பொது தமிழ் பகுதி ஆ திருக்குறள்

திருக்குறள்

பொருளடக்கம்

 • திருக்குறளின் விளக்கம்
 • அன்பு,
 • பண்புடைமை,
 • கல்வி,
 • கேள்வி,
 • அறிவுடைமை,
 • அடக்கம் உடைமை,
 • ஒழுக்கம் உடைமை,
 • பொறையுடைமை,
 • நட்பு,
 • வாய்மை,
 • காலம் அறிதல்,
 • வலி அறிதல்,
 • ஓப்புரவு அறிதல்,
 • செய்ந்நன்றி அறிதல்,
 • சான்றாண்மை,
 • பெரியாரைத் துணைக்கோடல்,
 • பொருள் செயல்வகை,
 • வினைத்திட்பம்,
 • இனியவை கூறல்

 

திருக்குறளின் விளக்கம்:

 • ஆசிரியர் = திருவள்ளுவர்
 • பாவகை = குறள் வெண்பா

பெயர்க்காரணம்:

 • திரு + குறள் = திருக்குறள்
 • குறுகிய அடிகளை கொண்டதால் இப்பெயர் பெற்றது.
 • திருக்குறள் என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்”

திருக்குறளின் சிறப்பு கூறுபவை:

திருக்குறளின் முன்னோடி எனப்படுவது புறநானூறு
திருக்குறளின் விளக்கம் எனப்படுவது நாலடியார்(சமண முனிவர்கள்)
திருக்குறளின் பெருமையை கூறுவது திருவள்ளுவ மாலை
திருக்குறளின் சாரம் எனப்படுவது நீதிநெறிவிளக்கம்(குமரகுருபரர்)
திருக்குறளின் ஒழிபு எனப்படுவது திருவருட்பயன்(உமாபதி சிவம்)

திருக்குறளின் வேறு பெயர்கள்:

 • திருவள்ளுவம்
 • தமிழ் மறை
 • பொதுமறை
 • முப்பால்
 • பொய்யாமொழி
 • தெய்வநூல்
 • வாயுறைவாழ்த்து
 • உத்தரவேதம்
 • திருவள்ளுவப் பயன்(நச்சினார்க்கினியர்)
 • தமிழ் மாதின் இனிய உயர் நிலை
 • அறஇலக்கியம்
 • அறிவியல் இலக்கியம்
 • குறிக்கோள் இலக்கியம்
 • நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு

திருவள்ளுவரின் வேறு பெயர்கள்:

 • நாயனார்
 • தேவர்(நச்சினார்க்கினியர்)
 • முதற்பாவலர்
 • தெய்வப்புலவர்(இளம்பூரனார்)
 • நான்முகன்
 • மாதானுபாங்கி
 • செந்நாப்போதார்
 • பெருநாவலர்
 • பொய்யில் புலவன்

திருவள்ளுவரின் காலம்:

 • கி.மு.1 = வி.ஆர்.ஆர்.தீட்சிதர்
 • கி.மு.31 = மறைமலை அடிகள்(இதனை நாம் பின்பற்றுகிறோம்)
 • கி.மு.1-3 = இராசமாணிக்கனார்

நூல் பகுப்பு முறை:

 • பால் = 3(அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
 • அதிகாரம் = 133
 • மொதப்பாடல்கள் = 1330
 • இயல்கள் = 9

அறத்துப்பால்:

 • அறத்துப்பால் 38 அதிகாரங்களையும் 4 இயல்களையும்  உடையது.
 • பாயிரவியல் = 4 அதிகாரங்கள்
 • இல்லறவியல் = 20 அதிகாரங்கள்
 • துறவறவியல் = 13 அதிகாரங்கள்
 • ஊழியல் = 1 அதிகாரங்கள்

பொருட்பால்:

 • பொருட்பாலில் 70 அதிகாரங்களையும் 3 இயல்களையும்  உள்ளது.
 • அரசியல் = 25 அதிகாரங்கள்
 • அங்கவியல் = 32 அதிகாரங்கள்
 • குடியியல் = 13 அதிகாரங்கள்

இன்பத்துப்பால்:

 • இன்பத்துப்பால் 25 அதிகாரங்களையும் 2 இயல்களையும்  உடையது.
 • களவியல் = 7 அதிகாரங்கள்
 • கற்பியல் = 18 அதிகாரங்கள்

திருக்குறளின் உரைகள்:

 • திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்
தருமர் மணக்குடவர், தாமத்தர், நச்சர்,
பரிதி, பரிமே லழகர், – திருமலையர்,
மல்லர், பரிப்பெருமாள், கலிங்கர் வள்ளுவர்நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்
 • திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் முந்தியவர் = தருமர்
 • திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் பிந்தியவர் = பரிமேழலகர்
 • மு.வ, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோரும் உரை எழுதியுள்ளனர்.

பொதுவான குறிப்புகள்:

 • திருக்குறள் “அ”கரத்தில் தொடங்கி “ன”கரத்தில் முடிகிறது.
 • சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா போன்ற பல நூல்கள் திருக்குறளின் பெருமையை கூறுகின்றன.
 • திருக்குறளை முதலில் பதிப்பித்தவர் = மலயத்துவான் மகன் ஞானப்பிரகாசம் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.
 • தை 2ம் நாள் = திருவள்ளுவர் தினம்
 • தமிழிற்கு “கதி” எனப்படுவது = க – கம்பராமாயணம், தி – திருக்குறள்
 • திருக்குறளில் 12000 சொற்கள் உள்ளன. இவற்றில் வட சொற்கள் ஐம்பதிற்கும் குறைவு. ஏறத்தாழ அவை 0.4% ஆகும்.

திருக்குறள் மொழிப்பெயர்ப்பு;

 • இலத்தின் = வீரமாமுனிவர்
 • ஜெர்மன் = கிரால்
 • ஆங்கிலம் = ஜி.யு.போப், வ.வே.சு.ஐயர், இராஜாஜி
 • பிரெஞ்ச் = ஏரியல்
 • வடமொழி =அப்பாதீட்சிதர்
 • இந்தி = பி.டி.ஜெயின்
 • தெலுங்கு = வைத்தியநாத பிள்ளை

சிறப்பு:

 • பாரதியார் வள்ளுவரை பாராட்டுதல்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகல் கொண்ட தமிழ்நாடு
 • பாரதியார் மேலும், “கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணும் பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” என்கிறார்.
 • மனோன்மணியம் சுந்தரனார் வள்ளுவரை புகழ்தல்
வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் ருணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி

சுத்தானந்தபாரதி கூறுவது

எம்மதம் எவ்வினமும் எந்நாளும்
சம்மதம் என்று ஏற்கும் தமிழ்வேதம்

திரு.வி.க கூற்று:

 • திருக்குறள் ஒரு வகுப்பாற்கோ, ஒரு மதத்தாற்கோ, ஒரு நிறத்தாற்கோ, ஒரு மொழியார்க்கோ, ஒரு நாட்டாற்கோ உரியதன்று; அது மன்பதைக்கு உலகுக்குப் பொது.

கி.ஆ.பெ.விஸ்வநாதம் கூற்று:

 • திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஓர் நூல் தோன்றியிராவிட்டால் தமிழ்மொழி உலகிற்கு தெரிந்திருக்காது.

முக்கிய அடிகள்:

 • அறத்தான் வருவதே இன்பம்
 • மனத்துக்கண் மாசிலன் ஆகுதல் அறம்
 • திருவேறு தெள்ளியராதலும் வேறு
 • பெண்ணிற் பெருந்தக்க யாவுள்
 • ஊழிற் பெருவழி யாவுள
 • முயற்சி திருவினை யாக்கும்
 • இடுக்கண் வருங்கால் நகுக
 • கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
 • அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
 • ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்

Leave a Comment

Your email address will not be published.