Tnpscwinners.com

இராமலிங்க அடிகள்:

ஆசிரியர் குறிப்பு:

 • இராமலிங்க அடிகளார் “திருவருட்பிரகாச வள்ளலார்” என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்.
 • கடலூர் வட்டம் மருதூரில் பிறந்தவர்.
 • பெற்றோர்: இராமையா – சின்னம்மையார்
 • காலம்: 5.10.1823 – 30.01.1874

நூல்கள்:

 • ஜீவகாரூன்ய ஒழுக்கம்
 • மனுமுறை கண்ட வாசகம்
 • இவர் பாடல்கள் அனைத்தும் “திருவருட்பா” எனத் தொகுக்கப்பட்டுள்ளன.

சிறப்பு:

 • சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.
 • மத நல்லிணக்கத்திற்கு “சன்மார்க்க சங்கம்”, உணவளிக்க “அறச்சாலை”, அறிவு நெறி விளங்க “ஞான சபை” நிறுவினார்.

திருக்குறள் - அன்புடைமை

சொற்பொருள்:

 • புன்கணீர் = துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
 • என்பு = எலும்பு
 • வழக்கு = வாழ்க்கை நெறி
 • நண்பு = நட்பு
 • மறம் = வீரம், கருணை
 • என்பிலது = எலும்பில்லாதது(புழு)

பிரித்து எழுதுக:

 • அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா
 • வன்பாற்கண் = வன்பால் + கண்

ஆசிரியர் குறிப்பு:

 • இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவார்.
 • இதை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

சிறப்பு பெயர்:

 • தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்

நூல் குறிப்பு:

 • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
 • 133 அதிகாரங்கள் உள்ளன.
 • அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
 • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

திருக்குறளின் வேறு பெயர்கள்:

 • உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை

திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை:

 • கிறித்து ஆண்டு(கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு
 • 2014 + 31 = 2045

உ.வே.சா

 • உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி.
 • ஊர் = திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம்
 • இயற்பெயர் = வேங்கடரத்தினம்
 • ஆசிரியர் = மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
 • அவரின் ஆசிரியர் வைத்த பெயர் = சாமிநாதன்
 • உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே “உ.வே.சா”
 • இவரின் தந்தை = வேங்கடசுப்பையா
 • காலம் = 19.02.1855 முதல் 28.04.1942
 • 1942இல் உ.வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.
 • உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
 • உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூழியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
 • நடுவண் அரசு 2006ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது.

கடைசிவரை நம்பிக்கை

 • இச்சிறுகதை அரவிந்த் குப்தா எழுதிய “டென் லிட்டில் பிங்கர்ஸ்” என்ற தொகுப்பில் உள்ளது.
 • சடகோ சசாகி, 11 வயது சிறுமி.
 • ஜப்பானில் ஹிரோஷிமாவிக்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்தாள்.
 • அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட கதிர்வீச்சின் காரணமாக சடகோவிற்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
 • சடகோவின் தோழி சிசுகோ.
 • தோழி சிசுகோ, சடகோவிடம் காகிதத்தால் செய்யப்பட்ட கொக்குகள் ஆயிரம் செய்தால் நோய் குணமாகும் என்றாள்.
 • ஜப்பானியர் வணங்கும் பறவை, கொக்கு.
 • காகிதத்தால் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் “ஒரிகாமி” என்று கூறுவர்.
 • 1955, அக்டோபர் 25ம் நல்ல சடகோ இறந்தாள்.
 • மொத்தம் 644 காகித கொக்குகள் உருவாக்கி இருந்தாள்.
 • சடகோவின் தோழிகள் கூடி மீதமுள்ள 356 காகித கொக்குகள் செய்து எண்ணிகையை ஆயிரம் ஆக்கினர்.
 • சடகோவிற்காக அவள் தோழிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி நினைவாலயம் கட்டினர். அதனுள் சடகோவிற்கு சிலை எழுப்பினர்.
 • அதன் பெயர் “குழந்தைகள் அமைதி நினைவாலயம்”.
 • நினைவாலயத்தில் எழுதப்பட்ட வாசகம்,
“இது எங்கள் கதறல்! இது எங்கள் வேண்டுதல்!
உலகத்தில் அமைதி வேண்டும்”

நாலடியார்

சொற்பொருள்:

 • அணியர் = நெருங்கி இருப்பவர்
 • என்னாம் = என்ன பயன்?
 • சேய் = தூரம்
 • செய் = வயல்
 • அனையார் = போன்றோர்

நூல் குறிப்பு:

 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
 • நானூறு பாடல்களை கொண்டது.
 • “நாலடி நானூறு” என்ற சிறப்பு பெயர் உடையது.
 • சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் இது.

பாரத தேசம்

சொற்பொருள்:

 • வண்மை = கொடை (வன்மை = கொடுமை)
 • உழுபடை = விவசாய கருவிகள்
 • தமிழ்மகள் = ஔவையார்

பாடல் குறிப்பு:

 • சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் ஔவையார்.
 • தமிழ்மகள் எனப்படுபவர் ஔவையார்.

ஆசிரியர் குறிப்பு:

 • காலம்: 11.12.1882 – 11.09.1921
 • “பாட்டுக்கொரு புலவன் பாரதி” என்றவர் கவிமணி.
மேலும் தொடர
 

© 2015 by Tnpsc Winners. All Rights Reserved