9th Samacheer Kalvi History Study Material in Tamil – 1

பண்டைய நாகரீகங்கள்

  • கி.மு.5000க்கும் கி.மு.500 ஆம் ஆண்டிற்கும் இடையே வெண்கலக் காலம் உலகின் வெவ்வேறு பகுதிகளில் நாகரீகத்தைத் தோற்றுவித்தது.
  • ஹரப்பா நாகரீகம் கி.மு.3500-கி.மு.1500 மெசபடோமியா நாகரீகம் கி.மு.3500- கி.மு.1000 நைல்நதி நாகரீகம் கி.மு.4000- கி.மு.525 மஞ்சள் நதி நாகரீகம் அல்லது ஹூவாங்கோ நதி நாகரீகம் கி.மு.3500-கி.மு.3000 ஹெரடோடஸ் என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் எகிப்திய நாகரீகத்தை நைல் நதியின் நன்கொடை என்று அழைக்கிறார்.
  • நைல் நதியின் மகள் என்றும் எகிப்து சிறப்பிக்கப்படுகிறது.
  • எகிப்திய நாகரீகம் 5000 ஆண்டுகளுக்கு முன் புகழ் வாய்ந்ததாக இருந்தது.
  • பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட மன்னர்களின் உடல்கள் மம்மிகள் ஆகும்.
  • எகிப்திய அரசர்களில் முக்கியமானவர்கள் முதலாம் தட்மோஸ் மற்றும் முன்றாம் தட்மோஸ்.
  • பேரரசர் முன்றாம் தட்மோஸ் எகிப்திய நெப்பெலியன் என்று அழைக்கப்பட்டார்.
  • எகிப்திய சமுதாயம், பிரபுக்கள் (பாரோக்கள்) மத்திய தர வகுப்பினர் மற்றும் அடிமைகள் என்று மூன்று பிரிவுகளாக இருந்தது.
  • 25 விவசாயம் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. கால்வாய்கள், மதகுகள், நீர்த்தேக்கங்கள் கட்டி வேளாண்மை செய்தனர்.
  • உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபம் வளர்ந்திரந்தது. நைல் நதி வழியாகவும் வாணிபம் நடைப்பெற படகு போக்குவரத்து முக்கியம் வாய்ந்ததாக இருந்தது.
  • பல தெய்வங்களை பண்டைய எகிப்தியர் வணங்கினர்.
  • அமோன், ஆடன், ரா என்ற சூரியக் கடவுளைப் போற்றினர்.
  • இத்தெய்வங்களின் உருவங்கள் மிகப்பெரிய கற்களில் செதுக்கியிருந்தனர்.
  • மிகப் பெரிய கிசே என்பது குபு என்ற பாரோவாவின் கல்லறை 481 அடி உயரம் உடையது.
  • ஸ்பிங்ஸ் என்பது மனித தலையுடன், சிங்கத்தின் உடலமைப்படன் கொண்ட முற்றிலும் கற்பனையான விலங்கு ஆகும்.
  • ஹெரடோடஸ் என்பவர் ‘குபு’ என்ற பாரோவின் பிரமிடு கிசே என்ற இடத்தில் 30,000 பணியாட்களால் 20 ஆண்டுகளில் கட்டப்பட்டது என்கிறார். இது உலகின் ஏழு அதிசியங்களில் ஒன்றாகும். கர்ன்க் என்ற இடத்தில் உள்ள கோயில் அழகான நினைவுச்சின்னம் ஆகும்.
  • பண்டைய எகிப்தியரின் எழுத்து ஹெய்ரோகிளிபி என்பது புனித படம் என்ற கிரேக்க வார்தை முதல் முதலில் சித்திர எழுத்து முறையைப் பின்பற்றினர். நாணலை எழுதுகோலாகப் பயன்படத்தினர்.
  • எகிப்திய இலக்கியங்கள் பொதுவாக மத சார்புள்ள இலக்கியங்கள் ஆகும். இறந்தோர் புத்தகம்  மற்றும் சவப்பெட்டி நூல் என்ற புத்தகம் இதில் அடங்கும்.
  • நைல் நதியின் வெள்ளப் பெருக்கைக் கொண்டு நாட்களைக் கணக்கிட்டு 365 நாட்கள் கொண்ட வருடத்தை தீர்மானித்தது.
  • எகிப்தியர்கள் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். நைல்நதி பொருளாதார வளர்சிக்கு மைய இடம் ஆகும். தந்தம், பொன், கருங்காலி மரம், நெருப்புக்கோழியின் இறகுகள் ஆகியவற்றை அடிமைகள் நுபியா மற்றும் சூடான் என்ற பகுதிக்கு எடுத்துச் சென்றனர்.
  • பண்டைய காலத்தில் பூப்ரடீஸ், டைகிரீஸ் ஆகிய நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய இந்நாகரீகம் பின்னால் சுமேரியர் ஆக்கிரமித்துக் கொண்டனர். இன்று இ;ப்பகுதி ஈராக் மெசபடோமியா என்று கருதுகின்றனர்.
  • 2760 கி.மீ நீளம் கொண்ட யூப்ரடீஸ், 2000 கி.மீ. நீளம் கொண்ட டைகிரீஸ் என்ற இரு நதிகள் ஆர்மீனிய மலையில் உற்பத்தியாகி வளமை பெற்றுள்ளது.
  • நதிகளுக்கிடையே தோன்றிய இந்நாகரீகம் பிறைச்சந்திரளன் வடிவம் போல் தோற்றமளிக்கும் நிலப்பகுதியாகும். எனவே வளமான பிறை  என்று அழைக்கப்பட்டது.
  • பைபிளில் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் ஏதேன் தோட்டம் இங்கு அமைந்துரப்பதாக நம்பப்படுகிறது.
  • சுமேரியன் என்றால் கருத்த தலையினர் என்பதாகும்.
  • வரலாற்று அறிஞர்கள் இவர்கள் ஆரிய மற்றும் செமிட்டிக் இனத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்கின்றனர்.
  • நெபுகாத் நெசார் சால்டிய அரசர்களில் பெருமை வாயந்;தவர் பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான ‚தொங்கும் தோட்டம்‛ என்பதை இவர் அமைத்தார்.
  • முதன் முதலில் பாபிலோனிய வணிகர்கள் பண்டமாற்று முறையை பின்பற்றினர்.
  • ஆப்புவடிவத்தில் இந்த எழுத்துக்கள் இருந்ததால் ஆப்பு எழுத்துக்கள் (கிபூனிபார்ம்) என்று பெயர் பெற்றிருந்தது.
  • களிமண் பலகையில் எழுத்துக்களை எழுதி காயவைத்து நெருப்பில் சுட்டு பத்திரப்படுத்தினர்.
  • 350-க்கும் மேற்பட்ட எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எழுத்துக்கள் வலமிருந்த இடமாக இருந்தது.
  • ‘கில்காமே‘;’ என்ற காவியம் உலகிலேயே மிக புகழ்பெற்ற காவியங்களில் ஒன்றாகும்.
  • வானவியல் மருத்துவமனையில் அதிக முன்னேற்றம் அடைந்திருந்தனர். நட்சத்திரங்களை குறியீடு மூலம் குறித்தனர். அதன் மூலம் நேரத்தையும் காலத்தையும் கணக்கிட்டனர்.
  • வட்டத்தை 360 பாகைகளாகப் பிரித்தனர். 12 மாதம் கொண்ட 365 நாட்கள் கொண்ட ஒரு வருடம் என நிலவு நாட்காட்டியின்படி தயாரித்தனர்.
  • வாரத்திற்கு 7 நாட்கள் என்பதை அறிவித்தவர்கள் சால்டியர்கள்.
  • ஹுவாங்கோ நதி, மஞ்சள்நதி என்று அழைக்கப்படுகிறது.
  • ஏனென்றால் இந்த நதி மஞ்சள் நிறமான வண்டல் மண்னைக் கொண்டு வந்து அதன் இருகரைகளையும் பொன்னிறமாக்குகிறது.
  • ஹுவாங்கோ மற்றும் யாங் சி-கியாங் ஆகிய நதிகள் சீன நாகரீகத்திற்கும் பண்பாட்டிற்கும் வரலாற்றிற்கும் வடிவம் தருபவையாக இருந்து வருகின்றன.
  • ஹுவாங்கோ நதி ‘சீனாவின் துயரம்’ என்று அழைக்கப்படுகிறது. மங்கோலிய இனத்தவர்களான சீனர்கள் குவிந்த கண்களையும், தட்டையான மூக்கினையும், கருத்த முடியையும் உடையவர்கள்.
  • புசி என்பவர் (கி.மு.2852) சீனாவின் முதல் குறிப்பிடத்தக்க மன்னராக அறியப்படுகிறது. கி.மு.1766 முதல் கி.மு.1122 வரை ஆண்ட ‘hங் வம்சத்தினர் மஞ்சள் நதிக்கரைப் பகுதிகளை ஒரே ஆட்சியின் கீழ் ஒன்றுபடுத்தினர்.
  • சௌ வம்சத்தின் காலம் ‘சீனாவின் செம்மைக்காலம்’ என்று சிற்ப்பிக்கப்படுகிறது.
  • சின் வம்சத்தின் மன்னர் ‘யீஹிவாங் தி என்பவர் இந்த நிலப்பிரபுக்களது ஆதிக்கத்தினை முடிவுக்குக் கொண்டு வந்தார். பண்டைய உலக அதிசியங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவரை உருவாக்கியவரும் இவர்தான்.
  • சீனாவின் ஹுவாங்கோ நதிப்பகதிகளை சீர்படுத்தி, கால்வாய்களை அமைத்து, விவசாயத்தை செழிக்கச் செய்தனர்.
  • அவர்களால் செய்யப்பட்ட பீங்கான் கோப்பைகள் சீனக் கோப்பைகள் என்று புகழ் பெற்றன. அவர்கள் குதிரைகளை அறிந்திருந்ததுடன் அவற்றை போர்களிலும் பயன்படுத்தினர்.
  • சீன வணிகத்தில் பெருமளவிற்கு விற்கப்பட்டவை, பட்டு, பீங்கான், உப்பு, இரும்பு போன்றவையாகும்.
  • உள்நாட்டுக் கால்வாய்கள் மூலம் வணிகம் விரிவடைந்தது.
  • உலகப் புகழ் பெற்ற பானமான ‘தேநீர்’ என்பது நவீன உலகத்திற்கு சீனா கொடுத்துள்ள மிகப்பெரிய நன்கொடையாகும்.
  • சீனாவின் பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது மிகவும் செல்வாக்குப் பெற்ற சமயமாக வளர்ந்தது.
  • சீன எழுத்து சித்திர எழுத்தாகத் தோன்றி பின்னர் பலவித மாறுதல்களுக்கு உள்ளானது.
  • கி.பி.2 ஆம் நூற்றாண்டில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • பட்டுத்துணிகளை எழுதுவதற்கு பயன்பட்டது.
  • கி.பி.5ஆம் நூற்றாண்டில் எழுது மையும் அ;றிமுகப்படுத்தப்பட்டது. பிறகு சீனர்கள் மூங்கில் குச்சிகளை எழுதுகோலாக உருவாக்கினர்.
  • உலகின் சில சிறப்பான அறிவியல் கண்டுபிடிப்புகள்  26 சீனாவில் தோன்றியவை.
  • சூரிய கிரகணம், சந்திர கிரகணம் பற்றிய கோட்பாடுகள் அங்கு உருவாயின.
  • முதன் முறையாக அச்சு இயந்திரங்களையும், காகித நாணயங்களையும் அறிமுகப்படுத்தியவர்களும் சீனர்களே.
  • கணிதத்தில் அபாகஸ் முறையை இவர்கள் கொண்டு வந்தனர். அச்சுக்கலை சீனர்களின் நன்கொடையில் சிறப்பானதாகும்.
  • கிரேக்கம் ஒரு தீபகற்பமாகும். பார்வையற்ற ஹோமர் என்னும் கவிஞரால் இயற்றப்பட்ட மாபெரும் காப்பியங்கள் ‘இலியட்’ ‘ஒடிசி’ ஆகும்.
  • கிரேக்கத்தின் மிகப் புகழ் பெற்ற தத்துவ அறிஞர்களாக சாக்கரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மிளிர்ந்தனர்.
  • சாக்ரடிஸின் மாணவரான பிளட்டோ ‘குடியரசு’ என்ற நூலின் ஆசிரியராவார். சாக்ரடீஸ் மேற்கத்திய ‘தத்துவ இயலின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார்.
  • ஹெரோட்டஸ் ‘வரலாற்றியலின் த்ந்தை’ என்று அறி;யப்படுகிறார்.
  • கிரேக்கக் கோயில்கள், குறிப்பாக அலெக்ஸாண்டிரியாவிலுள்ள ஜியுஸ் கோயில் கிரேக்கத்தின் கலைக்குச் சிறந்த எடுத்துக்hட்டுகளாகும்.
  • மிரோன், பீடியாஸ் போன்றவர்கள் பண்டைய கிரேக்கத்தின் புகழ் பெற்ற சிற்பிகளாவர்.
  • உலகிற்கு, சுதந்திரம், அதாவது சிந்தனை உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்ற கருத்தியலைத் தந்தவர்கள் கிரேக்கர்களே என்பதை மறக்க முடியாது.
  • ‘போ’ மற்றும் ‘தைபர்’ நதிக்கரைகள் ரோமானிய நாகரீகத்தை செறிவு+ட்டி வளர்த்தவை.
  • இத்தாலி என்ற பெயர் கிரேக்க மொழியில் உருவானது.
  • உண்மையில் ரோமானிய நாகரீகம் என்பது இத்தாலிய நாகரீகமே எனலாம்.
  • மன்னராட்சி முறை கைவிடப்பட்டு ‘குடியரசுகள்’ உருவாயின. ரோம் நகரக் குடியரசு வலிமை பெற்ற ஒன்றாக வளர்ந்தது.
  • ரோம் நகரம் கி.மு.753-ம் ஆண்டில் ரோமுலஸ், ரேமுஸ் என்ற இரண்டு சகோதரர்களால் நிறுவப்பட்டதென நம்பப்படுகிறது.
  • இச்சட்டத் தொகுப்புகள் பனிரெண்டு பலகைச் சட்டங்கள் என்று அறியப்பட்டன.
  • கி.மு.264 முதல் கி.மு.146 வரை நடைபெற்ற இப்போர்கள் பியு+னிக் போர்கள் என அழைக்கப்படுகின்றன.
  • திறமையான தளபதியும், மக்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்ற வருமான ஜூலியஸ் சீசர் என்பவர்தான் சர்வாதிகாரிகளில் மிகச் சிறந்தவராக கூறப்படுகிறார்.
  • இவர் போர்களில் வெற்றிகளையும், செனட்டில் சீர்திருத்தங்களையும் கொண்டு வந்தாலும் ஏழைகளது நிலைமையை உயர்தியதாலும், அவரது எதிரிகளால் கி.மு.44-ம் ஆண்டு செனட் அவையி;லேயே அவர் கொல்லப்பட்டார்.
  • ‘அகஸ்டஸ்’ என்றால் மகத்தானவர் என்று பொருள்.
  • அகஸ்டஸ்சீசரின் ஆட்சிகாலம் ரோமானிய வரலாற்றில் பொற்காலம் என்று சிறப்பிக்கப்படுகிறது.
  • விவசாயமே ரோமானியர்களின் முக்கியத் தொழிலாக இருந்தது. பார்லி, கோதுமை, பீன்ஸ், திராட்சை, அத்தி போன்றவற்றைப் பயிர் செய்தனர்.
  • விவசாயத்துடன் எருது, ஆடு, குதிரை, கழுதை, செம்மறி ஆடு போன்றவற்றையும் வளர்தனர்.
  • விவசாயத்திற்கும், கால் நடைகளை மேய்பதற்கும் ரோமானியப் பிரபுக்கள் பெரும் எண்ணிக்கையில் அடிமைகளைப் பயன்படுத்தினர்.
  • இந்தியா, அரேபியா, சீனா போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்புகள் வளர்ந்தன.
  • வானத்தின் கடவுளாக ஜூபிடரும் (வியாழன்) படைகளின் கடவுளாக மார்ஸ் என்னும் செவ்வாய் கோளையும் வழிபட்டனர்.
  • காதல் கடவுளாக வீனஸ் (வௌ;ளி) போற்றப்பட்டது. முதலில் ரோமானிய பேரரசர்கள் கிறிஸ்தவ மதத்தைக் கடுமையாக எதிர்த்தனர்.
  • கி.பி.313-ல் ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதுடன் அதனை அரசின் மதமாகவும் அறிவித்தார்.
  • நாளடைவில் ரோம் நகரம் கிறிஸ்துவ மதத் தலைவரான போப்பாண்டவரின் தலைமையகமாகவும் மாறிற்று பாந்தியன் என்பது ஒரு கலைச் சிறப்பு மிக்க ரோமானியக் கோவிலாகும். பாம்பே சிறந்த கட்டிட கலை நிபுணராக இருந்தார். வளைவுகளும் அரை உருண்டை வடிவிலான மேல் அமைப்புகளும் ரோமானியக் கட்டடக்கலையின் சிறப்புக் கூறுகளாகும்.
  • தாசிடஸ் என்பவர் மற்றொரு புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஆவார்.
  • மூத்த பிளினி எழுதிய ‘ இயற்கை வரலாறு‛, அறிவியல் உண்மைகளைக் கொண்டதாகும். தாலமி என்ற கிரேக்க வானவியல் புவியியல் அறிஞர் ரோமானியப் பேரரசில் வாழ்ந்தவர்.
  • லத்தீன் மொழி, ‘ ஒரு உலகம் – ஒரு குடிமை உரிமை – ஒரு சட்டம் என்ற அடிப்படையிலான ரோமானிய அமைதி  முறையான ராணுவ அமைப்பு, பொறியியல் நுட்பம், சட்டத் தொகுப்பு, போன்றவை உலகிற்கு ரோமனியர்கள் அளித்துள்ள விலைமதிப்பில்லா அரிய நன்கொடைகளாகும்

Leave a Reply