9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
- தொல் பழங்கால மக்கள் மானுடப் படைப்பாற்றலின் முன்னோடிகள் ஆகும்.
- புவியின் மேலடுக்குகளில் மனித மூதாதையர்களின் எழுபுகளின் புதைபடிவங்கள் (fossil bones) புதைந்துள்ளன.
தொல்லியல் என்றால் என்ன
- தொல்பொருள்களை ஆராய்ந்து, விளக்கமளிப்பதன் வழியாக மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராயும் இயல் தொல்லியல் (Archaeology) ஆகும்.
தொல்மானுடவியல் என்றால் என்ன
- மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து புதைப் படிமங்கள வழியாக ஆய்ந்து அறிந்துக் கொள்ளும் இயல், தொல்மானுடவியல் (Palaeonthropology) ஆகும்.
மண்ணடுக்கியல் என்றால் என்ன
- இயற்கை மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளால் உருவான பாறை மற்றும் மண் அடுக்குகளில் தோற்றம், தன்மை, உறவுமுறைகள் குறித்து ஆராயும் இயல் “மண்ணடுக்கியல்” (Stratigraphy) எனப்படும்.
- 9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
புவியின் தோற்றம்
- பூமி எத்தனை ஆண்டுகளுக்கு முன் உதயமானது = 4.54 பில்லியன் ஆண்டுகள்.
- புவியின் நீண்ட வரலாற்றை ஆய்வாளர்கள் எவ்வாறு பிரிக்கின்றனர்?
- நெடுங்காலம் (Era), காலம் (Period), ஊழி (Epoch).
- நவீன மனித இனம் எதில் இருந்து தோன்றியது? = “ஆஸ்ட்ரோலோபித்திசின்கள்” எனப்படும் குரங்கு இனத்தில் இருந்து நவீன மனிதன் தோன்றினான்.
- ஆஸ்ட்ரோலோபித்திசின்கள் உருவான காலம் = சுமார் நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்.
வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர்
- வரலாற்றின் தந்தை (Father of History) என அழைக்கப்படுபவர் = கிரேக்க நாட்டை சேர்ந்த “ஹெரோடோடஸ்”.
- ஏனென்றால் அவர் எழுதிய வரலாறு மனிதத்தன்மையுடனும், பகுத்தறிவுடனும் காணப்பட்டது.
- 9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
உலகின் மிகப்பழமையான அருங்காட்சியகம்
- உலகின் முதல் அருங்காட்சியகம் = என்னிகால்டி-நன்னா அருங்காட்சியகம் (மெசபடோமியா). இது கி.மு 530இல் அமைக்கபப்ட்டுள்ளது.
- உலகின் மிகப்பழமையான அருங்காட்சியகம் = 1471இல் இத்தாலியில் அமைக்கப்பட்ட “கேபிடோலைன்” அருங்காட்சியகம்.
- இன்றும் உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் மிகப்பழமையான அருங்காட்சியகம் (oldest surviving museum) = 1471இல் இத்தாலியில் அமைக்கப்பட்ட “கேபிடோலைன்” அருங்காட்சியகம்.
- உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழக அருங்காட்சியகம் (oldest university museum) = இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள “ஆஷ்மோலியன்” அருங்காட்சியகம் (கி.பி. 1677ல் உருவாக்கப்பட்டது).
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
மனிதனின் தோற்றம்
- மனிதரின் தோற்றத்தை புரிந்துக் கொள்ள உதவும் கருத்துக்கள்,
-
-
- ஹெர்பெர்ட் ஸ்பென்சரின் “உயிரியல் பரிணாமக் கொள்கை”
- சார்லஸ் டார்வினின் “இயற்கைத் தேர்வு” கொள்கை
- சார்லஸ் டார்வினின் “தகவமைப்பு (தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்)” கொள்கை.
-
-
- “உயிரினங்களின் தோற்றம் குறித்து” என்னும் நூலின் ஆசிரியர் = சார்லஸ் டார்வின்.
- “மனிதனின் தோற்றம்” என்னும் நூலின் ஆசிரியர் = சார்லஸ் டார்வின்.
- 9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
மனிதர்களின் பரிணாமமும் இடப் பெயர்வும்
- “பெருங்குரங்குகள்” (கிரேட் ஏப்ஸ் (Great Apes)) என்பவை யாவை = மனிதர்கள் + சிம்பன்சி + கொரில்லா + உராங்உட்டான் குரங்குகள்.
- மரபணு ரீதியாக மனிதர்களுக்கு மிக நெருக்கமானது = சிம்பன்சி குரங்கு.
- எந்த இனத்தின் மரபணு பண்புகள் மனித இனத்துடன் 98% ஒத்துப் போகின்றன = சிம்பன்சி.
- ஹோமினின் என்றால் என்ன = ஹோமினின் என்பது மனிதர்களின் மூதாதையர்கள்.
- ஹோமினின் முதலில் தோன்றிய இடம் = ஆப்ரிக்கா.
- ஹோமொனின் குழுவின் தொடக்க இனம் எது = ஆஸ்ட்ரோலோபித்திசின்.
- ஆஸ்ட்ரோலோபித்திசினின் எலும்புக்கூட்டுச் சான்றுகள் கிடைத்துள்ள இடம் = ஆப்ரிக்காவின் கிரேட் ரிஃப்ட் (பெரும் பிளவு) என்னுமிடத்தில்.
- “லூசி” என்று பெயரிடப்பட்ட ஆஸ்ட்ரோலோபித்திசினின் உடல் எலும்புகள் கிடைதுல் இடம் = ஆப்ரிக்காவின் கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு.
ஹோமினிட்
- நவீன மற்றும் அழிந்து போன அணைத்து பெருங்குரங்கு இனங்களும் (கிரேட் ஏப்ஸ்) ஹோமினிட் என்று அழைக்கப்படுகின்றன.
- மனிதர்களையும் உள்ளடக்கிய வகை “ஹோமினிட்” ஆகும்.
- 9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
ஹோமினின்
- ஹோமினின் என்றால் என்ன = விலங்கியல் பழங்குடி இனம்.
- ஹோமினின் = நவீன மனிதர்கள் (ஹோமோ சேப்பியன்ஸ்) + நியாண்டர்தால் இனம் + ஹோமோ எரக்டஸ் + ஹோமோ ஹெபிலிஸ் + ஆஸ்ட்ரோலோபித்திசின்.
- ஹோமினின் பிரிவில் அடங்காத இனம் = கொரில்லா குரங்கு இனம்.
- ஹோமோ ஹெபிலிஸ் = முதன் முதலில் கருவிகள் செய்த மனித மூதாதையர் இனம்.
- ஹோமோ எரக்டஸ் = கைக்கோடாரிகளை செய்த மனித மூதாதையர் இனம்.
- நவீன மனிதர்கள் = ஹோமோ சேப்பியன்ஸ்..
- அறிவுக் கூர்மையுடைய மனிதன் = ஹோமோ சேப்பியன்ஸ்.
பிக்மி சிம்பன்சி
- மனிதர்களான நமக்கு நெருக்கமான, தற்போதும் உயிர்வாழும் உயிரினங்கள் = சிம்பன்சி மற்றும் பிக்மி சிம்பன்சி (போனோபோ).
- “போனோபோ” என்பது = பிக்மி சிம்பன்சி குரங்குகள்.
ஒல்டோவான் தொழில்நுட்பம் என்றால் என்ன
- ஒல்டோவான் தொழில்நுட்பம் என்பது மனித மூதாதையர்களின் கற்கருவிகள் பண்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தல் ஆகும்.
மனித மூதாதையர்களின் தொடக்கக்கால கற்கருவிகள் சேர்க்கை
- மனித மூதாதையர்களால் உருவாக்கப்பட்ட தொடக்கக்காலக் கற்கருவிகள் எங்கு கிடைத்துள்ளன = ஆப்ரிக்காவின் கென்யா நாட்டில் உள்ள “லோமிக்குவி” என்னுமிடத்தில்.
- ஒல்டோவன் கருவிகள் எங்கு கிடைத்துள்ளன = ஆப்ரிக்காவின் ஒல்டுவாய் பள்ளத்தாக்கு.
- ஒல்டுவாய் என்னுமிடத்தில் கிடைத்த கருவி = வெட்டுக்கருவி.
- “பிளேக்ஸ்” கருவிகளை பயன்படுத்தியவர்கள் = ஆஸ்ட்ரோலோபித்திசின்.
- “பிளேக்ஸ்” (Flakes) என்றால் என்ன = பிளேக்ஸ் எனப்படும் கற்செதில்களை கொண்டு கருவிகளை உருவாக்குதல்.
- 9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
கீழ்ப் பழங்கற்காலப் பண்பாடு
- கீழ்ப் பழங்கற்காலப் பண்பாட்டில் வரும் மனித மூதாதையர் இனங்கள் = ஹோமோ ஹெபிலிஸ மற்றும் ஹோமோ எரக்டஸ்.
- “இருமுகக் கருவிகளை” (biface) பயன்படுத்தியவர்கள் = ஹோமோ ஹெபிலிஸ மற்றும் ஹோமோ எரக்டஸ்.
- சமபங்கு உருவ அமைப்பை கொண்ட கருவிகள் = இருமுகக் கருவிகள்.
- கருக்கல் (core) ஏற்னால் என்ன = ஒரு கல்லின் முதன்மைப் பாளம் ஆகும்.
- கீழ்ப் பழங்கற்காலப் பண்பாட்டில் தொடர்புடைய கற்கருவிகள் = கைக்கோடரி (அச்சூலியன் கருவி), வெட்டுக்கருவி.
- “அச்சூலியன் கருவிகள்” (Acheulian Tools) என்றால் என்ன = கைக்கோடாரிக் கருவிகள் அச்சூலியன் கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன.
அச்சூலியன் கருவிகள்
- அச்சூலியன் கருவிகள் (Acheulian Tools) முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் = பிரான்ஸ் நாட்டில் உள்ள “செயின்ட் அச்சூல்” என்னுமிடத்தில்.
- அச்சூலியன் கருவிகள் = கைக்கோடாரிகள்.
- இந்தியாவில் அச்சூலியன் கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் = சென்னைக்கு அருகில், கர்நாடகாவின் இசாம்பூர், மத்தியப் பிரதேசத்தின் பிம்பேட்கா.
இடைப் பழங்கற்காலப் பண்பாடு
- இடைப் பழங்கற்காலப் பண்பாட்டில் வாழந்த இனம் = ஹோமோ எரக்டஸ்.
- இடைப் பழங்கற்காலப் பண்பாட்டில் பயன்படுத்தப்பட்ட கருவிகள் = கூர்முனை கருவிகள், சுரண்டும் கருவிகள், சிறு அறுக்கும் தகடுகள்.
- லெவலாய்சியன் (லெவலவா) கருவிகள் செய்யும் முறை எந்த கால பண்பாட்டை சேர்ந்தது = இடைப் பழங்கற்காலப் பண்பாடு.
- லெவலாய்சியன் (லெவலவா) கருவிகள் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் = பிரான்ஸ் நாட்டின் லெவலவா என்னுமிடத்தில்.
- இறந்தவர்களை முறையாக புதைத்த மனித இனம் = நியாண்டர்தால் மனித இனம்.
- 9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
மேல் பழங்கற்காலப் பண்பாடு
- மேல் பழங்கற்காலப் பண்பாட்டில் உருவாக்கப்பட்ட கருவிகள் = நீண்ட அறுக்கும் தகடுகள், “பியூரின்” (burin) எனப்படும் உளிகள்.
- சிலிகா அதிகமுள்ள கற்களை கொண்டு கருவிகள் உருவாக்கப்பட்ட பண்பாடு = மேல் பழங்கற்காலப் பண்பாடு.
- ஓவியங்களும் கலைப் பொருட்களும் உருவான காலம் = மேல் பழங்கற்காலப் பண்பாட்டில்.
- 17000 ஆண்டுகள் பழமையான “லாஸ்கா பாறை ஓவியங்கள்” கண்டுபிடிக்கப்பட்ட இடம் = பிரான்ஸ் நாட்டின் மேற்குப் பகுதி.
- மொழிகள் உருவான காலம் = மேல் பழங்கற்காலப் பண்பாடு காலம்.
- “நுண்கருவிகள்” எனப்படும் “குறுங்கற்கருவிகள்” பயன்பாட்டிற்கு வந்த காலம் = மேல் பழங்கற்காலப் பண்பாட்டு காலம்.
முதல் நவீன மனிதர்கள்
- முதல் நவீன மனிதர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தனர் = சுமார் 300000 ஆண்டுகளுக்கு முன்னர்.
- முதல் நவீன மனிதன் எங்கு தோன்றினான் = ஆப்ரிக்காவின் சகாராவிற்கு தெற்கு பகுதியில் தோன்றினான்.
- சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் வாழ்ந்த மனிதர்கள் = குரோ-மக்னான்கள்.
- “வீனஸ்” என்ற பெண் தெய்வ சிற்பங்கள் கிடைத்துள்ள இடங்கள் = ஐரோப்பா, ஆசியா.
- வீனஸ் என்ற பெண் தெய்வ சிற்பங்கள் எதைக் கொண்டு உருவாக்கப்பட்டன = கல், எலும்பு.
- 9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
இடைக் கற்காலப் பண்பாடு
- இடைக் கற்கால பண்பாட்டில் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகள் = மைக்ரோலித்திக் எனப்படும் சிறு நுண் கற்கருவிகள்.
- நுண்கற்கருவித் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியவர்கள் = இடைக் கற்காலப் பண்பாட்டு மக்கள்.
- கணித வடிவியல் அடிப்படையிலான கருவிகளை செய்தவர்கள் = இடைக் கற்காலப் பண்பாட்டு மக்கள்.
- இடைகற்கால் மக்கள் செய்த எந்த கணித வடிவியல் அடிப்படையிலான கருவிகளை உருவாக்கினர் = பிறைவடிவ, முக்கோண சரிவகம் வடிவிலான கருவிகளை உருவாக்கினர்.
- எந்த காலத்தில் மரத்தினால் ஆன கைப்பிடிகள் கொண்ட கற்கருவிகள் உருவாக்கப்பட்டன = இடைக் கற்காலப் பண்பாட்டில்.
புதிய கற்காலப் பண்பாடு
- வேளாண்மை, விலங்குகள் பழகுதல் ஆகியவை துவங்கிய காலம் = புதிய கற்காலப் பண்பாட்டில்.
- வளமான பிறை நிலப்பகுதிகள் என்று அழைக்கப்படும் பகுதிகள் = எகிப்து மற்றும் மெசபடோமியா.
- பிறை நிலப்பகுதி என்றால் என்ன = எகிப்து, இஸ்ரேல் – பாலஸ்தீனம், ஈராக் ஆகியவை அடங்கிய பகுதிகள் பிறை நிலவின் வடிவத்தில் உள்ளன. எனவே இப்பகுதிகள் வளமான பிறை நிலப்பகுதி என்று அழைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் பிற்பழங்காலப் பண்பாடு
- ஹோமினின் என அழைக்கப்படும் மனித மூதாதை இனத்தால் உருவாக்கப்பட்ட கற்காலக் கருவிகளிலேயே காலத்தால் முந்தைய பகுதியை சேர்ந்த கருவிகள் தமிழ்நாட்டில் தான் உருவாக்கப்பட்டன.
- தமிழகத்தில் தொல் பழங்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ள இடம் = சென்னைக்கு அருகே அத்திரம்பாக்கம், குடியம் குகை.
- தமிழகத்தின் எப்பகுதியில் கிடைத்த பிற்பழங்காலப் பொருட்கள், காஸ்மிக் கதிர்கள் மூலம் காலத்தை கணிக்கும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது = அத்திரம்பாக்கம்.
- தமிழ்நாட்டில், மனித மூதாதையர்கள் வசித்த மிக முக்கியமான இடங்களில் ஒன்று = கொசஸ்தலை ஆறு பகுதி.
- தமிழ்நாட்டில் கொசஸ்தலை ஆறு பகுதியில் வாழ்ந்த மனித மூதாதையர்கள் எந்த வகையை சேர்ந்தவர்கள் ஆவர் = ஹோமோ எரக்டஸ்.
- 9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
இந்தியாவில் முதன் முதலாக பழங்கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்
- இந்தியாவில் முதன் முதலாக பழங்கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் = சென்னைக்கு அருகே உள்ள பல்லாவரம்.
- சென்னைக்கு அருகே பல்லாவரத்தில் முதன் முதலில் பழங்கற்காலக் கருவிகளை கண்டுபிடித்தவர் = சர் இராபர்ட் புரூஸ் ஃபூட்.
- சென்னைக்கு அருகே முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட பழங்கற்காலக் கருவி = கைக்கோடரி.
- சென்னை பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்கோடரிகளால், “சென்னை கற்காலத் தொழிலகம்” (Madras Stone Tools Industry) என்று அழைக்கப்படுகிறது.
கீழ் பழங்கற்காலப் பண்பாடு
- தமிழகத்தில் கீழ்ப்பழங்கற்காலப் பண்பாட்டில் பயன்படுத்தப்பட்ட முக்கிய கருவிகள் = கைக்கோடரி, பிளக்கும் கருவிகள்.
- “குவார்சைட்” என்னும் கூழாங்கற்களை கொண்டு கருவிகளை உருவாக்கினர்.
- கீழ் பழங்கற்கால கருவிகள் தமிழகத்தில் கிடைத்துள்ள இடங்கள் = பல்லாவரம், குடியம் குகை, அதிரம்பாக்கம், வடமதுரை, எருமை வெட்டிப்பாளையம், பரிக்குளம், வட ஆற்காடு, தருமபுரி.
- கீழ் பழங்கற்காலக் கருவிகள் கிடைக்காத இடங்கள் = தென் தமிழகம், இலங்கை.
- “பசால்ட்” என்னும் எரிமலை பாறைகளை (தீப் பாறைகள்) கொண்டு உருவாக்கப்பட்ட கருவிகள், தமிழகத்தில் எங்கு கிடைத்துள்ளன = வட ஆற்காடு, தருமபுரி.
தமிழ்நாட்டில் இடைப் (மத்திய) பழங்கற்காலப் பண்பாடு
- சிறிய அளவிலான கருவிகள் பயன்படுத்தப்பட்ட பண்பாடு = இடைப் பழங்கற்காலப் பண்பாடு.
- தமிழ்நாட்டில் இடைப் பழங்கற்காலப் பண்பாட்டு சான்றுகள் கிடைத்துள்ள இடங்கள் = தே.புதுப்பட்டி, சீவரக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர்.
- 9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
தமிழ்நாட்டில் இடைக்கற்காலப் பண்பாடு
- தமிழ்நாட்டில் இடைக்கற்காலத்தில் வேட்டையாடி – உணவு சேகரிப்போர் பற்றிய சான்றுகள் கிடைத்துள்ள இடம் = சென்னை, வட ஆற்காடு, தருமபுரி, சேலம், கோயம்புத்தூர், அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி.
- தமிழ்நாட்டில் இடைக்கற்கால கருவிகள் அதிகளவு கிடைத்த இடம் எது = தூத்துக்குடி மாவட்டத்தின் “தேரி” பகுதிகளில்.
- தேரி = தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவப்பு மணல் குன்றுகள்.
- தமிழ்நாட்டில் “செர்ட்” (Chert) என்னும் பொருளாலான கருவிகளை பயன்படுத்திய பண்பாடு = இடைக்கற்காலப் பண்பாடு.
தமிழ்நாட்டில் புதிய கற்காலப் பண்பாடு
- விலங்குகளைப் பழக்கப்படுத்தி, வேளாண்மை செய்த பண்பாடு = புதிய கற்காலப் பண்பாடு.
- புதிய கற்காலப் பண்பாட்டில் மக்கள் பயன்படுத்திய கருவி = “செல்ட்” (Celt) என்ற மெருகேற்றப்பட்ட கற்கோடரி.
- தமிழ்நாட்டில் புதிய கற்காலப் பண்பாட்டு சான்றுகள் கிடைத்துள்ள இடங்கள் = வேலூர் மாவட்டம் பையம்பள்ளி, தருமபுரி.
தமிழ்நாட்டில் முதன் முதலில் வேளாண்மை செய்ததற்கான சான்று
- தமிழகத்தில் முதன் முதலில் மண் பாண்டங்கள் செய்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் = வேலூர் மாவட்டம் பையம்பள்ளி.
- தமிழகத்தில் முதன் முதலில் விலங்குகளை வளர்த்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் = வேலூர் மாவட்டம் பையம்பள்ளி.
- தமிழகத்தில் முதன் முதலில் வேளாண்மை செய்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் = வேலூர் மாவட்டம் பையம்பள்ளி.
- தமிழகத்தில் மக்கள் கேழ்வரகு, கொள்ளு, பச்சைப்பயிறு ஆகியை வேளாண்மை செய்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் = வேலூர் மாவட்டம் பையம்பள்ளி.
- 9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
முதன் முதலில் மண்பாண்டம் செய்தவர்கள்
- முதன் முதல் மட்பாண்டங்களை செய்தவர்கள் = புதிய கற்கால மனிதர்கள்.
- புதிய கற்கால மனிதர்கள் கையாலோ அல்லது சக்கரம் கொண்டே மண் பாண்டங்களை செய்துள்ளனர்.
இரும்புக் காலம் (பெருங்கற்காலம்)
- புதிய கற்காலத்திற்கு அடுத்து வந்த காலம் = இரும்புக் காலம்.
- சங்க காலத்திற்கு முந்திய காலம் = இரும்புக் காலம்.
- நல்ல பண்பாட்டு வளர்ச்சி உருவான காலம் = இரும்புக் காலம்.
- தமிழ்நாட்டில் இரும்புக்காலத்திற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடங்கள்,
-
-
- தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர்
- மதுராந்தகம் அருகே சாணூர்
- புதுக்கோட்டை அருகே சித்தன்னவாசல்.
-
-
- “பெருங்கற்காலம்” எனப்படும் காலம் = இரும்புக் காலம்.
பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்
- பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்,
-
-
- டோல்மென் எனப்படும் கற்திட்டை
- சிஸ்ட் எனப்படும் கல்லறைகள்
- மென்ஹிர் (நடுகற்கள்) எனப்படும் நினைவுச்சின்ன குத்துக் கல்
- தாழி, பாறையை குடைத்து உருவாக்கிய குகைகள்
- சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள்
-
-
- கொடக்கல் அல்லது குடைக்கல் (குடை வகை), தொப்பிக்கல், பத்திக்கல் வகை ஈமச்சின்னங்கள் காணப்படும் இடம் = கேரளா.
- மேஜை போன்ற மைப்பு கொண்ட ஈமச்சின்னம் = டோல்மென்.
- மண்ணில் புதைக்கப்படும் கல்லறை = சிஸ்ட்.
- தமிழகத்தில் “மூடி உள்ள தாழி” வகை கல்லறை காணப்படும் இடம் = ஆதிச்சநல்லூர்.
- தமிழ்நாட்டில் கல்வட்டமும், நெடுங்கல்லும் கொண்டு உருவாக்கப்பட்ட கல்லறை காணப்படும் இடம் = கொடுமணல்.
- தமிழ்நாட்டில் கற்பலகைகள் கொண்டு உருவாக்கப்பட்ட கல்லறை காணப்படும் இடம் = கொடுமணல்.
- 9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
தமிழகத்தில் ஈமச்சின்னங்களுள் நெல்லை வைத்து புதைத்தல்
- தமிழ்நாட்டில் பெருங்கற்கால காலத்தில் ஈமச்சின்னங்களுள் நெல்லை வைத்து புதைத்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடங்கள்,
- தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர்
- பழனி அருகே உள்ள பொருந்தல்.
இரும்புக்கால மட்பாண்டங்கள்
- இரும்புக்கால, சங்கக்கால மக்கள் மண்பாண்டங்களில் பயன்படுத்திய நிறங்கள் = கருப்பு, சிவப்பு.
- மண்பாண்டத்தில் உள்ளே கருப்பு நிறமும், வெளிப்புறம் சிவப்பு நிறமும் பூசப்பட்டிருந்தன.
- தமிழகத்தில் கருப்பு – சிவப்பு நிற பானை ஓடுகள் கிடைத்த இடம் = தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர்.
- தமிழகத்தில் கல்லறைகளில் இருந்து இரும்பு வாளும், கத்தியும் கிடைத்துள்ள இடம் = தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர்.
- தமிழ்நாட்டில் எந்த பகுதியில் ஈமச் சின்னங்களில் இருந்து வெண்கலக் கிண்ணம் கிடைத்தது = ஆரோவில் (புதுச்சேரி).
பண்டைய தமிழகத்தின் பண்பாடுகள் பற்றிய காலவரிசை
பண்பாடு | காலம் | பண்பாட்டுக் கூறு |
---|---|---|
பழங்கற்காலம் | 20,00,000 ஆண்டுகள் முன்பு முதல் கி.மு. (பொ.ஆ.மு.) 8,000 வரை | கைக்கோடரி, வெட்டுக்கருவி. வேட்டையாடுதல், உணவுசேகரித்தல் |
இடைக் கற்காலம் | கி.மு. (பொ.ஆ.மு.) 8,000 முதல் கி.மு. (பொ.ஆ.மு.) 1,300 வரை | நுண்கற்கருவிகள், தாவர உணவுகளைச் சேகரித்தல், விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடுதல், உலோகம் பற்றி இவர்களுக்குத் தெரியாது. |
புதிய கற்காலம் | கி.மு. (பொ.ஆ.மு.) 2,000 முதல் கி.மு. (பொ.ஆ.மு.) 1,000 வரை | மெருகேற்றப்பட்ட கற்கோடரிகள், நுண்கற்கருவிகள், விலங்குகளைப் பழக்குதல், பயிரிடுதல், குழுக்களின் பெருக்கம், வேட்டையாடுவோர் - உணவு சேகரிப்போர், மேய்ச்சல் சமூகத்தினர் என இருவிதமான குழுக்களும் ஒரே சமயத்தில் வாழ்ந்தன |
இரும்புக் காலம் | கி.மு. (பொ.ஆ.மு.) 1,300 முதல் கி.மு. (பொ.ஆ.மு.) 300 வரை | பெருங்கற்கால ஈமச்சடங்கு முறை, உணவு சேகரிப்போரும் மேய்ச்சல் சமூகத்தினரும் ஒரே சமயத்தில் வாழ்தல். குழுத் தலைவர் உருவாதல். இரும்பின் பயன்பாடு அறிதல். கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், கருப்பு மட்பாண்டங்கள் உருவாக்குதல். கைவினைத் திறன்களில் சிறப்பு நிபுணர்கள் உருவாகுதல் - குயவர்கள், கொல்லர்கள் |
பண்டைய வரலாற்று மற்றும் சங்ககாலம் | கி.மு. (பொ.ஆ.மு.) 300 முதல் பொ.ஆ. 300 வரை | இரும்புக் கால மரபுகளோடு சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வளர்ச்சி, வீரர்களை வழிபடுதல், இலக்கிய மரபு, கடல்வழி வணிகம். |
புத்தக வினாக்கள்
- மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது? = சிம்பன்சி.
- வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்? = புதிய கற்காலம்.
- பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ___________ ஆவர்? = ஹோமோ சேப்பியன்ஸ்
- எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி ______________ எனப்படுகிறது? = பிறைநிலப் பகுதி
- சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் ____________ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்? = பழங்கற்காலம்.
- i) எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும். ii) வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினார்கள். iii) வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றன. iv) வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது. விடை = (i) மற்றும் (iv) சரி.
- i) செல்ட் எனப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள். ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது. iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் பழங்கற் காலம் எனப்படுகிறது. iv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது. விடை = (i) மட்டும் சரி.
- கூற்று:தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது
விடை = கூற்றும் தவறு, காரணமும் தவறு.
- கைக் கோடரிகளும் வெட்டுக் கருவிகளும் _____________ பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவி வகைகளாகும்? = கீழ்பழங்கற்காலப்
- கற்கருவிகளை உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறைகளும் நுட்பமும் ____________ தொழில்நுட்பம் என அழைக்கப்படுகின்றன? = கல் (lith)
- பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் ____________ எனப்படும்? = இடைக் கற்காலம்.
- 9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்