TNPSC POLITY – SALIENT FEATURES OF CONSTITUTION

TNPSC POLITY – SALIENT FEATURES OF CONSTITUTION

(அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள்)

 

TNPSC POLITY – SLAIENT FEATURES OF CONSTITUTION describes about the fundamental features of our constitution.

 

  • In 1973, The Supreme Court ruled that the constituent power of Parliament under Article 368 does not enable it to alter the ‘basic structure’ of the Constitution (1973ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விதி 368யை பயன்படுத்தி அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடாது என தீர்ப்பளித்தது)

TNPSC POLITY

WRITTEN AND LENGTHIEST CONSTITUTION (நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு):

  • Indian Constitution is a written Constitution (இந்திய அரசியலமைப்பு கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆகும்)
  • இதை எழுதியவர் பிரேம் பெஹாரி நரைன் ரைஸாத் ஆவார்.
  • இதை எழுதி முடிக்க அவருக்கு ஆறு மாதங்கள் ஆனது
  • The Constitution of India is the lengthiest of all the written Constitutions of the world (உலகில் உள்ள எழுதப்பட்ட அரசியல் அமைப்புகளில் மிக நீண்ட அரசியலமைப்பு கொண்ட நாடு இந்தியாவாகும்)
  • The original Constitution contained 395 articles and 8 schedules (அரசியல் அமைப்பின் தொடக்க காலத்தில் 395 விதிகளும் 8 அட்டவணைகளுமே இருந்தன)
  • In 2014 it consists of Preamble, about 465 Articles (divided into 25 parts) and 12 Schedules (2014ல் முகப்புரை, கிட்டத்தட்ட 465 விதிகளும், 12 அட்டவணைகளும் உள்ளன)

DRAWN FROM VARIOUS SOURCES (பெறப்பட்ட மூலங்கள்):

  • Dr B R Ambedkar proudly acclaimed that the Constitution of India has been framed after ‘ransacking all the known Constitutions of the World’ (அம்பேத்கர் அவர்கள் “இந்திய அரசியலமைப்பு ஆனது பல்வேறு நாடுகளின் அரசியலமைப்பை துருவி துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது” என கூறினார்)
  • The structural part of the Constitution is, to a large extent, derived from the Government of India Act of 1935 (இந்திய அரசியலமைப்ப்பின் அடிப்படை பகுதிகள் அனைத்தும் 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தை அடிப்படையாக கொண்டே அமைக்கப்பட்டன)

Provisions of the Constitutions have been drawn from the Constitutions of various countries

SOURCES (மூலங்கள்) FEATURES BORROWED (பெறப்பட்டவை)
Government of India Act of 1935 (இந்திய அரசு சட்டம் 1935)
  • Federal Scheme (கூட்டாட்சி தத்துவம்)
  • Office of Governor (ஆளுநர் பதவி)
  • Judiciary (நீதித்துறை)
  • Public Service Commissions (அரசுப் பணியாளர் தேர்வாணையம்)
  • Emergency Provisions (நெருக்கடி நிலைகள்)
  • Administrative Details (அரசு நிர்வாகம்)
  • Distribution of powers (அதிகாரப் பங்கீடு)
  • President’s or Governor’s power to issue ordinances (அவசர நிலைப் பிரகடனப்படுத்தும் அதிகாரம்)
  • Structure of the Supreme Court (உச்ச நீதிமன்ற அமைப்பு)
British Constitution (பிரிட்டன் அரசியலமைப்பு)
  • Parliamentary Government (பாராளுமன்ற அரசாங்கம்)
  • Rule of Law (சட்டத்தின் ஆட்சி)
  • Legislative Procedure (சட்டம் இயற்றும் வழிமுறைகள்)
  • Single Citizenship (ஒற்றைக் குடியுரிமை)
  • Cabinet System (மத்திய அமைச்சரவை)
  • Prerogative Writs (நீதிப் பேராணைகள்)
  • Parliamentary Privileges (பாராளுமன்ற சிறப்புரிமைகள்)
  • Bicameralism (இரு அவை அரசாங்கம்)
US Constitution (அமெரிக்க அரசியலமைப்பு)
  • Preamble (முகப்புரை)
  • Fundamental Rights (அடிப்படை உரிமைகள்)
  • Independence of Judiciary (சுதந்திரமான நீதித்துறை)
  • Judicial Review (நீதிப் புணராய்வு)
  • Impeachment of the President (குடியரசுத் தலைவரை நீக்கும் முறை)
  • Removal of Supreme Court and High Court Judges (உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவி நீக்க முறை)
  • Post of Vice-President (துணைக் குடியரசுத்தலைவர் பதவி)
Irish Constitution (அயர்லாந்து அரசியலமைப்பு)
  • Directive Principles of State Policy (நெறிமுறைக் கோட்பாடுகள்)
  • Nomination of members to Rajya Sabha (மாநிலங்களவைக்கு உறுப்பினர்கள் நியமனம்)
  • Method of election of President (குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறை)
Canadian Constitution (கனடா அரசியலமைப்பு)
  • Federation with a strong centre (மத்தியில் வலுவான கூட்டாச்சி அரசாங்கம்)
  • Vesting of residuary powers in the Centre (மத்திய அரசின் எஞ்சிய அதிகாரங்கள்)
  • Appointment of state governors by the Centre (ஆளுநர் நியமனம்)
  • Advisory Jurisdiction of the Supreme Court (உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை வரம்பதிகாரம்)
Australian Constitution (ஆஸ்திரேலிய அரசியலமைப்பு)
  • Concurrent List (பொதுப்பாட்டியல்)
  • Freedom of trade, Commerce and Inter -Course (சுதந்திரமான வியாபாரம்)
  • Joint sitting of the two Houses of Parliament (இரு அவைகளின் கூட்டு அமர்வு)
Weimar Constitution of Germany (ஜெர்மனியின் வெய்மர் அரசியல் அமைப்பு)
  • Suspension of Fundamental Rights during Emergency (நெருக்கடி நிலையின் பொது அடிப்படை உரிமைகள் நிறுத்திவைப்பு)
USSR Constitution, now Russia (சோவியத் ரஷ்யா அரசியல் அமைப்பு)
  • Fundamental Duties (அடிப்படை கடமைகள்)
  • Ideal of Justice (Social, Economic and Political) in the Preamble (முகப்புரையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி)
French Constitution (பிரெஞ்சு அரசியல் அமைப்பு)
  • Republic (குடியரசு அமைப்பு)
  • Ideals of liberty, equality and fraternity in the Preamble (முகப்புரையின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பற்றிய குறிகோள்கள்)
South African Constitution (தென் ஆப்ரிக்கா அரசியல் அமைப்பு)
  • Procedure for amendment of the Constitution (அரசியல் அமைப்பை திருத்தும் முறை)
  • Elections of members of Rajya Sabha (மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல்)
Japanese Constitution (ஜப்பானிய அரசியல் அமைப்பு)
  • Procedure established by Law (சட்டத்தை அமல்படுத்தல்)

BOTH RIGID AND FLEXIBLE (நெகிழா மற்றும் நெகிழும் தன்மை):

  • A rigid Constitution is one that requires a special procedure for its amendment, like American Constitution (நெகிழாத் தன்மையுடைய அரசியல் அமைப்பானது சட்டதிருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமெனின் அதற்கு சிறப்பு முறைகளை மூலமே மேற்கொள்ள முடியும். அமெரிக்க அரசியலமைப்பு நெகிழாத் தன்மை உடையது)
  • A flexible Constitution is one that can be amended in the same manner as the ordinary laws are made, like British Constitution but Indian Constitution is neither rigid nor flexible but a synthesis of both (நெகிழும் தன்மை உடைய அரசியல் அமைப்பானது பிரிட்டன் அரசியல் அமைப்பை போன்று, அணைத்து சட்ட திருத்தங்களும் சாதாரன முறையிலேயே மேற்கொள்ளப்படும். ஆனால் இந்திய அரசியல் அமைப்பானது நெகிழும் மற்றும் நெகிழாத் தன்மைகளின் கலவையாகும்)

FEDERAL AND NON-FEDERAL SYSTEM (கூட்டாட்சி மற்றும் ஒற்றையாட்சி கூறுகள்):

TNPSC POLITY

  • The Constitution of India establishes a federal system of government (இந்திய அரசாங்க முறையானது கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது)
  • Indian Constitution also contains non-federal features (ஆனால் ஒற்றையாட்சி கூறுகளையும் நமந்து அரசியல் அமைப்பு கொண்டுள்ளது)
  • K C Wheare = “quasi – federal” (வியர் என்பவர் இந்திய அரசியல் அமைப்பு முறையை “அரைகுறை கூட்டாட்சி” என்கிறார்)
  • Morris Jones = “Bargaining federalism” (மோரிஸ் ஜோன்ஸ் என்பவர் இந்திய அரசியல் அமைப்பை “பேரம் நடக்கும் கூட்டாட்சி” என்கிறார்)
  • Granville Austin = “Co-operative Federalism” (கிரான்வில் ஆஸ்டின் என்பவர் கூட்டுறவு கூட்டாட்சி” என்கிறார்)
  • Ivor Jennings = “federation with a centralizing tendency”

FUNDAMENTAL RIGHTS (அடிப்படை உரிமைகள்):

TNPSC POLITY

  • ஓர் அரசில் மக்கள் அனுபவிக்கும் உரிமைகளைக் கொண்டே அந்த அரசின் தன்மையை அறிந்து கொள்ளலாம் என லாஸ்கி குறிப்பிடுகிறார்
  • Part III of the Indian Constitution guarantees 6 fundamental rights to all the citizens fundamental rights are justifiable in nature and enforceable by the courts for their violation (இந்திய அரசியல் அமைப்பின் மூன்றாவது பகுதியில் உள்ள அடிப்படை உரிமைகள் மக்களுக்கு 6 அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. இது நீதிமன்ற எல்லைக்கு உட்பட்டது. அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது)
  • Fundamental rights can also be suspended during the operation of a National Emergency except the rights guaranteed by Articles 20 and 21 (தேசிய நெருக்கடி காலத்தில் அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைக்கலாம். ஆனால் வித்து 20 மற்றும் விதி 21 ஆகிய இரு விதிகளை நிறுத்த இயலாது)

DIRECTIVE PRINCIPLE OF STATE POLICY (அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள்):

TNPSC POLITY

  • Dr B R Ambedkar says the Directive Principle of State Policy is a ‘novel feature’ of the Indian Constitution
  • DPSP present in Part IV of the Constitution (நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசியல் அமைப்பின் பகுதி நான்கில் உள்ளது)
  • In 1980, Supreme Court held that ‘the Indian Constitution is founded on the bedrock of the balance between the Fundamental Rights and the Directive Principles’ (1980ல் உச்ச நீதிமன்றம் கூறியதாவது, ‘இந்திய அரசியல் அமைப்பானது அடிப்படை உரிமைக்கும் நெறிமுறைக் கோட்பாட்டுக்கும் இடையே பாதுகாப்புடன் இயங்குகிறது)

FUNDAMENTAL DUTIES (அடிப்படை கடமைகள்):

TNPSC POLITY

  • The original constitution did not provide for the fundamental duties of the citizens (அரசியல் அமைப்பின் தொடக்க காலத்தில் அடிப்படை கடமைகள் இல்லை)
  • Fundamental Duties were added during the operation of internal emergency (1975-77) by the 42nd Constitutional Amendment Act of 1976 on the recommendation of Swaran Singh Committee (ஸ்வரன் சிங் குழுவின் பரிந்துரையின் பேரில் 1976ஆம் ஆண்டு 42வது சட்ட திருத்தத்தின் படி அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டன)
  • The 86th Constitutional Amendment Act of 2002 added one more fundamental duty (2002ம் ஆண்டு 86வது சட்ட திருத்தத்தின் படி அடிப்படை கடமைகளில் ஒரு கடமை கூடுதலாக சேர்க்கப்பட்டது)
  • Fundamental Duties present in Part IV-A (அடிப்படை கடமைகள் பகுதி 4அ-இல் உள்ளது)
  • Article 51A gives the Fundamental Duties (அடிப்படை கடமைகளில் விதி 51அ)
  • Like DPSP, Fundamental Duties also non-justifiable in nature (நெறிமுறைக் கோட்பாடுகளைக் போலவே அடிப்படை கடமைகளும் நீதிமன்ற எல்லைக்கு அப்பாற்பட்டது)

UNIVERSAL ADULT FRANCHISE (வயது வந்தோர் வாக்குரிமை):

  • Every citizen who is not less than 18 years of age has a right to vote without any discrimination of caste, race, religion, sex, literacy and so on (சாதி, இனம், மதம், மொழி, கல்வியறிவு போன்ற எவ்வித வேறுபாடும் இன்றி 18 வயது பூர்த்தியான எந்த ஒரு இந்திய குடிமகனும் வாக்களிக்க தகுதி உடையவர் ஆகிறார்)
  • The voting age was reduced to 18 from 21 years in 1989 by the 61st Constitutional Amendment Act of 1988 (1988ம் ஆண்டு 61வது சட்ட திருத்தத்தின் படி வாக்களிக்கும் குறைந்தபட்ச வயதை 21ல் இருந்து 18ஆக அரசு குறைத்தது)
  • Article 326 mentions Elections to the House of the people and to the Legislative assemblies of States to be on the basis of adult suffrage ( மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளுக்குமான தேர்தல்கள் வயது வந்தோருக்கு வாக்குரிமை என்ற அடிப்படையில் இருக்கும்)

 

Leave a Reply