9th Samacheer Kalvi History Study Material in Tamil – 3

இடைக்காலம்

  • கிழக்கு ரோமானிய பேரரசு அல்லது பைசான்டியப் பேரரசு, கான்ஸ்டாண்டிநோபிளை தலைநகரமாக கொண்டு உருவாகியது.
  • இப்பேரரசு கி.பி.1400 வரை கிழக்கு ஐரோப்பா முழுமையையும் ஆட்சி செய்தது.
  • கி.பி.180 ஆம் ஆண்டு நிகழ்ந்த பேரரசர் மார்கஸ் அரோல்யஸின் மறைவு ரோமப் பேரரசுக்கு ஒரு திருப்புமுனையாகும்.
  • சீசரின் வலிமையான ரோமானியப் பேரரசின் வீழ்ச்சி இயற்கையாக காலத்தால் ஏற்பட்டது. சூறாவளி, பு+கம்பம், தீ, வௌ;ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் நாட்டை அழித்தது.
  • செல்வச் செழிப்பால் நாட்டில் நன்னடத்தையின்றி ஒழுக்கக் கேடுகள் விளைந்தன.
  • திருச்சபையின் வளர்ச்சி ரோமானியப் பேரரசில் ஒரு பேரரசாக உருவாகியது.
  • கொள்கையிலும், நம்பிக்கையிலும், திருச்சபை, அரசுக்கு எதிராக இயங்கியது.
  • மக்களுக்கும் ஆட்சி செய்வோர்களிடம் பல்வேறு அதிருப்தியான எண்ணங்கள் இருந்ததால் ரோமப் பேரரசு அழியக் காரணமாக இருந்தது.
  • ரோமப் பேரரசில் மன்னருக்குப் பிறகு அவரது வாரிசுகள் ஆட்சி செய்ய வேண்டும் என்ற சட்டங்கள் இல்லை.
  • எனவே உள்நாட்டு குழப்பங்கள், பல குழுக்களின் அமைப்பு, அலிசன் நடவடிக்கை, பேரரசை பலவீனமடையச் செய்தது.
  • இடைக்காலத்தில் நிலமானிய முறை மிக முக்கியமானது.
  • ‘நிலமானியம்’ என்ற வார்த்தை லத்தின் மொழிச் சொல் ‘நிலம்’ என்பதிலிருந்து பெறப்பட்டது.
  • நிலமானிய முறை என்பது ஒரு சமுதாய அமைப்பாகவும, நிர்வாகமுறை நிலவுடைமையாளர்களை சார்ந்தும் இருந்தது.
  • இவ்வாறு நிலமானிய முறையில் நிலமானியதார்கள் மான்யதாரர், பாரன்கள் மற்றும் மனோர் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர்.
  • நைட் என்ற போர் வீரர்களின் திறமை, வீரம், மக்களிடையே தியாக உணர்வையும், பக்தியையும் ஊக்குவித்தது.
  • நிலமானிய முறை சமுதாயத்தில் வசதியுள்ளோர், வசதியற்றோர் என்ற நிலையை உருவாக்கி சீரழித்தது.
  • கல்வி வளர்ச்சியும், கல்வி கற்றல் வளர்ச்சியும் முழு அளவில் செயல்படவில்லை. நீதி கேலிக் கூத்தாகியது.
  • கான்ஸ்டன்டைன் மன்னர் காலத்திலிருந்து ரோமானிய பேரரசர்கள் திருச்சபையையும் கிறித்தவர்களையும் ஆதரிக்கத் தொடங்கினர். 6 ஆம் நூற்றாண்டில் போப்பாண்டவர் திருச்சபைக்கும், ஆட்சி செய்யும் பேரரசுகளுக்கும், பேரரசர்களுக்கும் தலைவராவார்.
  • போப்பாண்டவர் ஆட்சியில் இறைவன் முன் ஏழை,  28 பணக்காரன் இருவரும் சமம் என்பதால் சமத்துவ உணர்வு வளர்ந்தது.
  • போப் ஆட்சியில் கல்வி நிறுவனங்கள் மூலம் அறிவு வளர்ச்சிப் பெற்றது. தற்பேதைய தலைமுறை வளர்ச்சியடைய வழி வகுத்தது.
  • பண்டையக்கால ரோமப் பேரரசில் கிறித்தவ சமயத்திற்கு இடமில்லை. ஆனால் புதிய ரோமப்பேரரசில் கிறித்தவ சமயம் அரசு சமயமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • ஜெர்மனியில் தேசிய ஒற்றுமையை கொண்டு வந்தது.
  • மேலும் இங்கிலாந்து, பிரான்சு, மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் தோன்றவும் ரோமானிய பேரரசு காரணமாக இருந்தது.
  • ஆலந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல நகரங்கள் துறைமுகமாகவோ, வர்த்தக வாண்ப மையமாகவோ வளர்ந்தது.
  • இந்நகரங்கள் இடைகால ஐரோப்பிய நாகரீகத்திற்கும், பண்பாட்டிற்கும் மைய இடமாகிறது.
  • வரலாறும், அறிவியலும் நிராகரிக்கப்பட்டது. புத்தகங்கள் கைகளால் எழுதப்பட்டது. ஸ்பெயின் பல்கலைகழகத்தில் அரபி மொழியும், எபிரேய மொழியும் போதிக்கப்பட்டது.
  • பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் பல்கலைக்கழகம் போன்று இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வடிவமைக்கப்பட்டது. 12ஆம் நூற்றாண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
  • இஸ்லாமிய சமயத்தைத் தோற்றுவித்தவர் முகமது நபி.
  • அரேபியாவில் மெக்கா, மெதினா என்ற இரு நகரங்கள் புனித யாத்திரை மையங்களாகும்.
  • இஸ்லாமியர்களின் நம்பிக்கையும், கடின உழைப்பும் அவர்களின் வெற்றிக்குக் காரணம்.
  • ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் நினைவுச் சின்னம் இருக்கக்கூடிய இடமான புனித இடத்திற்கு புனித யாத்திரை செல்ல வேண்டும் என்பதை புனித கடமையாகக் கருதினர்.
  • ஜெருசலேம் என்ற முக்கியமான இடத்தை கி.பி.1071ல் துருக்கியர்கள் எகிப்திய பதிமித் காலிப்பிடமிருந்து கைப்பற்றினர்.
  • 8 சிலுவைப் போர்களில், முதல் நான்கு மிக முக்கியமானவையாகும். குயீளெர்மான்ட் மாநாடு முடிந்தப் பின் அனைவரும் தங்களின் ஆடைகளில் சிலுவையை சின்னமாக கிறித்தவர்கள் அணிந்தனர்.
  • இஸ்லாமியர் தங்களின் கொடிகளில் பிறையை வரைந்தனர்.
  • எனவே இந்தச் சிலுவைப் போர் ‘சிலுவைக்கும் பிறைக்கும் நடந்த போர்’ எனலாம்.
  • முதல் சிலுவைப் போர் கி.பி.1096-ல் துவங்கியது.
  • இப்பேரரசில் டிரிபோலி, இடெஸ்சா. ஆண்டியோக் என்ற நாடுகள் அடங்கும். கிறித்தவர்கள் எண்பது ஆண்டுகள் இங்கு வாழ்ந்தனர்.
  • செயின்ட் பெர்னார்டு கிளய்ர்வக்ஸ் என்பவர் இரண்டாம் சிலுவைப்போரின் நாயகன். இரண்டாவது சிலுவைப்போர் பிரஞ்சு மன்னர் ஏழாம் லூயி ஜெர்மனிய மன்னர் மூன்றாம் கன்னார்டு ஆகியோருடன் இணைந்து நடத்தியது.
  • ஐரோப்பிய மன்னர் என்று செல்லமாக அழைக்கப்படும் ஜெர்மனி மன்னர் பிரடரிக் பார்பரோசா, பிரஞ்சு மன்னர் பிலிப் இரண்டாம் அகஸ்டஸ், இங்கிலாந்து சிங்க இதயம் என்று அழைக்கப்பட்ட முதலாம் ரிச்சர்ட் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
  • பால்டுவின் பிளான்டர்ஸ் தலைமையில் லத்தின் பேரரசு அமைக்கப்பட்டது. கி.பி.1261 வரை ஆட்சியில் இருந்தார்.
  • கி.பி.1212 ல் சிறுவர்களின் சிலுவைப் போர் ஜெர்மனியின் நிக்கோலஸ் மற்றும் பிரான்சின் ஸ்டீபன் தலைமையில் நடைப்பெற்றது.

 

Leave a Reply