Historical Background

முகப்புரை

  • அமெரிக்க அரசியலமைப்பின் முகப்புரையை பின்பற்றியே இந்திய அரசியல் அமைப்பின் முகப்புரை வடிவமைக்கப்பட்டது
  • என்.ஏ.பல்கிவலா = இந்திய அரசியல் அமைப்பின் முகப்புரையை, “அரசியல் அமைப்பின் அடையாள அட்டை” என்கிறார்
  • 1976-ம் ஆண்டின் 42-வது சட்டத் திருத்தத்தின் மூலம், முகப்புரையில், சமச்சமுதாயம் (SOCIALIST), சமயசார்பின்மை (SECULAR), ஒருமைப்பாடு (INTEGRITY)  என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது
  • சர் அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயர் = அரசியலமைப்பின் முகப்புரையானது நமது நீண்ட நாள் கனவினை பிரதிபளிப்பதாக உள்ளது
  • கே.எம்.முன்ஷி = முகப்புரை, “அரசியலமைப்பின் ஜாதகம்” என்றார்
  • பண்டித தாகூர் தாஸ் பார்கவா = “நமது அரசியலமைப்பின் மிக உன்னதமான பகுதி முகப்புரையாகும். அது அரசியலமைப்பின் ஆன்மா ஆகும். அது அரசியல் அமைப்பின் சாவி போன்றது. அது அரசியல் அமைப்பின் ஆபரணம் போன்றது. அது அரசியல் அமைப்பின் தரத்தை அளக்கும் அளவுகோலாகும்” என்றார்
  • 1960-ல் நடைபெற்ற, “பெருபாரி” வழக்கில் உச்ச நீதிமன்றம், முகப்புரை, இந்திய அரசியல் அமைப்பின் ஒரு பகுதி அல்ல என தீர்பளித்தது
  • ஆனால், 1973-ல் நடைபெற்ற கேசவானந்த பாரதி வழக்கில், உச்ச நீதிமன்றம், முகப்புரையானது அரசியல் அமைப்பின் ஒரு பகுதி என தீர்பளித்தது
  • 1995-ல் நடைபெற்ற எல்.ஐ.சி வழக்கில், உச்ச நீதிமன்றம், முகப்புரை, இந்திய அரசியல் அமைப்பின் ஒரு பகுதி தான் என உறுதியாக தெரிவித்தது

மொழிவாரி மாநிலம்

வ.எண் ஆண்டு குழு பரிந்துரை
1 1948, ஜூன் எஸ்.கே.தார் குழு நிர்வாக ரீதியாக வேண்டும் என்றால் மாநிலங்களை பிரிக்கலாம், ஆனால் மொழியின் அடிப்படியில் மாநிலங்களை பிரிக்கக்கூடாது
2 1948, டிசம்பர் ஜே.வி.பி. குழு ஜே – ஜவஹர்லால் நேரு வி – வல்லபாய் படேல் பி – பட்டாபி சித்தராமையா ம்ளியின் அடிப்படையில் பிரிக்கக் கூடாது
3 டிசம்பர், 1953 பசல் அலி குழு (குழு உறுப்பினர்கள் = பசல் அலி, கே.எம்.பணிக்கர் மற்றும் எச்.என்.குஸ்ரு) மாநிலங்களை பிரிக்கலாம் என பரிந்துரைத்து
குறிப்பு: 1953-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உருவாகியது. மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து தெலுங்கு மொழி பேசும் பகுதியை பிரிக்க வேண்டும் என போராடிய, பொட்டி ஸ்ரீராமாலு, தொடர்ந்து 56 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி உயிர் விட்டதால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து இந்திய அரசு, ஆந்திர மாநிலத்தை உருவாக்கியதுஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டத்தை தொடர்ந்து, நாத்தின் பல பகுதிகளில், மொழியில் அடிப்படையில் மாநிலங்களை பிரிக்க வேண்டும் என போராட்டங்கள் நடைபெற்றன. இதை அடுத்து இந்திய அரசு, டிசம்பர் மாதம் பசல் அலி குழுவை அரசு அமைத்தது

குடியுரிமை

  • இந்திய குடியுரிமை சட்டம், 1955 படி, 5 வழிகளில் இந்திய குடியுரிமையை பெறலாம்
    • பிறப்பு (BY BIRTH)
    • மரபு வழி (BY DESCENT)
    • பதிவு (BY REGISTRATION)
    • இயல்பூட்டுதல் (BY NATURALISATION)
    • நிலப்பகுதி இணைப்பு (BY INCORPORATION OF TERRITORIES)
  • இந்திய குடியுரிமையை இழக்கும் 3 வழிகள்
    • துறத்தல் (BY RENUNCIATION)
    • முடிவுக்கு வருதல் (BY TERMNATION)
    • நீக்குதல் (BY DEPRIVATION)

அடிப்படை உரிமைகள்

  • அடிப்படை உரிமைகள், அமெரிக்க அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டது
  • அரசியல் அமைப்பின் பகுதி 3, “மேக்னா கார்டா” எனப்படுகிறது
  • இந்திய அரசியல் அமைப்பின் தொடக்கத்தில், 7 அடிப்படை உரிமைகள் இருந்தன
  • ஆனால், அடிப்படை உரிமையில் ஒன்றான, “சொத்துரிமை”, 1978-ம் ஆண்டின் 44-வது சட்டத் திருத்தத்தின் மூலம் அடிப்படை உரிமையில் இருந்து நீக்கப்பட்டது. பின்னர் அது பகுதி 12-ல், விதி “300-அ” ஆக சேர்க்கப்பட்டது. தற்போது சொத்துரிமை, ஒரு சட்ட உரிமையாக மாற்றப்பட்டுள்ளது
  • நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது, விதி 20 மற்றும் விதி 21 ஆகிய 2 விதிகளை தவிர மற்ற அடிப்படை உரிமைகளை முடக்கி வைக்கலாம்
  • ஆனால் “போர் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு” ஆகிய காரணத்தால் மட்டுமே விதி 19-யை முடக்கி வைக்க முடியும்
  • பிற்படுத்தப்பட்டோர் பிரிவிரினரை சமூக பொருளாதார நிலையை ஆராய அமைக்கப்பட்ட குழுக்கள்
முதல் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரை ஆராய அமைக்கபட்ட குழு 1953-ல் காகா கலேல்கர் குழு
இரண்டாவது குழு 1979-ல் பி.பி.மண்டல் கமிசன்
பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்கான க்ரீமி அளவை ஆராய அமைக்கப்பட்ட குழு 1993-ல் ராம் நந்தன் குழு
  • விதி 21-அ, அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி, 2002-ம் ஆண்டு, 86-வது சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.
  • அடிப்படை உரிமைகளின் விதி 32-ஐ, “அரசியலமைப்பின் ஆன்மாவும், இதயமும் போன்றது” என்றார்.
  • உச்ச நீதிமன்றம், விதி 32-ஐ, “அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு” என்கிறது
  • அரசியலமைப்பில் மிக மாற்றத்திற்கு உள்ளான விதி = விதி 21
  • பகுதி 3-ல் உள்ள அடிப்படை உரிமைகள் இன்றி, மேலும் பல உரிமைகள் நமது அரசியல் அமைப்பில் உள்ளன. அவற்றை, “சட்ட உரிமைகள், அரசியலமைப்பு உரிமைகள்” என்கிறோம். அவை = விதி 265, விதி 300-அ, விதி 301, விதி 326

நெறிப்படுத்தும் கோட்பாடுகள்

  • “அரசு நெறிமுறை கோட்படுகள்”, ஐயர்லாந்து நாட்டில் இருந்து பெறப்பட்டது
  • அம்பேத்கர், இதனை “நூதனமான சிறப்புகள்” (NOVEL FEATURES) என்கிறார்
  • அரசியலமைப்பின் ஆன்மா மற்றும் தத்துவம் எனப்படுவது = அடிப்படை உரிமைகள் + அரசு நெறிமுறை கோட்பாடுகள்
  • கிரான்வில்லி ஆஸ்டின் = இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசு நெறிமுறை கோட்பாடுகள், இணைந்து “அரசியல் அமைப்பின் மனசாட்சியாக உள்ளன” (FUNDAMENTAL RIGHTS AND DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY AS THE “CONSCIENCE OF THE CONSTITUTION”)
  • அரசு நெறிமுறை கோட்பாடுகள், நீதிக்கு அப்பாற்பட்டது. அதனால் இதனை பின்பற்ற அரசு சட்டத்தால் மக்களை அக்க முடியாது
  • சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக பொதுமக்களின் வருமான இடைவெளி, அந்தஸ்து மற்றும் வாய்புகளின் இடைவெளியை குறைக்க வேண்டும் என கூறும் விதி = விதி 38

அடிப்படை கடமைகள்

  • அடிப்படை கடமைகளை பரிந்துரை செய்த குழு = சர்தார் ஸ்வரன் சிங் குழு
  • இக்குழுவின் பரிந்துரையை அடுத்து, 1976-ம் ஆண்டு, 42-வது சட்டத் திருத்தத்தின் மூலம், பகுதி 4-அ என்ற பகுதி சேர்க்கப்பட்டு, புதிய விதியாக 51-அ இணைக்கபப்டது
  • சர்தார் ஸ்வரன் சிங் குழு பரிந்துரைத்து எட்டு அடிப்படை கடமைகள் மட்டுமே. ஆனால் அப்போதைய காங்கிரஸ் அரசு, பத்து அடிப்படை கடமைகளை அறிவித்தது.
  • 2002-ம் ஆண்டு, 86-வது சட்டத் திருத்தத்தின் மூலம், புதியதாக 11-வது அடிப்படை கடமை சேர்க்கப்பட்டது
  • 1999-ம் ஆண்டு, குடிமக்களின் அடிப்படை கடமைகளை ஆராய அமைக்கப்பட்ட குழு = வெர்மா குழு (VERMA COMMITTEE ON FUNDAMENTAL DUTIES OF CITIZENS, 1999)

முக்கிய சட்டத் திருத்தங்கள்

முதல் சட்டத் திருத்தம், 1951 பிற்படுதப்போருக்கான சமூக, பொருளாதார சலுகைகள் வழங்கப்பட சட்டம்ஒன்பதாவது அட்டவணை இணைக்கப்பட்டது
ஏழாவது சட்டத் திருத்தம், 1956 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான உயர் நீதிமன்றம் அமைத்தல்
பதிமூன்றாவது சட்டத்திருத்தம், 1962 நாகாலாந்திற்கு மாநில அந்தஸ்து வழங்குதல்
இருபத்தி ஒன்றாவது சட்டத் திருத்தம், 1967 எட்டாவது அட்டவணையில் 15-வது மொழியாக சிந்தி மொழி சேர்க்கப்பட்டது
இருபத்தி நான்காவது சட்டத் திருத்தம், 1971 கோலக்நாத் வழக்கின் காரணமாக இந்த சட்டத் திருத்தம் உருவாக்கப்பட்டதுஅடிப்படை கடமைகள் உட்பட அரசி-அயல் அமைப்பின் எந்த பகுதியையும் திருத்த பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என நிலைமை உருவாக்கப்பட்டதுஅரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்கு, குடியரசுத் தலைவர் கண்டிப்பாக ஒப்புதல் வழங்க வேண்டும்
முப்பத்தி ஒன்றாவது சட்டத் திருத்தம், 1972 லோக்சபாவின் உறுப்பினர் எண்ணிக்கை 525-ல் இருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது
முப்பத்தி எட்டாவது சட்டத் திருத்தம், 1975 குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்படும் அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து எந்த நீதிமன்றமும் மறு ஆய்வு செய்ய இயலாது
நாற்பத்தி இரண்டாவது சட்டத் திருத்தம், 1976 இந்த சட்டத் திருத்தம், “சிறு அரசியலமைப்பு” (MINI CONSTITUTION) என அழைக்கப்படுகிறதுSWARAN SINGH COMMITTEE – ஸ்வரன் சிங் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த திருத்தம் மேற்க்ள்ளப்படதுஅரசியலமைப்பின் முகப்புரையில் 3 புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டது. அவை = சமச்சமுதாயம் (SOCIALIST), சமயசார்பின்மை (SECULAR), ஒருமைப்பாடு (INTEGRITY)அரசியல் அமைப்பில் புதிய பகுதியாக (பகுதி 4-அ), “அடிப்படை கடமைகள்” சேர்க்கப்பட்டது (விதி 51-அ)புதிய பகுதியாக (பகுதி 14-அ), “தீர்ப்பாயங்கள்” சேர்க்கப்பட்டதுஅனைத்திந்திய நீதிப் பணிகள் உருவாக்கப்பட்டது (ALL INDIA JUDICIAL SERVICE)மாநிலப் பட்டியலில் இருந்த (5 = கல்வி, காடு, வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் பாதுகாப்பு, அளவைகள் மற்றும் எடைகள், நீதி நிர்வாகம்) ஆகியவை மத்திய பொதுப் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதுலோக்சபா மற்றும் மாநில சட்ட மன்ற உறுப்பினர்களின் பதவி காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக மாற்றியதுகுறிப்பு:   இந்த சட்டத் திருத்தத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு திருத்தங்களை 1978-ம் ஆண்டு janatjanatjanatjanatஜனதா அரசாங்கம் 44-vatvatவது சட்டத் திருத்தத்தில் மீண்டும் திருத்தியது
நாற்பத்தி நான்காவது சட்டத் திருத்தம், 1978 லோக்சபா மற்றும் மாநில சட்ட மன்ற உறுப்பினர்களின் பதவி காலத்தை 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதுதேசிய அவசரநிலை பிரகடனத்தில், “உள்நாட்டு அச்சுறுத்தல்” என்ற வார்த்தையை நீக்கி, “ஆயுதமேந்திய கிளர்ச்சி” என மாற்றப்பட்டதுஅமைச்சரவையின் எழுத்து பூர்வ பரிந்துரையின் பேரில் மட்டுமே குடியரசுத் தலைவர் அவசரநிலை பிரகடனம் செய்ய வேண்டும்அடிப்படை உரிமைகளில் இருந்து சொத்து உரிமை நீக்கப்பட்டது. அவை  300-அ விதியாக சேர்க்கப்பட்டதுஅவசரநிலை பிரகடனத்தின் பொது அடிப்படை உரிமைகள், விதி 20 மற்றும் விதி 21 ஆகிய இரண்டு விதிகளை நிறுத்தி வைக்க முடியாது
ஐம்பத்தி இரண்டாவது சட்டத் திருத்தம், 1985 கட்சிச் தாவல் தடை சட்டம் கொண்டுவரப்பட்டதுபுதிய அட்டவணையாக “அட்டவணை 10” சேர்க்கப்பட்டது(குறிப்பு: இந்திய அரசு கட்சி தாவல் சட்டம் கண்டு வருவதற்கு முன்னரே இந்தியாவில் கட்சி தாவல் தடை சட்டம் கொண்டு வந்த முதல் மாநிலம் = மேற்கு வங்கம்)
அறுபத்திஒன்றாவது சட்டத் திருத்தம், 1989 வாக்களிப்பதற்கான குறைந்த பட்ச வயது 21-ல் இருந்து 18-ஆக குறைக்கப்பட்டது
அறுபத்தி ஐந்தாவது சட்டத் திருத்தம், 1990 தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு என தனி தேசிய ஆணையங்கள் அமைக்க முடிவு (ESTABLISHMENT OF NATIONAL COMMISSION FOR SC AND ST)
அறுபத்தி ஒன்பதாவது சட்டத் திருத்தம், 1991 இந்தியாவன் தேசிய தலைநகராக டெல்லி அறிவிக்கப்பட்டு, அதற்கு தனியாக 70 சட்டமன்ற உறுப்பினர் படஹ்வி உருவாக்கப்பட்டது
எழுபத்தி ஒன்றாவது சட்டத் திருத்தம், 1992 எட்டாவது அட்டவணையில் கொங்கனி, மணிப்பூரி மற்றும் நேபாளி ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டது. இத்துடன் அட்டவணை மொழிகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது
எழுபத்தி மூன்றாவது சட்டத் திருத்தம், 1992 பஞ்சாயத்து ராஜ் அமைப்பு உருவாக்கப்பட்டதுபுதிய பகுதியாக, “பகுதி 9” உருவாக்கப்பட்டு, அதற்கு “பஞ்சாயத்து” என தலைப்பு இடப்பட்டதுபுதிய அட்டவணையாக, அட்டவணை 11 சேர்க்கப்பட்டு, அதில் “29 உறுப்புகள்” சேர்க்கப்பட்டன
எழுபத்தி நான்காவது சட்டத் திருத்தம், 1992 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்காக, “முனிசிபாலிட்டி” உருவாக்கப்பட்டதுபுதிய பகுதியாக, “பகுதி 9-அ” உருவாக்கப்பட்டு “முனிசிபாலிட்டி” என அதற்கு தலைப்பு இடப்பட்டதுபுதிய அட்டவணையாக, அட்டவணை 12 சேர்க்கப்பட்டு, அதில் “18 உறுப்புகள்” சேர்க்கப்பட்டன
எழுபத்தி ஆறாவது சட்டத் திருத்தம், 1994 தமிழக அரசு இடஒதுக்கேடு சட்டம், 1994-படி, தமிழகத்தில் 69% இடஒதுக்கேடு உருவாக்கப்பட்டது
என்பதாவது சட்டத் திருத்தம், 2000 மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து, 29% வருவாயை மாநிலங்குக்கு பிரித்து வழங்க வேண்டும் என்ற பத்தாவது நிதி குழுவின் பரிந்துரையை அமுல்செய்யப்பட்டது (TENTH FINANCE COMMISSION)
எண்பத்தி ஆறாவது சட்டத் திருத்தம், 2002 விதி 21-அ = அடிப்படை உரிமையில் புதிய விதியாக இவ்விதி சேர்க்கபட்டது. ஆறு முதல் பதினான்கு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்க வேண்டும்விதி 45 = ஏற்கனவே இருந்த விதி 45-ல் மாற்றம் செய்யப்பட்டு, “ஆறு வயது பூர்த்தி செய்த அனைத்து குழந்தைகளுக்கு, பாதுகாப்பு மற்றும் கல்வி வழங்குவது அரசின் கடமையாகும்”விதி 51-அ = அடிப்படை கடமைகளில் புதிய கடமையாக 11-வது கடமை சேர்க்கப்பட்டது. “ஆறு முதல் பதினான்கு வயதுடைய குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி தருவது ஒவ்வொரு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடமையாகும்”
எண்பத்தி ஒன்பதாவது சட்டத் திருத்தம், 2003 தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆணையத்தை இரண்டாக பிரித்து தனியாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் என்றும், தேசிய பழங்குடியினர் ஆணையம் என்றும் உருவாக்கப்பட்டதுஇதற்காக புதியதாக விதி 338 = தேசிய தாழ்த்தபட்டோர் ஆணையமும், விதி 338-அ = தேசிய பழங்குடியினர் ஆணையமும் உருவாக்கப்பட்டது
தொண்ணூற்றி ஒன்னாவது சட்டத் திருத்தம், 2003 விதி 75-ல் மாற்றம் செய்யப்பட்டு, லோக்சபாவின் மொத்த உறுப்பினர் எண்ணிகையில் 15% மட்டுமே அமைச்சரவை உறுப்பினர் எண்ணிக்கை இருக்க வேண்டும்விதி 164-ல் மாற்றம் = முதலமைச்சர் உட்பட மாநில அமைச்சர்களின் எண்ணிக்கை, சட்டமன்ற உறுபினர்களின் எண்ணிக்கையில் 15% மட்டுமே இருக்க வேண்டும். மேலும் மாநிலங்களின் 12 உறுப்பினர்களுக்கு குறைவின்றி அமைச்சரவை இருக்க வேண்டும்
தொண்ணூற்றி இரண்டாவது சட்டத் திருத்தம், 2003 எட்டாவது அட்டவணையில், மேலும் நான்கு மொழிகள் இணைக்கப்பட்டது = போடோ, டோக்ரி, மைதிலி மற்றும் சாந்தலி. இதன் மூலம் அட்டவணை மொழிகளின் எண்ணிக்கை 22 ஆனது.
தொண்ணூற்றி ஆறாவது சட்டத் திருத்தம், 2011 “ஒரியா” என்பதனை “ஒடியா” என மாற்றம் செய்யப்பட்டது
தொண்ணூற்றி ஏழாவது சட்டத் திருத்தம், 2011 கூட்டுறவு சங்கங்கள் என்ற வார்த்தை விதி 19-ல் சேர்க்கப்பட்டதுபுதிய விதி 43-பி சேர்க்கப்பட்டது (PROMOTION OF COOPERATIVE SOCIETIES)புதிய பகுதி 9-பி சேர்க்கப்பட்டது
தொண்ணூற்றி ஒன்பதாவது சட்டத் திருத்தம், 2015 தேசிய நீதிபதிகள் நியமன குழு அமைக்கப்பட்டது (NATIONAL JUDICIAL APPOINTMENTS COMMISSION)ஆனால் இது செல்லாது என உச்ச நீதிமன்றம், 2015 அக்டோபர் மாதம் 16ம் தேதி அறிவித்தது
நூறாவது சட்டத் திருத்தும், 2015 இந்திய வங்கதேச எல்லை ஒப்பந்தம்

பாராளுமன்ற முறை அரசாங்கம்

  • இந்திய அரசின் தலைவர் = ஜனாதிபதி
  • இந்திய அரசாங்கத்தின் தலைவர் = பிரதமர்
  • அமைச்சர்கள், ஒட்டுமொத்தமாக “பாராளுமன்றத்திற்கு பொறுப்பானவர்கள்” (குறிப்பாக லோக்சபா)
  • பிரதமரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே, குடியரசுத் தலைவர், அமைச்சர்களை நீக்க வேண்டும்
  • ஐவர் ஜென்னிங்க்ஸ் (IVOR JENNINGS) = எதிர் கட்சித் தலைவர், ஒரு மாற்று பிரதமர் போன்றவர் (THE LEADER OF THE OPPOSITION IS THE ALTERNATIVE PRIME MINISTER)
  • ஸ்வரன் சிங் குழுவின் பரிந்துரைகளில் ஒன்று = நமது நாட்டிற்கு ஜனாதிபதி முறை அரசாங்கத்தை விட பாராளுமன்ற முறை அரசாங்கமே சிறந்தது
  • “நிழல் காபினெட்” முறை இங்கிலாந்தில் மட்டுமே உள்ளது (SHADOW CABINET)

கூட்டாட்சி முறை

  • கனடா அரசின் கூட்டாட்சி முறையை பின்பாற்றியே நமது கூட்டாட்சி முறை அமைக்கப்பட்டது (FEDERALISM)
  • இந்திய அரசியல் அமைப்பில் எந்த இடத்திலும் கூட்டாட்சி என்ற வார்த்தை இல்லை
  • கே.சி. வேர் [K.C. Wheare]  =   இந்திய அரசியலமைப்பை, “அரை குறை கூட்டாட்சி”” [Quasi – Federal] என்றும், “கட்டமைப்பில் கூட்டாட்சி, ஆனால் உணர்வால் ஒற்றையாட்சி” ” [Federal in form but unitary in spirit] என்றார்
  • மோரிஸ் மோன்ஸ் [Morris Mones] = “பேரம் பேசும் கூட்டாட்சி”” [Bargaining Federalism]
  • கிரான்வில்லி ஆஸ்டின் [Granville Austin] = “கூட்டுறவு கூட்டாட்சி (அ) ஒத்துழைப்பான கூட்டாட்சி”” [Co-operative Federalism] என்றும், “இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்யும் புதிய வகை கூட்டாட்சி” (A new kind of Federation meet India’s particular needs) என்றும் கூறினார்
  • ஐவர் ஜென்னிங்க்ஸ் [Ivor Jennings] = “Federation with a centralizing tendency” என்றார்
  • பால் அப்பில்பை [Paul Appleby] = “அதிகபட்ச கூட்டாட்சி” (Extremely Federal) என்றார்
  • அலக்சான்ரோ விச் [Alexandrowich] = “தனித்த குணமுடையது” (Unique in Character)

மத்திய – மாநில உறவுகள்

  • மத்திய பட்டியலில் தற்போது 100 உறுப்புகள் உள்ளன (தொடக்கத்தில் 97)
  • மாநில பட்டியலில் தற்போது 61 உறுப்புகள் உள்ளன (தொடக்கத்தில் 66)
  • பொது பட்டியலில் தற்போது 52 உறுப்புகள் உள்ளன (தொடக்கத்தில் 47)
  • 2002-ம் ஆண்டின் 80-வது சட்டத் திருத்தம் = மொத்த வரி வருவாயில் 29% மாநிலங்கு வழங்க வேண்டு என 10-வது நிதி குழுவின் பரிந்துரை அமல் செய்யப்பட்டது
  • விதி 268 = மத்திய அரசால் வரி விதிக்கப்பட்டு, அதன் வருவாயை மாநில அரசு மட்டுமே பயன்படத்தும் (அவ்வரிகள் = பத்திர வரிகள் மற்றும் ஆயத்தீர்வை வரிகள்)
  • மத்திய மாநில உறுவுகளை ஆராய அமைக்கப்பட்ட குழுக்கள்
1966, ஜனவரி -முதல் நிர்வாக சீர்திருத்த குழு -மொராஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டது. பின்னர் ஹனுமந்தையா தலைமை தாங்கினார் -இக்குழு மத்திய மாநில உறுவுகளை ஆராய செடல்வாட் (M C SETALVAD) என்பவர் தலைமையில் குழு அமைத்தது
1969 -ராஜமன்னார் குழு -இக்குழுவை தமிழக அரசு அமைத்தது -இக்குழுவின் பரிந்துரைகளை ஒட்டுமொத்தமாக மத்திய அரசு நிராகரித்தது
1973 -அனந்த்பூர் சாகிப் தீர்மானம் -பஞ்சாபின் அகாலிதளம் அரசு அமைத்தது
1977 -மேற்கு வாங்க அறிக்கை
1983 -சர்க்காரியா குழு -முதல் மத்திய – மாநில உறுவுகளை ஆராய அரசு அமைத்த குழு -உறுப்பினர்கள் = ரஞ்சித் சிங் சர்க்காரியா, சிவராமன், எஸ்.ஆர்.சென் -இக்குழு 247 பரிந்துரைகளை மத்திய அரசிற்கு வழங்கியது -இக்குழுவின் பரிந்துரையில் விதி 263 = மாநிலங்களுக்கு இடையேயான மன்றம் 1990-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது (INTER STATE COUNCIL = ARTICLE 263) -மும்மொழி கொள்கை அறிவிப்பு
2005, ஆகாஸ்ட் -இரண்டாவது நிர்வாக சீர்திருத்த குழு தலைமை = வீரப்ப மொய்லி
2008, ஆகஸ்ட் -நாகநாதன் குழு -தமிழக அரசு அமைத்த குழு -மத்திய மாநில உறவுகள் தொடர்பானது
2007, ஏப்ரல் -இரண்டாவது மத்திய – மாநில உறவுகளை ஆராயும் குழு -“பூஞ்சி குழு” -இக்குழு 310 பரிந்துரைகளை பரிந்துரைத்தது

அவசரநிலை பிரகடனங்கள்

  • விதி 352 = தேசிய அவசரநிலை பிரகடனம்
  • “போர், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதேமேந்திய கிளர்ச்சி” = இந்த 3 முறைகளில் ஏதேனும் ஒன்றிற்காகவே அவசரநிலை பிரகடனம் செய்ய வேண்டும்
  • போர் மற்றும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு = வெளி அவசரநிலை
  • உள்நாட்டு ஆயுதமேந்திய கிளர்ச்சி = உள் அவசரநிலை
  • 1978-ல் 44-வது சட்டத் திருத்தத்தின் மூலம், “உள்நாட்டு அச்சுறுத்தல்” என்ற வார்த்தையை நீக்கி விட்டு, “ஆயுதமேந்திய கிளர்ச்சி” என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது
  • மத்திய காபினெட் அமைச்சகம், எழுத்துபூர்வமான அறிக்கையயை அளித்தால் மட்டுமே, குடியரசுத் தலைவர் அவசரநிலையை பிரகடனம் செய்ய முடியும்
  • தேசிய அவசரநிலை பிரகடனம் மூன்று முறை அறிவிக்கப்பட்டுள்ளது = 1962 (வடகிழக்கு மாநிலங்களில் சீன ஊடுருவல்), 1971 (இந்தியா பாகிஸ்தான் போர்), 1975 (இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்டது)
  • முதல் இரண்டு அவசரநிலை பிரகடனமும் = வெளி அவசரநிலை பிரகடனம்
  • 1962-ல் அறிவிக்கப்பட்ட அவசரநிலை மிக அதிகபட்சமாக, 5 வருடங்கள் 4 மாதங்கள் நீடித்தது (அக்டோபர் 1962 முதல் ஜனவரி 1968 வரை). ஏனென்றால் சீன ஆக்கிரமிப்பு போர் நடைபெற்ற போதே 1965-ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரும் நடைபெற்றது.
  • இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட அவசரநிலை = உல் அவசரநிலை (அப்போது ஜனாதிபதி = பக்ருதின் அலி அகமது)
  • இந்திரா காந்தி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளை ஆராய அமைக்கப்பட்ட குழு = ஷா குழு (ஜனதா அரசு அமைத்தது)
  • விதி 356 = மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி, மாநில அவசரநிலை அல்லது அரசியல் அமைப்பு அவசரநிலை என்பர்
குறிப்பு:விதி 352, தேசிய அவசரநிலை பிரகடனத்தில், கால எல்லை இல்லை, ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் தேசிய அவசரநிலை பிரகடனத்தை நீட்டித்துக் கொள்ளலாம்ஆனால் விதி 356, மாநில குடியரசுத் தலைவர் ஆட்சியை அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை மட்டுமே நீடிக்கக் முடியும். 3 ஆண்டுகளுக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி அமைக்க வேண்டும்விதி 352, தேசிய அவசரநிலை அறிவிப்பின் போது, அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும். ஆனால் விதி 356, மாநில அவசரநிலை அறிவிப்பில், அடிப்படை உரிமைகளில் எவ்வித் பாதிப்பும் ஏற்படாது
  • விதி 356, பயன்படுத்தி இந்தியாவில் முதன் முதலில் மாநில அவசரநிலை அறிவிக்கப்பட்ட மாநிலம் = பஞ்சாப்
  • எச்.வி. காமத் (H.V.KAMATH)  = அம்பேத்கர் இறந்து விட்டார், ஆனால் அவரின் விதிகள் இன்னும் வாழ்ந்து வருகின்றன  (DR.AMBEDKAR IS DEAD, AND THE ARTICLES ARE VERY MUCH ALIVE)
  • மிக அதிகபட்சமாக 9 முறை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட மாநிலங்கள் = கேரளம், உத்திரப் பிரதேசம்
  • தமிழகத்தில் நான்கு முறை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது = 1976 (முதல்வர் = கருணாநிதி),1980 (முதல்வர் = எம்.ஜி.ஆர்), 1988 (முதல்வர் = ஜானகி இராமச்சந்திரன்), 1991 (முதல்வர் = கருணாநிதி)
  • விதி 360 = நிதி அவசரநிலை
  • இதுவரை இந்தியாவில் நிதி அவசரநிலை அறிவிக்கப்படவில்லை
  • இப்பிரகடனம் அறிவிக்கப்பட்ட 2 மாத காலத்திற்குள் பாராளுமன்றம் இந்த பிரகடனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்
  • ஒரு முறை பாராளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டால், மீண்டும் குடியரசுத் தலைவர் இப்பிரகடனத்தை திரும்பப் பெரும் வரை அமலில் இருக்கும்

குடியரசுத் தலைவர்

  • குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அணைத்து பிரச்சனைகளுக்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது
  • குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட குறைந்த பட்ச வயது = 35 வயது இருக்க வேண்டும். அதிக பட்சம் குறித்து அரசியல் அமைப்பில் கூறப்படவில்லை
  • குடியரசுத் தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் = உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. அவர் இல்லை என்றால், உச்ச நீதிமன்றத்தில் உள்ள மூத்த நீதிபதி செய்து வைப்பார்
  • குடியரசுத் தலைவரை கைது செய்ய இயலாது. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், அவருக்கு 2 மாதங்களுக்கு முன்னரே நோட்டிஸ் அனுப்ப வேண்டும்
  • விதி 61 = குடியரசுத் தலைவர் பதவி நீக்கம்
  • குடியருத் தலைவர் மீது குற்றச்சாட்டு சுமத்தினால், அது பற்றிய விளக்கம் அளிக்குமாறு அவையின் நான்கில் ஒரு பகுதி உறுப்பினர்களின் க்கைஎளுதுடன் கூடிய நோட்டிஸ், அவருக்கு கை எழுத்தாகிய 14 நாட்களுக்குள் அவருக்கு வழங்க வேண்டும்.
  • குடியரசுத் தலைவரும் பாராளுமன்றத்தின் ஒரு பகுதி ஆவார்
  • இவர் ராஜ்யசபாவிற்கு 12 நியமன உறுபினர்களை நேரடியாக நியமிக்கலாம்
  • இவர் லோக்சபாவிற்கு 2 ஆங்கிலோ-இந்திய உறுபினர்களை நியமிக்கலாம்
  • இந்திய குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டோ அதிகாரங்கள் = 3 (ABSOLUTE VET, SUSPENSIVE VETO AND POCKET VETO)
  • பாக்கெட் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய குடியரசுத் தலைவர் = ஜெயில் சிங் (இந்திய அஞ்சல் துறை மசோதாவிற்கு)
  • குடியரசுத் தலைவருக்கு உள்ள மன்னிக்கும் அதிகாரங்கள் = விதி 72 (குற்றவாளிகளை மன்னித்தல் = PARDON, தண்டனை காலத்தை குறைத்தல் = REMISSION, ஒரு தண்டனையை மற்றொரு தண்டனையாக மாற்றுதல் = COMMUTATION, தண்டனை காலத்தை தள்ளி போடுதல் = RESPITE மற்றும் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்=REPRIEVE)
  • இரண்டு முறை இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் = டாக்டர் ராஜேந்திர பிரசாத்
  • போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் = நீலம் சஞ்சீவ ரெட்டி
  • இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித முதல் முஸ்லிம் = ஜாகிர் ஹூசைன்
  • இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித முதல் தலித் = கே.ஆர். நாராயணன்
  • குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதற்கு முன் வெளிநாட்டு தூதவராக பணியாற்றியவர்கள் = டாக்டர் ராதாக்ருஷ்ணன் மற்றும் கே.ஆர்.நாராயணன்
  • குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதற்கு முன்பே “பாரத ரத்னா” விருது பெற்றவர்கள் = ராதாக்ருஷ்ணன், ஜாகிர் ஹூசைன் மற்றும் அப்துல் கலாம்
  • 1975-ல் கொண்டுவரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தில் கையெழுத்து இட்டவர் = பக்ருதின் அலி அகமது
  • குடியரசுத்தலைவர் பதவி வகித்த முதல் சீக்கியர் = கியானி ஜெயில் சிங்
  • நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த முதல் குடியரசுத்தலைவர் = அப்துல் கலாம்
  • மக்களவைத் தேர்தலில் வரிசையில் நின்று வாக்களித்த முதல் குடியரசுத்தலைவர் = கே.ஆர்.நாராயணன்
  • பதவியில் இருக்கும் பொது காலமான முதல் குடியரசுத்தலைவர் = ஜாகிர் ஹூசைன்
  • குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டி இடுவதற்காக குடியரசுத் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தவர் = வி.வி.கிரி
  • இதுவரை தற்காலிக குடியரசுத்தலைவர் பொறுப்பு வகித ஒரே இந்திய தலைமை நீதிபதி = முகமது ஹிதயதுல்லா
  • மிக அதிக காலம் பதவி வகித குடியரசுத்தலைவர் = டாக்டர் ராஜேந்திர பிரசாத்
  • முதன் முதலில் அவசரநிலை பிரகடனத்தில் கையெழுத்து இட்ட குடியரசுத்தலைவர் = டாக்டர் எஸ். ராதா கிருஷ்ணன்
  • பிரபலமான, “போஸ்ட் ஆபிஸ் மசோதாவை”, திருப்பி அனுப்பிய குடியரசுத்தலைவர் = ஜெயில் சிங்
  • மிக குறைந்த வயதில் குடியரசுத்தலைவர் ஆனவர்= நீலம் சஞ்சீவ ரெட்டி
  • மிக அதிக வயதில் குடியரசுத்தலைவர் ஆனவர் = ஆர். வெங்கட்ராமன்
  • மிக அதிக குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய குடியரசுத்தலைவர் = பிரதிபா பாட்டீல்
  • இரண்டு நபர்களை அடுத்தடுத்து தூக்கிலிட அனுமதி வழங்கிய குடியரசுத்தலைவர் = பிரணாப் முகர்ஜி
  • வாழும் போதே தபால் தலை வெளியிடப்பட்ட சிறப்பு பெற்றவர் = வி.வி.கிரி
  • நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் குடியரசுத்தலைவர் = பிரதிபா பாட்டீல்

பிரதமர்

  • லார்ட் மோர்லே = அனைவரிலும் முதன்மையானவர் (FIRST AMONG EQUALS), காபினெட் வளையத்தின் முக்கிய கல் (KEY STNE OF CABINET ARCH), காபினெட்டின் தலைவர் (HEAD OF THE CABINET) என்கிறார்
  • சர் வில்லியம் வெர்னர் ஹர்கோர்ட் = குறைந்த நட்சத்திரங்கள் உள்ள இடத்தின் நிலவு (A MOON AMONG LESSER STARS)
  • ஜென்னிங்க்ஸ் = அரசியல் அமைப்பின் அணைந்து வழிகளிலும் பிரதமர் முன்னெடுத்து செல்கிறார் (ALL ROADS IN THE CONSTITUTION LEAD TO THE PRIME MINISTER)
  • முன்ரோ = அரசு என்ற கப்பலின் தலைவன் (THE CAPTAIN OF THE SHIP OF THE STATE)
  • விதி 75, பிரதமரை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார் என்கிறது
  • மிக அதிக காலம் பிரதமராக இருந்தவர் = நேரு
  • மிக குறைந்த காலம் பிரதமராக இருந்தவர் = சரண்சிங்
  • இந்தியாவின் முதல் பெண் பிரதமர் = இந்திரா காந்தி
  • பிரதமர் பதவி ஏற்றதில் மிக அதிக வயதானாவர் = மொராஜி தேசாய்
  • மிக குறைந்த வயதில் பிரதமர் ஆனவர் = ராஜீவ் காந்தி
  • நம்பிக்கை ஓட்டெடுப்பில் பதவியை இழந்த முதல் பிரதமர் = வி.பி.சிங்
  • நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்தித்த முதல் பிரதமர் = நேரு
  • பதவியை ராஜினாமா செய்த முதல் பிரதமர் = மொராஜி தேசாய்
  • பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத போதும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் = தேவ கவுடா
  • பதவியில் இருக்கும் பொது காலமான முதல் பிரதமர் = நேரு
  • வெளிநாட்டில் காலமான முதல் பிரதமர் = லால் பகதூர் சாஸ்திரி
  • பதவில் இருக்கும் பொது கொல்லப்பட்ட முதல் பிரதமர் = இந்திரா காந்தி
  • காங்கிரஸ் கட்சியை சேராத முதல் பிரதமர் = மொராஜி தேசாய்
  • வங்கிகளை தேசிய மயமாக்கியவர் = இந்திரா காந்தி
  • தாஸ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டவர் = லால் பகதூர் சாஸ்திரி
  • பிப்ரவரி மாதம் 29-ம் தேதியில் பிறந்தவர் = மொராஜி தேசாய்
  • “அமைதி மனிதர்” எனப்பட்டவர் = லால் பகதூர் சாஸ்திரி
  • பாராளுமன்றத்தை எதிர் கொள்ளாமலே பதவிக் காலத்தை முடித்தவர் = சரண் சிங்
  • காந்தி ஜெயந்தியன்று பிறந்தவர் = லால் பகதூர் சாஸ்திரி
  • இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா மற்றும் பாகிஸ்தானின் உயரிய விருதான “நிசாமி பாகிஸ்தானி” ஆகிய இரு விருதுகளையும் பெற்றவர் = மொராஜி தேசாய்
  • இந்திய வெளிநாட்டு கொள்கையின் சிற்பி, ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம் எனப்படுபவர் = நேரு
  • சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டவர் = இந்திரா காந்தி
  • இந்தியாவில் முதன் முதலாக அணுகுண்டு சோதனை நடந்த அபோது பிரதமர் = இந்திரா காந்தி
  • “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் பொது சுதந்திர போராட்டக் காரர்களுக்கு இடையே செய்திப் பரிமாற்றத்திற்கு “வானர சேனை” என்ற குழந்தைகள் அமைப்பில் பங்கு பெற்றவர் = இந்திரா காந்தி
  • “ஜெய் ஜவான்! ஜெய் கிசான்!” என முழங்கியவர் = லால் பகதூர் சாஸ்திரி
  • “ஜெய் ஜவான்! ஜெய் கிசான்! ஜெய் விஞ்ஞான்!” என முழங்கியவர் = வாஜ்பாய்
  • பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை நடைமுறை படுத்திய பிரதமர் = வி.பி.சிங்
  • வெளிநாட்டு தூதவராக பணியாற்றி, பிரதமரானவர் = குஜ்ரால்
  • பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தென்னிந்தியர் = நரசிம்மராவ்
  • ரூபாய் நோட்டுகளில் கையெழுத்து இட்ட முதல் பிரதமர் = மன்மோகன் சிங்
  • இந்திரா காந்தி பிறந்த தினம் = நவம்பர் 19, தேசிய ஒருமைப்பாட்டு தினம்
  • சரண்சிங் பிறந்தநாள் = டிசம்பர் 23, விவசாயிகள் தினம்
  • பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த முதல் பிரதமர் = ராஜீவ் காந்தி
  • இரண்டுமுறை இடைகால பிரதமராக இருந்தவர் = குல்சாரிலால் நந்தா
  • மிக குறுகிய காலம் பிரதமராக இருந்தவர் = சந்திரசேகர்
  • மூன்று முறை பிரதமர் ஆனவர் = வாஜ்பாய்பாரத ரத்னா விருது பெற்ற முதல் பிரதமர் = நேரு

பண மசோதா

  • விதி 110, பண மசோதாவை பற்றி கூறுகிறது
  • ஒரு மசோதா, பண மசோதாவா இல்லையா என இறுதி முடிவு எடுப்பவர் = லோக்சபா சபாநாயகர்
  • பண மசோதா, லோக்சபாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும்
  • இதனை அமைச்சர் அளவில் உள்ளவர் மட்டுமே அறிமுகம் செய்ய வேண்டும்
  • இந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அறிமுகம் செய்யப்படும்
  • இதனை திருத்தவோ, திருப்பி அனுப்பவோ ராஜ்யசபாவிற்கு உரிமை இல்லை. சில திருத்தங்களை ராஜயசபா பரிந்துரை செய்யலாம். ஆனால் அதனை ஏற்கவோ அல்லது ஏற்காமலோ இருபது, லோசபாவின் முடிவாகும். ஏற்றுக் கொள்ளவேண்டும் என கட்டாயம் இல்லை
  • லோக்சபாவில் இருந்து ராஜ்யசபாவிற்கு அனுப்பப்படும், பண மசோதாவை, 14 நாட்களுக்குள் ஒப்புதல் அளித்து மீண்டும் லோக்சபாவிற்கு அனுப்ப வேண்டும். இல்லை என்றால் பதினான்கு நாள் முடிந்த பிறகு, அம்மசோதா தானாகவே ஒப்புதல் பெறப்பட்டதாக எடுத்துக் கொள்ளபப்டும்
  • பண மசோதாவிற்கு, லோக்சபாவில் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே, குடியரசுத்தலைவர் கையொப்பம் இடுவார்
  • ஒருவேளை, லோக்சபாவில் பண மசோதா தோல்வி அடைந்தாள், அந்த அரசு ஆட்சியை ராஜினமா செய்ய நேரிடும்
  • பண மசோதாவை, குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளாமலோ போகலாம். ஆனால் மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பக்கூடாது

கூட்டு அவை

  • லோக்சபா, ராஜ்யசபா இரண்டு அவையையும் சில சமயங்களில் சேர்ந்து நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்
  • அவ்வாறு இரண்டு அவைகளையும் கூட்டும் அதிகாரம், ஜனாதிபதிக்கே உள்ளது
  • அவ்வாறு நடக்கும் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை ஏற்பவர் = லோக்சபா சபாநாயகர்
  • கூட்டுக் கூட்டத்தை ராஜ்யசபா தலைவர், ஒருபோதும் தலைமை ஏற்று நடத்தக்கூடாது
  • இந்தியாவில் இதுவரை 3 முறை கூட்டுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது

பொதுக் கணக்குக் குழு (PUBLIC ACCOUNTS COMMITTEE)

  • இக்குழு, மின்டோ மார்லி சீர்திருத்தம் அல்லது இந்திய அரசுச் சட்டம் 1919 படி 1921-ல் அமைக்கப்பட்டது
  • தற்போது இக்குழுவில் 22 உறுபினர்கள் உள்ளனர் (15 லோக்சபா + 7 ராஜ்யசபா)
  • இக்குழு உறுபினர்களாக அமைச்சர்கள் நியமிக்கக் கூடாது.
  • இக்குழுவின் தலைவரை சபாநாயகர் நியமிப்பார்
  • இக்குழுவின் பனி = இந்திய தலைமை கணக்காய்வர் சமர்பிக்கும் கணக்குகளை சரிபார்த்தல்
  • இக்குழு உறுப்பினர்களின் பதவி காலம் = ஒரு ஆண்டு

மதிப்பீட்டு குழு (ESTIMATES COMMITTEE)

  • இந்தியாவின் 2-வது நிதி அமைச்சரான, ஜான் மதாய் அவர்களின் பரிந்துரையின் பேரில் 1950-ம் ஆண்டு அமைக்கப்பட்டது
  • இக்குழுவில் தற்போது 30 உறுபினர்கள் உள்ளன்னர். அனைவரும் லோக்சபாவை சேர்ந்தவர்களாகவே இருப்பர்
  • குழுவின் உறுபினராக அமைச்சர்களை நியமிக்க கூடாது
  • பனி = இந்திய அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு உட்பட்ட செலவிங்களை மதிப்பீடு செய்தல்
  • இக்குழு உறுபினர்களின் பதவி காலம் = ஒரு ஆண்டு

உச்ச நீதிமன்றம்

  • தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை = 30 (1 தலைமை நீதிபதி + 30 பிற நீதிபதிகள்)
  • உச்ச நீதிமன்ற நீதிபதியை குடியரசுத்தலைவர் நியமிப்பார்
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிக்கும் பொது குடியரசுத்தலைவர், பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கலந்து ஆலோசிப்பார்
  • உச்ச நீதிமன்ற நீதிபதிக்கான தகுதி = அவர் உயர் நீதிமன்றங்களின் குறைந்த பட்சம் 5 வருடம் நீதிபதியாக இருக்க வேண்டும், அல்லது உயர் நீதிமன்றங்களில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலம் பற்றி இதுவரை குறிப்பிடப்படவில்லை. அவர்கள் அதிகபட்சம் 65 வயது வரை பணிபுரியலாம்
  • நீக்குதல் = நீதிபதிகளை நீக்க வேண்டும் என்றால், பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற்ற பிறகே குடியரசுத்தலைவர் நீக்க வேண்டும்

பஞ்சாயத்து ராஜ்ஜியம்

ஜனவரி 1957 பல்வந்த் ராய் மேதா குழு -பஞ்சாயத்து ராஜ்ஜியம் முறையை பரிந்துரைத்தது -மூன்று அடுக்கு முறையை பரிந்துரைத்தது -இதன் படி இந்தியாவில் முதன் முதலில் பஞ்சாயத்து ராஜ்ஜியம் முறை ராஜஸ்தான் மாநிலத்தில் (நகவர் மாவட்டம்), அக்டோபர் 2-ம் தேதி, 1959-ம் ஆண்டு நடைமுறைபடுத்தப் பட்டது
டிசம்பர் 1977 அசோக் மேதா குழு -மூன்று அடுக்கு முறைக்கு பதிலாக இரண்டு அடுக்கு முறையை பரிந்துரை செய்தது
1985 ஜி.வி.கே.ராவ் குழு -ஊரக வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு குழு இது
1986 எல்.எம்.சிங்வி குழு -பஞ்சாயத்து ராஜிய முறைக்கு புத்துணர்ச்சி அளிக்க உருவாக்கப்பட்ட குழு -அதிக நிதி ஆதாரங்கள் கிராம பஞ்சாயத்துகளுக்கு வேண்டும்
  • தமிழகத்தில் பின் பற்றும் முறை = இரண்டு அடுக்கு முறை
  • நான்கு அடுக்கு முறையை பின்பற்றும் மாநிலம் = மேற்கு வங்கம்
  • மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட இடமளிக்க வேண்டும்

Leave a Comment

Your email address will not be published.