Tnpscwinners.com

கடவுள் வாழ்த்து

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அழகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே
- கம்பர்

சொற்பொருள்:

 • உளவாக்கல் – உண்டாக்குதல், படைத்தல்
 • நீக்கல் – அழித்தல்
 • நீங்கலா – இடைவிடாது
 • அலகிலா – அளவற்ற
 • அன்னவர் – அத்தகைய இறைவர்
 • சரண் – அடைக்கலம்

இலக்கண குறிப்பு:

 • யாவையும் – முற்றும்மை
 • ஆக்கல், நீக்கல், விளையாட்டு – தொழிற் பெயர்
 • அலகிலா – ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

ஆசிரியர் குறிப்பு:

 • நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூரில் கம்பர் பிறந்தார்.
 • இவர் ஏர் எழுபது, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
 • இவர் குலோதுங்கச்சோழனின் அவைப் புலவராக விளங்கினார்.
 • திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்.
 • கவிச்சக்ரவர்த்தி என்றும் கல்வியில் பெரியவர் கம்பர் என்றும் போற்றப்பட்டார்.
 • இவரின் காலம் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டு.

நூல் குறிப்பு:

 • வடமொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் கம்பர் எழுதியதே கம்பராமாயணம்.
 • கம்பர் இந்நூலுக்கு இட்ட பெயர் = இராமாவதாரம்.
 • இது பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.

திருக்குறள்

சொற்பொருள்:

 • அகழ்வாரை – தோண்டுபவரை
 • தலை – சிறந்த பண்பு
 • பொறுத்தல் – பொறுத்துக்கொள்ளுதல்
 • இறப்பு – துன்பம்
 • இன்மை – வறுமை
 • ஒரால் – நீக்குதல்
 • மடவார் – அறிவிலிகள்
 • விருந்து – வீட்டிற்கு புதியவராய் வந்தவர்
 • நிறை – சால்பு
 • ஒறுத்தாரை – தண்டித்தவரை
 • போன்றும் – உலகம் அழியும்வரை
 • நோநொந்து – துன்பத்திற்கு வருந்தி
 • மிக்கவை – தீங்குகள்
 • தகுதியான் – பொறுமையால்
 • துறந்தார் – பற்றற்றவர்
 • இன்னா – தீய

இலக்கான குறிப்பு:

 • பொறுத்தல் – தொழிற்பெயர்
 • அகல்வார், இகழ்வார் – வினையாலணையும் பெயர்
 • மறத்தல், பொறுத்தல் – தொழிற்பெயர்
 • நன்று – குறிப்பு வினைமுற்று
 • விருந்து – பண்பாகு பெயர்
 • ஒரால், நீக்குதல் – தொழிற்பெயர்
 • நீங்காமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
 • ஒருத்தார் – வினையாலணையும் பெயர்
 • பொதிந்து – வினையெச்சம்
 • வையார் – வினைமுற்று
 • ஒருத்தார், பொறுத்தார் – வினையாலணையும் பெயர்
 • தற்பிறர் – ஏழாம் வேற்றுமைத் தொகை
 • செய்யினும் – இழிவு சிறப்பும்மை
 • நொந்து – வினையெச்சம்
 • அரண், திறன் – ஈற்றுப்போலிகள்
 • விடல் – அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
 • இறந்தார் – வினையாலணையும் பெயர்
 • உண்ணாது – வினையெச்சம்

ஆசிரியர் குறிப்பு:

 • இவர் நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபாங்கி, பெருநாவலர் என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுவார்.
 • இவரின் காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டு என்று கூறுவர்.

நூல் குறிப்பு:

 • திரு + குறள் = திருக்குறள்
 • திரு = செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத்தன்மை எனப் பல பொருள் உண்டு.
 • குறள் = குறுகிய அடி உடையது.
 • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
 • அறம் 38 அதிகாரங்களாகவும், பொருள் 70 அதிகாரங்களாகவும், இன்பம் 25  அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
 • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
 • இந்நூலை போற்றிப் பாராட்டிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.

திராவிட மொழிகள்

மொழிகள்:

 • தனக்கென தனிச் சிறப்பும், பல மொழிகள் தோன்றிவளர அடிப்படையாகவும் உள்ள மொழி = மூலமொழி
 • மூலமொழியில் இருந்து தோன்றி வளர்ந்த மொழிகள் = கிளைமொழிகள்.

இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு:

 • இந்தியாவில் மொத்தம் பனிரெண்டு மொழிக்குடும்பங்கள் உள்ளன.
 • அவற்றுள், 325 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

இந்தியமொழிக் குடும்பங்கள்:

 • இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும் “இந்தோ-ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மொழிகள், சீன-திபெத்திய மொழிகள்” என அடக்குவர்.
 • நம்நாட்டில் 1300க்கும் மேற்பட்ட மொழிகளும், அதன் கிளைமொழிகளும் பேசப்பட்டு வருகின்றன.

மொழிகளின் காட்சிசாலை;

 • மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம் இந்திய நாட்டை “மொழிகளின் காட்சிசாலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட மொழிக் குடும்பங்கள்:

தென்திராவிட மொழிகள் நடுத்திராவிட மொழிகள் வடதிராவிட மொழிகள்
தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பொங்கோ, ஜதபு குரூக், மால்தோ, பிராகுய்
திராவிட பெரு மொழிகள் = தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

திராவிடம்:

 • திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழியாகும்.
 • திராவிடம் என்னும் சொல் திராவிடநாடு எனும் பொருளைத் தரும்.
 • திராவிடம் என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் = குமாரிலபட்டர்.
 • திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் முதலிய சொற்றொடர்களில் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கால்டுவெல் கூறியுள்ளார்.
 • கால்டுவெல் திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

கால்டுவெல் கூற்று:

 • தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளை ஒரு காலத்தில் தமிளியன்(tamilian) அல்லது தமுலிக்(tamulic) என்றழைத்தனர்.
 • அவற்றுள் தமிழ், மிகுந்த சிறப்பும் பழமையும் பெற்ற மொழியே எனினும், பல திராவிட மொழிகளில் அதுவும் ஒன்று.
 • எனவே, இவ்வினமொழிகள் அனைத்தையும் “திராவிட” எனும் சொல்லைத் தாம் கையாண்டதாகத் கால்டுவெல் கூறியுள்ளார்.

ஈராஸ் பாதிரியார் கூற்று:

 • திராவிட என்னும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானது.
 • தமிழ் -> திரமிள -> திரவிட -> திராவிட என உருவாயிற்று எனக் கூறுகிறார் மொழியியல் அறிஞர் ஈராஸ் பாதிரியார்.
 • திராவிட மொழிகள் என்றாலே தமிழ் மொழியை தான் குறிக்கும் என்கிறார்.

தலைமைச் சிறப்பு:

 • திராவிட மொழிகள் அனைத்திற்கும் மூலமான மொழியை “முன்னைத் திராவிட மொழி, மூலத் திராவிட மொழி, தொன்மைத் திராவிட மொழி” எனப் பல்வேறு சொற்களால் குறிப்பர்.
 • இம்மூலமொழியாக முதன்முதலில் தனித்து வளர்ந்த மொழி தமிழ்.
 • மற்ற திராவிட மொழிகள் தமிழில் இருந்து பிறந்தவை.
 • என்பது விழுக்காடு அளவிற்குத் திராவிட மொளிக்கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிட மொழி தமிழ்.

சிறுபஞ்சமூலம்

கணவனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு
வட்டான்நன் றென்றால் வனப்பு
- காரியாசான்

சொற்பொருள்:

 • கண்ணோட்டம் – இறக்கம் கொள்ளுதல்
 • எண்வனப்பு – ஆராய்சிக்கு அழகு
 • வேந்தன் – அரசன்

இலக்கணக்குறிப்பு:

 • கணோட்டம், செல்லாமை, உறைதல், என்றல் – தொழிற்பெயர்கள்
 • கேட்டார், வாட்டான் – வினையாலணையும் பெயர்

ஆசிரியர் குறிப்பு:

 • காரியாசான் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
 • இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
 • இவரும் கணிமேதவியாரும் ஒருசாலை மாணாக்கர்.

நூல் குறிப்பு:

 • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
 • இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன.
கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
 • இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து அறக்கருத்துகள் உள்ளன.

பாஞ்சாலி சபதம்

சொற்பொருள்:

 • எம்பி – என் தம்பி
 • மடப்பிடி – பாஞ்சாலி
 • கோமான் – அரசன்
 • நுந்தை – நும் தந்தை
 • அடவி – காடு
 • தடந்தோள் – வலியதோள்
 • மருங்கு – பக்கம்
 • கா – காடு
 • குலவு – விளங்கும்
 • பண்ணவர் – தேவர்
 • அரம்பையர் – தேவமகிளிர்
 • வீறு – வலிமை

இலக்கணக்குறிப்பு:

 • அழைத்தனன் – முற்றெச்சம்
 • மாநகர் – உரிச்சொற்றொடர்
 • சார்ந்தவர் – வினையாலணையும் பெயர்
 • நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ
 • அடவிமலையாறு – உம்மைத்தொகை
 • கடந்து – வினையெச்சம்
 • தடந்தோள் – உரிச்சொற்றொடர்
 • செறிந்து, பாய்ந்து – வினையெச்சம்
 • பாலாடையும் நறுநெய்யும் தேனும் – எண்ணும்மை
 • நீளமுடி, நன்செய், புன்செய் – பண்புத்தொகை
 • காத்தல் – தொழிற்பெயர்
 • தொல்லுலகு – பண்புத்தொகை
 • தாளமும் மேளமும் – எண்ணும்மை
 • பதமலர் – உருவகம்

ஆசிரியர் குறிப்பு:

 • சுப்ரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11.09.1882 அன்று பிறந்தார்.
 • இவர்தம் பெற்றோர் சின்னசாமி – இலக்குமி அம்மையார்.
 • இவரின் துணைவியார் செல்லம்மாள்.
 • இவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.
 • ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார்.
 • இவர் 11.12.1921 அன்று மறைந்தார்.

நூல் குறிப்பு:

 • பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது.
 • பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது.
 • இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.

சிறப்பு:

 • பாரதியார் “பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மாகவி” என்றேல்லாம் புகப்பெற்றார்.
 • சுதேசமித்திரன், இந்திய முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.
மேலும் தொடர
 

© 2015 by Tnpsc Winners. All Rights Reserved