  • புகழ் பெற்ற எகிப்து பாரோவான (அரசர்) “டூடன்காமனின்” சமாதி மம்மி உள்ள இடம் = எகிப்தின் லக்ஸருக்கு அருகே உள்ள அரசர்களின் பள்ளத்தாக்கில் உள்ளது.
  • யாருடைய முகமூடி தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது = எகிப்திய பாரோவான டூடன்காமன்.
  • 9TH பண்டைய நாகரிகங்கள்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

எகிப்திய மம்மிகள்

  • மம்மி என்றால் என்ன = பதப்படுத்தப்பட்ட உடல் மம்மி எனப்படும்.
  • எகிப்தில் இறந்தவர்களின் உடலை எதைக் கொண்டு பாதுகாத்தனர்,
    • சோடியம் கார்பனேட் + சோடியம் பைகார்பனேட் = நாட்ரன் உப்பு.
  • சார்க்கோபேக்ஸ் என்றால் என்ன = பதப்படுத்தப்பட்ட உடலை பாதுகாப்பாக வைக்க உதவும் “கல்லால் ஆன சவப்பெட்டி”.

எகிப்திய வேளாண்மை மற்றும் வணிகம்

  • எகிப்தியர்கள் “பாப்பிரஸ்” எனப்படும் “காகித நாணல்” பயிர்களை வேளாண்மை செய்தனர்.
  • பாப்பிரஸ் எனப்படும் காகித நாணல் செடியை கொண்டு எகிப்தியர்கள் தயாரித்தது = காகிதம், கயிற்றுப் பாய், செருப்பு.
  • “லாபிஸ் லாசுலீ” எனப்படும் “நீல வகைக் கல்லை” எகிப்ப்தியர்கள் எங்கிருந்து பெற்றனர் = ஆப்கானிஸ்தான்.
  • 9TH பண்டைய நாகரிகங்கள்

பாப்பிரஸ்

  • பேப்பர் (காகிதம்) என்ற சொல் “பாப்பிரஸ்” என்ற தாவரத்தின் பெயரில் இருந்து வந்தது.
  • எகிப்தியர்கள் “காகித நாணல்” (பாப்பிரஸ்) என்ற தாவிர தண்டில் இருந்து காகிதங்களை உருவாக்கினர்.
  • 9TH பண்டைய நாகரிகங்கள்

எகிப்தியர்களின் கலை கட்டிடக்கலை

  • எகிப்திய பாரோக்களின் (அரசர்களின்) சமாதிகள் = பிரமிடுகள்.
  • “கெய்ரோ” நகருக்கு அருகே உள்ள பிரமிடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன = கிஸா பிரமிடுகள்.
  • “ஸ்பிங்க்ஸின்” என்றால் என்ன = சிங்க உடலும், மனித முகமும் கொண்ட சுண்ணாம்புக்கல் படிம சிலை “ஸ்பிங்க்ஸின்” ஆகும்.
  • எந்த எகிப்திய மன்னர் ஆட்சிக் காலத்தில் “ஸ்பிங்க்ஸின்” கட்டப்பட்டது = காஃப்ரெ.
  • உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்று = ஸ்பிங்க்ஸின்.

பண்டைய எகிப்து கடவுள்கள்

  • பண்டைய எகிப்து கடவுள்கள் = அமோன் (ரே), சேத், தோத், ஹோரயசின்ஸ் (ஹோரஸ்), அனுபிஸ்.
  • எகிப்தில் முதன்மையான கடவுளாக இருந்தவர் = சூரியக் கடவுளான அமோன் (ரே).
  • 9TH பண்டைய நாகரிகங்கள்

எகிப்தியர்களின் தத்துவம் மற்றும் அறிவியல்

  • எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை = சூரிய கடிகாரம், நீர் கடிகாரம், கண்ணாடி.
  • கண்ணாடியை கண்டுபிடித்தவர்கள் = எகிப்தியர்கள்.
  • எகிப்தியர்கள் எதை அடிப்படையாகக் கொண்டு “நாட்காட்டியை” உருவாக்கினர் = சூரியனை அடிப்படையாகக் கொண்டு.
  • எகிப்தியர்கள் உருவாக்கிய சூரிய நாட்காட்டி = 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் உள்ளன. ஆனால் ஆண்டு இறுதியில் ஐந்து நாட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • கி.மு 4200 முன்னாளிலேயே எகிப்தியர்கள் சூரிய நாட்காட்டியை உருவாக்கினர்.

எகிப்தியர்களின் எழுத்து முறை

  • எகிப்தியர்களின் எழுத்து முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது = ஹைரோகிளிபிக் (சித்திர எழுத்து முறை).
  • எகிப்தியர்கள் தங்களின் பொதுவான தகவல் தொடர்பிற்கு பயன்படுத்திய எழுத்து முறை = “ஹெரிடிக்” எழுத்து.
  • எகிப்தியர்களின் எழுத்து வடிவம் = பிக்டோகிராம் எனப்படும் சித்திர எழுத்து வடிவம்.
மெசபடோமிய நாகரிகம்
9TH பண்டைய நாகரிகங்கள்

மெசபடோமிய நாகரிகம்

  • மெசபடோமியா = மேற்கு ஆசியாவின் ஈராக், குவைத் பகுதிகள்.
  • மெசபடோமிய நாகரிகத்தில் உள்ள நான்கு நாகரிக அரசுகள் = சுமேரிய, அகேடிய, பாபிலோனிய மற்றும் ஆஸிரிய நாகரிகங்கள்.
  • மெசபடோமிய நாகரிகத்தின் நான்கு நாகரிகங்களின் வரிசை முறை = சுமேரிய, அகேடிய, பாபிலோனிய மற்றும் அஸிரிய.
  • மெஸோ = கிரேக்க மொழியின் மெஸோ என்றால் “நடுவில்” என்று பொருள்.
  • பொடோமஸ் = கிரேக்க மொழியில் பொடோமஸ் என்றால் “ஆறு” என்று பொருள்.
  • மெசபடோமியாவில் பாயும் நதிகள் = யூப்ரிடஸ், டைக்ரிஸ்.
  • யூப்ரிடஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகள் இணையும் இடம் = பாரசீக வளைகுடா.
  • மெசபடோமியாவின் வடபகுதி = அஸிரியா.
  • மெசபடோமியாவின் தென்பகுதி = பாபிலோனியா.
  • 9TH பண்டைய நாகரிகங்கள்

சுமேரியர்கள்

  • மெசபடோமியாவின் நான்கு நாகரிகங்களில் பழமையானது = சுமேரிய நாகரிகம்.
  • சுமேரியர்கள் சிந்துவெளி மற்றும் எகிப்திய நாகரிகத்தின் சமகாலத்தவர்கள்.
  • சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர்கள் = சுமேரியர்கள்.
  • சுமேரியர்கள் எங்கிருந்து வந்ததாக கூறப்படுகிறது = மத்திய ஆசியா.
  • சுமேரியர்கள் உருவாக்கிய நகரங்களில் முக்கியமானது = நிப்பூர்.
  • சுமேரியர்களின் எழுத்து முறை = கியூனிபார்ம் எனப்படும் முக்கோணவடிவ எழுத்து முறை.
  • சுமேரியர்கள் ஆட்சி முடிவிற்கு வந்த காலம் = கி.மு 2450.

அக்காடியர்கள்

  • சுமேரியாவை மிகக்குறுகிய காலம் ஆட்சி செய்தவர்கள் = அக்காடியர்கள்.
  • அக்காடிய அரசர்களில் புகழ்பெற்றவர் = சார்கான்.
  • அக்காடியர்களின் வரலாற்று ஆவணங்கள் = கியூனிபார்ம் ஆவணங்கள்.
  • அக்காடியர்களின் “கியூனிபார்ம் ஆவணங்கள்” குறிப்பிடும் நாகரிகம் = சிந்துவெளி நாகரிகம்.
  • அக்காடியர்களின் கியூனிபார்ம் ஆவணங்கள் குறிப்பிடும் “மெலுஹா” என்பது = சிந்துவெளி பகுதி.
  • மெலுஹா என்பது = அக்காடியர்கள் குறிப்பிடும் சிந்துவெளி பகுதி.
  • அக்காட் நகரம் பிற்காலத்தில் “பாபிலோன்” என்று அழைக்கப்பட்டது.
  • மேற்கு ஆசியாவின் பண்பாட்டு, வணிக மையமாக திகழ்ந்த பகுதி = அக்காட் நகரம் (பாபிலோன்).
  • 9TH பண்டைய நாகரிகங்கள்

பாபிலோனியர்கள்

  • “அமோரைட்ஸ்” என்னும் யூத மக்கள் அரேபியாவில் இருந்து மெசபடோமியாவிற்கு குடிபெயர்ந்தனர்.
  • “பாபிலோன்” நகரை உருவாக்கியவர்கள் = அமோரைட்ஸ் யூத மக்கள்.
  • பாபிலோனிய அரசர்களில் புகழ் மிக்கவர் = ஹமுராபி.
  • பாபிலோனின் உருவான சக்தி மிக்க அரசுகள் = உர் அரசு மற்றும் பாபிலோன் அரசு.
  • பாபிலோனின் ஆறாவது அரசரான ஹமுராபி மாபெரும் சட்டங்களை இயற்றியதற்காகப் புகழ் பெற்றவர்.

உலகின் முதல் காவியம்

  • உலகின் முதல் காவியம் = The Epic of Gilgamesh.
  • உலகின் முதல் காவியத்தின் கதாநாயகன் = கில்காமெஷ்.
  • உலகின் முதல் காவியத்தின் கதாநாயகனான “கில்காமெஷ்” ஒரு சுமேரிய அரசராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

அஸிரியர்கள்

  • மெசபடோமிய நாகரத்தின் கடைசி அரச வம்சம் = அஸிரியர்கள்.
  • அஸிரியர்களின் தலைமைக் கடவுள் = லமாஸூ.
  • அஸிரியர்களின் காக்கும் கடவுள் = லமாஸூ.
  • லமாசுவின் கற்சிற்பம் = அஸூர் (Ashur).
  • அஸிரியர்களின் தலைநகரம் = அஸூர் (Assur).
  • அஸிரியப் பேரரசின் புகழ்பெற்ற அரசர் = அஸூர்பனியால்.
  • “கியூனிபார்ம் ஆவணங்களை” கொண்ட புகழ் பெற்ற நூலகத்தை உருவாக்கியவர்கள் = அஸிரியர்கள்.
  • “கியூனிபார்ம் ஆவணங்களை” கொண்ட புகழ் பெற்ற நூலகத்தை உருவாக்கியவர் = அஸூர்பனியால்.

உலகின் முதல் ராணுவ அரசு

  • உலகின் முதல் ராணுவ அரசு என்று அழைக்கப்படுவது = அஸிரிய்ப பேரரசு (மெசபடோமியா நாகரிக அரசு).
  • அஸிரியப் பேரரசு உலகின் முதல் வலிமையான ராணுவமாக உருவாவதற்கான காரணம் = இரும்புத் தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்தியதால்.

அஸிரியர்களின் சமூகம் நிர்வாகம்

  • சுமேரிய நகரங்களின் மத்தியில் ___________ எனப்படும் கோவில் இருக்கும் = சிகுராட்.
  • அரசரே தலைமை மதகுருவாக இருந்தார்.
  • வரியாக வசூலித்ததை கோவிலில் சேமித்து வைத்தனர்.
  • 9TH பண்டைய நாகரிகங்கள்

மெசபடோமிய நாகரிகத்தில் வாழ்க்கை முறைகள்

  • மெசபடோமியா மக்களின் முக்கிய தொழில் = வேளாண்மை.
  • மெசபடோமியா மக்களின் முக்கிய உணவு = மீன்.
  • சுமேரியர்களின் (மெசபடோமியர்கள்) கடவுள் கோட்பாடு = பல கடவுள் கோட்பாடு.
  • சுமேரியர்கள் (மெசபடோமியர்கள்) வணங்கிய காற்று மற்றும் ஆகாயத்திற்கான கடவுள் = என்லில்.
  • என்லில் கடவுளின் கோவில் இருந்த இடம் = நிப்பூர்.
  • சுமேரியர்களின் (மெசபடோமியர்கள்) தானியத்திற்கான பெண் தெய்வம் = நின்லின்.
  • பாபிலோனியர்கள் (மெசபடோமியர்கள்) வணங்கிய கடவுள் = மர்டுக்.
  • அஸிரியர்களின் தலைமைக் கடவுள் = லமாஸூ.
  • அஸிரியர்களின் காக்கும் கடவுள் = லமாஸூ.
  • அன்பு மற்றும் வளமைக்காண பெண் தெய்வம் = இஸ்டார்.
  • கடல் மற்றும் குழப்பத்திற்கான கடவுள் = டியாமட்.
  • சந்திரக் கடவுள் = சின்.
  • சூரியக் கடவுள் = சமாஷி.
  • பெருக்கல், வகுத்தல், மும்மடிச் சமன்பாடு ஆகிய கருத்துக்களை உருவாக்கியவர்கள் = மெசபடோமியர்கள் (சுமேரியர்கள்).
  • மெசபடோமியர்கள் உருவாக்கிய எண் முறை = 60ஐ அடிப்படையாகக் கொண்டது.
  • மெசபடோமியர்களிடம் இருந்து தான் 60 நிமிடங்கள் கொண்ட ஒரு மணி நேரம், 24 மணி நேரம் கொண்ட ஒரு நாள் ஆகியவை நமக்கு கிடைத்தது.
  • மெசபடோமிய (சுமேரிய) நாட்காட்டியில் ஒரு வாரத்தில் உள்ள நாட்கள் = ஏழு.
  • நீர் கடிகாரத்தை உருவாக்கியவர்கள் = மெசபடோமியர்கள்.
  • சந்திர நாட்காட்டியை (12 மாதங்கள்) உருவாக்கியவர்கள் = மெசபடோமியர்கள்.
  • “பரப்பளவு, திடப்பொருள்” ஆகியவற்றை அளவிடுவதற்கான அளவீட்டு முறைகளை கண்டுபிடித்தவர்கள் = மெசபடோமியர்கள்.

உலகின் முதல் எழுத்துப்பூர்வமான ஆதாரம்

  • மெசபடோமியர்களின் கோவில்கள் வங்கிகளாக செயல்பட்டு கடன் வழங்கின.
  • வட்டியுடன் அல்லது வட்டி இல்ல கடன் முறை பற்றிய விவரங்கள் மெசபடோமிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கடனுக்கு வட்டி வாங்குவது குறித்த உலகின் முதல் எழுத்துப்பூர்வமான ஆதாரம் ஆகும் இது.
  • 9TH பண்டைய நாகரிகங்கள்

ஹமுராபியின் சட்டத் தொகுப்பு

  • பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களைக் கூறும் ஒரு சட்ட ஆவணம் = ஹமுராபியின் சட்டத் தொகுப்பு.
  • ஹமுராபியின் சட்டத் தொகுப்பில் உள்ள மொத்த சட்டப் பிரிவுகள் = 282 பிரிவுகள்.
  • ஹமுராபி இந்தத் சட்டத் தொகுப்பை எந்த கடவுளிடம் இருந்து பெற்றதாக சிற்பத்தில் வடிக்கப்பட்டுள்ளது = சூரியக் கடவுள் சமாஷி.
  • ஹமுராபியின் சட்டத் தொகுப்பு எத்தன அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது = பழிக்குப் பழி (பல்லுக்குப் பல், கண்ணுக்கு கண்).

சுமேரிய எழுத்து முறை “கியூனிபார்ம்”

  • சுமேரிய எழுத்து முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது = கியூனிபார்ம்.
  • கியூனிபார்ம் எழுத்துக்கள் எந்த வடிவத்தில் உள்ளது = ஆப்பு (wedge).
  • உலகில் முதன் முதலில் எழுத்து முறையை உருவாக்கியவர்கள் = சுமேரியர்கள்.

பானை செய்யும் சக்கரத்தை கண்டுபிடித்தவர்கள்

  • சுமேரியர்கள் தான் முதன் முதலில் பானைகள் செய்யும் குயவர்களின் சக்கரத்தை உருவாக்கியவர்கள் ஆவர்.
  • 360 நாட்கள் கொண்ட நாட்காட்டியைத் தயாரித்தவர்கள் = சுமேரியர்கள்.
  • ஒரு வட்டத்தை 360 பாகங்களாக பிரித்தவர்கள் = சுமேரியர்கள்.
9TH பண்டைய நாகரிகங்கள்
9TH பண்டைய நாகரிகங்கள்

சீன நாகரிகம்

  • சீனாவின் இரோண்டு பெரிய ஆறுகள் = மஞ்சள் ஆறு (ஹோவாங்-ஹோ) மற்றும் யாங்ட்சி ஆறு.
  • “சீனாவின் துயரம்” எனப்படும் ஆறு = மஞ்சள் ஆறு (ஹோவாங்-ஹோ).
  • சீனாவின் “குவின் (சின்)” வம்சத்தை துவக்கி வைத்தவர் = குவின் ஷி ஹூவாங் டி (முதல் பேரரசர்).
  • “சொர்கத்தின் புதல்வர்” என்று அழைக்கப்பட்டவர் = சீனாவின் முதல் பேரரசர் குவின் ஷி ஹூவாங் டி.
  • சீனாவை ஒரே அரசாக மாற்றியவர் = குவின் ஷி ஹூவாங் டி.
  • சீனப்பெருஞ்சுவரை கட்டிய மன்னன் = குவின் ஷி ஹூவாங் டி.

ஹான் பேரரசு

  • ஹான் பேரரசுகளில் சிறந்த அரசர் = ஹூ டி.
  • புகழ்பெற்ற “பட்டுப் பாதையை” துவக்கிய அரசர் = ஹூ டி (கி.மு 130).
  • 9TH பண்டைய நாகரிகங்கள்

சீன நாகரிகத்தின் தத்துவமும் இலக்கியமும்

  • “போர்க் கலை” என்ற நூலை எழுதிய சீன வீரர் = சன் ட்சூ.
  • சீன அரசின் அதிகாரப்பூர்வ நூலக ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல் = தி ஸ்ப்ரிங் அண்ட் ஆட்டோம் அனல்ஸ் (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டுக் குறிப்புகள்).
  • சீனாவின் பழமையான மருத்துவ நூல் = மஞ்சள் பேரரசின் “கேனன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்)”
  • “தாவோயிசம்” எனும் புதிய மதத்தை தோற்றுவித்தவர் = லாவோ ட் சு.
  • சீனாவின் புகழ்பெற்ற தத்துவ ஞானி = கன்பூசியஸ்.
  • கன்பூசியஸ் என்பதன் பொருள் = தலைவர் (குங்).
  • சீன எழுத்துமுறை தொடக்கத்தில் “சித்திர எழுத்தாக” இருந்து பின்னர் “குறியீட்டு முறையாக” மாறியது.

சீன நாகரிகத்தின் பங்களிப்பு

  • காகிதத்தை கண்டுபிடித்தவர்கள் = சீனர்கள்.
  • வெடிமருந்தை கண்டுபிடித்தவர்கள் = சீனர்கள்.
சிந்துவெளி நாகரிகம்
9TH பண்டைய நாகரிகங்கள்

சிந்துவெளி நாகரிகம்

  • ஹரப்பா நாகரிகம் பரவி இருந்த இடங்கள்,
      1. மேற்கு = பாகிஸ்தான் – ஈரான் எல்லையில் உள்ள “சுட்காஜென்-டோர்”
      2. வடக்கு = ஷோர்டுகை (ஆப்கானிஸ்தான்)
      3. கிழக்கு = ஆலம்கீர்பூர் (உத்திரப்பிரதேசம்)
      4. தெற்கு = டைமாபாத் (மகாராஸ்டிரா)
  • சிந்துவெளி நாகரிகத்தில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நகரம் = ஹரப்பா.
  • 9TH பண்டைய நாகரிகங்கள்

சிந்துவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்கள்

நகரம்தற்போது உள்ள இடம்தற்போது உள்ள நாடு
ஹரப்பாபஞ்சாப்பாகிஸ்தான்
மொஹஞ்சதாரோசிந்துபாகிஸ்தான்
தோலாவிராகுஜராத்இந்தியா
கலிபங்கன்ராஜஸ்தான்இந்தியா
லோத்தல்குஜராத்இந்தியா
பானவாலிராஜஸ்தான்இந்தியா
ராகிகரிஹரியானாஇந்தியா
சுர்கொடடாகுஜராத்இந்தியா

சிந்துவெளி நாகரத்தின் முக்கிய குறிப்புகள்

  • ஹரப்பா மக்கள் பயன்படுத்திய கற்கள் = சுட்ட, சுடாத செங்கற்கள்.
  • சில வீடுகளில் மாடிகள் இருந்துள்ளன.
  • “குளியல் குளம்” இருந்த இடம் = மொகஞ்சதாரோ.
  • “பூசாரி அரசன்” சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடம் = மொகஞ்சதாரோ.
  • வேளாண்மையில் “இரட்டை சாகுபடி” முறையை பின்பற்றி உள்ளனர்.
  • ஹரப்பா மக்கள் அறியாத விலங்கு = குதிரை.
  • ஹரப்பா மக்கள் அறியாத உலோகம் = இரும்பு.
  • ஹரப்பாவின் மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன = “ஜெபு”.
  • ஹரப்பா மண்பாண்டங்களில் எவ்வகை வண்ணங்கள் இடம் பெற்றிருந்தன = சிவப்பு, கருப்பு.
  • மண் பாண்டம் மீது சிவப்பு வண்ணம் பூசபப்ட்டு, அதில் கருப்பு நிறத்தில் ஓவியங்கள் வரையப்பட்டன.
  • ஹரப்பா மக்கள் பயன்படுத்திய கருவிகள் = “செர்ட்” எனப்படும் சிலிக்கா வகை பிளேடுகள், கத்திகள்,
  • வெண்கலத்தால் ஆன “நடனமாடும் பெண் சிலை” கிடைத்த இடம் = மொகஞ்சதாரோ.
  • ஹரப்பா மக்கள் அறிந்திருந்த மெழுகு செயல்முறை = இழந்த மெழுகு செயல்முறை (லாஸ்ட் – வேக்ஸ் செயல்முறை, Lost – Wax Process).
  • ஹரப்ப்பா மக்கள் அணிந்த ஆடைகள் = பருத்தி, பட்டு ஆடைகள்.
  • ஹரப்பா மக்கள் எந்த மக்களுடன் நெருங்கிய வணிகத் தொடர்பை வைத்திருந்தனர் = மெசபடோமியா மக்களுடன்.
  • மெசபடோமியாவிற்கும், சிந்துவெளி மக்களுக்கும் இருந்த வணிகத் தொடர்பை கூறும் ஆவணம் = கியூனிபார்ம் ஆவணம்.
  • கியூனிபார்ம் ஆவணங்களில் சிந்துவெளி பகுதியை குறிக்கும் சொல் = மெலுஹா.
  • “மெலுஹா” என்றால் என்ன = மெசபடோமிய நாகரிகத்தின் கியூனிபார்ம் ஆவணங்களில் சிந்துப் பகுதிகளை குறிக்க “மெலுஹா” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
  • ஹரப்பா பகுதிகளில் கிடைக்கப்பெற்ற எடைக் கற்கள் = கனசதுர “செர்ட்” எடைக்கற்கள்.
  • எடை அளவிடுதலில் ஹரப்பா மக்கள் அறிந்திருந்த என் முறை = ஈரடிமான எண் முறை (Binary).
  • ஹரப்பா மக்கள் பின்பற்றிய எடைகளின் விகிதம் = 1:2:4:8:16:32 (இரண்டு இரண்டு மடங்காக அதிகரித்தல்).
  • ஹரப்பா எழுத்துக்கள் இதுவரை வாசிக்கப்படவில்லை.
  • மொகஞ்சதாரோவில் கிடைத்த சிலைகள் = மாக்கல்லில் செய்யப்பட்ட மதகுரு அல்லது அரசன் சிலை, செம்பில் வார்க்கப்பட்ட நடனமாடும் பெண் சிலை.
  • சிந்துவெளி மக்கள் வணங்கியது = இயற்கை.
  • சிந்துவெளி பகுதியில் “நெருப்புக் குண்டங்கள்” கண்டுபிடிக்கப்பட்ட இடம் = காலிபங்கன்.
  • சிந்துவெளி நாகரிகம் காலங்கள் பிரிப்பு
      1. தொடக்க ஹரப்பா = கி.மு 3300 – கி.பி. 2600
      2. முதிர்ந்த ஹரப்பா = கி.பி. 2600 – கி.பி. 1900
      3. பிந்தைய ஹரப்பா = கி.பி. 1900 – 1700.
சிந்துவெளி நாகரிகம்
9TH பண்டைய நாகரிகங்கள்

சிந்துவெளி எழுத்துக்கள்

  • ஹரப்பா மக்கள் எழுதும் கலையை அறிந்திருந்தனர்.
  • ஒவ்வொரு பொறிப்பிலும் சராசரியாக ஐந்துக்கும் குறைவான குறியீடுகளே உள்ளன.
  • “ரோசட்டா கல்லில்” (பண்டைய எகிப்தியர்களுடன் தொடர்புடைய மும்மொழி கல்வெட்டு) உள்ளது போல மும்மொழிகள் இல்லை.
  • எழுத்துக்கள் வலது பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக எழுதினர்.
  • சிந்துவெளி எழுத்துக்களை கணினி மூலம் பகுப்பாய்வு செய்தவர் = ரஷ்ய அறிஞர் யூரி நோரோசோவ்.
  • “சிந்துவெளி எழுத்துகள் திராவிட மொழிக் குடும்பம் போன்ற வார்த்தை வரிசைகளை பெற்றுள்ளன” என்று கூறியவர் = ரஷ்ய அறிஞர் யூரி நோரோசோவ்.
  • சிந்துவெளி குறித்து விரிவான ஆய்வு செய்த தமிழ் அறிஞர் = ஐராவதம் மகாதேவன்.
  • “ஹரப்பா மொழியின் மூல வேர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்திருப்பதை காணலாம்” என்று கூறியவர் = தமிழ் கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன்.
  • மயிலாடுதுறையில் கண்டெடுக்கப்பட்ட கற்கோடாரியில் உள்ள குறியீடுகள், சிந்துவெளி குறியீடுகளுடன் ஒத்திருக்கின்றன” என்று கூறியவர் = தமிழ் கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன்.
  • மே 2007ல் தமிழ்நாடு தொல்லியல் துறையால் பூம்புகாருக்கு அருகே “மேலபெரும்பள்ளம்” என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட “பானைகளில்” உள்ள அம்பு குறியீடுகள் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினைகளை போன்று உள்ளன.
  • “சிந்துவெளி எழுத்துக்களின் குறியீடுகள் திராவிட ஒற்றைக் குறிப்பு வேர்களுடன் ஒத்துப்போகின்றன” என்று கூறியவர் = வரலாற்று அறிஞர் பர்போலா.
  • 9TH பண்டைய நாகரிகங்கள்

புத்தக வினாக்கள்

  1. சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை __________ என்கிறோம்? = சித்திர எழுத்து.
  2. எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை __________? = மம்மியாக்கம்.
  3. சுமேரியர்களின் எழுத்துமுறை _____________ ஆகும்? = கியூனிபார்ம்.
  4. ஹரப்பா மக்கள் _____________ பற்றி அறிந்திருக்கவில்லை? = இரும்பு மற்றும் குதிரை.
  5. சிந்துவெளி மக்கள் “இழந்த மெழுகு செயல்முறை” முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை ______________ ஆகும்? = நடனமாடும் பெண்.
  6. i) மெசபடோமியாவின் மிகப் பழமையான நாகரிகம் அக்காடியர்களுடைய நாகரிகம் ஆகும். ii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள். iii) யூப்ரடிஸ், டைக்ரிஸ் ஆகிய ஆறுகள் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன. iv) பாபிலோனிய அரசனான ஹமுராபி பெரும் சட்ட வல்லுநர் ஆவார்.

விடை = (iv) சரி.

  1. (i) யாங்ட்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது. (ii) வு-டி சீனப்பெருஞ்சுவரை கட்டினார். (iii) சீனர்கள் வெடிமருந்தை கண்டுபிடித்தனர். (iv) தாவோயிசத்தை நிறுவியவர் மென்சியஸ் என்று சீன மரபு கூறுகிறது.

விடை = (iii) மட்டும் சரி.

  1. பின்வருவனவற்றுள் மெசபடோமியாவை சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை? = இ) சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள் – அஸிரியர்கள்.
  2. ___________ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்? = ஸ்பிங்க்ஸின்
  3. எகிப்தியர்கள் தொடக்க காலத்தில் பயன்படுத்திய உருவ எழுத்துகள் சார்ந்த முறை _____________ ஆகும்? = ஹைரோகிளிபிக்ஸ்
  4. _______________ என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களை விளக்கிக்கூறும் பண்டைய பாபிலோனியாவின் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்? = ஹமுராபி சட்டத் தொகுப்பு.
  5. சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர் ___________ ஆவார்? = லாவோ ட் சு.
  6. ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள ___________ உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன? = சுடுமண்ணால் செய்யப்பட்ட.
  7. 9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
  8. 9TH பண்டைய நாகரிகங்கள்

Leave a Reply