9th Samacheer Kalvi History Study Material in Tamil – 7

தமிழ் நாட்டின் பண்பாட்டு மரபுகள்

 • தொன்மையான பாலி மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் தமிழ் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளை ‘திராமிளா‛ மற்றும் ‘திராவிட‛ என்ற சொற்களால் குறிப்பிட்டன.
 • வட நாட்டை ஆரியவர்த்தம் எனவும், தென்னாட்டை திராமிளா மற்றும் திராவிட என்றும் வேறுபடுத்திக் காட்டுகின்றன.
 • தென்னிந்தியாவில் திராவிட மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழியாகும்.
 • கி.மு.500 முதல் கி.மு.1300 வரை தமிழ் நாட்டின் அரசியல் வரலாறு மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. (1) சங்க காலம் (2) களப்பிரர் காலம் (3) தமிழ்ப் பேரரசுகளின் காலம் மலைச்சார்ந்த நாடுகளை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் ‘வேளிர்’ எனப்பட்டனர். எடுத்துக்காட்டாக பொதிய மலையை ஆய், குதிரை மலையை அதியமான், பரம்பு மலையை பாரி என்ற வேளிர்கள் ஆட்சி செய்தனர்.
 • சங்க காலத்தின் புகழ் பெற்ற மன்னர்களாக சேரன் செங்குட்டுவன், ஆரியப் படை கடந்த நெடுச்செழியன், கரிகால் சோழன் ஆகியோர் விளங்கினர்.
 • கி.பி.3-ஆவது நூற்றாண்டு முதல் 6-வது நூற்றாண்டு வரை களப்பிரர்கள் ஆண்டனர். வஜ்ஜிர நந்தி என்ற சமணத்துறவி மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார்.
 • அச்சுத விக்ரந்தா உறையு+ரை ஆண்ட புகழ் பெற்ற களப்பிர மன்னராவார்.
 • களப்பிரர் ஆட்சி வட தமிழகத்தில் பல்லவர்களாலும், தென் தமிழகத்தில் பாண்டியர்களாலும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
 • சிம்ம விஸ்ணு, முதலாம் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் போன்ற பல்லவ மன்னர்கள், சாளுக்கியர்கள், ராட்டிரகூட்டங்கள், சுங்கர்கள் ஆகியோரை வெற்றிகொண்டு ஒரு பெரும் பேரரசை உருவாக்கினார்.
 • ஒன்பதாம் நூற்றாண்டு இறுதியில் விஜயலாய சோழன், ஆதித்திய சோழன், ஆகியவர்களால் தஞ்சையில் மீண்டும் சோழர்களின் ஆட்சி ஏற்பட்டது.
 • முதலாம் பராந்தகன், முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் போன்ற வலிமை வாய்ந்த மன்னர்களால் சோழ அரசு சோழப் பேரரசாக விரிவடைந்தது.
 • அழகான, சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பிரம்மாண்டமான சைவ கோவில்களைக் கட்டினார்.
 • அவற்றில் பிரகதீஸ்வரர் ஆலயம், (தஞ்சை பெரிய கோவில்) கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்றவை குறிப்பிடதக்கவை.
 • 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் மீண்டும் பாண்டியர் ஆட்சி மீட்டுருவாக்கம் பெற்றதாலும் துவார சமுத்திரத்தில் போசளர்கள் (ஹோய்சாளர்கள்) எழுச்சியடைந்ததாலும், சோழர்கள் வீழ்ச்சியடைந்தனர்.
 • ‘அவை’ ‚’நாளவை‛ ‚’மன்றம்‛ எனவும் அரசவை அழைக்கப்பட்டது. சங்க காலத்தில் கடற்படையெடுப்புகளும் நிகழ்ந்துள்ளன.(எ.கா) கடம்பர் என்னும் கடற்கொள்ளையாளர்களுக்கு எதிராக சேரன் செங்குட்டுவனது படையெடுப்பு, கரிகாலனது, சிங்கள படையெடுப்பு என்பனவற்றைக் கூறலாம்.
 • தொல்காப்பியத்திலுள்ள ‘பொருளதிகாரத்தில்’ சங்க கால தமிழரின் சமூக நிலை விவரிக்கப்பட்டுள்ளது.
 • தமிழ் நாட்டிலுள்ள நிலப்பகுதிகள் மலையும், மலை சார்ந்த பகுதியை குறிஞ்சி எனவும் காடும், காடு சார்ந்த பகுதியை முல்லை எனவும் வயலும், வயல் சார்ந்த பகுதியை மருதம் எனவும் கடலும், கடல் சார்ந்த பகுதியை நெய்தல் எனவும் மழையின்றி வளம் குன்றி வறண்டுபோன பகுதியை பாலை எனவும் ஐவகை திணைகள் பிரிக்கப்பட்டிருந்தன.
 • சாதி முறையில் வலங்கை, இடங்கை பிரிவுகள் தோன்றியதால், சமூகத்தில் சண்டை சச்சரவுகள், அமைதியின்மை போன்றவை அதிகரித்தன.
 • சங்க இலக்கியங்களில் தொல்காப்பியம், (இலக்கணநூல்) எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்கணக்கு மற்றும் இரட்டை காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அடங்கும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்றவற்றில் காதலும், வீரமும் போற்றப்படுகின்றன.
 • பெரும்பாலான பதினெண்கீழ்கணக்கு நூல்கள் ஒழுக்கத்தை (நீதியை) வலியுறுத்துகிறது.
 • சில இலக்கண நூல்களும் (பிங்கல நிகண்டு, யாப்பெருங்கலம்) களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்டன.
 • இப்பேரரசு காலத்தில் அதிகளவில் பக்தி இலக்கியங்கள் எழுதப்பட்டன.
 • தேவாரம், திருவாசகம், நாலாயிரதிவ்யபிரபந்தம்.
 • பெரியபுராணம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்கள் சைவ, வை‘;ணவ சமயத்தைப் போற்றினர்.
 • நந்திகலம்பகம், மூவருலா, கலிங்கத்துப்பரணி, நன்னூல், வீரசோழியம் போன்றவை மதச்சார்பற்ற இலக்கியங்கள் குறிப்பிடதக்கவை.
 • தமிழ் கல்விக்கு சோழர்கள் (புலவர் முற்÷ட்டு) போன்றவை மூலமாக ஆதரவளித்தனர்.
 • பல்லவர்கள் காலத்தில் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் ஏற்றுக்கொண்டனர்.
 • சங்க காலத்தில் சமணம், பௌத்தம், அஜீவிகைசம் போன்ற சமயத்தத்துவங்கள் தமிழ் சமுதாயத்தில் இடம் பிடித்தன.
 • அவை களப்பிரர் காலத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றன.
 • சோழர் ஆட்சியின் இறுதியில் ‘முருகவழிபாடு’ (முருக பக்தி) புகழ் பெற்றது. கோயில்களில், உள்ளுர் பு+சகர்கள் படிப்படியாக அகற்றப்பட்டு பிராமணர்கள் பு+சக்கர்களாக மாறினர்.
 • சமஸ்கிருதம் சமய மொழியாயிற்று. சோழர்கள் காலத்தில் ஏற்பட்ட சைவ, வைணவ சமய மோதல்களுக்கு சான்றாக, சிதம்பரம் கோவிலில் இருந்த தில்லை கோவிந்தராசர் சிலை அகற்றப்பட்டதும், வைணவரான ராமானுஜர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்ததையும் கூறலாம்.
 • யாழ் என்ற நரம்புக் கருவியும், குழல் என்ற காற்றுக் கருவியும், முழவு என்ற தோல் கருவியையும் இசை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தினர்.
 • பல்லவர்களது குடுமியான் மலைக் கல்வெட்டில் உருத்திராச்சாரியார் என்ற புகழ் பெற்ற இசை கலைஞரைப் பற்றிய செய்தி உள்ளது.
 • தேசதாசிகள் மிகச் சிறந்த நடன மாதர்களாவார்கள்.
 • மாமல்லபுரத்தில் மகி‘hசுர மண்டபம் அமைக்கப்பட்டன.
 • தஞ்சை பிரகதீஸ்வரம், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
 • கோயில்கள் சோழர் காலக்கட்டிடகலைக்குச் சிறந்த சான்றாகும். இக்கோயில்களில் எல்லாம் மிகச்சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.
 • ஓவியக்கலைக்குச் சான்றாக சித்தன்னவாசல் குகைகள், காஞ்சி கைலாசநாதர் கோயில், பிரகதீஸ்வரர் கோயில்கள் போன்றவைகளில் மிகச்சிறந்த ஓவியங்கள் உள்ளன.
 • கல்லிலே சிலை வடித்தது போன்று, வெண்கலம் போன்ற உலோகத்தாலும் சிலைகள் வார்க்கப்பட்டன.
 • சோழர் காலத்திய வெண்கலத்தால் ஆன நடராசர் சிலை, சைவ, வைஸ்ணவ உற்சவ மூர்த்தி சிலைகள், 63  31 நாயன்மார்களின் சிலைகள் உலகப் புகழ் பெற்றவையாம்.

Leave a Comment

Your email address will not be published.