Tnpscwinners.com

வழிப்பாட்டுப் பாடல்கள் - சிவபெருமான்

சுந்தரர்:

 • சுந்தரர் தேவாரம் பன்னிருதிருமுறை வைப்பில் ஏழாந் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
 • சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் பிறந்தவர்.
 • பெற்றோர் = சடையனார், இசை ஞானியார்.
 • இயற்பெயர் = நம்பிஆரூரர்
 • இவர் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்க முனையரையர் என்ற சிற்றரசர் மகன்மை கொண்டு வளர்க்கப்பட்டார்.
 • சிவபெருமான் இவரைத் தம் தோழராகத் கொண்டமையால் “தம்பிரான் தோழர்” என அழைக்கப்பட்டார்.
 • இவர் எழுதிய திருதொண்டதொகை என்னும் நூலையே முதனூலாக கொண்டு சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் எழுந்தது.

சொற்பொருள்:

 • காமகோபன் – காமனைக் காய்ந்தவன்
 • ஆவணம் – அடிமையோலை

இலக்கணக்குறிப்பு:

 • கண்ணுதல் – இலக்கணப் போலி
 • பழ ஆவணம் – பண்புத்தொகை
 • சொற்பதம் – ஒருபொருட் பன்மொழி

திருமால்

குலசேகர ஆழ்வார்:

 • ஆழ்வார் என்னும் சொல்லுக்கு ஆழ்ந்தறியும் அறிவைக் கருவியாக உடையவர் என்றும் எம்பெருமானுடைய மங்கலக் குணங்களில் ஆழங்காற்பட்டவர் என்றும் பொருள் கூறுவர்.
 • குலசேகர ஆழ்வார் சேரநாட்டுத் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.
 • இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.
 • அவை மொத்தம் 105 பாடல்கள் ஆகும்.
 • ஆழ்வார்களின் அருளிச் செயலுக்குப் பெரிய வாச்சான் பிள்ளை என்பார் உரை எழுதியுள்ளார்.
 • திருவாய்மொழிக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளை என்பார் எழுதிய ஈடு என்னும் பேருரை ஆழமும் அகலமும் உடையதாகும்.

சொற்பொருள்:

 • ஆனாத – குறைவு படாத
 • அரம்பையர்கள் – தேவமாதர்கள்

புத்தர் பிரான்

ஆசிரியர் குறிப்பு:

 • மணிமேகலை நூலின் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் ஆவார்.
 • இவரைத்  “தண்டமிழ் ஆசான்” எனப் புகழ்வர்.
 • இவரின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
 • மணிமேகலை புத்த சமய காப்பியம்.
 • இந்நூலுக்கு “மணிமேகலைத் துறவு” என்னும் வேறு பெயரும் உண்டு.
 • இந்நூல் இந்திர விழவூரெடுத்த காதை முதலாகப் பவதிரம் அறுகெனப்பாவை நோற்ற காதை ஈறாக முப்பது காதைகளை உடையது.

சொற்பொருள்:

 • தீர்த்தன் – தூயன்
 • புராணன் – மிகப்பழையன்
 • ஏமம் – பாதுகாப்பு
 • ஆரம் – சக்கரக்கால்
 • கடிந்தேன் – துறந்தேன்

இலக்கணக்குறிப்பு:

 • தீநெறி – பண்புத்தொகை
 • கடும்பகை – பண்புத்தொகை
 • உணர்ந்த முதல்வன் – பெயரெச்சம்

அருகன்

நூல் குறிப்பு:

 • அருகதேவனை பற்றி கூறியுள்ள இந்நூல் நீலகேசியாகும்.
 • சீவக சிந்தாமணிக்கு  நிகராக கவிதைச் சுவைமிக்க இந்நூலை எழுதியவர் விவரம் தெரியவில்லை.
 • இந்நூல் “நீலகேசித் தெருட்டு” என்றும் அழைக்கப்படும்.

சொற்பொருள்:

 • சாமரை – சாமரம் ஆகிய வெண்கவரி
 • புடைபுடை – இருமருங்கினும்
 • இயக்கர் – கந்தருவர்
 • இரட்ட – அசைக்க
 • சிங்காசனம் – அரியணை
 • ஆசனம் – இருக்கை
 • ஒளிமண்டிலம் – ஆலோகம்
 • நிழற்ற – ஒளிர
 • சந்திராதித்தம் – முத்துக்குடை
 • சகலபாசனம் – பொற்குடை
 • நித்தவிநோதம் – மணிக்குடை

இயேசு பெருமான்

ஆசிரியர் குறிப்பு:

 • இரட்சணியம் என்பதற்கு ஆன்ம ஈடேற்றம் என்பது பொருளாம்.
 • ஆன்ம ஈடேற்றம் விரும்புவார் செல்லும் சிந்தனை யாத்திரை என்பதுவே இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள்.
 • ஜான் பனியன் என்பார் எழுதிய பில்க்ரிம்ஸ் பிராகிரஸ் என்ற நூலினையே இரட்சணிய யாத்திரிகம் என படைத்துள்ளார்.
 • எச்.ஏ.கிருடினப்பிள்ளை திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் ஊரினர்.
 • பெற்றோர் = சங்கர நாராயணபிள்ளை, தெய்வநாயகி அம்மை
 • படைப்புகள் = இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், போற்றித் திருவகவல்.
 • இவரை “கிறித்துவ கம்பர்” என்பர்.

சொற்பொருள்:

 • கண்ணி – மரியன்னை
 • காசினி – உலகம்
 • வான்கதி – துறக்கம்
 • மருவ – அடைய

இலக்கணக்குறிப்பு:

 • கண்ணிபாலன் – நான்காம் வேற்றுமைத்தொகை

நபிகள் நாயகம்

உமறுப்புலவர்:

 • உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்னும் ஊரினர்.
 • தந்தை = செய்கு முகமது அலியார் என்னும் சேகு முதலியார்
 • கடிகை முத்துப் புலவரின் மாணவர் இவர்.
 • இவரின் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
 • சீறாப்புராணம் வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதினார்.
 • நூல் நூற்றும் முன்னரே சீதக்காதி இறந்ததால் அபுல் காசிம் என்பார் உதவியுடன் எழுதி முடிக்கப்பட்டது.
 • பானு அஹமது மரைக்காயர் என்பவரே நூலை முழுவதும் எழுதி முடித்தார். அது “சின்னச் சீறா” எனப்பட்டது.
 • உமறுப்புலவர் முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்.

சொற்பொருள்:

 • பொறி – ஒளிப்பிழம்பு
 • வடிவார் – வடிவினையுடையார்
 • நவியார் – நபிகள் நாயகம்

இலக்கணக்குறிப்பு:

 • மெய்ப்பொருள் – இருபெயரொட்டு பண்புத்தொகை
 • சுவர்க்கபதி - இருபெயரொட்டு பண்புத்தொகை
 

© 2015 by Tnpsc Winners. All Rights Reserved